Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை! இலங்கை சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணமாகும். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407492

  2. இனப்போரால் பெற்ற ஆழந்த காயங்களைக் கொண்ட தமிழ்சமூகத்திற்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஐபக்ச முன்வைக்கவில்லையானால் எதிர்காலத்தில் 'இளைய பிரபாகரன்' தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு எழுத்தாளரும் கல்வியாளருமான *Benjamin Dix [Writer and Academic] இந்தியாவை தளமாகக் கொண்ட Tehelka இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். கதை வடிவத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது வடகிழக்கில் அழைந்துள்ள மிக அழமான கடற்கரைப் பிரதேசமான புதுமாத்தளன் என்ற இடத்தில் 2009 இல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரு சமூகம் ஒன்று முற்றாக அழிக…

  3. ரஞ்ஜன் அருண் பிரசாத் Image caption அஜந்தா பெரேரா இலங்கையில் இந்த ஆண்டு (2019) நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

    • 5 replies
    • 1.1k views
  4. பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு ஆறுமுகன் புவியரசன் பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சமந்த வித்தியாரத்ன - 208,547 , கிட்ணன் செல்வராஜ்- 60,041, அம்பிகா சாமுவேல்- 58,201, ரவிந்து அருண பண்டார - 50,822, சுதத் பலகல்ல- 47,980, தினிது சமன்குமார- 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். …

  5. ஜனாதிபதியின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ சற்று நேரத்திற்கு முன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த ஜனாதிபத்யின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ 12.20 மணியளவில் வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன

    • 2 replies
    • 1.6k views
  6. 23 NOV, 2024 | 09:15 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோர் வெளியுறவுச் செயலாளர் ரணராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவரது நியமனத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர். இந்திய உயர்ஸ்தானிகர் தனது சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜாவின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், பரந்தளவிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பன்முகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீன தூ…

  7. சிறிலங்காவின் தென்பகுதியான மொனராகலைப் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை கடத்தப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியின் நக்கலை தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய எஸ். புண்ணியமூர்த்தி என்பவரே கடத்தப்பட்டவராவார். இது சம்பந்தமாக ஊவா மாகாண சபையின் மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளர் அ.அரவிந்குமாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், அவர் மொனராகலை மாவட்ட காவல்துறை அதிபர் எட்சன் குணதிலக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது, மொனராகலையிலிருந்து புத்தலைக்கு குறிப்பிட்ட தமிழ் இளைஞர் முச்சக்கரவண்டியைச் செலுத்தி செல்லும் வேளையில் ஓரம்புவ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, இவ் இளைஞர் கடத்தப்பட்டுள்ளார். ஓரம்புவ என்ற காட்டுப…

  8. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணி குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் நோக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது. அதன் போது ஜனாதிபதி வேட்…

  9. 30 NOV, 2024 | 08:29 PM இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அதேநேரம் மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை …

  10. மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்! December 9, 2024 09:23 am முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், குறித்த சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது. இதனால் குறித்த கிராம மக்கள் பெருத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தனர். இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கிராமத்திற்கு நேரடியா…

  11. தமிழினத்தின் இனப்படுகொலையை பார்த்தும் அமைதி காக்கும் பிரித்தானிய அரசிடம் அமைதி காப்பதற்கான காரணம் என்ன என்று கேள்விகேட்டு ஒன்றுகூடல் பிரித்தானிய தூதகரத்திற்கு அருகாமையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்படுகிறது. ... 1833 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கை 3 ராஜ்யங்கள் கொண்ட நாடாக எல்லா இன மக்களும் சுதந்திரமாக வாழும் நாடாக இருந்தது. ஆங்கிலேய காலனித்துவதிற்கு முன் சுதந்திர இனங்கள் ஆக வாழ்ந்த நாட்டை ஒரே ராஜ்ஜியதிற்குள் கொண்டு வந்து, அதன்பின் டோநோமூர் யாப்பில் தமிழ் மக்களை தேசிய இனமற்றவர்களாக்கி சோல்பரி யாப்பின் மூலம் சிங்கள அரசிடம் தமிழர்களின் உரிமைகளை கையளித்து விட்டு சென்று விட்டனர். தமிழர்களை இரண்டா…

  12. மொரோக்கோவில் எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை, நூறு நாடுகளின் நூறு பிரதிநிதிகள் பங்குபற்றும் இளைஞர் மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று வவுனியா மாவட்ட சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் பங்குபற்றவுள்ளார். "முரண்பாடுகளை களைதலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தலும்" எனும் தொனிப்பொருளில் இவ் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளதுடன், எதிர்கால தலைமுறைக்கான ஓர் நல்ல சூழலை ஏற்படுத்த "இளைஞர்கள் மத்தியில் பொதுவான ஒரு சொல்" எனும் செயற்றிட்ட மாநாட்டில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும், விஞ்ஞானமானி பட்டதாரியுமான திரு.சு.காண்டீபன் பங்குபற்றவுள்ளதுடன், இவர்…

  13. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதற்கான ஆலோசனைகள் தமிழரசுக் கட்சி மட்டத்தில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் போட்டியிடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரும்பினார். அண்மையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழில் கலந்துகொண்ட கூட்டமொன்றில் சுமந்திரன் தனது விருப்பத்தைப் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் ஆதரவுச் சக்திகளின் கை மேலொங்கியுள்ளதால் சுமந்திரனின் ஆ…

    • 3 replies
    • 627 views
  14. டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி பெண் உட்பட இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை [20 - March - 2008] டென்மார்க் செல்ல கடவுச்சீட்டில் மோசடி செய்து பயண ஏற்பாட்டை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிசாந்தி மல்லிகா என்ற பெண் மற்றும் ஆர்.பீ. கீத்குமார் ஆகிய இருவருக்கும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ஜயஸ்ரீ அல்விஸ் தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார். அத்துடன், இருவருக்கும் 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பத்து வருடகால கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்தார். 2001 டிசம்பர் 24 ஆம் திகதி இவர்கள் இருவரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக டென்மார்க் செல்ல வந்தபோது; குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களின் கடவுச்சீட்டை பரிசீலித்த போது அவை மோசடி செய்யப்பட்ட…

  15. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தளங்களை அகற்ற வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தளங்களையும் அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். நான் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை பௌத்த அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் திரிபுபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க என்னால் முடியாது. எ…

  16. பொன்சேகாவின் விஸா விண்ணப்பம் நிராகரிப்பு முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் சமர்ப்பிக்கப்பட்ட, ஐக்கிய அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பத்தை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாக, சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/161457/%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.OjKZdxEE.dpuf

  17. எமது ஆட்சிக்காலத்திலும் வீடுகளுக்கு வெள்ளை வேன் வந்தது -பிரதமர் Published by J Anojan on 2019-10-08 14:20:30 (நா.தனுஜா) எமது ஆட்சிக்காலத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வெள்ளை வான் வந்தது. ஆனால் அதன் இருபக்கத்திலும் 'சுவசரிய' என்று எழுதப்பட்டிருக்கும். நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஓய்வூதியக் கொடுப்பனவு போன்ற மேலும் பல விடயங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு எமது பொருளாதாரம் மேலும் வளர்ச்சியும், உறுதியும் அடைய வேண்டும். நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறுவதுடன், பொருளாதார வளர்ச்சி வேகம் 4.5 வீத…

    • 0 replies
    • 428 views
  18. புலிகள் அல்கொய்தா தொடர்பு' . Tuesday, 25 March, 2008 10:10 AM . ஜெருசலேம், மார்ச் 25: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அல் கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே தெரிவித்துள்ளார். . பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர்கள் சிலர் விடுதலைப் புலிகளுக்கு அல் கொய்தா, பிகேகே மற்றும் தாலிபான்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருப்பதாக என்று அவர் கூறியுள்ளார். சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள பாலஸ்தீன முகாம்களில் இலங்கை தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்…

    • 0 replies
    • 1.2k views
  19. யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/40246-2012-05…

  20. போர்க்குற்ற விசாரணையின்போது புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை? போர்க்குற்ற விசாரணையின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திவயின பத்திரிகை செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஐந்து மேற்கத்தேய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியிருந்தன. இந்த நாடுகளே ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டு, போர்க்குற்ற விசாரணையை திணித்துள்ளன. குறித்த நாடுகளி…

  21. தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்ற…

    • 6 replies
    • 1.9k views
  22. செல்வச் சந்நிதியில் பட்ஜெட் திருமணங்கள் குணசேகரன் சுரேன் வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு திருமணங்கள் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குறைந்த செலவில் திருமணம் நடத்தி முடிக்கலாம் என்பதாகும். திருமணம் நடத்துவதற்காக ஆலயத்துக்கு 6000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேற்கொண்டு, தானமானது விரும்பிய ரீதியி;ல் வழங்க முடிவதுடன் ஐயருக்கான தட்சணை 500 ரூபாய் தொடக்கம் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது. …

  23. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன் ரூபாவாக உள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பங்குச் சந்தையில் நிதியத்தால் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த கொள்முதல் செலவு 88.67 ரூபாவாகும், மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகளிலிருந்து ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டிய மொத்த இலாபம் 21.01 பில்லியன் ரூபாவாகும். 2024 ஜூன் 30 ஆம் திகதிக்கு, கொழும்பு பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியம் செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 110.03 பில்லியன் ரூபாவாகும். தற்போது, ஊழியர் சேமலாப நிதியம் பங்குச் சந்தையில் முதலீடு…

  24. இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் நம் சகோதர, சகோதரிகள். செஞ்சோலையில் நம் தமிழ்க் குழந்தைகளைப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யக்கூடாது என்று தமிழர்கள் நாம் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  25. தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும். 26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும். தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவர்கள், …

    • 2 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.