Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள், கிராமிய சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார குழுவினரால், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட்டது. கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிராமமாக மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற …

    • 0 replies
    • 412 views
  2. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரஜையான தர்ஷன் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றார் என்று குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது குறித்து ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில், ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் மற்றும் பல்வேறு திட்டங்கள் போன்றவற்றுக்குப் பொற…

    • 0 replies
    • 688 views
  3. அஞ்சல் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பில்…! அஞ்சல் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர். ஐக்கிய தேசிய அஞ்சல் பணியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ.ஆர் நிஹால் இதனை தெரிவித்துள்ளார். அஞ்சல் பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/அஞ்சல்-பணியாளர்கள்-நேற்ற/

  4. ம.ம.மு பிரதி செயலாளர் அனுஷா கட்சியில் இருந்து நீக்கம்! மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னணியின் விசேடக் கூட்டமொன்று ஹட்டனிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ‘அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர், அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவரின் மகளான அனுஷா சந்திரசேகரனுக்கு பிரதி செயலாளர் நாயகம் பதவியினை வழங்கினோம். எனினும், சுயநலத்திற்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுவருகிறார். இதன்காரணமாகவே அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள…

  5. யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் இன்றுமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனமுன் பதிவுகள் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.புகையிரநிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள். இதேவேளை கடந்த மார்ச் மாதம்முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுத…

  6. வன்னி வயல்கள் மண் கடத்தல் காரர்கள் வசம்! விளை நிலங்கள் அழியும் நிலையில்….! கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் காரர்கள் களவாக மணல்களை ஏற்றி வருவதாகவும் இதனால் விளை நிலங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த மணல் கடத்தல் தொடர்பாக தர்மபுரம் பொலிஸில் பல முறைப்பாடுகள் அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பல வயல் நிலங்கள் தோண்டப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இ…

  7. எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடுகின்றன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவர்களுக்கான பரிட்சைகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து கடும…

  8. வெள்ளாம்போக்கட்டியில் வாள் வெட்டு; மூவர் காயம் – மோ. சைக்கிளும் எரிப்பு! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (07) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வரை சென்ற பழைய பகையின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த சுரேந்திரன் வெனிஸ்ரன் (19-வயது), வெனிஸ்ரனின் தந்தை வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) …

    • 1 reply
    • 426 views
  9. அம்பாறையிலிருந்து மட்டு விவசாயிகளுக்கு நீர் வழங்கல் – அரச அதிபரின் முயற்சி நிறைவேறியது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான பட்டிப்பளை பிரதேச புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் கடந்தமாதம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து களுகல் ஓயா சமூத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்திற்கு வந்த நீர் விவசாயிகளின் விழைநிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் தெரிவ…

    • 1 reply
    • 320 views
  10. மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கு இடையே கலந்துரையாடல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (07) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணிமனையில் வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், சட்டத்தரணி ந.கமல்தாஸ் என வேட்ப…

  11. சாட்சியங்கள் இறப்பதற்கு முன் சர்வதேசம் நீதி பெற்றுத் தர வேண்டும்… சாட்சியங்களாக உள்ள எங்களுடைய உறவுகள் இறப்பதற்கு முன் சர்வதேசம் எமக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 1188 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற சாட்சியங்களாக உள்ள தமது உறவுகள் உயிரிழந்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்…

  12. ஒரு மாமரத்தில் 12 இன மாம்பழங்கள்…! திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை எனும் விவசாய கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் (வயது – 75) என்பவர் தன்னுடைய வீட்டில் பல வகையான பழமரங்களை பயிரிட்டு பலன் பெற்று வருகின்றார் அவரது தோட்டத்தில் சுமார் 25 க்கும் மேற்பட்ட பழ மரங்கள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவரது தோட்டத்தில் அரிதான பல மரங்கள் காணப்பட்டாலும், ஒரே மரத்தில் ஒரு தோட்டமே காணப்படுகிறது எனப் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஓர் அற்புதத்தைச் செய்துள்ளார். கனி தராத மாமரம் ஒன்றில், 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்ட வைத்தே அவர் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். …

  13. நஞ்சற்ற நிலக்கடலை அறுவடை ஆரம்பம் ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களின் நிலக்கடலை அறுவடை விழா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் ஏற்பாட்டில் வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் நிலக்கடலை அறுவடை விழா கிரான் சேம்பையடி விவசாயக் கண்டத்தில் கி.பிரபாகரன் என்பவரின் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, விவசாய திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், உறுகாமம் பிரிவு பிரதேச …

  14. 51 குருதிக் கொடையாளர்களுடன் நிறைவுகண்ட இரத்ததான முகாம்! விதையனைத்தும் விருட்சமே’ செயற்றிட்டத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தால் அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது 51 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர். https://newuthayan.com/51-குருதிக்கொடையாளர்களுட/

  15. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன் by : Yuganthini நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி அரசியல் யாப்புக்கு முரணானது மேலும் சிறந்த அரச சேவையை, குறித்த விசேட செயலணியின் கீழ் கொண்டு வருவதானது நாட்டை முழுவதுமாக இராணுவ ஆட்சிக்குள் தள…

    • 4 replies
    • 962 views
  16. வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கில் பல வருட காலமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்களது பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு கோரி, மாறி மாறி வரும் அரசாங்கத்திடம் கோரி வருகின்றனர்.ஆனால் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அக்கறை செலுத்தவும் இல்லை. அவர்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் இல்லை. இதனால் இவர்கள் சர்வதேச விசாரணையை கோரி போராட்டத்தில் ஈடுட்டனர்.இருப்பினும் இவ்விடயத்தில் சர்வதேசம் கூட உரிய நீதியை அவர்களுக்கு இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த மக்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒ…

    • 3 replies
    • 610 views
  17. மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர் அவர்தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கௌரவ மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது (50) ஆண…

  18. குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதா விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது. எனினும், வெட்டுக்கிளி பரவல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளத. வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்…

    • 4 replies
    • 686 views
  19. கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினரிடம் நேற்று (22) கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தலபரள-மககயததவம-வயநத-இடஙகள-பதககக-சயலண/175-250711

    • 21 replies
    • 2.2k views
  20. யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை காலமானார் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக காலமானார். யாழ் நாரந்தணையில் பிறந்த லோகநாதபிள்ளை தனது கல்வியை கரம்பன் சென் அன்றனிஸ் கல்லூரியில் பயின்று பின்னர் 1957ல் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார். பின்னர் கொழும்பு மாநகரசபையில் உத்தியோகத்தராக சேர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வா மற்றும் தமிழ் தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்தார். 1983ல் ஏற்பட்ட இன கலவரத்தினால் தனது வீடு ஏரிக்கப்பட் ந…

  21. தெல்லிப்பழையில் திடீர் சோதனை!- ஆவா குழுவின் வாள்கள் மீட்பு யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/தெல்லிப்பழையில்-திடீர்-ச/ ############ ################ ################ ############## என்ன மாதிரியான... ஆயுதங்கள் எல்லாம், செய்து வைத்திருக்கிறார்கள். அவற்றை பா…

  22. வெறிச்சோடி காட்சியளிக்கும் கந்தே விஹாரை துசித குமார பொசோன் பௌர்ணமி தினமான இன்று (05), நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்; வரலாற்று சிறப்புமிக்க அளுத்கமை கந்தே விஹாரை இன்று வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஹாரைக்கு வழமையாக அதிகளவான பக்தர்கள் வருகைதருகின்றபோதிலும் இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பௌத்த மக்களுக்கு மகா சங்கரத்ன தேரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/வறசசட-கடசயளககம-கநத-வஹர/95-251440

  23. பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Posted on June 4, 2020 by தென்னவள் 15 0 முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது. இச் சிலை வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கால…

  24. மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் சுமார் 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி நிதிகள் இணைந்து குறித்த பேரூந்து நிலையத்தை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைத்தனர். குறித்த…

    • 0 replies
    • 314 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.