ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் by : Yuganthini முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர். குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவ்விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். …
-
- 0 replies
- 426 views
-
-
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும். எமது ஆட்சியில் விகாரை, கோயில், …
-
- 11 replies
- 2k views
-
-
கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ? வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச பிரிய தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வாக்குகள் போட்டது தொடர்பில், பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்ப…
-
- 1 reply
- 801 views
-
-
பத்திரிகையாளர் சந்திப்பில் ஹூல் – மஹிந்த இடையே முரண்பாடு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய – தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹூல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. “வேட்பாளர்கள் செல்லும் வாகனங்களில், வேட்பாளர்களின் படங்கள் தவிர, வேட்பாளரின் தலைவரினதோ வேறு வேட்பாளர்களினதோ படங்களும் காட்சிப்படுத்த முடியாது” என ஹூல் தெரிவித்ததுடன், இந்த விதிமுறையை மீறி செயற்பட்ட வாகனம் ஒன்றும் மன்னாரில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசப்பிரிய, “வேட்பாளர்கள் தமது வாகனங்களில் தம் தலைவர்களின் படங்களை காட்சிப்படுத்த முடியும். இதுதொடர்…
-
- 2 replies
- 565 views
-
-
ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள் தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக…
-
- 6 replies
- 1.3k views
-
-
கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் - சரத் பொன்சேகா அதிரடி கருத்து (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர…
-
- 4 replies
- 1k views
-
-
வடமாகாண கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழிக்கற்கை வகுப்புக்கான அறிவிப்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் அனைத்தும் 13-17 ஆம் திகதி வரை மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண மாணவர்களுக்கான இணையவழிக் கற்கைநெறிகளை வடமாகாண கல்வித் திணைக்களம் ஒருங்கிணைத்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தரம் 6-13 வரையான மாணவர்களுக்கான இணைய வழிக்கற்கை நெறிகள் இடம்பெற்று வருகின்றன. பாட நேரசூசி மற்றும் பாட அட்டவணைகளை, வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், முகப்புத்தகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முகப்புத்தகம், வைபர் குழுமம் மூலம் அறிந்து கொள்ள முடியும். …
-
- 0 replies
- 332 views
-
-
சுமந்திரனின் கருத்துக்கு வியாழேந்திரன் பதிலடி
-
- 0 replies
- 508 views
-
-
அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்…
-
- 0 replies
- 365 views
-
-
கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல்ல மேதானந்த தேரரின் கூற்று நிரூபித்துள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், https://newuthayan.com/கிழக்கை-பௌத்த-மாநிலமாக்க/
-
- 3 replies
- 730 views
-
-
இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் by : Yuganthini இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட அறிக்கையாளரினால், அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வ…
-
- 3 replies
- 742 views
-
-
கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்…
-
- 13 replies
- 1.3k views
-
-
அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ by : Jeyachandran Vithushan புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசி…
-
- 4 replies
- 1k views
-
-
பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை July 13, 2020 நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். அந்த ஒற்றுமை என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் இரு…
-
- 2 replies
- 589 views
-
-
ஆட்சியை மாற்றியே சம்பூரை மீட்டோம் - இரா.சம்பந்தன் சம்பூர் நிலங்களை கடந்த அரசாங்கம் அனல் மின் நிலையம் என்ற போர்வையில் கபளீகரம் செய்திருந்த பொழுது எமது மக்கள் வழங்கிய ஒரு ஆணையின் அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை செய்தன் மூலம் சம்பூர் மண்ணை மீட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றைய தினம் 13ம் திகதி சம்பூரில் நடைபெற்ற த.தே.கூ. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தலைமை வேட்பாளர் உரையில் இவ்வாறு தெரிவித்தார். இக் கூட்டத்தில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் வேட்பாளருமான க.குகதாசன் மற்றும் வேட்பாளர்களான கந்தசாமி ஜீவரூபன் செல்வராஜா பிரேமரதன் இரா.சச்சிதானந்தம,; சு…
-
- 3 replies
- 674 views
-
-
விமான நிலையம் திறக்கப்படாது - அரசாங்கம் (ஆர்.யசி) நாட்டில் கொவிட் வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அச்சம் நிலவுகின்ற நிலையில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். அதற்கமைய விமான நிலையத்தை இப்போதைக்கு திறப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் திறக்கலாம் என விமான சேவைகள் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விமான நிலையத்தை …
-
- 2 replies
- 604 views
-
-
விக்னேஸ்வரனே என்னை பிணையில் விடுவித்தார்; அந்த அபிமானமே அவரை முதலமைச்சராக்க காரணம்: மனம் திறந்த மாவை.! மட்டக்களப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால் நான் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டிருந்தேன். க.வி.விக்னேஸ்வரன் திருகோணமலைக்கு நீதிபதியாக வந்த பின்னரே எனக்கு பிணை வழங்கப்பட்டது. அந்த அபிமானத்தினாலேயே அவரை வடக்கு முதலமைச்சராக்க சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. இன்று தமிழ்பக்கத்தில் ஒளிபரப்பான பேஸ்புக் நேரலையான- “எதுக்கு என்ன பாத்து இந்த கேள்வியை கேட்டாய்?“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு மாற்றத்திற்கு எதிராக மட்டக்களப்பில் 1978 செப்ரெம…
-
- 3 replies
- 814 views
-
-
அமைச்சுப் பதவி பெறுகின்ற எண்ணம் கூட்டமைப்புக்கு அறவே இல்லை என்கிறார் சம்பந்தன்.! "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, 'அரசியல் தீர்வ…
-
- 8 replies
- 731 views
-
-
நாங்கள் சொல்வது போல் வேலை செய்யாவிடின் ஓய்வூதியம் கூட இல்லாமல் வீட்டிற்கு செல்ல நேரிடும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.கே.ரணவக்க இன்று (13) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைச் செய்யும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது ஆணைக்குழுவில் சாட்சியமளித்த அவர், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நான்கு முறை தாம் எப்.சி.ஐ.டி எனப்படும் நிதிமோசடி தொடர்பில் ஆராயும் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவித்தார். திவிநெகும பயனாளிகளுக்கு தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கியமை மற்றும…
-
- 0 replies
- 494 views
-
-
வேற்றுச்சேனை கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. அங்கு வாழும் குடும்பங்கள் அனைத்தும் இந்து மதத்தினர். இங்கு இருக்கும் சக்திவாய்ந்த. அக்கோயிலுக்கு ஒரு நிலையான கட்டடம் இல்லை. இரண்டு உயரமான வேல்கள் உயரமான சீமெந்தினால் கட்டப்பட்ட மேடையில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்மையில் திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள். இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் விபரித்துக் கூறினர். இந்தக் கோயில் ஒரு புராதன கோயில். எங்களது ஊர் வளர்ச்சியைக் காணாத ஒரு ஊர். ஒரு ஆரம்பப் பாடசாலை கூட…
-
- 3 replies
- 782 views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்துள்ளது – விஜயகலா by : Vithushagan கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”கடந்தவருடம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்…
-
- 0 replies
- 431 views
-
-
மலையகத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது. அதன் முதல் கட்டமாக இன்று (14) ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது. தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர். தேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -மலையக நிருபர் கிரிஷாந்தன்- …
-
- 0 replies
- 353 views
-
-
யாழில் தேர்தல் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார் மகிந்த தேசப்பிரிய யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை நேரில் வருகை தந்து ஆராய்ந்தார். யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். அத்துடன் மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார். -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=130908
-
- 0 replies
- 240 views
-
-
தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுக்கான பயணம் குறித்து சுமந்திரனின் கருத்து (ஆர்.யசி) ஒரு நாட்டிற்குள் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை நோக்கியே நாம் பயணிக்கின்றோம் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு, நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும். அன்று சிங்களவர்களுக்கு தேவைப்பட்ட சமஷ்டி இன்று ஏன் பிடிக்கவில்லை என்பதே எமது கேள்வியாக உள்ளதென தமிழ் தேசிய கூட்டமைபின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறினார். கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமி…
-
- 1 reply
- 354 views
-
-
சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்துக்கு தி.மு.க பாராட்டு இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்டபாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “விக்கிரமபாகு கருணாரத்தின சிங்களராக இருந்தாலும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வர…
-
- 7 replies
- 1.1k views
-