ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
இலங்கைத் தீவின் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். “காலநிலை மாற்றம், மாசுபாடு, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடலுக்குள் வீசப்படும் பொலித்தீன் அளவு ஆகியவற்றினால் இலங்கைத் தீவின் பவளப் பாறைகள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளன. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒவ்வொருவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்காவிட்டால், அடுத்த பத்தாண்டுகளில் பவளப்பாறைகள் முற்றாக அழிந்து விடும் அச்சுறுத்தலை உள்ளது. உலகில் …
-
- 0 replies
- 638 views
-
-
தமிழ் வர்த்தகர்களும் சிங்கள வர்த்தகர்களும் இணைந்து தனியாக வர்த்தக சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியிருக்கின்றார். திருகோணமலை-குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் நாம் எம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். தெற்காசியாவில் மிக முக்…
-
- 2 replies
- 973 views
-
-
யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான் ; விக்னேஸ்வரனையும் சந்தித்தார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். குறித்த சந்திப்பின் போது பத்தரிகையாளர் எவரும் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், சந்திப்பினை முடித்தவிட்டு இருதரப்பினரும் பத்திரிகையாளரை சந்திருந்தனர். இச்சந்திப்பு குறித்து ஆறுமுகன் தொண்டமான் கூறுகையில், நான் வந்தது யாழில் உள்ள ஆலயங்களை தரிசிப்பதற்கே. அந்தவகையில் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருக்கிறார் அந்தவகையில் மரியாதையின் நிமித்தம் வந்து பார்த்தே…
-
- 4 replies
- 960 views
-
-
எஸ். அஷ்ரப்கான் பிரதேச செயலகம் தரமுயர்த்தும் விடயம் நடக்காமல் போனால் நிச்சயமாக நான் நஞ்சருந்தி தமிழ் உறவுகளுக்காக தற்கொலை செய்து கொள்வேன் என கல்முனை விகாராதிபதி ரன்முத்து கல சங்கரத்ன தேரர் இன்று (22) தெரிவித்தார். இன்று சனிக்கிழமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்ற உண்ணாவிரதப் போராட்ட களத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட கலகொட அத்தே ஞானசார தேரர் குழுவினரால் தரமுயர்த்துகின்ற விடயத்தில் மிக விரைவில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் அங்கு உரையாற்றிய கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மேலும் தனதுரையில், முஸ்லிம்களுக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலை அநியாயம் நடந்தால் அவர்களுடனும் நான் ஒன்றிணைந்து போராடுவேன். …
-
- 1 reply
- 518 views
-
-
இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென்று நூறுக்கோடி யென் நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் வரலாற்று நகரமான கியோதோ நகரத்தின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாத்து நவீன மயப்படுத்தியதுபோன்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் பேராசிரியர் ஹரொதொ ஹசுமிக்கும் இடையிலான கலநதுரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவு…
-
- 2 replies
- 473 views
-
-
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென்றால் எம்மிடம் வெளிப்படையாக அதனை தெரிவிக்க வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேசிப்பார்த்து எமது நிலைப்பாட்டுக்கு ஏற்றால்போல் இருந்தால் அவரை ஆதரிப்போம் என பிரதான எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இன்றுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதி - பிரதமர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றங்கூறிக்கொண்டு தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருவதால…
-
- 0 replies
- 867 views
-
-
முஸ்லிம் அமைச்சர்கள் பணத்துக்காக மீண்டும் பதவியேற்றமை வெட்கப்பட வேண்டியது – ஜே.வி.பி. முஸ்லிம் அமைச்சர்கள் தாமாக பதவி விலகியமையும், மீண்டும் பதவியை ஏற்றுக்கொண்டமையும் பணத்திற்காகவே என்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் நலனுக்காக அன்றி இன்று நாட்டில் பணத்திற்காக அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளே அதிகமாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் இருவர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டமை குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப் ப…
-
- 0 replies
- 552 views
-
-
ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என நீதி மற்றும் சறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எமது கட்சியில் இருக்கும் சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகக் வேண்டும் என்று நாங்கள் இன்று நேற்று அல்ல, பல வருடங்களுக்கு முன்பிருந்தே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். வறிய மக்களின் கவலையை உணர்ந்து, மக்களுக்கு சேவை செய்ய முடியுமான தலைவராகவே நாங்கள் அவரை பார்க்கின்றோம் என்றார். இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்…
-
- 0 replies
- 316 views
-
-
8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், சிறிலங்காவில் தங்கியுள்ள 7900 வெளிநாட்டவர்கள் பற்றிய தரவுகளை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு அலகு கண்டறிந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்தார். “இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா நுழைவிசைவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத் துறைகளில…
-
- 3 replies
- 821 views
-
-
தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இன்று (23.06) இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரை 13 வது திருத்தச் சட்டம் ஒரு அடிப்படை. அது தீர்வல்ல. தீர்வு என்பது சமஸ்டியாகத் தான் இருக்க வேண்டும். ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைபின் மீது பொய்யான செய…
-
- 0 replies
- 433 views
-
-
போட்டியில் இருந்து விலகுகிறார் சிறிசேன சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், கட்சிக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அதிபர் தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அத்துடன், மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, அடுத்த அத…
-
- 3 replies
- 1.2k views
-
-
கல்முனையில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இந்நிலையில் கல்முனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு தம…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்.மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் June 23, 2019 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரு யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து சுய விருப்பின் பேரில் விலகியதை அடுத்து அக் கட்சியின் பரிந்துரையில் புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்,மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகிய இரு உறுப்பினர்களும் கடந்த மே மாதம் தமது சுயவிருப்பின் பேரில் விலகியிருந்தனர் அவ்விரு வெற்றிடங்களுக்கும் அக்கட்சியின் சார்பில் டெய்சி பிலீப் ஜெயரஞ்சன் , தர்சிபா லவகீசன் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப்பட்டதனை அடுத்து அவர்கள் இருவரின் பெயர்களும் வர்த்தமானியி…
-
- 0 replies
- 511 views
-
-
UPDATE -சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதத்தலைவர்களின் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில், போராட்டக்களத்திற்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவுள்ளதாக எமது பிர…
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ்.! – வெளிவரும் புதிய தகவல் உயிர்களை தியாகம் செய்த ஜிகாதிகளை ஐ.எஸ் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டதனாலேயே ஈஸ்தர் தற்கொலை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது எனவும் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை எனவும் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்தர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள புலனாய்வு பிரிவு இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்…
-
- 0 replies
- 457 views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வரலாற்றைப் பார்க்கும் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன . 1989 ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கிகாரம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு வடக்கு உப பிரதேச செயலகமாக 31 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கி 1989ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டது முதல் இயங்கி வருகிறது. கரவாகு வடக்கு செயலகமும், நாவிதன் வெளி செயலகமும் இயங்க அன்றைய உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தேவநாயகம் அம்பாறை அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 1989ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி இடப்பட்ட கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன எ…
-
- 2 replies
- 473 views
-
-
இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.! இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நி…
-
- 9 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி! அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவ…
-
- 11 replies
- 1.4k views
-
-
தீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். கிழக்கு மாகாண சங்கைக்குரிய தேர்கள் அனைவரும் இவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமென ஒன்றிணைத்துள்ளோம் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தின் 6 ஆம் நாளாகிய இன்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பல தேர்கள் கலந்து கொண்டு வாக்ககுறுதிளித்ததனை தொடர்ந்து போராட்ட வடிவம் மாற்றப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 594 views
-
-
(நா.தனுஜா) நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதியின் செயலை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி குற்றவாளியாகக் கண்டது. அவருக்கு ஆறு வருடங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது. எட்டு மா…
-
- 0 replies
- 355 views
-
-
June 22, 2019 நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என்று வவுனியா காவல் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். குறித்த சிறுவர்கள் நேற்று முந்தினம் முதல் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் …
-
- 0 replies
- 535 views
-
-
புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’ தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா …
-
- 27 replies
- 3k views
-
-
கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம் நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவிக்கையில், அத்துரலிய ர…
-
- 3 replies
- 951 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்…
-
- 4 replies
- 1.3k views
-