ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143241 topics in this forum
-
யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் பகுதிக்கு அபயம் தேடி வந்த இலட்சக் கணக்கான அப்பாவி பொது மக்களை முட்கம்பி கூட்டுக்குள் டக்கி வைத்திருந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் தமிழ் மக்கள் மீது பாசத்தை பொழிய தொடங்கி விட்டது. இந்தக் கபட நாடகத்தையெல்லாம் அரங்கேற்றி தமிழ் மக்களின் வாக்குகளில் குறி வைத்திருக்கும் அரசாங்கத்திற்கு நாட்டின் சிறுபான்மை சகம் ஜனாதிபதி தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெவித்தார். அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தோட்டக் கமிட்டி தலைவர்கள் மற்றும் மகளிர் அணி, இளைஞர் முன்னணி உறுப்பினர…
-
- 1 reply
- 799 views
-
-
ஜெனீவாவிலே நடக்கவிருக்கும் கூட்டத்தொடரின்போது நவநீதன்பிள்ளை உட்பட அனைத்து சர்வதேச நாடுகளும் கொண்டுவரவிருக்கும் நெருக்கடியான பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாமையினாலே தற்போது த.தே.கூட்டமைப்பினரை பேச அழைக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா கூறினார். நேற்று பெரியகல்லாறு வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வானது பெரிய கல்லாறு பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஞா.அற்புதராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வாரசா, சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா மற்றும் ஆலயங்களின் பிரதம கர்த்தாக்கள், உயர் அதிகாரிகள், கிராம மக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து…
-
- 1 reply
- 560 views
-
-
தலைவர் பிரபாகரனைத் தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும் நிலை ஏற்பட்டது. சம்பவம் வடமராட்சி கொற்றாவத்தை என்ற இடத்தில்நிகழ்ந்தது. பொலிஸாரின் நடமாடும் சேவையிலேயேஇந்தச் சம்பவமும் இடம்பெற்றது. வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சேவை இரண்டு தினங்கள் இடம்பெற்றது. அதன் முதல் நாளான நேற்று முன்தினம் ஆரம்ப விழா இடம்பெற்றது. நிகழ்வில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட…
-
- 4 replies
- 886 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-09 21:33:24 (நா.தனுஜா) இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் வீரகேசரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொ…
-
- 3 replies
- 342 views
-
-
தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப…
-
- 2 replies
- 313 views
-
-
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு. இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் டமலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பி…
-
- 30 replies
- 2.9k views
-
-
மகிந்த தரப்புடன் நடக்கும் பேச்சு வழமையானதுதான் “வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வைத்துக் கோரிக்கை விடுத்தனர். இது வழக்கமான சந்திப்புக்கான கோரிக்கைகளைப் போன்றதுதான்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்புக்கு அமைவாக கடந்த மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவரைச் சென்று சந்…
-
- 0 replies
- 224 views
-
-
மயில்வாகனம் நிமலராஜன்: 22 ஆண்டுகள் கழித்தாவது நியாயம் கிடைக்குமா? இலங்கை தமிழ் பத்திரிகையாளர் கொலை வழக்கில் எழும் கேள்வி விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 6 மார்ச் 2022, 04:14 GMT படக்குறிப்பு, பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தார் நிமலராஜன் "எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது." என்கிறார் 22 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயி…
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
- உங்கள் கணிப்புகளிற்கும் ஆய்வுகளுக்கும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் . . . இன்று உலகததில் எங்களைப் பற்றி என்ன . . . . . . கதைக்கிறார்கள் ? இன்று தமிழ் உலகததில் . . . sri lanka election news . . . -
-
- 4 replies
- 871 views
-
-
தேர்தலைத் தள்ளிப்போட அரசுக்குள்ளேயே எதிர்ப்பு தேர்தல்களை ஒத்திப்போடும் திட்டங்களைக் கைவிட்டு உடனடியாகத் தேர்தலொன்றுக்கு அரசு செல்லவேண்டும். சிறுபான்மையினர் பாதிக்கப்படும் வகையில் எந்தவொரு திருத்தங்களையும் அரசு செய்யுமாயின் அது நியாயமானதாக இருக்காது. தேர்தலை ஒத்திப்போட்டு ஆளும் கூட்டணி அரசு தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்ளக்கூடாது. ஆளும் கட்சிக்குள்ளிருந்து இவ்வாறான குரல்கள் நேற்று வெளிப்பட்டுள்ளன. அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலவரம் மற்று…
-
- 0 replies
- 257 views
-
-
கிழக்கு சபையின் இறுதி அமர்வு நாளை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் ஆயுட்காலம் முடிவடையும் கிழக்கு மாகாணசபையின் இறுதி அமர்வு நாளை திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் எட்டாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்றது. சபை நடவடிக்கைகள் செப்ரெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகியது. 5 ஆண்டு காலப் பதவிக் காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்தக் காலப் பகுதியில் கிழக்கு மாகாணசபை 85 அமர்வுகளை நடத்தியுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கிழக்கு மாகாணசபை ஆளுநரின…
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் நாளில் ராஜபக்சவினரின் அரசியல் மாத்திரமல்ல கடந்த 80 ஆண்டுகளாக இருந்து வந்த குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்சவினர் இழந்து வரும் வாக்கு வங்கியை சேகரித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்கும் சூழ்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்துகின்றனர். நாமல் ராஜபக்சவின் துரதிஷ்டம் காரணமாக தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் போது ராஜபக்சவினரின் அரசியலும் முடிவுக்கு வரும். அது மாத்திரமல்ல 80 …
-
- 0 replies
- 346 views
-
-
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்து இன்னும் இலட்சக்கணக்கான மக்களை அதகதிகளாக்கிய இந்த அரசாங்கத்திற்கு மானமுள்ள தமிழ் மக்கள் எவரும் முண்டு கொடுக்க மாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக் கொண்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்க மறுத்தால் அதன் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்று எச்சரித்த சம்பந்தன் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் இந்…
-
- 4 replies
- 734 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள பனைவளத்தின் அடையாளங்களினுள் ஒன்றாகவுள்ள திக்கம் வடிசாலையினை அங்குள்ள சுமார் ஜந்து கோடி மதுசாரத்துடன் தெற்கினை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்கு தாரை வார்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முற்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.பனை அபிவிருத்தி சபையின் கீழுள்ள குறித்த வடிசாலை பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களது கொத்தணியின் கீழிருந்தது.அதன் பலாபலன்கள் வறிய சீவல் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களே அனுபவித்து வந்திருந்த நிலையினில் அதை தற்போது பனை அபிவிருத்தி சபை வசம் எடுத்துக்கொண்டுள்ளதுடன் தெற்கு சிங்கள தனியார் நிறுவத்திற்கு தாரை வார்க்க முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தான் இக்கோரிக்கையினை பகிரங்கமாக முன்வைப்பதாக தெரிவித்த அவ…
-
- 1 reply
- 614 views
-
-
தேநீர் 20 ரூபா, அப்பம் 15 ரூபா ; நல்லாட்சியில் விலை உயர்கிறது சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் உணவு மற்றும் தேநீருக்கான விலையை அதிகரித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவால் நேற்றுமுன்தினம் அதிகரித்துள்ள நிலையில் தாம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி பால் தேநீர் ஒன்று 40 ரூபாவுக்கும் தேநீரொன்று 20 ரூபாவுக்கும் மதிய உணவு பொதி ஒன்றின் விலை 130 ரூபாவுக்கும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் மேலும் …
-
- 0 replies
- 272 views
-
-
அரசுக்கு... எதிராக, நாடளாவிய ரீதியில்... தொடர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன. அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய போராட்டங்களில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவொன்று இன்று காலை கொழும்பு நெலும் பொகுண திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஹோமாகம நகரிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சுதந்திரக் கலைஞர்க…
-
- 1 reply
- 230 views
-
-
இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கப்படாத பட்சத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்று கோரப்படும் என்று பிரித்தானியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரெங்கின் கொழும்பின் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சினை தொடர்பில் நட்பு ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனாலும், தேசியப் பொறிமுறையொன்றை உரிய வகையில் முன்னெடுக்காது, விசாரணைகளை செய்யாத பட்சத்தில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையொன்றைக் கோருவதற்…
-
- 1 reply
- 574 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரே…
-
- 0 replies
- 108 views
-
-
பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் தமது வாக்குப்பலத்தை வெளிப்படுத்துவதே காலத்தின் கட்டாய தேவையென்ற கருத்தை அரசியல் அவதானிகள் முன்வைத்திருக்கின்றனர். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று தினங்களே முழுமையாக இருக்கும் நிலையில், தமிழ் மக்களை நன்றாகச் சிந்தித்து வாக்களிப்பதற்கான கருத்துகள் அரசியல் அவதானிகளிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியமான பிரதேசமான வட,கிழக்கு மாகாணங்களின் 5 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டு உக்கிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற…
-
- 0 replies
- 503 views
-
-
இலங்கை வரவுள்ளார் பிரிட்டன் அமைச்சர் Share ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கப் பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை இலங்கை வரவுள்ள பிரித்தானிய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர்,நிதியமைச்சர், மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து யாழ்ப்பாணம் செல்லும் இவர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிது. http://newuthayan.com/story/34306.html
-
- 1 reply
- 728 views
-
-
விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பாளரான கே.பீ என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதிக்குமாறு இந்தியா இலங்கையை கோரியுள்ளது. முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்திய புலனாய்வுத்துறையை பிரதிநிதித்துவ ப்படுத்தும் இந்நிறுவன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. கே.பத்மநாதன் மற்றும் அவரதுடன் நெருக்கமானவர்கள் ஆகியோரது வங்கிக்கணக்குகள் குறித்து விவரங்கள் பெறவேண்டியுள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/1759 ===== வட இந்திய பயங்கரவாதிகளுக்கும் பணம் சுருட்டும் ஆ…
-
- 0 replies
- 988 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (08-10-2017)
-
- 0 replies
- 285 views
-
-
இன்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் கைத்தொழில் அமைச்சராக வன்னியில் தமிழின விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழரது வாக்குரிமையையும் தடுத்த றிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சிறுகைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டிருப்பது டக்ளஸை அவமானப்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அரசிற்கு முண்டு கொடுத்த டக்ளஸைப் பின்தள்ளி அண்மையில் அரசில் இணைந்து கொண்ட பதியுதீனுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது குறித்து ஈ.பி.டி.பி வட்டாரங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அங்கயன் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ந…
-
- 7 replies
- 1.2k views
-
-
இடைக்கால... அரசாங்கம் குறித்து, ஜே.வி.பி.இன் அறிவிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு …
-
- 0 replies
- 99 views
-
-
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எமது வாழ்த்துக்கள் TRANSNATIONAL GOVERMENT OF TAMIL EELAM Canadian Election Results Candidates: District No 1. (Toronto GTA and Vicinities) * Joe ANTONY - ELECTED ( 3,388 ) * Pon BALARAJAN - ELECTED (3,777) * M.K. EALAVENTHAN - ELECTED (4,161) * Tharani PRAPAHARAN - ELECTED (4,967) * Thiru S. THIRUCHELVAM - ELECTED (4,936) District No 2. (Eastern Ontario) * Esan KULASEKARAM - ELECTED (7,810) * Vanitha RAJENDRAM - ELECTED (8,451) * Suresh RATNABALAN - ELECTED (6,109) * Waran VAITHILINGAM - ELECTED (6,523) * Mariampillai Anjalo YOGENDRAN - ELECTED (6,378) District No 3. (Western Ontario) …
-
- 35 replies
- 4k views
-