Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைதுசெய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இன்று (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய் பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த பிரதேசத்தில் நபரைத் தேடிய போது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த முரண்பாடு தொடர்பாக விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீதே இந்த…

    • 1 reply
    • 410 views
  2. 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு அரசாங்கம் முயற்சி! நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு பதிய அரசியலமைப்பை உருவாக்குவதா என்பது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் முழுமையான அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகின்றது. அதாவது, புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கம் முதலில் 20ஆவது திருத்தம் குறித்தே கவனம் செலுத்தும். இதற்கு காரணம் நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கே ஆ…

    • 0 replies
    • 311 views
  3. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள ஒற்றுமையாக பயணிக்கவேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன் கூட்டமைப்பானது கடந்த தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளது. வன்னியில் கூட ஒரு ஆசனத்தை இம்முறை நாம் இழந்திருக்கின்றோம்.இந்த தேர்தலில் ஆட்சியாளர்கள் அதிகாரபலம் மற்றும் பணபலம் எனபவற்றை பயன்படுத்தியிருந்தார்கள். அதனை விட எம்மவர்கள் பிரிந்து நின்று இந்த தேர்தலை சந்தித்தார்கள். இப்படியான சூழலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.அத்துடன் வடக்கு- கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன…

    • 1 reply
    • 460 views
  4. பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி” வேலைத்திட்டம் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் “பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ்ப்பாணத்தை நோக்கி” வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏ-9 வீதியில் கைதடிச் சந்திக்கும் சாவகச்சேரிக்கும் இடையில் வீதியோரம் வீசப்படிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சமூகப்பணி நேற்று (15) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 150 மூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது என்றும், இது ஒரு கவலைக்குரிய விடயமாகும். இதனை பயணிகள் கவனம் எடுத்து செயற்பட்டால் பிரதான வீதியோரம் இவ்வாறு பெருமளவு கழிவுகள் பெருகுவதை குறைக்க முடியும் என்றும் இச் செயற்பாட்டை முன்னெடுத்த இளைஞர்கள் தெரிவித்தனர். https://newuthaya…

    • 8 replies
    • 697 views
  5. முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என மக்கள் எண்ணக்கூடாது எனவும், புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் தம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையில் கொவிட்-19 தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்திகள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் …

  6. யாழில் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரிக்கும் இராணுவம்! யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விபரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர். முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப…

  7. யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி நிமலதாசன் நியமனம் August 16, 2020 யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதி பதவிக்காக கலாநிதி பாலசுந்தரம் நிமலதாஸன் மற்றும் ரவிராணி யோகேந்திரராஜா ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 25 வாக்குகளை கலாநிதி நிமலதாஸன் பெற்றிருந்த நிலையில் ரவிராணி யோகேந்திரராஜா 16 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.இதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடச் சபை பாலசுந்தரம் நிமலதாசனை வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடா…

  8. அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தல் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. பழைய முறையில் அந்த தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அரசாங்கம் அது தொடர்பான திருத்தங்களை பாராளுமன்றத்தில் இந்த வருட இறுதியில் நிறைவேற்றவும் அதனை தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கைளை தற்போது முதலே அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.samakalam.com/செய்திகள்/அடுத்த-வருட-ஆரம்பத்தில்-2/

    • 3 replies
    • 581 views
  9. அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் – சந்திரிகா அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து புதிய தலைவருடன் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து, ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சுதந்திரக் கட்சியின் முடிவையும் அவர் கண்டித்தார். அத்தோடு ராஜபக்ஷர்கள் பின்பற்றும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் இருப்பினும் பிரத…

  10. 13-வது திருத்தம் நீக்கப்படுவது தொடர்பில் கோவிந்தம் கருணாகரம் விமர்சனம்.! பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இரு நாடுகளினால் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தினை நீக்குவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர், குரு…

  11. வீரவன்சவின் மனைவிக்கு ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்தவர் அமைச்சுக்குச் செயலாளராகிறார் ஆகஸ்ட் 14, 2020: மனைவி சஷி யிற்கு பத்திரங்களை மோசடி செய்ததன் மூலம் ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்ததாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட, குடிவரவு-குடியகல்வுப் பணிப்பாளர் சூளானந்த பெரேராவைத் தனது அமைச்சின் செயலாளராக்கியிருக்கிறார் அமைச்சர் வீரவன்ச. தனது மனைவிக்கு ராஜதந்திரிகளுக்கு வழங்கும் விசேட கடவுச்சீட்டொன்றை வழங்கும்படி வீரவன்ச கேட்டிருந்தார் என்றும், அதற்கான விண்ணப்பத்தில் மனைவி சஷி தவறான பிறப்புத் திகதியை இட்டிருக்கிறார் எனத் தெரிந்தும் தான் அவ்வேண்டுகோளை நிறைவேற்றியதாகவும் பெரேரா முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார். வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறது. இது தொடர்பாக பெரேரா…

  12. தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை (ஆர்.ராம்) இலங்கை தமிழரசுக்கட்சி உள்ளக, வெளியக சூழ்ச்சிகள் அனைத்தையும் வெற்றி கொண்டு மக்கள் பலத்துடன் மீள் எழுச்சி பெறும் என்று அதன் தலைவர் மாவை.சோ.சோதிராஜா தெரிவித்துள்ளார். தனது மகன் கலைஅமுதன் மீது வீணான பழிகள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்வைக்கப்பட்டும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பிலும், அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  13. ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( இலங்கை தமிழ் அரசுக் கட்சி ) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் ( தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 6 - 08- 2020 திகதி யாழ்.மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம். …

  14. ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக, அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்க…

  15. தடையை மீறி செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு Posted on August 14, 2020 by தென்னவள் 14 0 முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். பின்னர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர…

    • 0 replies
    • 471 views
  16. (செ.தேன்மொழி) அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு திட்டம் தொடர்பில் போதிய தெளிவு இல்லாமையினால், அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் சக்தி தலைவர் மயாந்த திசாநாயக்க, ஒரு குடும்பத்தின் பின்னால் செல்லாது ஜனநாயக பண்புமிக்க ஆட்சியை உருவாக்குவதற்காக தொடர்ந்தும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஐக்கிய இளைஞர் சக்தி இன்று தனது முதலாவது ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பத்தின் பின்னால்…

  17. (அஸ்ரப் ஏ சமத்)பாகிஸ்தான் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினைமுன்னிட்டு கொழும்பு உள்ள உயா்ஸ்தாணிகா் ஆலயத்தல்பதில் உயா் ஸ்தாணிகா் தன்வா் அகமட் தலைமையில் இன்று (14) பாக்கிஸ்தான் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுதந்திரம் கொண்டாடப்பட்டது. இவ் வைபவத்தில் ஜனாதிபதி ஆரிப் அலவி, பிரதம மந்திரி இ்ம்ரான் கான், ஆகியோா்களது சுதந்திர தின செய்திகள் வாசிக்க்பட்டது. இவ் வைபத்தில் இலங்கை வாழ் பாக்கிஸ்தானியா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.இங்கு உரையாற்றிய உயா் ஸ்தாணிகா் - பாக்கிஸ்தான்னின் நிலமான காஸ்மீா் மாநிலத்தை இந்தியா பிஜே.பி அரசு பலவந்தமாக ஆக்கிரமித்து்ளளது. . அந்த நிலங்களில் வாழ் மக்கள் அடக்கி ஆளப்படுகின்றனா்.அவா்களுக்கு ஒரு சமாதான சுதந்த்திரம் கிடைப்பதற்கு நாங்கள் இறைவனைப் ப…

    • 3 replies
    • 612 views
  18. பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு! அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பபல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 15 முதல் மருத்துவ பீடங்களின் 3 ஆம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் நடைபெற்றதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்ட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டாலும், பல்கலைக்கழகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற…

    • 0 replies
    • 583 views
  19. நீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை! நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம் வட பகுதியில் தொடர்ந்தும் முழுவீச்சில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கமைய பெருந்தொகையான கொடுவா மீன் குஞ்சுகள் நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன. இரணைதீவு , கௌதாரிமுனை,மூன்றாம்பிட்டி, இலுப்பைக் கடவை, விடத்தல் தீவு, நாயாறு உட்பட வடக்கின் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு நீர் நிலையகளில் நக்டா எனப்படும் இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட …

  20. இராஜாங்க அமைச்சர் ஜீவனின் அதிரடி அறிவிப்பு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். யாரும் அச்சப்பட தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொழும்பு கொள்ளுப்பிட்டிவில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (14) காலை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக…

  21. யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு! யாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின் எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் சாலை வளாகத்தில் கூடாரம் ஒன்று அமைப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை குழி தோண்டிய போது அந்தக் குழியில் எலும்புக் கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் கிடைத்துள்ளன. அவற்றைக் கண்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். அந்தத் தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் …

    • 2 replies
    • 591 views
  22. சஜித் பிரேமதாஸா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள ஹாபிஸ் நஸீர் அஹமட் முஸ்லிம் சமூகத்துக்கு உரித்தான தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி அடைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் இனங்கப்பட்ட தேர்தல் உடன்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை உதாசீனப்படுத்துவது அதன் பங்காளிகளின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ´ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தேர்தலின் போது செய்யப்…

  23. தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் – வியாழேந்திரன்! தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். தபால் சேவைகள் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை சகல துறை சார்ந்தும் ஒரு சுபீட்சத்தின் அடிப்படையில் இந்த நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்துகின்ற செயற்திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வர…

  24. மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு August 14, 2020 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக…

  25. விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா? August 14, 2020 இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.