ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியானது தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் இணையதளத்தில் இந்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமனக்கடிதங்கள் அமைச்சினால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர…
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…
-
- 2 replies
- 574 views
-
-
அரசமைப்பின் 19ம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனறு வடக்கின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், 19ம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்றும் தெரிவித்தார். https://newuthayan.com/19ம்-திருத்தத்தை-முழுமையா/
-
- 0 replies
- 648 views
-
-
(எம்.மனோசித்ரா) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வழமையைப் போன்று கோலாகல வைபங்கள் மற்றும் மரியாதை அணிவகுப்புக்கள் இன்றி எளிமையான முறையில் புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. அணிவகுப்புக்கள் எவையும் இன்றி எளிமையான முறையில் முதலாவது பாராளுமன்ற அமர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். புதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70வது உறுப்புரை…
-
- 0 replies
- 298 views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் முக்கிய மூன்று கொள்கைகளான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவு ஆகியவற்றை முன்னிறுத்தி நாட்டிற்கும் பிரஜைகளுக்கும் முக்கியத்துவமளித்து, சர்வதேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் 5 - 10 வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச்செல்வதை நோக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே உறுதியளித்தார். அதேவேளை, காலமாற்றங்களுக்கு ஏற்ப வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டுக்கொள்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவச…
-
- 0 replies
- 271 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) வட மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது. இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழலில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். மத்திய அரசாங்கத்தின் அதிகார ஆளுமை மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் குறைந்து விடாது, முழு அளவில் காணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குறிக்கோளுடன் செயற்படுகின்றார். https://www.virakesari.lk/articl…
-
- 1 reply
- 391 views
-
-
(செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிறுகுழுவினரின் தலைமத்துவ பதவியின் மீதான மோகத்தின் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியினால் மக்கள் ஆணையுடன் ஒரு ஆசனத்தை கூட வெற்றிக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நளின்பண்டார, ஐ.தே.க.விற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியலில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் பெயரே பரிந்துறைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தாம் அதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ப…
-
- 0 replies
- 246 views
-
-
சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப் பாதுகாப்பு! சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலை ஆகியவற்றுக்கே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துஷார உபுல்தெனிய மேலும் கூறியுள்ளதாவது, “21 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 15 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிர்வாக ரீதியிலான உதவிகளை வழங…
-
- 1 reply
- 391 views
-
-
கைதுசெய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இன்று (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய் பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த பிரதேசத்தில் நபரைத் தேடிய போது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த முரண்பாடு தொடர்பாக விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீதே இந்த…
-
- 1 reply
- 405 views
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிராக 20 முறைப்பாடுகள் -மு.தமிழ்ச்செல்வன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழரசுக் கட்சிக்கு எதிராக, 20 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளும், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், பளை பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகளும், பூநகரி பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் 1முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர், கிளிந…
-
- 2 replies
- 448 views
-
-
பிரதேச சபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த கலையரசன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என்பதற்காக இராஜினாமாச் செய்துள்ளார். கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் த.தே.கூட்டமைப்பிற்குக் கிடைக்கப் பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வ…
-
- 0 replies
- 338 views
-
-
19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு அரசாங்கம் முயற்சி! நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு பதிய அரசியலமைப்பை உருவாக்குவதா என்பது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் முழுமையான அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகின்றது. அதாவது, புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கம் முதலில் 20ஆவது திருத்தம் குறித்தே கவனம் செலுத்தும். இதற்கு காரணம் நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கே ஆ…
-
- 0 replies
- 305 views
-
-
விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா? August 14, 2020 இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக…
-
- 43 replies
- 4.1k views
- 1 follower
-
-
அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தல் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. பழைய முறையில் அந்த தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அரசாங்கம் அது தொடர்பான திருத்தங்களை பாராளுமன்றத்தில் இந்த வருட இறுதியில் நிறைவேற்றவும் அதனை தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கைளை தற்போது முதலே அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.samakalam.com/செய்திகள்/அடுத்த-வருட-ஆரம்பத்தில்-2/
-
- 3 replies
- 577 views
-
-
பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி” வேலைத்திட்டம் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் “பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ்ப்பாணத்தை நோக்கி” வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏ-9 வீதியில் கைதடிச் சந்திக்கும் சாவகச்சேரிக்கும் இடையில் வீதியோரம் வீசப்படிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சமூகப்பணி நேற்று (15) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 150 மூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது என்றும், இது ஒரு கவலைக்குரிய விடயமாகும். இதனை பயணிகள் கவனம் எடுத்து செயற்பட்டால் பிரதான வீதியோரம் இவ்வாறு பெருமளவு கழிவுகள் பெருகுவதை குறைக்க முடியும் என்றும் இச் செயற்பாட்டை முன்னெடுத்த இளைஞர்கள் தெரிவித்தனர். https://newuthaya…
-
- 8 replies
- 681 views
-
-
அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் – சந்திரிகா அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து புதிய தலைவருடன் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து, ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சுதந்திரக் கட்சியின் முடிவையும் அவர் கண்டித்தார். அத்தோடு ராஜபக்ஷர்கள் பின்பற்றும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் இருப்பினும் பிரத…
-
- 3 replies
- 688 views
-
-
யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி நிமலதாசன் நியமனம் August 16, 2020 யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதி பதவிக்காக கலாநிதி பாலசுந்தரம் நிமலதாஸன் மற்றும் ரவிராணி யோகேந்திரராஜா ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 25 வாக்குகளை கலாநிதி நிமலதாஸன் பெற்றிருந்த நிலையில் ரவிராணி யோகேந்திரராஜா 16 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.இதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடச் சபை பாலசுந்தரம் நிமலதாசனை வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடா…
-
- 2 replies
- 880 views
-
-
தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை (ஆர்.ராம்) இலங்கை தமிழரசுக்கட்சி உள்ளக, வெளியக சூழ்ச்சிகள் அனைத்தையும் வெற்றி கொண்டு மக்கள் பலத்துடன் மீள் எழுச்சி பெறும் என்று அதன் தலைவர் மாவை.சோ.சோதிராஜா தெரிவித்துள்ளார். தனது மகன் கலைஅமுதன் மீது வீணான பழிகள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்வைக்கப்பட்டும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பிலும், அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 3 replies
- 679 views
-
-
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும் அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில…
-
- 20 replies
- 1.8k views
-
-
மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு August 14, 2020 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக…
-
- 8 replies
- 1.1k views
-
-
13-வது திருத்தம் நீக்கப்படுவது தொடர்பில் கோவிந்தம் கருணாகரம் விமர்சனம்.! பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இரு நாடுகளினால் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தினை நீக்குவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர், குரு…
-
- 1 reply
- 500 views
-
-
யாழில் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரிக்கும் இராணுவம்! யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விபரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர். முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப…
-
- 1 reply
- 565 views
-
-
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு! யாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின் எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் சாலை வளாகத்தில் கூடாரம் ஒன்று அமைப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை குழி தோண்டிய போது அந்தக் குழியில் எலும்புக் கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் கிடைத்துள்ளன. அவற்றைக் கண்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். அந்தத் தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் …
-
- 2 replies
- 578 views
-
-
வீரவன்சவின் மனைவிக்கு ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்தவர் அமைச்சுக்குச் செயலாளராகிறார் ஆகஸ்ட் 14, 2020: மனைவி சஷி யிற்கு பத்திரங்களை மோசடி செய்ததன் மூலம் ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்ததாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட, குடிவரவு-குடியகல்வுப் பணிப்பாளர் சூளானந்த பெரேராவைத் தனது அமைச்சின் செயலாளராக்கியிருக்கிறார் அமைச்சர் வீரவன்ச. தனது மனைவிக்கு ராஜதந்திரிகளுக்கு வழங்கும் விசேட கடவுச்சீட்டொன்றை வழங்கும்படி வீரவன்ச கேட்டிருந்தார் என்றும், அதற்கான விண்ணப்பத்தில் மனைவி சஷி தவறான பிறப்புத் திகதியை இட்டிருக்கிறார் எனத் தெரிந்தும் தான் அவ்வேண்டுகோளை நிறைவேற்றியதாகவும் பெரேரா முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார். வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறது. இது தொடர்பாக பெரேரா…
-
- 2 replies
- 557 views
-
-
முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியலில் தெரிவான செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவருமே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். http://aruvi.com/art…
-
- 46 replies
- 3.3k views
-