ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி by : Jeyachandran Vithushan குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில்விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன. கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிடூபித்துள்ளனர். 1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட…
-
- 18 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது கொவிட் 19(covid 19 )பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் , சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இந்நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உள்ளூர் வளங்களை ஒன்றுதிரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது. இந்நினைவ…
-
- 1 reply
- 475 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை மாணவர்கள் உட்பட 208 பேர் பிரித்தானியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த குழுவில் பலர் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் …
-
- 4 replies
- 668 views
-
-
அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர். இதன்போது சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் கருத்து தெரிவிக்ககையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். ஆனால் நாங்கள் இந்த போராட்டத்தினை ஆரம்பித்த காலத்திலும், இவ்வாறான போராட்டம் தமிழர் தாயக பிரதேசத்தில் ஆரம்பித்த போதும், தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்துடன் இ…
-
- 1 reply
- 497 views
-
-
In இலங்கை May 5, 2020 5:38 am GMT 0 Comments 1282 by : Jeyachandran Vithushan அரசாங்க வேலை ஒன்று மட்டுந்தான் அபிமானம் மிகுந்தது என்றும் வேலை செய்யாமலே மாதாந்த சம்பளம் பெறுவது பற்றி கனவு காண வேண்டாம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில் வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பதிலில், “பட்டதாரிகளையும் சேர்த்து ஏறத்தாழ இரண்டு லட்சம் இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். சிங்கள கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வ…
-
- 0 replies
- 468 views
-
-
(செ.தேன்மொழி) பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கான காலம் இருக்கின்ற நிலையில் இடையில் பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத்தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாமல் உடன் பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு நிதி தொடர்பான செயற்பாடுகளை கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு கையளித்து கடந்தகால குடும்ப ஆட்சியையே மேற்கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் …
-
- 4 replies
- 566 views
-
-
உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம் by : Benitlas பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், எம்.எச்.எம். சித்திராநந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தென், வடத்திய, மற்றும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளதாகவும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர்…
-
- 1 reply
- 421 views
-
-
பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை என்றும், பக்கச்சார்பான முறையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, இது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் தொடர் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, நாளாந்த வருமானத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்க…
-
- 0 replies
- 352 views
-
-
(செ.தேன்மொழி) சஹ்ரானை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொண்ட அரசாங்கம் கொரோனா வைரஸை பயன்படுத்தி பொதுத்தேர்தலை வெற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை வெற்றிக் கொள்ளும் அரசாங்கம், சிறுபான்மை உறுப்பினர்கள் தம்முடன் இணைந்தால் நல்லவர்கள் எனவும், வேறு கட்சிகளுடன் இணைந்தால் தேச துரோகிகள் எனவும் முத்திரைக்குத்தி வருவதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்…
-
- 0 replies
- 336 views
-
-
பதின்ம வயது சிறுமி வன்புணர்வு – இளைஞர்கள் இருவர் கைது பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டது. சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட…
-
- 3 replies
- 626 views
-
-
தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-வெசாக்-வாரம்-அறிவிப்பு/175-249559 வெசாக் பண்டிகையின் போது இவ்வாறு செயற்படவும் வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…
-
- 10 replies
- 901 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. சுகாதார பாதுகாப்பு தரப்பினரது கண்காணிப்புக்கு அமையவே அரசாங்கம் தற்போது செயற்படுகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கையை அரசாங்கம் மறைப்பதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சுமத்துகின்றார்கள். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைத்து அறிவிக்க வேண்டும். என்ற அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. சுகாதார பாதுகாப்பு தரப்பினரது ஆ…
-
- 0 replies
- 354 views
-
-
(இராஐதுரை ஹஷான்) உலகின் கொடூரமான தீவிரவாதத்துடன் போராடி வெற்றிப்பெற்ற நாம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டோம். கடந்த காலத்தை குற்றஞ்சாட்டும் பழக்கம் எமக்கு கிடையாது. உலக தொழிலாளர் தினத்தன்று கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக போராடும் சுகாதார பிரிவினர்,பாதுகாப்பு தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அனைவரும் சௌபாக்கியத்துடன். வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொழிலாளர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உலகவாழ் தொழிலாளர்கள் இம்முறை கொவிட்-19 நோய் தொற்று சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. த…
-
- 4 replies
- 750 views
-
-
யுத்த குற்றச்சாட்டுகளிற்கு ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகள் பலர் தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்றனர்- ஜஸ்மின் சூக்காRajeevan Arasaratnam May 5, 2020 யுத்த குற்றச்சாட்டுகளிற்கு ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகள் பலர் தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்றனர்- ஜஸ்மின் சூக்கா2020-05-05T09:20:55+00:00உள்ளூர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது நிர்வாகத்தில் அச்சம் தரும் எண்ணிக்கையில் யுத்தகுற்றச்சாட்டிற்குள்ளான பலரிற்கு நியமனம் வழங்கியுள்ளாhர் எனதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னர் ஊழலில் ஈடுபட்டனர் என்ற அதிகாரிகளும் அவரது நிர்வாகத்தில் காணப்படுகின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 418 views
-
-
உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், எம்.எச்.எம். சித்திராநந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தென், வடத்திய, மற்றும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளதாகவும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் முப்படைகள் மற்றும் சுகாதாரத் துறையினரைப் பயன்படுத்தி அனைத்து பாட…
-
- 0 replies
- 262 views
-
-
அரசாங்கத்துக்கு ஒரு சாதகமான சமிஞ்ஞையைக் காட்டுவதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுகிறது – சுரேஸ் பிரேமச்சந்திரன் அலரி மாளிகைச் சந்திப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் அதில் கலந்துகொள்வதன் மூலம் அரசாங்கத்துக்கான ஒரு சாதகமான சமிஞ்ஞையைக் காட்டுவதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுவதாகவே தெரிகின்றது.இதன் மூலம் அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துக்கொள்வதற்கு அவர்கள் முற்படலாம். நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தவர்களுள் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முக்கியமானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தின் மூலமாக எந்தப் பலனும் கிடைக்கப்போவ…
-
- 1 reply
- 347 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாத பிரசாரங்கள் இடம்பெறுவதாகவும் அது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு ( ஐ.சி.சி.பி.ஆர்.)சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரம்ஸி ராஸிக் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார். பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா…
-
- 36 replies
- 2.3k views
-
-
தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்லும் திட்டமானது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே நடைமுறையில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தது. மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் …
-
- 0 replies
- 645 views
-
-
மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்ததால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/142429
-
- 4 replies
- 1.2k views
-
-
பொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது என, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் என்பன கிருமி நீக்கம் செய்யப்படும் அறைகள் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும், இலங்கை நுண்ணுயிரியல் கல்லூரி, மக்கள் மீது, குளோரின் கலவைகள், சவர்க்கார நீர் உள்ளிட்ட புற ஊதா கதிர்களை ஏற்படுத்தும் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த செயன்முறை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில…
-
- 0 replies
- 326 views
-
-
கொக்குவில் ஆடியபாதம் வீதியில் கைக்குண்டு மீட்பு யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்த பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதருவதற்கு முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும் குறித்த பகுதிக்கு வந்த இராணுவ உயர் அதிகாரிகள், அங்கிருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டை மீண்டும் அவ்விடத்தில் வைக்குமாறு கைக்குண்டை மீட்ட இராணுவ சிப்பாயை அறிவுறுத்தியிருந்தனர். இதன்படி கைக்குண்டை மீட்டுச் சென்ற இராண…
-
- 1 reply
- 390 views
-
-
கூடாரத்தை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ் திருகோணமலையில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துக்கென அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என, கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாட்டை, திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில், மேற்படி அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா, இன்று (04) பதிவு செய்துள்ளார். …
-
- 0 replies
- 459 views
-
-
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை! by : Benitlas பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, எதிர்வர…
-
- 0 replies
- 364 views
-
-
சட்டமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்தலை நடத்துங்கள் – சட்டமா அதிபர் திணைக்களம் by : Jeyachandran Vithushan 2020 பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 19 அன்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுக் காலத்தில் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டமையினால் தாக்கங்கள் குறித்து ஆணைக்குழு ஒரு கருத்தை கோரியிருந்தது. தேர்தல் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள இந்தச் சர்ச்சை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த …
-
- 0 replies
- 369 views
-
-
பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நிதி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய பணத்தை அச்சிடுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல தெரிவித்துள்ளார். அதிகப்படியான பணம் அச்சிடுவதன் விளைவாக எதிர்காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏதேனும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்ற கூற்றினை நிராகரித்த அவர் இது இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்த படுகின்றது எனக் …
-
- 3 replies
- 432 views
-