Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகில் காய்கறி வகை உற்பத்தியில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி இலங்கையிலேயே இடம்பொறுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்றா நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கெக்கிராவ கல்வி பிரிவில் இரும்புச் சத்து, புரோட்டின் மற்றும் விற்றமின் குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலக உணவு திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பதற்காக அரிசியை இலவசமாக பாடசாலை மாணவர்களின் உணவுக்காக வழங்கும் வேலைத்திட்ட நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். உலக உணவு வேலைத்திட்டத்திற்கு அமைவாக விவசாய திணைக்கழம் அநுராதப…

  2. 7 இந்திய மீனவர்கள் கைது (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மீன்பிடிப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்…

  3. தனது சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார் 13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது. சிறுமியும் அவரது தாயாருமே இந்த முறைப்பாட்டை வழங்கினர். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையே தன்னை மூன்று தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தினார் எ…

  4. சோபா உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேங்காய் உடைத்து வழிபாடு! உத்தேச சோபா உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பான பேரணி, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதன்போது திருகோணமலை நகர மத்தியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன், சோபா உடன்படிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. http://athavannews.com/சோபா-உடன்படிக்கைக்கு-எதி/ ############ ############## ############### ########…

  5. காணாமலாக்கப்பட்டவர்களை தேடிப் போராட்டம் – 30 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30 இற்கும் அதிகமானவர்கள் எவ்வித தீர்வுகளும் கிடைக்காமலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உறவுகளை மீட்பதற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. …

  6. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப…

  7. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீகிரிய திட்ட முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒரு நாளைக்கு வெளிநாட்டவர்கள் 900 பேர் வரையில் சீகிரியாவிற்கான சுற்றுலாப்பயணத்தினை மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221190/சுற்றுலா-பயணிகளின்-வருகை-அதிகரிப்பு இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண்- பூதாகரமாகும் பிரச்சினை இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண் தொடர்பான வழக்கு நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனி…

    • 0 replies
    • 786 views
  8. இயற்கை வளங்களை சூறையாடும் சுயநலமிகள்! அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்துவது ஏன்? யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைத் தாண்டி விட்ட இன்றைய காலத்தில் இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, காடழிப்பு, மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. மணல் அகழ்வின் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர், பனிக்கன்க…

    • 0 replies
    • 594 views
  9. நாட்டு மக்கள் இன்று பாதுகாப்புடன் இல்லை என நியாங்கத்தா விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல் பீரிஸை இன்று சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/221214/நாட்டு-மக்கள்-பாதுகாப்புடன்-இல்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இன்னமும் முடிவடையவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முடிவடைந்து விட்டதாக பலர் கூறினாலும் அது இன்னமும் முடிவடையவில்லை என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். குருநாகளையில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221212/உயிர்த்த-ஞாயிறு-தாக்குதல்-இன்னமும்-முடிவடையவில்லை

    • 1 reply
    • 963 views
  10. தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான். தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த அரசியல் இளைஞனுக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை தோல்வியடைய செய்யவும் தற்போது அரசியல் சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச் சதிகளை அனைவரும் ஒன்றினைந்து தோற்கடித்தால் உத்தேச தேர்தல்களில் அமோக வெற்றிப் பெறலாம். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியது…

    • 0 replies
    • 401 views
  11. இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது In இலங்கை July 26, 2019 3:58 pm GMT 0 Comments 1028 by : Litharsan இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான…

    • 6 replies
    • 1.2k views
  12. கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து …

  13. முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முஸ்லிம் பெண்கள் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர். 9 அம்ச கோரிக்கைகள் என்ன? அனைத்து முஸ்லிம்களின் திருமண வயதெல்லை 18ஆக அமைய வேண்டும். பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், அனைத்த…

  14. சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால் தமிழ் இராச்சியமும் உருவாகும் – ஸ்ரீகாந்தா சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சயமாக தனி தமிழ் இராச்சியமொன்றும் நாட்டில் உருவாகும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இது ஒரு பெளத்த நாடென்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அண்மைமையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு தேரர் கருத்துரைத்தபோது சிங்கள இராச்சியத்தை உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார். அதற்கு நான் கூறினேன் சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சய…

  15. இலங்கையில் ராணுவ ஆட்சியைக் கோரும் போர்க்குற்றவாளி ஜகத் டயஸ் 2009 இனவழிப்புப் போரில் வன்னிப்பகுதியில் நடந்த பாரியளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிங்கள மிருகங்களுக்குக் கட்டளைத் தளபதியாகவிருந்த ஜெனரல் ஜகத் டயஸ், போரின் பின்னர் தென்னமெரிக்க நாடுகளுக்கு சிங்களத்தின் தூதுவனாகப் போயிருந்தது நினைவிருக்கலாம். அங்கே அவனுக்கெதிராகத் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கினையடுத்து பின்கதவால் வெளியேறி நாட்டிற்குள் ஓடி ஒளிந்துகொண்டிருக்கும் அவனும், இனக்கொலையைத் திட்டமிட்டு நடத்திமுடிக்க ஆணை வழங்கிய அந்நாள் பாதுகாப்புச் செயலாளனுமான கோத்தாவும் இன்னும் ராணுவ அதிகாரிகளும் சகல விசாரணைகளிலிருந்தும் நாட்டைக் காத்த ராணுவத்திற்கு விலக்களிக்கப்படவேண்டும் என்று சிங்கள சனாதிபதி மைத்திரியிடம் வேண்ட…

    • 3 replies
    • 694 views
  16. புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு பேசிய அவர் மேலும் கூறியதாவது; போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை.தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல் , இராஜதந்திர , பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.புலிகளை தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இத…

    • 10 replies
    • 1.3k views
  17. சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…

    • 1 reply
    • 534 views
  18. ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர்! ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திருப்பியுள்ளார். அவர் நேற்று (சனிக்கிழமை) இரவு நாடு திரும்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். நேற்று முன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் மங்களூர் செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் சீரற்ற வானிலையால் அவர் தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். அத்தோடு, அவரின் ஏற்பாட்டில் அங்கு சிறப்பு யாக…

    • 3 replies
    • 722 views
  19. புதிய அரசியலமைப்பை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடன் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கத்தின் பிரதான பங…

    • 1 reply
    • 441 views
  20. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி- வெளியாகியது புதிய தகவல் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜனபெரமுனவின் கட்சி தலைவர்களிற்கு மகிந்த ராஜபக்ச தனது முடிவை தெரிவிப்பார். முன்னாள் பாதுகாப்பு செயலாள…

  21. கோட்டா வரமாட்டார், சமல் ராஜபக்ஸவே வருவார்- அமைச்சர் பி. ஹரிசன் ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட மாட்டார் எனவும், மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துக்குள் அவரை களமிறக்குவதற்கு எதிர்ப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். கெகிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். பாராளும ஸ்ன்றத்தில் பிரதிநிதி இல்லாத 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் சமல் ராஜபக்ஸவே மும்மு…

  22. யாழ். பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியிலுள்ள தோட்டமொன்றின் கிணறிலிருந்து இன்று (27) முற்பகல் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பதில் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா? தற்கொலையா? எனத் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். உயிரிழந்த பெண் தம்பசிட்டி, கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதி, ஜெகநாத குருக்கள் கிருபாலினி (வயது -35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது ´´கைகள் பின் பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்ததோடு கால்களும் கட்டப…

  23. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடகூடும் என பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசிய முன்னணி எந்த சந்தர்ப்பத்திலும் கூடட்ணி அமைக்காது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221149/ஜனாதிபதி-வேட்பாளராக-சமல்-ராஜபக்ஷ-போட்டியிடகூடும் …

    • 2 replies
    • 918 views
  24. பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை! In இலங்கை July 26, 2019 1:47 pm GMT 0 Comments 1238 by : Litharsan அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நியமனத்தில் உள்வாங்…

  25. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது. அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி என காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்ளுர மகிழ்ந்தீர்களா இல்லையா? இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்…

    • 11 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.