Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்படும் சகல இடங்களிலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்கு ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக, அவர்கள் மட்டும் ஜூலை மாதம் 13ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை தபால் மூல வாக்கை செலுத்த முடியும். சகல பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படையினர் , சிவில் பாதுகாப்பு திணைக்களம் , சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்களில் ஜூலை 16ஆம் திகதி காலை …

  2. ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை “அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில், ஆட்சி ஏற்றதும் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த அரசில் அரசியல் பழிவாங்களுக்காகவே எப்.சி.ஐ.டி. அமைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்களுக்கான திட்டமிடல்களை மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னின்று முன்னெடுத்தார்கள். இதன் பலனை தற்போது அனுபவிக்கின்றார்கள். பெரும்பாலான அரசசார்பற்ற அமைப்புக்கள் கடந்த காலங்களில்…

  3. விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர் வீரர்கள் இருக்கவில்லை- கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார். மேலும் சிறுவர் படையினர் என்று கூறி விளம்பரப்படுத்தப்படும் ஒளிப்படங்கள் உண்மையான சிறுவர் வீரர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை ஒருபோதும் வீரர்களாக பயன்படுத்தவில்ல…

  4. கிணற்றில் தவறி விழுந்த இளைஞன் சாவு – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கண்ணாரை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவ்விளைஞன், தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்குக் கிணற்றடிக்கு வந்த போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. https://newuthayan.com/கிணற்றில்-தவறி-விழுந்த-இ/

  5. டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் ஒன்றை பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். திருத்துனர்கள் டிப்பர் பெட்டியினை யக் (தூக்கி) மூலம் உயர்த்தி திருத்திக் கொண்டிருந்த சமயம் டிப்பர் சாரதி அதனை சரிபார்க்க முயன்றபோது யக் விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கிய சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே என தெரியவருகிறது. https://newuthayan.com/டிப்பர்-பெட்டி-விழு…

  6. யாழ் பல்கலையில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு! இராணுவக் கெடுபிடி, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05) தமிழீழ கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. https://newuthayan.com/blacktigers/ கரும்புலிகள் நாளான இன்று வட,கிழக்கில் இராணுவத்தினர் கெடுபிடி கரும்புலிகள் நாளான இன்று(05) அதனை யாரும் நினைவேந்தக் கூடாது என்பதற்காக இராணுவத்தாலும், படையினராலும் விசாரணைகளும் கைதுகளும் மேற்க…

    • 1 reply
    • 509 views
  7. பெண்கள் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (05) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா த…

  8. இயக்கச்சி வெடி சம்பவம்; ஆசிரியை கைது; கரும்புலி நாள் பாதாகையும் மீட்பு! கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடையப் பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த ஆசிரியையை கைது செய்துள்ளனர். இந்த வெடிச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பக…

  9. தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக பட்டியல்படுத்தியுள்ளது. நேற்றையதினம் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் என்பன தனது நாட்டு பிரஜைகளுக்கா புதுப்பித்து வெளியிட்டுள்ள உலகளாவிய சுற்றுலா அறிவுறுத்தலிலே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை பிரித்தானியர்களுக்கு பயணிக்க பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனவைர…

  10. ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள் தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக…

    • 6 replies
    • 1.3k views
  11. யாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமைப்பெட்டி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற நிலையில், இச்சம்பவத்தில் சுமைப்பெட்டியை ‘ஜக்’ மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது ‘ஜக்’ நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சோ்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/ய…

    • 2 replies
    • 949 views
  12. அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை! கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில்…

  13. வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன? வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிற…

  14. பூநகரி விபத்தில் இளைஞன் பலி! கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/பூநகரி-விபத்தில்-இளைஞன்/

  15. கிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 400 வீடுகள் வரை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி முதல் காலை எட்டு மணி வரை இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள், போன்ற பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளின் பொருட்டு இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது 280 க்கும் மேற்பட்ட பொலிஸார் இராணுவத்தினர் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த…

    • 1 reply
    • 919 views
  16. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு July 5, 2020 யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் சற்று முன்னர் 50 க்கும் அதிகமான இராணுவம், பொலிஸாரால் சற்று முன்னர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இதன்போது நேரில் வந்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு அங்கு நிகழ்வுகள் ஏதாவது நடைபெறலாம் என்பதாலேயே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது. http://thinakkural.lk/article/51889

    • 2 replies
    • 1.1k views
  17. வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ) July 5, 2020 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள். அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்ப…

    • 7 replies
    • 1.4k views
  18. புலம்பெயர் தமிழர்களே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு காரணம் – கருணாவின் மனைவி Jul 05, 20200 புலம்பெயர்ந்துள்ள சிலர், பணம் உழைப்பதற்காகவும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் போராளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய விடயங்களை அரசாங்கம் உணர வேண்டும். மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள், விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/புலம்பெயர்-…

  19. இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர் இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அம்பிட்டிய சுமனரட்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க நீர் கூட இல்லாமல் சில குடும்பங்கள்…

    • 1 reply
    • 316 views
  20. கதிர்காம பாத யாத்திரையை தடை செய்தால் என்ன நடக்குமென தெரியாது தேர்தல் பிரசாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுச் சேர்க்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை தடைசெய்ய வேண்டுமென மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரதிபதியும் அம்பிட்டிய சுமணரத்தன தோர் கேள்வி எழுப்பியுள்ளார். கதிர்காம பாத யாத்திரைகளை நிறுத்தினார் இனி வரும் தினங்களில் என்ன நடக்குமென கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்து மக்களுடைய பாரிம்பர…

  21. சிவாஜிலிங்கம் கைது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவஜலஙகம-கத/175-252763

    • 2 replies
    • 861 views
  22. ராஜபக்ச குடும்பம் ஆறு மாதம் நல்லா களவு செய்திருக்கும் – அசாத்சாலி இந்நாட்லுள்ள மக்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரைக்கும் மக்களுக்கு ஆதரவாக எதுவித உதவிகளும் நடக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷ குடும்பம் ஆறு மாதம் நல்லா களவுகள் செய்தனர் என முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஷாத் சாலி குற்றம் சுமத்தினார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (04) ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். மேலும், “இந்த நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்தது. மாதா மாதம் உங்கள் வீட்டுக்கு ஐயாயிரம், பத்தாயிரம்…

    • 3 replies
    • 496 views
  23. எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன் எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகாேணமலையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார். அதன் பின்னர் …

  24. மக்கள் மன்ற நிகழ்வில் மஸ்தானுடன் முறுகல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆரம்பத்தில் நெறியாள்கை செய்த வி.எஸ்.சிவகரன் சிவில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுள்ள சின்மயா மிசன் சுவாமி தவத்திரு வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவன் வி.சாரங்கன், சமூக ஆர்வலர் செ.சுதாகரன் ஆகியோரும் வேட்பாளர்களாக கலந்துகொண்ட காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ப.உதயராசா, சிவ.கஜேந்…

  25. ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ. சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது. கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கி வைத்தார். "சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம்" என்று பிரதான தலைப்பிட்ட செய்தி உதயனில் இன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.