ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
புலிகளின் அரசியற்பிரிவான கூட்டமைப்பை தடை செய்யவேண்டும்-கொதிக்கும் கம்மன்பில தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக தற்போதும் செயற்பட்டுவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அன்று தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்தின் ஒருபகுதியாகவே கூட்டமைப்பினர் மாவீரர்களை நினைவுகூர்வதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 351 views
-
-
விமலின் முன்னிலையில் ஈபிடிபி அலெஸ்ரின் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாவற்குழியில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல நாவற்குழியில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என விமலின் விமல் வீரவன்சவின் முன்பாகவே அரச நாடாளுமன்ற அங்கத்தவரான அலென்;ஸ்ரீன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ். சேன்றிருந்த விமல் வீரவன்ச மேடையில் அமர்ந்திருக்க அவருக்கு முன்பாகவே பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை அலென்;ஸ்ரீன் முன்வைத்தார். ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள அவருக்கு எதிராக கட்சியினுள் ஒரங்கட்டல்கள் ஒருபுறம் தலைதூக்கியுள்ள நிலையில் அவரது பகிரங்கமான அவரது கருத்து வெளியாகியுள்ளது. நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தம…
-
- 0 replies
- 486 views
-
-
'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதியான ஒருவர் சென்றுள்ளது கண்டறியப்பட்டதால் கீரிமலை அந்திரட்டி மடம் செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரை முடக்கப்பட்டுள்ளது. யாழ். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர் தொற்றுறுதியான ஏழாலையைச் சேர்ந்த நபர் அண்மையில் நீத்தார் கடன் நிறைவேற்றச் சென்று திரும்பியமை தெரியவந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் கீரிமலை தர்ப்பண மடம் உள்ள பகுதியை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் குறித்த தினத்தில் கிரியை நிகழ்வை நடத்திய மானிப்பாயைச் சேர்ந்த அந்தனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ் அளவெட்டி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 382 views
-
-
05/04/2009, 06:36 [ கொழும்பு செய்தியாளர் மயூரன்] அவுஸ்திரேலிய சம்பவத்தை திரிவுபடுத்தி பிரசுரிக்கும் சிறீலங்கா ஊடகங்கள் சிறீலங்காவின் ஊடகங்கள் பல அடக்குமுறைக்குள் இருக்கினற நிலையில் சிங்களவர்களால் இயக்கப்படும் சிலஇனவாத ஊடகங்கள் செய்திகள், மற்றும் தகவல்களை திரிவுபடுத்தி பிரசுரித்து வருகின்றன. நேற்றய தினம் அவுஸ்ரேலியாவில் தமிழ் மக்கள் நடாத்திய பேரணியை சிங்களக் காடையர் தாக்கியதை அடுத்து சிறீலங்காவின் சில ஊடகங்கள் உடனடியாகவே தமிழ் மக்களே சி்ங்களவர் மேற்கொண்ட அமைதி போராட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக முந்திக் கொண்டு தகவல் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சிறீலற்காவின் சில ஊடங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரியின் தொலைபேசி உரையாடலையும் திரிவுபடுத்திய…
-
- 0 replies
- 822 views
-
-
புதிய பயங்கரவாத சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐ.நா கரிசனை கொண்டுள்ள தாக தெரிவித்துள்ளார். “நாம் பல விடயங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளோம். சட்டவாளர்கள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணி நேரமாக உள்ள ஆரம்ப தடுப்பு…
-
- 0 replies
- 153 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினை ஜெனீவாவில் எதிரொலிக்க ராஜபக்ஷ அரசே காரணம் – சந்திரிகா 33 Views வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிரொலிக்க ராஜபக்ஷ அரசுதான் முழுப் பொறுப்பு. அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரமும் அங்கு எதிரொலிக்கும் நிலைமையையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜெனிவா அமர்வில் இலங்கை எதிர் நோக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மே…
-
- 2 replies
- 886 views
-
-
அன்பான தமிழ் உறவுகளே மிகவும் அரிதாக எமது பிரச்சினைகள் பற்றி அ ந் நிய ஊடகங்கள் எழுதுகின்றன. அவற்றிலும் சில பின்னூட்டல் பகுதிகளை நீக்கி விடுவதுண்டு இது அமெரிக்காவில் வெளிவரும் பத்திரிகை உங்கள் காரசாரமா வலுவான பின்னூட்டல்கள் அவசியம் உடனே எழுதுங்கள் http://www.mndaily.com/2009/04/07/bloodlet...i-lanka-ignored நாங்கள் எழுதாமல் விடும் ஒவ்வொரு தடவையும் சிங்களவனும் கருணா போன்ற துரோகிகளும் காத்திருக்கிறார்கள். மற்ற மக்களுக்கும் எமது பிரச்சினையை விழக்க ஒரு சந்தர்ப்பம்
-
- 0 replies
- 935 views
-
-
தமிழ் மக்களுக்கு இறுதித் தீர்வு கிட்டும் வரை பிரித்தானியாவின் அழுத்தம் தொடரவேண்டும் Published by Gnanaprabu on 2016-12-22 10:18:33 தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதற்கான பிரித்தானியாவின் அழுத்தங்களை அரசாங்கம் ஏற்கனவே உணரத்தொடங்கியுள்ள நிலையில் இறுதித் தீர்வை தமிழ் மக்களுக்கு கிட்டும் வரை அவ்வகையான அழுத்தங்கள் தொடர வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரித்தானிய பழைமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவருமான ஜேம்ஸ் பெர்ரி…
-
- 0 replies
- 151 views
-
-
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்.! மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப…
-
- 0 replies
- 639 views
-
-
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து அனைத்துலக நாடுகளில் முழுவீச்சில் நடத்தப்பட்டுவரும் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டங்கள் உணர்வுபூர்வமான நிலையை அடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 883 views
-
-
இலங்கையில் சமஸ்டி முறை ஆட்சி நிறுவக் கூடாது எனக் கோரி பிரித்தானியாவில் போராட்டம் இலங்கையில் சமஸ்டி முறையில் ஆட்சி நிறுவப்படக் கூடாது எனக் கோரி பிரித்தானியாவில் சில இலங்கையர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய என்ற பெயரில் அரசாங்கம் சமஸ்டி முறையிலான ஆட்சியை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் ஐக்கிய என்ற பெயரில் அரசாங்கம் சமஸ்டி முறையிலான ஆட்சியை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவ…
-
- 1 reply
- 498 views
-
-
பிரித்தானிய Guardian பத்திரிகையில் இன்று வந்த செய்தி எமது நன்றியை தெரிவிப்போம் Tamil civilians slaughtered as army shells 'no-fire zone' Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish off the last Tamil Tiger rebels trapped in a shrinking pocket of land. Injured civilians lucky enough to get out have told of carnage in this so-called "no-fire zone" - a 17 sq km strip of coast where the Tigers are penned in with their backs to the sea. No Horrific stories of limbs ripped off by shellfire and bodies buried where they fell are emerging, despite the government's effo…
-
- 8 replies
- 2.4k views
-
-
யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு (சி.எல்.சிசில்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது. வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை அதற்கு முற்றிலும் மாறாக 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிப்பது மிகவும் சிரமமானது. எனினும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமையவே புதிய ஒழுங்கு நடைமுறை களுடன் இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. வழமையாகப் பட்ட…
-
- 0 replies
- 475 views
-
-
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டில் வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
தமிழர்களுக்குகுந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம் 0 தமிழர்களுக்கு வாய்ப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம் எங்களது பார்வையில் வடமாகாணம் தமிழ் மக்களை பெரும்பாண்மையாக கொண்டது. எங்களுக்கு நடக்கும் அநியாயங்கள் முடிவுக்கு வரவேண்டியதை போல தமிழர்களுக்கு அநியாயம் நடந்தாலும் நேர்மையாக பேசும் கட்சியாகத்தான் நாங்கள் இருக்க முடியும் . அவர்களுக்கு வாயப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை ஆனால் அவர்களோடு சேர்ந்து நாம் ஆட்சிஅமைக்க போகின்றோம் என்பது அர்தமல்ல . அரசாங்கத்துக்கு விரோதமாக நாங்கள் செயற்பட போகின்றோம் என்பதும் அல்ல .ஜனனாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வ…
-
- 1 reply
- 600 views
-
-
விமல் கைதானார்.! முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டார். http://www.virakesari.lk/article/15286
-
- 5 replies
- 962 views
-
-
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது By கிருசாயிதன் இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த விடயத்தை அவர் நினைவு கூர்ந்தார்.அத்துடன், இரு தரப்பினரும் (இந்தியா-இலங்கை) ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார். அத்துடன், வெல்ல முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா தங்களுக்கு உதவியது என அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எ…
-
- 130 replies
- 10.3k views
-
-
- எஸ்.சரவணன் சென்னை, ஏப்.27: தொலைக்காட்சிகளில் காலைச் செய்திகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, அந்தச் செய்தி. 'இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம்.' காலதாமதமான உச்சபட்ச முயற்சி என்றாலும், தி.மு.க. தலைவரின் முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று மக்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். 'எல்லாம் முடிந்துவிட்டதே. இப்போது இது தேவையா?' என்ற ஏமாற்றம் கலந்த கோபக்குரல் மற்றொரு புறம். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (ஏப்.27) அதிகாலை 6.10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய கருணாநிதி, "இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியான தகவல் வரும…
-
- 3 replies
- 1.4k views
-
-
எம்.ஜீ. ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கல்வியங்காட்டில் யாழ்ப்பாணம் எம். ஜீ. ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜீ.ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜீ.ஆர் சிலையருகே நடைபெறவுள்ளது. ஈழத்து எம். ஜீ. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் ஆ.நடராஜன், சிறப்பு விருந்தினராக இந்திய உதவி உயர்ஸ்தானிகரக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். எம். ஜீ. ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு புத்தாடைகளும், அன்பளிப்புகளும் வழங்கப்…
-
- 0 replies
- 306 views
-
-
புதிய அரசியலமைப்பிற்கான ஆளும் கட்சியின் யோசனைகள் புதன் கிழமை சமர்பிக்கப்படும்: ஜி.எல் பீரிஸ் (இராஜதுரை ஹஷான்) உத்தேச அரசியலமைப்பில் தேர்தல் முறைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள். புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் யோசனைகளை எதிர்வரும் புதன் கிழமை நிபுணர் குழுவிடம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது நடைமுறையிலுள்ள இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு 42 வருட காலம் பழமையானது. தற்போதைய அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்…
-
- 1 reply
- 366 views
-
-
பாதுகாப்பு வலய பகுதிக்கு ஐ. நா. கண்காணிப்பு குழுவை அனுப்பும் யோசனை 5வது முறையாகவும் சீனாவின் எதிர்ப்பால் தோல்வி : முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு குழுவொன்றை அனுப்புவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 5வது முறையாக கொண்டு வரப்பட்ட யோசனை சீனாவின் கடும் எதிர்ப்பு காரணமாக தோல்வியடைந்துள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை என சீனா தெரிவித்துள்ளது. இந்த யோசனை சமர்ப்பிக்கப்படும் முன்னர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஐநாவின் அவசர மனிதாபிமான உதவிகளுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ், ஐநா செயலாளர் பான்‐கீ‐ மூன் மற்றும் ஐநாவின் இராணுவ அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் கலந்துரையாடல்க…
-
- 0 replies
- 598 views
-
-
வடக்குத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம், மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் அரச தரப்பில் சிலர் நீதிமன்றம் சென்று தடையுத்தரவைப் பெறும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி மேலும் கூறுகையில், http://tamilworldtoday.com/?p=12005
-
- 6 replies
- 971 views
-
-
விமானத்தைச் சுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு யாழில் வைத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் மீது தாக்குதல் நடத்தி நான்கு பேரைக் கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்தது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 1999 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி யாழ்பாணத்தில் வைத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் தில்லைராஜா என்னும் நபரின் ஏவுகணைத் தாக்குலுக்கு இலக்காகி விமானம் வீழ்த்தப்பட்டதுடன் குறித்த விமானத்தின் விமானப்படை அதிகாரி, விமானி, விமானப்படைச் சா…
-
- 1 reply
- 553 views
-
-
சுகாதார இறுக்கத்துடன் பட்டமளிப்பை நடத்துங்கள்; இல்லையேல் ஒத்திப்போடுங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொரோனா நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துமாறு கோரி, அந்நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைக…
-
- 0 replies
- 254 views
-