ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
கடைசி வரை மகனை காணாமலே உயிர் விட்ட ஈழத்தாயின் சோகக்கதை! இன்னும் இப்படி எத்தனை? கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து தனது மகனை தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் (ஜனாா்த்தனன்) தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளி வீமன் (ஜனார்த்தனன) முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போய் எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்படைக்கப்படாத நிலையில் குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தொடர்ச்சியாக போராடி வந்தார். இந்நிலையில் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமலே கடந்த 31-08 2017 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார். இவரின் இறுதிக்கி…
-
- 2 replies
- 475 views
-
-
மலபே பிரதேசத்தில் இரகசிய முகாமில் வைத்து பொன்சேகா மீது விசாரணை! . .சிறிலங்கா இராணுவ காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மலபே என்ற இடத்திலுள்ள இரகசிய முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் உட்பட எவரையும் அவரை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டபோது பொன்சேகா வெள்ளை சேர்ட்டும் மண்ணிற காற்சட்டையும் சப்பாத்தும் அணிந்திருந்தார் என்று அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்தனர். அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்து கீழ்தளம் வரை பொன்சேகா தரதரவென இழுத்துச்செல்லப்பட்டபோதும், …
-
- 5 replies
- 1.3k views
-
-
இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த போது, இந்தியாவில் 13 பெண்களைக் கற்பழித்து, ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற, 4 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் குற்றச்சாட்டு
-
- 1 reply
- 477 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு எதிராக போராட தீர்மானம்! February 25, 2022 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். வலி தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. அதன் போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இடை…
-
- 0 replies
- 284 views
-
-
10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம் வீரகேசரி இணையம் 2/17/2010 4:42:27 PM - இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதி…
-
- 1 reply
- 737 views
-
-
கோத்தபாயவுக்கு எதிராக புதிய சிக்கல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட பல்வேறு உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஒன்றிரண்டு வாரங்களில் இந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இ…
-
- 0 replies
- 442 views
-
-
வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், “2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர். புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து த…
-
- 8 replies
- 1k views
-
-
பொருத்து வீட்டை விரும்பாதவா்கள் கல்வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் யாழ் மாவட்டத்தில் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கல்வீடு தேவை என கோரும் இடத்து கல்வீடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் இன்னும் 25 ஆயிரம் வீடுகளுக்கான தேவை உள்ளது. இந்த வருடம் 1100 வீடுகள் கட்டப்படுகிறது. அடுத்த வருடத்துக்கு மீள்குடியேற்ற அமைச்சாரக மேலும் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், அண்மையில் பலர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சிலர் கல் வீடு …
-
- 0 replies
- 278 views
-
-
மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Tamilmirror Online || மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்
-
- 7 replies
- 621 views
-
-
சக்தி டிவி செய்திகள் 23 09 2017 , 8PM
-
- 0 replies
- 380 views
-
-
அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழு…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதியிடம் கையளிக்கப்படாததால்... அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள், சட்டபூர்வமானவை அல்ல – சாலிய பீரிஸ் அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடமே கையளிக்கவேண்டும் என சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார் மேலும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவை அல்ல என குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டனர் என கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் எனினும் இந்த இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டிய…
-
- 0 replies
- 158 views
-
-
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா… தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி குதி…
-
- 5 replies
- 1.9k views
-
-
’ஏனைய மதத்தவருக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள்’ ஏனைய மதத்தவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் அது, தமது மதத்துக்கு அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மன்னார், திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைந்துள்ள மாதொட்ட ரஜமகா விகாரையில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், "வழிபாட்டுத் தலங்கள், தனி மனிதனுக்கு உரித்தானவை அல்ல. இவை சகலருக்கும் பொதுவானவையாகவே கருதப்படல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் என்ற வகையில் தூய்மையான எண்ணத்துடன் அன்பை வ…
-
- 0 replies
- 242 views
-
-
தேர்தல் வன்முறைகள் உச்சத்தில் கஃபே இயக்கம் இலங்கையில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றுள்ள தினங்களில் இந்த வார இறுதி நாட்களே மிக மோசமானவையாக பதிவாகியுள்ளதாக கஃபே என்ற சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கம் தமிழோசையிடம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு கட்சிகளுக்கிடையிலான வன்முறைகளும் உட்கட்சி மோதல்களும் அதிகரித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை நகரசபையின் பிரதி மேயரும் இன்னும் சிலரும் காயமடைந்துள்ளனர். ஃபேரியல் அஷ்ரப் மற்றும் சரத் வீரசேகர ஆகிய ஒர…
-
- 0 replies
- 597 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜரொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார். அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினாலும், பௌத்த பிக்கு ஒருவராலும் 39 சிங்கள குடும்பங்கள் குறியேற்றப்பட்டுள்ளன. இவ்வேளை 1990ம் ஆண்டுக்கு முன் இப்பகுதியில் 5 சிங்கள குடும்பங்களே இருந்துள்ளன. இவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடவத்தை என்னும் பகுதியில் குடியேறியுள்ளனர். இவர…
-
- 0 replies
- 359 views
-
-
பாயும் புலிக்கொடியுடன் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி உதயம் தமிழகத்தின் முன்னனி திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான திரு சீமான் அவர்கள் நாம் தமிழர் என்ற கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதுடன், வீறுகொண்டு பாயும் புலியையும் அதன் கொடியாக வெளியிட்டுள்ளார். தமிழீழம் உருவாக்கப்படுவதே தமிழகத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு உளவியல் ஆதரவை வழங்கும் என கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்ற கொடி அறிமுக விழாவில் பேசும் போது சீமான் தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் மே 18 ஆம் நாள் மதுரையை நோக்கி மிகப்பெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஈழத்தமிழ் மக்களின் போரட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் நசுக்கப்பட்ட இந்த நாள…
-
- 2 replies
- 799 views
-
-
நூற்றாண்டை கடந்து நினைவில் நிற்கும் 'போட் மெயில்' கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக, கடல் கடந்து செல்வது, தமிழர்களுக்கு புதிதல்ல. 'திரை கடல் ஓடி, திரவியம் தேடு...' என்ற பாடல் நமக்கு ஓராயிரம் நினைவுகளை தரும். அந்த வகையில், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன், ரயில் வசதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நல்ல தொடர்பு இருந்த காலம் அது. இன்றைய காலகட்டத்தில், நதி நீர் பிரச்னை உட்பட, பல்வேறு விஷயங்களுக்காக, அண்டை மாநிலங்களுடன், தமிழகத்திற்கு எப்போதும் சச்சரவு தான் இருந்து வருகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன், இரு நாடுகளுக்கு இடையே ர…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழ் மக்களை நோக்கி சீனா! http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-9
-
- 4 replies
- 664 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மறுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறாம். இலங்கையில் நடக்கும் விழா என்பதôல் அழைப்பிதழை பார்த்து முன்னண…
-
- 0 replies
- 643 views
-
-
ராஜபக்சக்களுக்கு இடையில்... கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து ஆராய்வு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இரவு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்ட…
-
- 0 replies
- 101 views
-
-
சாவகச்சேரி மாணவன் கொலை பற்றி விசாரிக்கும் நீதிவானின் வாசஸ்தலப் பகுதியில் ஆயுதத்துடன் ஈ.பி.டி.பியினர் நடமாட்டம் என முறைப்பாடு சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ் தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இரு வர் நடமாடுகின்றன சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ் தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இரு வர் நடமாடுகின்றனர் என அப்பகுதி மக் கள் நீதிமன்…
-
- 2 replies
- 697 views
-
-
யாழில் 5 மணிநேரத்தில் 500 வழக்கு பதிவு: காரணம் இதுதான்- மக்களே உஷாா்! டெங்கு கட்டுப்பாட்டு விசேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று யாழில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 5 மணித்தியாலங்களுக்குள் இதுவரை 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெங்கு கட்டுப்பாட்டு விசேட நிகழ்ச்சி இன்றும் நாளையும் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணிக்கு அனைத்து பிரதேசங்களிலும் ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கையில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் அதி தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெல்லிப்பழை பிரதேசத்தில் 50 வழக்குகளுக்கு மேல் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 383 views
-
-
வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் கண்ணிவெடியில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் உயிரிழப்பு‐ வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் கண்ணிவெடியில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அது தவறுதலாக வெடித்ததில் பிரான்ஸ் தொழில்நுட்பவியலாளரான இவர் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 அளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சுவிஸர்லாந்தின் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குறித்த பிரதேசத்தில் புகைப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றை அகற்ற முயற்சித்த போது அது வெடித்து சிதறியுள்ளது. அதேவேளை கொல்லப்பட்டவரின் சடலத்தை வைத்திய…
-
- 3 replies
- 1k views
-
-
சுமந்திரனும், அனந்தியும் ஜெனீவாவுக்குப் பயணம்! - தனித்தனியாகவே செயற்படுவர். [Wednesday, 2014-03-12 07:55:13] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமானார். இதேசமயம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் மீண்டும் ஜெனீவா சென்றிருக்கின்றார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டார் என்று கூறப்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. அங்க…
-
- 2 replies
- 891 views
-