Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இ…

  2. மஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தன்னை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான தேர்தல் சட்ட திட்டங்களை சீர்திருத்தம் செய்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் சேவை அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்க முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அவர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி…

    • 1 reply
    • 1.1k views
  3. முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைத் தனது கட்சியின் தலைவராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் பலம்பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அத்துடன் கட்சியை கையளிப்பதில் சொத்து விடங்களும் தங்கியிருப்பதாகவும் மறைமுகமாகத் தெரிவித்தார். க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிய…

  4. யாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படபோகிறதா..? கனரக வாகனங்களில் வந்தது என்ன..? எதற்காக..? கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். இந்த பொருட்கள் எதற்கு என தெரியாத நிலையில் மக்கள் பலர் பார்த்ததுடன் சிலர் அது என்ன பொருட்கள் என ஆராய்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு கிடைத்த பதில் அவை யாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக எடுத்து செல்லப்படுவதாகவும், அதற்காக இந்தியாவிலிருந்து ஆட்கள் வந்துள்ளதாகவுமே https://jaffnazone.com/news/14849

  5. கடவுசீட்டு பெற பொட்டு தடையில்லை புதிய கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்திருக்கக் கூடாது என எந்த தடையும் விதிக்கப்படவில்லையெனவும் பொட்டு வைத்தவாறு புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான உதவிக் கட்டுப்பாட்டாளர் (சட்டம்) பி.ஜீ.ஜீ. மிலிந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய கடவுச்சீட்டுகளுக்காக புகைப்படங்களை எடுக்கும் போது பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்தவாறு படம் எடுப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடைவி…

  6. கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மதலடகளகக-தறககபபடகறத-கழமப-தறமக-நகரம/150-242155

    • 5 replies
    • 1.3k views
  7. தேர்தல் தோல்விக்கு பௌத்த மக்களே காரணம் – ரணில் பௌத்த மக்களினதும் இளைஞர்களினதும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய கலந்துரையாடலின்போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும் இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே இது குறித்து மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது …

  8. இலங்கையை வந்தடைந்தார் Mrs.World கரோலின் ஜூரி 020ஆம் ஆண்டிற்கான Mrs.World பட்டம் வென்ற இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்தார். 35 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பெண் ஒருவர் திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்த மகுடத்தை வென்றமை விசேட அம்சமாகும். அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின்போதே அவர் மகுடத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைகயை-வந்தடைந்தார்-உ/

  9. ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு துசித குமார் டிசில்வா என்ற ஊடகவியலாளரும் அவரது குடும்பத்தினரும் அளுத்கம, ஹெட்டிமுல்லாவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் வைத்து ஒரு குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளானர். அத்துடன் தாக்குதல் தாரிகள் ஆரம்பத்தில் ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மகனை அச்சுறுத்தியுள்ளதாகவும், பின்னர் வீட்டிலுள்ள பொருட்க்களுக்கு சேதம் விளைவித்தும் உள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஊடகவியலாளரும், அவரது மனைவியும் அளுத்கமவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே இத் தாக்குதலை மேற்கொண்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளன…

    • 0 replies
    • 314 views
  10. வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/வடக்கில்-இடம்பெற்ற-ஊழல்/

    • 7 replies
    • 1.6k views
  11. தெண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு -வடமராச்சியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின கடும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளன.மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் பருத்தித்துறை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 118 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தெண்டைமானாறு வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் இதனால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15) h…

  12. பிரித்தானிய தூதரகத்தால் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு, பிரியங்க பெர்ணான்டோவிற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தானே செலுத்துவதாக அறிவித்துள்ளார் பிரித்தானியாவில் வாழும் சிங்கள தொழிலதிபர் ஒருவர். இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவதை போல சமிக்ஞை காண்பித்ததாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பயிணாற்றிய பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு இலங்கை சுதந்திரதின நிகழ்வின்போது இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வழக்கு நடைபெற்ற நிலையில், இராஜதந்திர சிறப்புரிமை அவருக்கிருப்பதாக தெரிவித்து வழக்கு விசாரணை கைவிடப்படவிருந்தது. எனினும், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம், பிரியங்கவிற்கு சிறப்புரிமை …

    • 4 replies
    • 1.1k views
  13. மஸ்கெலியா பொது மைதான கதவுகள் இன்று 9ஆம் திகதி காலை மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை கடின பந்து அணி மாணவர்கள் காத்திருந்ததை அறிந்த மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி உடன் மைதானத்திற்கு சென்று குறித்த பொது மைதான கதவை திறந்து வைத்தார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தவிசாளர் கூறுகையில், பாடசாலை மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் எம்மால் ஏற்படாது என்றும் இம்மைதான கதவை மூடியமைக்கான காரணமானது,மைதானம் தற்போது சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும் ஆகவே தான் மைதானத்தை மூடிவைக்கப்பட்டது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70756

    • 0 replies
    • 341 views
  14. (எம்.ஆர்.எம்.வஸீம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணியாகவே சுவிட்ர்லாந்து தூதரகம் மற்றும் லண்டன் உயர் ஸ்தானிகர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் இலங்கை பிரஜை. அதனால் எமது பாதுகாப்பு பிரிவுக்கு அவரிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு அதிகாரம் இருக்கின்றது. இருந்தபோதும் குறித்த பெண்ணை தூதரகத்துக்குள் வைத்துக்கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக வாக்குமூலம் வழங்காமல் சாட்டு…

    • 0 replies
    • 506 views
  15. கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று (08.12) இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 5மணியளவில் சேமமடு முதலாம் யூனிற் மற்றும் 2யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 சாதாரண பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசெல்லப்பட்டு காணாமலாக்கபட்டிருந்தனர். அவர்களின் 35வது நினைவுதினமே அன்னுஷ்டிக்கப்பட்டது. சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் க…

    • 0 replies
    • 362 views
  16. ‘சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகளை விடுதலை செய்யுங்கள்!’-ஞானசார தேரர் டிசம்பர் 8, 2019 துமிந்த சில்வா, விடுதலைப்புலிகள் உட்பட சகல அரசியற் கைதிகளையும் விடுதலை விடுதலை செய்யவேண்டுமெனவும் அதற்கென விசேட ஆணையமொன்றை ஜனாதிபதி நியமிக்கவேண்டுமெனவும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார். பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவைக் கொலைசெய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அமைக்கப்படும் ஆணையம் இவர்கள் எல்லோருக்கும் எதிராகப் பதியப்பட்டுள்ள வழக்குகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தேரர் கேட்டுக்கொண்டுள்ளார். “மன்னிக்கப்பட வேண்டிய சிறைக்கைதிகளைத் தொட…

  17. மக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோதாபய செயற்படுத்தி வருகின்றார் Published by J Anojan on 2019-12-09 16:22:21 (செ.தேன்மொழி) மக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயற்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார். பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இதேவேளை கடத்தப்பட்ட…

    • 0 replies
    • 320 views
  18. முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமிப்பு Published by Loga Dharshini on 2019-12-09 16:24:01 (இரா.செல்வராஜா) முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கே.டி. ரம்புக்வெல்லவின் வேண்டுகோளுக்கமையவே பொது நிர்வாக உள்நாட்டு அளுவல்கள் அமைச்சு சுந்தரம் அருமைநாயகத்தை செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பதோடு, யாழ்பாண மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்…

    • 0 replies
    • 306 views
  19. (நா.தனுஜா) 19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. ஏனெனில் ஏற்கனவே மட்டுமீறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அதிகாரங்களற்ற பொம்மை பிரதமராக இருப்பதற்கு விரும்பமாட்டார். எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசிய…

  20. (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். …

    • 10 replies
    • 1.9k views
  21. அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை - அருட்தந்தை சக்திவேல் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை, நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுப்பதற்கு தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட் தந்தை ம. சக்திவேல் தெரிவித்துள்ளார்.' அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள ஏழு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களி்ல் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இதுவரை அரசாங்கம் கூட உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை இந்த நிலையில் சில ஊடகங்கள் எவ்வாறு…

  22. சஹ்­ரானை சந்­தைப்­ப­டுத்த முடி­யா­தென்­பதால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்: ரிஷாத் பதி­யுதீன் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும் சஹ்­ரானை அர­சியல் ரீதியில் சந்­தைப்­ப­டுத்த முடி­யாது என்­பதால் அவர்­க­ளுக்குப் புதிய இலக்­குகள் தேவைப்­ப­டு­கி­றது. ஆகையால் அதற்கு தன்­னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மையும் இலக…

  23. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு பிரதேச சபையின் பன்னாலை வித்தகபுர வட்டார உறுப்பினரான சஜீவன் சண்முகலிங்கம் என்பவரே இவ்வாறு பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது கணவர் காணமல் போன நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணிடமே குறித்த பிரதேச சபை உறுப்பினர் ரூபாய் 13,37,500 மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியிடம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த பிர…

  24. சாவகச்சேரி வைத்தியசாலையில், இருவர் பணியாளர்களைத் தாக்கி அடாவடி… December 8, 2019 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மருந்து கட்டுவதற்கு சென்ற இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். அடாவடியில் ஈடுபட்ட இருவரும் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பொதுமக்களால் மடக்கிப் பிடித்து நையப்புடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சாவகச்சேரி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச்சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாள…

  25. காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு திருகோணமலை – உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மீனவர்கள் இருவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று காலை படகில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் காணாமல்போன ஏனைய இருவரை தேடும் நடவடிக்கை நேற்றிலிருந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.