Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை! கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இலங்கையில் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இலங்கையின் பிரதமர் என்பதற்கான அரசியல் போட்டி உச்சமடைந்து இருக்கிறது.சில வாரம் முன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி…

  2. நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது! பிரசுரித்தவர்: NILAA July 23, 2011 நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன் நோர்வேயின் அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: உலகில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக அயராது பாடுபட்டு வந்துள்ள நோர்வேயிய மண்ணில் இடம்பெற்றுள்ள இக்கொடூரத் தாக்குதலினால் நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம். இலங்கைத் தீவினில் அமைதியை நிலைநாட்டும் நோக்குடன் சி…

  3. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்த கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக ஆராய்பட்டது. காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் காலி நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கோத்தபாய உள்ளிட்ட நால்வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் குறித்த விடயம் பற்றி பேசப்…

  4. ஈழத்தமிழ் அகதிகள் 130 பேர் தமிழகப் பொலிஸாரால் தடுத்து வைப்பு:துருவித் துருவி விசாரணை [Thursday, 2011-07-28 09:26:13] 130 இலங்கைத் தமிழ் அகதிகள் துனி கிராமப்புர பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு கிழமையின் முன்பு இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக துனி கிராமத்தில் உள்ள தளுபுளம்மா லோவா கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என பெத்தபுரம் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும், பொலிஸார் நேற்றையதினம் அகதிகளை அழைத்து அடையாள அட்டை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர் என அவர் …

  5. த.தே.கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது - சுரேஷ் பிரேமசந்திரன் தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு ஜக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது நாங்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஒரு அரசியல் சாசன அடிப்படையில் நாட்டை நிர்வகிக்…

  6. பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்! adminOctober 28, 2023 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவு…

  7. நல்லூப் முருகப் பெருமானின் 13 ம் நாள் திருவிழாவின் மாலை நேர வெளிவீதி உலா வரும் காட்சி தங்களுக்காக.. thx http://www.newjaffna.com/

  8. கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நெலுந்தெனிய மற்றும் உடுகும்புர பகுதிகளுக்கு இடையே மரம் முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்தோடு கனமழையின் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை – கொழும்பு பிரதான …

  9. பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்ட சம்பவமொன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. வோல்டன் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரித்தானிய எல்லைச் சேவை முகவர் அதிகாரிகள் மூவரையும் கண்டதும் குறித்த பெண் சமையலறைக்கு சென்று அதிகாரிகள் முன் தன்னை தானெ வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார். குறிந்த பெண்ணின் கணவர் உயிரிக்குமுன் அவரை விடுதலை புலிகளுக்கான ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர் எனக்கூறி அவருக்கு இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவாகியிருந்த குறித்த ப…

  10. குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உ…

  11. ஜயலலிதா - சுஷ்மா சுவராஜ் - மீரா குமார் ஆகியோரை இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளது:- 27 ஆகஸ்ட் 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்ற சபாநயகர் மீரா குமார் ஆகியோரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, அடுத்த மாதம் 17 ஆம் திகமுதல் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க எண்ணியிருந்த போதிலும், அந்த திகதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/662…

  12. அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற உள்ளது. வீதி பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்துவரும் மற்றும் முழுமையடையாத வீதி பிரிவுகளின் முக்கியப் பணிகளைத் தீர்க்க இந்த நிதி ஒதுக்கப்படும். ADB இன் சலுகைக்குரிய சாதாரண மூலதன வளங்கள் வழங்கும் கடன், 4ஆவது தவணைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட முதலீட்டு செலவான 68.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியாகும். இந்த செலவில் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு ஏற்கும். https://thinakkural.lk…

  13. வன்னி போரின் இறுதிப்பகுதியில் சிறிலங்காப்படையினரால் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார். . வாஷிங்டன் ஊடகவியளார்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். . மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்துக்கும் வரவேற்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். . இதேவேளை, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமையானது இலங்கை வாழ் மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை சிறப்புற உணர்ந்து கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ள…

  14. உல்லாச கடற்கரை பிரதேசமாக உருப்பெறவுள்ள வளலாய் கடற்கரை அச்சுவேலி வளலாய் அக்கரை கடற்கரையினை அழகுபடுத்துவதற்காக வலி.கிழக்கு பிரதேச சபை ஒரு மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இப்பிரதேச சபையின் நடவடிக்கையின் மூலம் இக்கடற்கரை பிரதேசம் உல்லாசக் கடற்கரை பிரதேசமாக அழகுபடுத்தப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதரண நிலை காரணமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரை கடற்கரைப் பகுதி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இக்கடற்கரையில் சவுக்கு மரங்கள் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல்,மின்சார வசதிகள் ஏற்படுத்தல், உல்லாச இருக்கைகள் அமைத்தல் போன…

  15. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்தார். சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். https://newuthayan.com/story/16/ஐரோப்பிய-எம்-பியுடன்-கூட்டமைப்பின்-தலைவர்-சந்திப்பு.html

    • 5 replies
    • 1.4k views
  16. தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று நம்பிக்கை இல்லை. நல்லை ஆதீனத்தின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவிப்பு [இனியபாரதி] நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நீங…

  17. விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம் நிலுவையிலுள்ள விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கும் அதே நேரம் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மேலும் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குமென அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் விளக்கமளித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற …

  18. வீடுகள், மரங்கள் மீது இருந்து மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்த மர்ம மனிதர்கள் தற்போது வீடுகள் மீது கல்லுகளை எறிகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த ஒரு வார காலமாக மாதகல், அராலி பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளில் இந்த மர்ம மனிதர்கள் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மர்ம மனிதர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உயர்மட்ட மாநாடுகள் கூட்டப்பட்டு கிராமங்கள், பிரதேசங்கள் ரீதியாக விழிப்புக்குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ரீதியில் இவை நடைபெற்று வருவதுடன் ஒருசில பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வ…

  19.  திங்கள் 23-07-2007 13:19 மணி தமிழீழம் [மயூரன்] மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க இலங்கை பிரதிநிதி தலைமையிலான குழு இஸ்ரேல் செல்கிறது இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய உலகின் மிக் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் இலங்கை பிரதிநிதி தலைமையில் குழு ஒன்றை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பிரசாத் காரியவாசம் தலைமையில் மூவர் அடங்கிய குழு இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழுவினர் எகிப்து,சிரியா மற்றும் ஜோர்டான் ஆகிய நா…

    • 3 replies
    • 1.1k views
  20. வாரம் 7 குடும்பங்களின் விபரம் தருகிறோம் உதவமாட்டீங்களா….? யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்த குடும்பங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இன்று முதல் வாரம் 7 குடும்பங்களின் விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உலகெங்கும் பரந்துவாழும் உங்களால் நிச்சயம் வாரம் ஏழு குடும்பத்திற்கான உதவிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் உதவியை வேண்டுகிறோம். 1) இந்திரன் :- இவர் தலையில் காயமுற்று ஒரு கையும் காலும் இயங்க முடியாதுள்ளார். இவரது மனைவி ஒரு காலையிழந்தவர். 5வயதில் இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சுயதொழில் முயற்சியாக கோழிவளர்ப்புக்கு உதவி வேண்டுகிறார்கள். (இலங்கை ரூபா …

    • 2 replies
    • 1.1k views
  21. மத்திய வங்கியில் இடம்பெற்று மோசடியை மையமாக வைத்து, பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. மகிந்தவுக்கு ஆதரவான தரப்பு இதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கின் ஆளுனர் அர்ஜுனமகேந்திரனினால் முறிகள் விநியோகத்தில் பாரிய நிதி மோசடி செய்யப்பட்டதாக முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை மையமாக வைத்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இதே காரணத்துக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவ…

    • 0 replies
    • 682 views
  22. January 21, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் திகதி குறிதத் பகுதியில் எல்லை தாண்டி மீள்பிடியில் ஈடுபட்…

  23. Published By: VISHNU 12 JAN, 2024 | 03:19 PM தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 இலட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். அந்த பணத்தை உடனே வைப்பிலிடுங்கள் என கூறி, 18 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி, தங்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் , உங்களுக்கு பெருந்தொகை பணம் விழுந்துள்ளது. அந்த பணத்தினை பெற வ…

  24. Posted on : Mon Jul 30 5:50:42 EEST 2007 வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை கிழக்குப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பாதுகாப்புப் படையினர் அடுத்து வன்னிப் பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது. முதற்கட்டமாக இராணுவத்தினர் மேற்குக் கடலோர மன்னாரிலிருந்து கிழக்குக் கடலோர கொக்கிளாய் வரையிலான கடலோரத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சிறிய குழுக்களாக முன்னேறிச் சென்று முல்லைத்தீவு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் படையினர் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நோக்கில் ஏற்கனவே ஓம…

  25. தற்போது பெய்துவரும் மழைக்காரணமாக முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரு குளங்கள் வான் பாய்கின்றன. புத்துவெட்டுவானின் மருதங்குளம், மற்றும் பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களும் வான் பாய்கின்றன. மருதங்குளத்தின் வான் பாய்வதன் காரணமாக கிளிநொச்சியின் இரண்டாவது பெரியகுளமான அக்கராயன்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. பழைய முறிகண்டிக்குளம் வான் பாய்வதன் காரணமாக துணுக்காயின் அம்பலப்பெருமாள் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் வான்பாய்வதற்கான நீர்மட்டத்தினையடைந்து கொண்டிருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்வதன் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல குளங்கள் வான்பாய்வதற்கான நீர்மட்டத்தினையடைந்துள்ளன. http://www.tamilmirror.lk/14632…

    • 0 replies
    • 579 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.