ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
Published by J Anojan on 2019-11-07 21:31:43 (எம்.மனோசித்ரா) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவால் தாய் நாட்டை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இராணுவ வீரர்கள், கராஜபக்ஷக்களால் தமது சொந்த தேவைகளுக்காக கொலைகளை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார். புதிய ஆட்சியில் இராணுவ நலன் திட்டங்களில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷ தனது மோசடிகளை மறைப்பதற்காக சிலரை கொலை செய்வதற்காக இராணுவத்தினரைப் பயன்படுத்திக் கொண்டார். இராணுவத்…
-
- 2 replies
- 459 views
-
-
ஜனாதிபதி வேட்பளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது. தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன் உள்பட கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். …
-
- 27 replies
- 2.9k views
-
-
தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது என்பது மத ரீதியாக அரசியலுக்காக பாவிக்கப்படும் விடயம் எனத் தான் நான் பார்க்கின்றேன். வெளிப்படையாக தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த விகாரை பொது மக்களின் இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். மாங்குளத்தில் ஒன்று உண்டு. அதுவும் முகாம்களின் உள்ளே …
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும் கூறினார். சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் ஊழல் மோசடிகாரர்களுக்கும், போதைக் பொருள் விற்பனையாளர்களுக்கும் , மத அடிப்படைவாதிகளுக்கும் எவ்வித மன்னிப்பும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன். நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக…
-
- 5 replies
- 600 views
-
-
சஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ – ரிசாத் அணியினரிடையே முறுகல் November 8, 2019 மன்னாரில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மனோ கணேசன், ரிசாத் பதூதீன் ஆகியோரது அணியினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது. மன்னார் பிரசார கூட்ட ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ரிசாட் பதூதீனின் சகோதரர் ரிஸ்கான் பதூதீனுக்கும், அமைச்சர் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. நேற்றிரவிலிருந்து மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்ட…
-
- 2 replies
- 439 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் உள் நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஹிஜாத் குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா இன்று சாட்சியமளித்தார். குறித்த குழுவினர் ஆயுதம் ஏந்தி இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை தாக்காத போதும், அவர்களது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் சாதாரண முஸ்லிம்களிடமிருந்து வேறு பட்டதாக காணப்பட்டது என அவர் இதன்போது கூறினார். 21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாத…
-
- 2 replies
- 447 views
-
-
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணியினை தடுத்து நிறுத்துமாறு இராணுவம் அச்சுறுத்தல் November 8, 2019 பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் வெள்ளிக்கிழமை (9) காலை முதல் சிரமதான பணிகள் இடம்பெற்றது . இதன்போது அங்கு வந்த மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகளின் போது தடுத்து நிறுத்துமாறு இராணுவம் கோரினர் இல்லையேல் கைது செய்ய நேரிடும் என மாவீரர் குடும்பங்களை அச்சுறுத்தி சென்றனர். கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை முன்னேற்பாடுகள் முன்னிட்டு சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீழ் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்ப…
-
- 0 replies
- 373 views
-
-
மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்கெடுப்பு நிலையம்! மட்டக்களப்பு, மாந்தீவில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்கெடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூவருக்காகவே இந்த வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. குறித்த மூவருக்குமான வாக்குச்சீட்டுக்கள் வரும் 15ஆம் திகதி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவூணதீவு வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து மறுநாள் மாந்தீவுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன. மாந்தீவுக்கு இயந்திரப்படகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு தேர்தல் நாளில் காலையிலிருந்து மாலை 5மணி வரையும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மா…
-
- 0 replies
- 298 views
-
-
கொழும்பில் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை – முகமூடி அணியுமாறு அறிவுறுத்தல் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏனெனில் தூசு துகள்களின் செறிவு காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு, தற்போது இலங்கையையும் பாதித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் நேற்று சந்தேகம் வெளியிட்டிருந்தது. கொழும்பு நகருக்கு மேலே, வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்களின்…
-
- 5 replies
- 706 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும். ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம், 1500 ரூபா நாளாந்த சம்பத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றஞ்சுமத்தினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோகாலை மாவட்மத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொட…
-
- 1 reply
- 553 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியம் – எரான் விக்ரமரத்ன ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளதாக என்ற கருத்திலான டுவிட்டர் தகவலொன்று தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமைச்சர்களான ஹரின் பெர்ணாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோருக்கும் இந்த டுவிட்டர் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளத…
-
- 3 replies
- 581 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இதுவே சரியான நேரம்’ Editorial / 2019 நவம்பர் 07 , பி.ப. 04:20 - 0 - 24 “பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுககு சரியான சந்தர்ப்பம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது”என, தமிழ்த் தேசிய பணிக்குழுவின் தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “ஜனாதிபதி, தன்னை தாக்க முனைந்தவரையே சிறையிலிருந்து விடுவித்தவர்; மன்னிப்பு வழங்கியவர். அவரின் மனிதநேயம் நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு இடமளிக்கும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். “ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் தமது வ…
-
- 1 reply
- 770 views
-
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், இராணுவப் புலனாய்வு பிரிவின் 07 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரால் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இன்று (07) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடாத சிலரால் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடைத்து வைக்கும் நோக்குடன், பிரகீத் எக்னெலிகொடவை கடத்துவதற்கு சதி முயற்சியில் ஈடுபட்டமை , அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன…
-
- 0 replies
- 360 views
-
-
Published by T Yuwaraj on 2019-11-07 19:53:49 தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்றால் பொதுவான வேலைத்திட்டம் ஒன்று அவசியம். எனவே கட்சி அரசியலை விடுத்து அனைத்து தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் ஒரு ஒன்றியமாக செயற்பட முன்வரவேணடும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 07.11.2019 இன்று மதியம் ஹட்டனில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றியமாக செயற்பட வேண்டும் என இந்தியாவினுடைய விருப்பும் அமைகின்றதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்களிடம் தெ…
-
- 0 replies
- 405 views
-
-
ஏப்ரல் சம்பவத்தின் பின் முஸ்லிம் சமூகத்தை விமர்சனம் செய்தவர்கள் இன்று அம்மக்களிடம் வாக்கு கேட்பது வேடிக்கையானது – றிஷாட் இலங்கையில் எந்தவொரு காலத்திலும் பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது,கடந்த ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின் கடுமையான சித்திரவதைகளை செய்தவர்கள்.இன்று இம்மக்களிடத்தில் வந்து வாக்கு கேட்பது வேடிக்கையானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன தெரிவித்தார். கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சஜித் ஆதரவு கூட்டம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான முஹம்மத் பாயிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழ வெல்லம்…
-
- 2 replies
- 642 views
-
-
யாழ் வல்வெட்டித்துறையில் பதட்டம் வங்கி முகாமையாளரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் முகாமையாளரின் வீட்டு வளவுக்குள் மதில் ஏறிப் பாய்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.11 பொலிஸ் உத்தியோகத்தர்களில் 6 பேர் வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர்.வங்கி முகாமையாளரின் மனைவி ஆசிரியர். முகாமைய…
-
- 3 replies
- 603 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) சிங்கள பெரும்பான்மை மக்களை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்கவே சஜித் தரப்பு முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாதெனவும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தெரிவித்தனர். விடுதலைப்புலிகள் போராட்டத்தின்போது கூட கேட்காத விடயங்களை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுவந்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் மூலமாக முன்வைத்துள்ள நிலையில் தாம் வெற்றிபெற வேண்டும் என்ற காரணத்தினால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள சஜித் பிரேமதாச தமிழ் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினர். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகள் தொ…
-
- 0 replies
- 200 views
-
-
தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதிகள் திறப்பு தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதிகள் இன்று திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய மாத்தறை முதல் மாத்தளை வரையான பகுதியும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான சுமார் 40 கிலோ மீற்றர் கொண்ட பகுதியும் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளன. அதேபோல் கடவத்தையில் இருந்து கெரவலபிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையும் இன்று திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சி கூறியுள்ளார். இதேவேளை, இந்த வீதி திறக்கப்படவுள்ளமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அதிவேக வீதி முறையாக அமைக்க…
-
- 1 reply
- 528 views
-
-
(எம்.மனோசித்ரா) ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதற்கான எழுத்து மூல உறுதிப்பாட்டை மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் பிரதமரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவையாகும் என்றும் அவர் கூறினார். இது குறித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையி…
-
- 4 replies
- 624 views
-
-
யாருக்கு வாக்கு?- தமிழ் மக்களையே முடிவெடுக்கக் கோருகிறார் விக்னேஸ்வரன் Nov 06, 2019 | 1:12by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் மக்கள் கடந்த கால வரலாறு மற்றும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி- பதில் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளருடைய தேர்தல் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்…
-
- 1 reply
- 806 views
-
-
Published by T Yuwaraj on 2019-11-06 23:04:59 தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவருக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை! ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதற்கமைய இவர்கள் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஐந்து-நாடுகளைச்-சேர்ந்த-14/
-
- 0 replies
- 257 views
-
-
ஜனாதிபதியின் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ளார். அதேபோன்று ஆட்சியில் உள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதியின்-இறுதி-நாடாள/
-
- 0 replies
- 304 views
-
-
சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த Nov 06, 2019 | 1:14by கி.தவசீலன் in செய்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கலகெதரவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். “ புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை ஒருதலைபட்சமானது. …
-
- 1 reply
- 871 views
-
-
புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்ட மேடையில் சிங்கள மொழிக்கு முதன்மை கொடுக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சஜித் பிரேமாதாசவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிலும் அதிகமானவர்கள் தமிழ் பேசுபவர்களே. இந்த நிலையில் சஜித் பிரேமதாச பிரச்சார கூட்ட மேடையானது இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பொறிக்கப்பட்ட வேட்பாளர் குறித்த வசனங்கள் முழுமையாக சிங்கள ம…
-
- 6 replies
- 1.2k views
-