ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
- நூருல் ஹுதா உமர் தீவிரவாதத்துக்கு காரணம் மொழி அல்ல. தமிழ் தீவிரவாதத்துக்கு காரணம் தமிழ் மொழியா? ஜேவிபி தீவிரவாதத்துக்கு காரணம் சிங்கள மொழியா? அரபு பேசுகின்ற சவூதியும் யமனும் சண்டை பிடிக்கின்றனர். இவர்களில் யார் தீவிரவாதி? பிரிட்டனும் அயர்லாந்தும் ஆங்கிலம் பேசும் நாடாக இருந்தும் இரண்டும் ஆயுதத்தால் சண்டை பிடித்தன. ஆகவே தீவிரவாதத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லை. ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்தவர் விடயங்களில் மூக்கை நுழைக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால் தீவிரவாதத்தை இலகுவாக ஒழிக்கலாம் என என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 342 views
-
-
ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சித்தவற்றை TNA ஜனநாயக ரீதியாக அடைய முயற்சிக்கின்றது : லக்ஸ்மன் யாபா தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சிக்கப்பட்ட விடயங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைய முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத் திருத்தம் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டுள்ளார். …
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று (25) கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னதாக கூடிய கொரோனா தடுப்பு செயலணியே குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகளும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது. …
-
- 8 replies
- 831 views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டமையினால் டக்ளஸ் தேவானந்தா குழப்படைந்துள்ளார் என்றும் அதேவேளையில் சிறிலங்காவில் நடைம…
-
- 4 replies
- 1.7k views
-
-
யாழ்.மத்திய பேருந்து நிலைய சூழலில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார். யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக பல இடங்களில் பலர் சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிமாராய்ச்சி மே…
-
- 15 replies
- 768 views
-
-
உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பது குறித்து ஆராய்வு 66 Views கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் பூர்வீக நிலங்களை அபகரிக்க சிறீலங்கா அரசு மிகவும் திட்டமிட்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்திலும் சில ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப…
-
- 6 replies
- 887 views
- 1 follower
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உண்மைதான். தமிழர்களின் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டு மறைக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விளக்கமளித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
இந்தியப் புலனாய்வு அமைப்பான "றோ' தான் புலிகளின் தலைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கி அவர்களை பலமிக்க சக்தியாக மாற்றியது. 13ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிப்பதன் மூலமே அதிகாரப் பரவலுக்கான முன்னேற்றத்தை அடைய முடியும் என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன சரியான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. இந்தியாதான் போராளிகுழுக்களை வளர்த்து விட்டது. பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது. இந்திய புலனாய்வு அமைப்பான றோ புலிகளின் தலைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங…
-
- 0 replies
- 375 views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்த சிதம்பரம், ’’நாட்டிலே உள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றி முதலமைச்சரிடம் யோசனை கேட்டேன். அமைச்சரவை கூட்டத்திலும், குழு கூட்டத்திலும் இந்தப் பொருள்கள் விவாதத்திற்கு வரும்போது முதலமைச்சர் கூறிய யோசனைகளை நான் அங்கே எடுத்து தெரிவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஐ.நா.வின் நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கின்றது இலங்கை அரசாங்கம் உறுதியாக பதிலளிக்கவேண்டுமென வட–கிழக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் கூட்டாக விண்ணப்பம் சர்வதேச தீர்ப்பாயம் அவசியம் கால அவகாசம் வழங்குவது நீதிக்கான தேடலை நீர்த்துப்போகச் செய்யும் ஐ.நா.கண்காணிப்பு அலுவலகங்கள் தேவை வடக்கு முதலமைச்சரும் ஆதரவு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகியுங்கள் மதிப்பீட்டை மேற்கொள்ளுங்கள் (ரொபட் அன்டனி) இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினது நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த விடயத்தில் ஐ.நா. மனித…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன குழுவொன்று இவ்வாறு விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலவந்தமான கடத்தல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட குழு நியூயோர்க்கில் கூடி காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 17 பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட 25 நாடுகளில் 400 காணாமல் போதல் சம்பவங்கள் இடபெற்றுள்ளன. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதனை உறுதி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 1980ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பி…
-
- 0 replies
- 357 views
-
-
அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள்:- M.A. சுமந்திரன் 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும் முக்கியம…
-
- 1 reply
- 501 views
-
-
இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் அம்பாறையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்…
-
- 1 reply
- 414 views
-
-
30/06/2009, 22:53 ] வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், மேற்பட்டோர் காயம் செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவை…
-
- 2 replies
- 1.1k views
-
-
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குவது தேர்தலின் பின்னரே என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அதிகபட்சமாக குறித்த மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அவர் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் அவரது சுய நிலைமையை பரிசீலனை செய்தே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (30) ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்ததை அடுத்து வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் யார் என ஊடகங்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்க…
-
- 0 replies
- 795 views
-
-
நல்லிணக்க முயற்சிகளை குழப்ப ரணில் உத்தரவாம் ஐ.நா.வுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரணதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்க ளைக் குழப்பும் உத்தரவு கொழும்பு அரசின் தலைமை அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசமைப்பு மற்றும் நல்லிணக்கச் செயற்றிட் டங்கள் தொடர்பாக பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து எந்தவொரு நிதியையும் பெறக்கூடாது என்று தலைமை அமைச்சின் செயலர் சமன் ஏக்கநாயக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 265 views
-
-
ஈழம் தீர்வு பற்றிப் பேசுவது இப்போது சரியா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக டி.அருள் எழிலன் ஒரு ஆயுதப் போராட்டம் எத்தகைய சூழலில் அழியக்கூடாதோ அப்படி அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போரின் முடிவு துயரம் கவிந்த இருண்ட மேகத்தை தமிழ் மக்கள் மேல் இறக்கிச் சென்றிருக்கிறது. புலிகள் அழிவிலிருந்து தப்பியிருந்தால் இன்றைய சூழல் வேறு. இந்த அழிவை நான் தமிழர்கள் சந்தித்த பெரிய பின்னடைவாகவே பார்க்கிறேன். காரணம் பெரும்பான்மைச் சமூகமும் அதன் தலைமையும் தென் பிராந்தியத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கும் விஸ்தரிப்பு நோக்கத்திற்கும் தன் சொந்த மக்களான சிங்களர்களை பலியாக்குவதோடு தமிழ் மக்களை அச்சுறுத்தி பெரும்பான்மை சமூகத்திற்கு போதையை ஊட்டிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் எதுவுமற்ற நிலையி…
-
- 0 replies
- 686 views
-
-
'வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்திருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின் போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கும் என்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பட்டு வருகின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 'இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது. தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில…
-
- 11 replies
- 741 views
-
-
விடுதலைப் புலிகளால் மீண்டும் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச மையத்தின் தலைவரான ரோஹன் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் நாளிதழ் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலவேறு நாடுகளில் இருந்தவாறு ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தாத வரையில் இலங்கைக்கு ஏற்படும் அச்சு…
-
- 2 replies
- 1.2k views
-
-
மீண்டும் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு- கருணாகரம் ஜனா 20 Views மேய்ச்சல் தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். இன்றைய தினம் பாரம்பரிய மேய்ச்சற்தரைப் பிரதேசமாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினை சம்மந்தமான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் முகமாக மேற்கொண்ட பணயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 212 views
-
-
வெலிக்கடை சிறையில் இருந்து வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் திரும்பி வரும்போது சிறை அதிகாரிகளால் துகிலுரியப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றசாட்டு தொடர்பில் சிறிலங்காவின் நீதி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கவனத்தில் எடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று புதன்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிரென சுகயீமுற்றதை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசலைக்கு விசேட ஹெலிகெப்டர் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78831-2013-08-14-12-50-18.html
-
- 1 reply
- 320 views
-
-
கொல்கலன் கழிவுகள்... -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், காக்கைதீவுப் பகுதியின் அராலி வீதியோரத்தில், மாடுகளின் கொல்கலன் கழிவுகள் முறைகேடாகக் கொட்டப்படுவதனால், குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகள் நிறைந்த கல்லுண்டாய் வெளிக்கும் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மீள்சுழற்சி பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே, இந்தக் கழிவுகள் மதகுடன் கொட்டப்பட்டுள்ளன. இப்பகுதியானது, கடற்கரையை மிகவும் அண்டிய பகுதியாகவும் அராலி, வட்டுக்கோட்டை, காரைநகர் ஆகிய கிராமங்களுக்கன போக்குவரத்து வீதியாகவும் காணப்படுகிறது. இந்நிலையில்,…
-
- 0 replies
- 256 views
-
-
இந்தியாவின்... பகையினை, சம்பாதிக்ககூடிய நிலையினையே... தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு! இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையானது சீனாவின் மாகாணம் போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளது. வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக இந்தியாவி…
-
- 5 replies
- 343 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-