Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending

  2. புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள். முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவா…

  3. அரசியல் ரீதியான தந்திரோபாயமாக ஒற்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன். யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இன்று (7) காலை யாழில் நடந்த ச…

  4. இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். விருப்புத்தெரிவு வாக்குகளை எண்ணும்போது மாலை 6 மணியளவில் தமது தாயார் இரண்டாம் இடத்தில் இருந்தார். எனினும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அவர் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இறுதி முடிவு அறிவிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டநிலையில் அங்கு வந்த சுமந்திரனும் அவருடைய ஆதரவு அரசியல்வாதியான சயந்தனும் விருப்பு வாக்கு எண்ணும் அறைக்குள் அமர்ந்திருந்ததாக பிரவீனா ரவிராஜ் …

  5. (இராஜதுரை ஹஷான்) இடம்பெற் று முடிந்த பொதுத்தேர்தலில் 68 இலட்சத்து 53ஆயிரத்து 693 வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனக்கு கிடைத்த 17 தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இப் பெயர்பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று முஸ்லிம்கள். ஒரு தமிழர் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலிசப்ரி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில், வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோரே அந்த தேசிய பட்…

    • 3 replies
    • 1.5k views
  6. நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் செல்லவுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களின் விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம் பின்வருமாறு குருணாகலல் மாவட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷ – 527,364 ஜொன்ஸ்டன் பெரேரா – 199,203 குணபால ரத்னசேகர – 141,991 தயாசிறி ஜயசேகர – 112,452 அசங்க நவரத்ன – 82,779 சமன்பிரிய ஹேரத் – 66,814 டீ.பி.ஹேரத் – 61,954 அநுர பிரியதர்ஷன யா…

  7. (இராஜதுரை ஹஷான்) புதிய பாராளுமன்றத்துக்கு; இம்முறை மூன்று தந்தைமார்களும், அவர்களின் மகன்மார்கள் மூவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள். அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் சஷிந்ர ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனும் அவரது மகன் பிரமித தென்னகோனும் முறையே விருப்பு வாக்குப்பட்டியில் இடம்பிடித்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத…

    • 3 replies
    • 568 views
  8. நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர் இதனால…

  9. (நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இம்முறை பொதுத்தேர்தல் வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காகக் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. எனினும் எந்தவொரு கட்சியும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுமாக இருந்தால், அது குறித்த கட்சிக்கு மட்டுமீறிய அதிக…

  10. (தி.சோபிதன்) தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். எமது கட்சியின் தலைமையும் நிர்வாக கட…

  11. இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்: இரா. சம்பந்தன் விக்னேஸ்வரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் டக்ளஸ் தேவானந்தா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனோ கணேசன் சுமந்திரன் சிவஞானம் ஶ்ரீதரன் அங்கஜன ராமநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜெயராஜலிங்கம் குலசிங்கம் தீபன் பிள்ளையான் - சந்திரகாந்தன் சாணாக்கிய ராகுலன் கோவிந்தன் கருணாகரன் வேலுகுமார் வியாழேந்திரன் பழனி திகம்பரம் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் உதயகுமார் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ராமேஸ்வரன் வடிவேல் …

    • 18 replies
    • 1.5k views
  12. மாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.? "மக்களின் ஆணையின் படி தமிழரசுக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள் அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன.? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெ…

  13. மனோ கணேசன் கொழும்பில் வெற்றி August 7, 2020 கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 62,091 வாக்ககளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து தமது முகநூல் குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “நான் அல்ல, நாம் வென்றோம்..! மகிழ்ச்சி. நன்றி. நம்பி வாக்களித்த மக்களுக்கும், உத்வேகத்துடன் உழைத்திட்ட கட்சி உடன்பிறப்புகளுக்கும், கடைசி தருண பரபரப்பில் பதட்டமடைந்து உலகெங்கும் இருந்து தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும் நன்றி. கடும் வெளியக, உள்ளக சவால்களுக்கு மத்தியில், தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தோம்.” ஐக்கிய மக்கள் சக்தியின் சா…

  14. சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான் August 7, 2020 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். http://thinakkural.lk/article/60686

  15. இணைந்து செயற்பட வருமாறு... கஜேந்திரகுமார், விக்கிக்கு.. சுமந்திரன் பகிரங்க அழைப்பு வடக்கில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாகவும் கூறினார். http://athavannews.com/இணைந்து-செயற்பட-வருமாறு/

  16. ரவிராஜின்.. உருவ சிலைக்கு, கறுப்பு துணியால் கட்டி போராட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடடார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, சசிகலாவும் தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங…

    • 2 replies
    • 766 views
  17. Gotabaya Rajapaksa @GotabayaR · 3 Std. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட "சுபீட்சத்தின் நோக்கு " கொள்கையை மீண்டும் ஒரு முறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். @PodujanaParty …

  18. ரணில் எம்.பி பதவியை இழந்தார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 42 வருடங்களின் பின்னர் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார். கொழும்பில் போட்டியிட்ட அவரின் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.61 வீதமாகும். இவ்வாறான நிலைமையில் அந்த கட்சி ஆசனங்களை ஒதுக்குவதற்கான மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கட்சிக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவியுள்ளார். இதேவேளை இந்த மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி …

    • 12 replies
    • 1.6k views
  19. 2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார். 86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வ…

  20. விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி On Aug 6, 2020 நடந்து முடிந்த தேர்தலில் செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார். கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல…

    • 119 replies
    • 11.3k views
  21. பிரதமர் மஹிந்தவுக்கு மோடி வாழ்த்து 2020 பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அலைபேசி ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநதவகக-மட-வழதத/175-254023

    • 1 reply
    • 778 views
  22. முடிவுகளை அறிவதற்காக யாழ் மத்திய கல்லூரியில் குவிந்துள்ள வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் (படங்கள், காணொளி) August 6, 2020 யாழ் மத்திய கல்லூரியில் இன்று காலை வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அறிவிப்பு யாழ் தெரிவத்தாட்சி அலுவலரினால் மதியம் 2.00 மணிக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் கட்சி வேட்பாளர்கள், அனுமதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பெறுபேற்றுக்காக மத்திய நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ். தர்மினி http://thinakkural.lk/article/60440

  23. மிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி August 6, 2020 இலங்கையின் மிகப்பழயை அரசியல் கட்சியான ஐக்கியதேசிய கட்சி பொதுத்தேர்தலில் மிகமோசமான தோல்வியை தழுவும் நிலையில் காணப்படுகின்றது. இதுவரை வெளியான தேர்தல்முடிவுகளின் படி ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியதேசிய கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றுவருவதுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. இன்று மாலைவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஐக்கியதேசிய கட்சி நான்காமிடத்திலேயே காணப்படுகின்றது. இன்று மாலை வரை ஐக்கியதேசிய கட்சி 2.47 வீத வாக்குகளையே பெற்றுள்ளது. ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த சஜித்பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 16.9 …

    • 2 replies
    • 980 views
  24. தனது மனைவி குறித்து பெருமைக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய எனது வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம் என் மனைவிதான் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் தங்களது 40ஆவது திருமண நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பதிவில், “40 வருடங்களுக்கு முன்னர், இதே நாளிலிருந்து அன்பான மனைவியாக, பாசமான தாயாக, நல்லதொரு நண்பியாக, என்னோடு நிழலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களே என் வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம்” என அவர் பதிவேற்றியுள்ளார். http://athavannews.com/தனது-மனைவி-குறித்து-பெரு/

  25. லெபனான் வெடிப்புச் சம்பவம்: காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது. குறித்த எட்டு பேரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது. இதில் குறைந்தது 135 பேர் உயிரிழந்ததுடன் ஐயாயிரம் பேர்வரை காயமடைந்துள்ளனர். குறித்த வெடிப்புச் சம்பவத்தில் லெபனானில் வசிக்கும் இலங்கையரின் வீடுகளும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டிலு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.