ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
மக்கள் நம் பக்கமே!:மகிந்த ராஜபக்ஷ. நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சிக்கு ஆணை தந்த மக்கள், மீண்டும் பொதுத்தேர்தலிலும் ஆணை வழங்கக் காத்திருக்கின்றார்கள். இந்தநிலையில், எமது ஆட்சியைத் தக்கவைக்க இராணுவத்தினர் எதற்கு? அவர்கள் தங்கள் பாதுகாப்புக் கடமைகளைத் திறம்படச் செய்கின்றார்கள்.” இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். https://www.vanakkamlondon.com/மக்கள்-நம்-பக்கமேமகிந்த/
-
- 0 replies
- 373 views
-
-
ராடா நிறுவன நிதி மோசடி: டிரான் அலஸ், எமில்காந்தன் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து ராடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, இந்த வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், எமில்காந்தன்,…
-
- 1 reply
- 334 views
-
-
தொல்லியல் செயலணியின் செயற்பாட்டினை நிறுத்தவேண்டும் ..! மட்டு.மாநகரசபையில் தீர்மானம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் இடங்களை அடையாளங் காண்பதற்கான செயலணியின் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் எவரும் அல்லாது இந்தச் செயலணியானது தமிழர்களின் பூர்விக இடங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 35 ஆவது சபை அமர்வானது இன்று (09) காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியாசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்…
-
- 2 replies
- 365 views
-
-
யாழில்.. குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்! யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இராணுவச் சிப்பாய்கள் கடமைக்கு அமர்த்தப்படுவர். இவ்வாறு நியமிக்கப்பட்ட இராணுவ அலுவலகரின் பொறுப்புத் தொடர்பில் பொதுமக்களுக்கு த…
-
- 0 replies
- 693 views
-
-
திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன் தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற தளங்களில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் இதற்கு பௌத்த மதத்தலைவர்கள் உரிமை கோரமுடியாது என்றும் தெரிவித்தார். கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளித்த அவர், தேரரின் கருத்தை அடியோடு மறுப்பதாகவும் கூறியுள்ளார். தொல்பொருளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களின் பூர்வ…
-
- 0 replies
- 215 views
-
-
ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை – சர்வதேச ஊடகத்திற்கு சம்பந்தன் கருத்து July 9, 2020 ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை என கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இன்றுமாலை தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை எனக்கு தெரிவித்தார் என சோனியா சர்கார் என்ற வெளிநாட்டு செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எங்கள் கட்சி ராஜபக்சாக்களை நிரந்தர எதிரியாக கருதவில்லை என சம்பந்தன் எனக்கு தெரிவித்தார் என அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் சர்வாதிகரபோக்கினை கொண்டுவந்தமை போன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களை அவ…
-
- 3 replies
- 582 views
-
-
“இராவணன் தமிழன் அல்லது சிங்களவன். அது முக்கியமல்ல. அவன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன். அவன் இலங்கையன்.” இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது தெற்கின் கடும்போக்கு சிங்கள அமைப்பான ராவணபாலய அமைப்பு. எல்லாவல தேரர் “சுடர் ஒளி”க்கு கூறிய கருத்தில், “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே ராவணபாலயவின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸதேரர் மேலும் தெரிவித்ததாவது, “விஜயன் இங்கு வந்தபோது குவேனி இங்கிருந்தார். குவேனியின் படையணியே விஜயனை கைது செய்தது. குவேனியின் பின்புலத்தை ஆராய முற்பட்டால் இராவணன் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிடலாம். இராவணனுடன் 12 ஆண்டுகள் போர…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கில் ‘மாஸ்க்’ அணியாதோர் மீது இனி கடும் நடவடிக்கை! “வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும், “நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணுவதும், சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுக…
-
- 0 replies
- 436 views
-
-
சட்டத்தரணி கே.வி.தவராசாவின் சட்ட வாதத்தால் கடற்புலிகளின் தலைவி மீலா விடுதலை! பிரான்ஸ் தூதரக தமிழ் அதிகாரியான நயனாகணேசன் விசாரணைக்கு பெரிதும் உதவினாரர் • பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ். கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிக்கு 10 நாட்களில் பிணை வழங்கப்பட்ட ஒரே வழக்கு இந்த வழக்காகும். • தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடற்புலிகளின்தலைவி. பகிரதியும் 9 வயது மகள் பார்கவியும் விடுதலை. • பயங்கரவாத தடை சட்டத்தின். கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசுவின் ஒரே மகளான. ஒன்பது வயதான பார்கவி பிறப்பால் ஒரு பிரெஞ் நாட்டவராகையினால் தாயினதும் மகளினதும் விரைவான விடுதல…
-
- 0 replies
- 482 views
-
-
தமிழரசுக்கட்சியை பாதுகாப்பதற்காகவே தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளது – விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் by : Benitlas இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார். யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று(வியாழக்கிழமை) மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி ஒருபோதும் தனது நிலையிலிருந்து மாறக்கூடாது எனவும் அவர்…
-
- 3 replies
- 852 views
-
-
இலங்கையின் இறையாண்மைக்கு ஐ.நா சபை மதிப்பளிக்கவேண்டும் - அரசாங்கம் அறிக்கை.! "இலங்கையின் மீது நிரூபிக்கப்படாத மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அமைதிகாக்கும் படையின் அதன் பங்களிப்புக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதனினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறுப்புடைய மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை விளங்குவதுடன், அதன் உறுப்புரிமை நாடுகளுடனான தொடர்புகளின்போது அவற்றின் இறையாண்மைக்கு முழுவதுமாக மதிப்பளித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்." - இவ்வாறு இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஜேர்மனியினால் 'அமைதி நடவட…
-
- 0 replies
- 360 views
-
-
டிப்பர் மோதி 18 மாடுகள் பலி! கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விபத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு விபத்து இடம் பெற்றுள்ளது. https://newuthayan.com/கிளிநொச்சியில்-லொறி-மோதி/
-
- 2 replies
- 471 views
-
-
மின்சார கட்டணத்தில் 25% குறைக்க அரசு இணக்கம்! கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலுக்கான மின்சாரக் கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அத்துடன், இந்த நிவாரணங்கள் குறையாது என்பதுடன் 25 வீதம் விலைப் பட்டியல் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (09) அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், “மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் நிலுவைப் பணம் அறவிடப்படமாட்டாது. இதனால் ஏற்படும் நட்டத்தை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்ளும். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழ…
-
- 0 replies
- 332 views
-
-
சின்ன பையனிடம் மலையகத்தை தந்து பாருங்கள்; மாற்றிக் காட்டுவேன் – ஜீவன் எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று (09) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “எவ்வித நிபந்தனையும் இன்றியே ஆயிரம் ரூபாய் அவசியம் என அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் ஆயிரம் ரூபாவை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்ப…
-
- 0 replies
- 345 views
-
-
13வது திருத்தத்தை மாற்றினால் இந்தியா பகைத்துக்கொள்ளும்.! மூன்றில் இரண்டு பலம் வழங்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தை கோருகின்ற அரசாங்கம் 13ம் 19ம் திருத்தச்சட்டங்களை மாற்றப் போவதாக நேரடியாக தெரிவிக்கின்றது. அவ்வாறு மாற்றினால், தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி செயற்படும் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் இருக்க மாட்டார் என அவர் எச்சிரிக்கை விடுத்துள்ளார். மேலும் சர்வாதிகாரமுள்ள சில வரையறைகள் விதிக்கப்படும…
-
- 0 replies
- 309 views
-
-
4 ஹெலிகளை கொள்வனவு செய்ய அனுமதி இலங்கை விமானப்படையினர் பயிற்சி நடவடிக்கைகாக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். தற்போது பயிற்சிக்காகப் பயன்படுத்திவரும் 2 ஹெலிகொப்டர்களும் 1981ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/4-ஹலகள-களவனவ-சயய-அனமத/175-252975
-
- 2 replies
- 487 views
-
-
சஹ்ரான் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் விசாரணை! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் தான் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாகவும், அவருடன் தொடர்புடைய 14 கோப்புகளை பராமரித்து வந்ததாகவும் முன்னாள் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹசீமை கைது செய்ய தான் கடந்த 2018 ஆம் ஆண்டு திறந்த பிடியாணையை பெற்றிருந்த போது அவரை கைது செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவிற்…
-
- 0 replies
- 358 views
-
-
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜப்பான் 800 மில்லியன் யென் உதவி கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள…
-
- 0 replies
- 264 views
-
-
ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=130716
-
- 0 replies
- 449 views
-
-
தொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்! by : Benitlas தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவ…
-
- 0 replies
- 326 views
-
-
மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை! by : Litharsan மதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப் போவதாக ஆளும் தரப்பினர் கூறிவரும் சூழலி…
-
- 0 replies
- 394 views
-
-
தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் சனிக்கிழமை போராட்டம் July 9, 2020 தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11 ம் திகதி மட்டக்களப்பில் அமைதிவழிபோராட்டமொன்று இடம்பெறவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் மட்டளக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என தமிழ் உணர்வாளர்கள் அமை;பு சுட்டிக்காட்டியுள்ளது. ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பாடதபோதே மர்மம் தோ…
-
- 1 reply
- 344 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது - சந்திரகுமார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தங்களோடுதான் இருக்கின்றார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் கருத்து. தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இந்த தேர்தலில் ஏமாற்றுவதற்கு இவ்வாறான அறிக்கைகளை அவர்கள் விடுகின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பிராந்திய அரசியல் நலன்கள்சார்ந்து இந்தியா எப்பொழுதும் கொழும்போடுதான் இருந்துள்ளது. இன்றும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகள் அனைத்தும் ஏனைய நாடுகளின் எந்த விடயத்திலும் தலையிடுகின்ற போது தங்களின்…
-
- 0 replies
- 262 views
-
-
அம்பாறையில் இலவச கையேடுகள் வழங்கி வைப்பு! தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 100 இலவச கையேடுகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கண்ணகி வித்தியாலயம், திருக்கோவில் புனித சவேரியார் வித்தியாலயம் மற்றும் கல்முனை பாசுபதேஸ்வரர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 100 மாணவர்களுக்கே இவ்விலவச கையேடுகள் வழங்கப்பட்டன. https://newuthayan.com/அம்பாறையில்-இலவச-கையேடுக/
-
- 0 replies
- 245 views
-
-
பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு July 9, 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பான விசேட அறிவித்தலொன்று பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிவித்தலிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலின் ஆகஸ்ட் 2ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன் தேர்தல் மு…
-
- 0 replies
- 218 views
-