ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவன் தனது முயற்சியினால் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம். https://www.virakesari.lk/article/66293
-
- 2 replies
- 501 views
-
-
கோட்ட அபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமை செல்லாது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 3 நீதிபதிகளினதும் ஏகமனதான தீர்ப்பு இது.
-
- 9 replies
- 1.4k views
-
-
கர்தினால் மல்கம் ரஞ்சித் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவாது. ஓக்டோர்பர் மாதம் 15 திகதி முதல் 25 திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு தரப்பினரும் காவல்துறையினரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இது குறித்த முதலாவது எச்சரிக்கையை கர்தினால் மல்கம் ரஞ்சித்தே விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப…
-
- 0 replies
- 160 views
-
-
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செலவீனங்களை 10 வீதத்தால் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அவசியமற்ற திட்டங்கள் மற்றும் ஆரம்பிக்கப்படாத திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தளபாடங்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதையும் தவிர்க்குமாறு இதன்போது கோரப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு உதவித் …
-
- 1 reply
- 615 views
-
-
தமிழர்களை நாங்கள் கொல்லவில்லை- கோட்டாபய நாங்கள் போரை உருவாக்கி தமிழர்களை கொல்லவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் செய்தது நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தது மாத்திரம்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டாபய இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சாதாரண பொதுமக்களை கொன்றது நாங்கள்தான் என வீணாக பழி சுமத்தி தமிழ் மக்களிடத்தில் குற்றவாளிகளாக எங்களை காட்டுவதற்கு போரை தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். உண்மையாகவே நாங்கள் போரை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கவில்லை. அதனை மு…
-
- 2 replies
- 678 views
-
-
இராணுவத்தினரை, ரயில் ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி! இராணுவத்தினரை ரயில் ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அசோக் அபேசிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். இராணுவத்தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை(திங்கட்கிழமை) முதல் காரியாலய ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரி, ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று 11வது நாளாக முன்னெடுக்கப்…
-
- 1 reply
- 327 views
-
-
பாறுக் ஷிஹான் - யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டம் அம்மக்களிற்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது எனவும் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதை அறிந்தேன்.இந்த வீட்டுத்திட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது.கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மிக நிதானமாக சில விடங்களை எனக்கு உத்தரவாக வழங்கி இருந்தார்.அத…
-
- 5 replies
- 685 views
-
-
தனியார் பஸ் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி பாரிய விபத்து 12 பேர் படுகாயம் அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை வேளையில் தனியார் பஸ் கனரக வாகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் காயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த தனியார் பஸ் தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கள் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனரக வாகத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றன. குறித்த கனரக வாகத்தில் பின்புற சில் வெடித்த நிலையில் …
-
- 0 replies
- 459 views
-
-
மக்களின் வீடுகளில் இராணுவத்தினர் சோதனை: வவுனியாவில் பதற்றம் வவுனியாவில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று திடீர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டமையினால், மக்கள் பதற்றமான நிலைமையில் காணப்படுகின்றனர். வவுனியா- பூந்தோட்டம், மதீனாநகர் பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் நேற்று (சனிக்கிழமை) ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை வவுனியாவில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன. குறித்த சோதனை நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவ…
-
- 0 replies
- 326 views
-
-
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்கு எமது கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கடந்த வருடம் ஜனாதிபதி மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளே தடையாக அமைந்தன. அதனாலேயே அம் முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில், இன,மத பேதமின்றி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமானால் இந்த ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரான சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மீண்டும் உருவாகவேண்டும். அதற்கேற்ற வகையில் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். டி.எஸ். சேனநாயக்க…
-
- 0 replies
- 325 views
-
-
ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தரப்புக்கள் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது எவ்வளவு சாத்தியமென்பது தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இத் தேர்தல் குறித்து தமிழர் தரப்பிலுள்ளஅனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரே மேசையில் இருந்து பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தமிழ் மக்கள் தரப்பில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள் தமிழ் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரனை சந்தித்தும் இவர்கள் கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலி…
-
- 0 replies
- 305 views
-
-
இனவாதிகள் அரபு மொழியையும்,அரபிக்கொள்கையையும் இல்லாதொழிக்கவே முயற்சிகளை மேற்கொண்டார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வில்வெளி,ஹலிபா நகர்,அல் அமான் அரபிக் கல்லூரியின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(5)மாலை நடைபெற்ற போதே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மக்களையும் மத்ரஸாக்களையும் மியன்மாரில் செய்த அட்டுழியங்கள் போல் லேற்கொள்ள நினைத்தார்கள் அது கைகூட வில்லை. இதற்கு சில பேரின சக்திகள் தூண்களாக இருந்து செயற்பட்டார்கள். அவர்களால் நூற்…
-
- 1 reply
- 540 views
-
-
யாழ் செய்தியாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணை கோட்டாபய ராஜபக்ச, டக்களஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் ஆகியோர் குறித்த செய்தியே காரணம் கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பாக வீரகேசரி நிறுவனத்தின் யாழ்ப்பாண அலுவலகச் செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விசாரணை இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற…
-
- 0 replies
- 316 views
-
-
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் குறித்த காணியில் மீள்குடியேறியிருந்தனர். குறித்த காணி செஞ்சோலை மற்றும்…
-
- 0 replies
- 566 views
-
-
அரசாங்க, தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பரிசுகள் வழங்குவதற்கு மாணவர்களிடம் பண அறவிடுவதை கல்வி அமைச்சு தடை செய்து, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியின் ஒப்பத்துடன் இச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பாடசாலையில் நடைபெறும் ஆசிரியர் தினம் மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு, பிரியாவிடை வைபவம் போன்ற நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பெறுவதும் அதற்கான குழுக்களை ஏற்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்படுகிறது. பண இது பாடசாலை மாணவர்களிடையே…
-
- 2 replies
- 377 views
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/2…
-
- 9 replies
- 966 views
-
-
சஜித் பிரேமதாசவின் வெளிவிவகார கொள்கை எவ்வாறானதாக காணப்படும்- இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் அவரின் உரை இலங்கை தானாக முன்வந்து வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் கொள்கையில் உறுதியாக உள்ளோம். இலங்கையின் புவிசார் அமைவிடத்தை கருத்தில்கொள்ளும்போது எங்களது வெளிவிவகார கொள்கை அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும் இலங்கையை அறிவை…
-
- 1 reply
- 330 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு! 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளன. பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் வாரம் முதல் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதேபோன்று தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 …
-
- 0 replies
- 360 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கு அதிக நிதியை அரசாங்கம் செலவிடுகிறது- அநுர குற்றச்சாட்டு தற்போதைய ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதை ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் சுககோகங்களுக்குக் கூட இந்த…
-
- 0 replies
- 250 views
-
-
கோட்டாவின் சட்டத்தரணிகள் உள்ளிட்டோருக்கு கடும் எச்சரிக்கை! கோட்டாபய சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சில கனிஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட கடுமையாக எச்சரித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார். கோட்டாபாயவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது. இதன்போது நீதியரசர் தீர்ப்பை வாசித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றேன் எனத் தெரிவித்த சமயம் சில சட்டத்தரணிகளும் அவர்கள் திசையில் இருந்த எதிராளியின் ஆதரவாளர்களும் கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர். இதன்போதே நீதியரசர் மேற்கண்ட…
-
- 0 replies
- 304 views
-
-
முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அடாவடியில் ஈடுபட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு முல்லைத்தீவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார். https://newuthayan.com/?p=6538
-
- 4 replies
- 1.4k views
-
-
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் – யாழில் சம்பவம் யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகயீனம் அடைந்திருந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தபோது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸ…
-
- 21 replies
- 2.7k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து எதிர் வரும் 5ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் அவரிடம் இது தொடர்பாக நேற்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது முடிவினை அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் நான் தற்போது வெளிநாட்டில் நிற்கின்றேன். நான் நாட்டுக்கு வந்தவுடன் அவசரமாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள், ம…
-
- 0 replies
- 323 views
-
-
வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதனிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று விசாரணைக்கு சமுகமளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோத்தாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் , வரதராஜப் பெருமாள் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலேயே அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்…
-
- 0 replies
- 313 views
-
-
மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காது பகுத்தறிந்து முடிவெடுக்கவேண்டும் - வேலுகுமார் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும் அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் பகுத்தறிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கொழும்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் ப…
-
- 0 replies
- 352 views
-