ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143199 topics in this forum
-
இந்நாடு இனியும் ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது - மனோ கூறும் விளக்கம் கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின் போது,…
-
- 1 reply
- 707 views
-
-
கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு வந்திருந்தனர். எனக்கு எதிராக இலங்கை ISIS பயங்கரவாதிகள் மேற்கொண்ட படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை வழங்கியதுடன் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வரும்படி கேட்டிருந்தனர். அங்கு சென்றதும் முழுமையான தகவல்களை அறிந்துகொண்டேன். 2014 ஆம் ஆண்டு முதல் நான் இஸ்லாம் குறித்த சிந்தனையை தூண்டும் விதமான விமர்சனங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் மூலம் முன்வைத்து வரும் நிலையில், எனது பேஸ்புக் பதிவுகளை இலங்கை ISIS இனர் மற்றும் அதன் தலைவன் மெளலவி சஹ்ரான் ஹாஷீம் ஆகியோரும் வாசித்து வந்துள்ளனர். சஹ்ரான் என்னை பன்றி என்று அழைத்து வந்துள்ளான். எனது இருப்பிடம் மற்றும் நடமாட்டங்களை கண்டுபிடிப்பதற்கு முயன்ற பொழுதும் சஹ்ரான் இற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம் (ஆர்.யசி, எம்.எப்.எம்.பஸீர்) பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு …
-
- 2 replies
- 812 views
-
-
குறுக்கே பாய்ந்த சருகுபுலியால் இருவர் பலி மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19) மற்றும் கௌரீஸ்வரன் விதுஷன் (வயது 20) ஆகியோரே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிலொன்றில் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி வந்துகொண்டிருந்துள்ளனர். அப்பொழுது கொடுவாமடு எனுமிடத்தைக் கடக்கும்போது சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதி…
-
- 0 replies
- 352 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள 559 முஸ்லிம்கள் விசாரணையின் பின்னர் விடுதலை - ஜனாதிபதி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்பதோடு, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விட…
-
- 0 replies
- 349 views
-
-
இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் கார்வண்ணன்Jun 02, 2019 | 4:01 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார். “தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20 பில்லியன் ரூபா செலவில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது. திட்டத்துக்கான வழங்குனர்கள் தீர்மானிக்கப்பட்டதும், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு, குடி…
-
- 6 replies
- 777 views
-
-
ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை! முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஹோட்டல் ஒன்றிலிருந்து அழைத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சிகள் தன்னிடம் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தகவலொன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், பாசிகுடா பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி நாட்டு பிரஜைகள் சிலரை சந்தித்த சம்பவம் தொடர்பாக சி.சி.…
-
- 0 replies
- 716 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணம் காட்டி முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இன வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுத்த நடவடிக்கையையும் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை நீதித்துறையால் ஒருபோதும் முறையான நீதி விசாரணைகள் இடம்பெறாத என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள் தமிழ் மக்கள் பேரவை, இதனால் முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகங்களில் ஒன்றான முஸ்லீம்கள் முழுமையாக ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லீம…
-
- 3 replies
- 937 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர், ஆர். யசி) இலங்கையில் ஒரு சிறு குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி, இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த களரியை ஏற்படுத்த பதவி ஆசை பிடித்த சிலர் முயற்சின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் அதற்கு இடமளிக்காமல், சமாதானத்தை விரும்பும் இலங்கையர் என்ற ரீதியில் நாம் எமது பதவிகளை இராஜினாமா செய்கின்றோம். அந்த பயங்கர்வாத தககுதல்களுடன் முச்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைகளுக்கு அவர்கள் தமது பதவிகள் ஊடாக இடையூறு ஏர்படுத்துவதாகவும் தொடர்ச்சியாக சிலர் குற்றம் …
-
- 0 replies
- 401 views
-
-
உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர் ஒருவரின் ஊடாக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பன் தலைவர் எஸ். சந்திரகுமாருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று வவுனியாவிலுள்ள தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து கல் மணல், பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்…
-
- 0 replies
- 423 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாட்டுவண்டி சவாரி போட்டியொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப் போட்டி விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று மாலை இடம்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இந்த மாட்டு வண்டி சவாரி காணப்படுவதோடு இந்த பாரம்பரியங்கள் அழிந்து செல்லாது இருப்பதற்காக தொடர்ச்சியாக இவ்வாறான போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கமானது நேற்று மாலை விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்றை நடாத்தியது. ஐந்து பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டதோடு 48 மாட்டுவண்டிகள் இந்த போட்டி…
-
- 0 replies
- 420 views
-
-
தொடருந்து தண்டவாளத்தில் படுத்திருந்த ஒன்றரை வயதுக் குழந்தையால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் நாவலடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பிரிவு கிராம அலுவலர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் குழந்தை படுத்திருப்பதை அவதானித்து, உடனடியாகச் சென்று குழந்தையை மீட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அங்கிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் குழந்தையின் வீடு இருந்தமை தெரியவந்தது. …
-
- 1 reply
- 829 views
-
-
தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி கி.தவசீலன்Jun 02, 2019 | 3:56 by in செய்திகள் அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறி…
-
- 14 replies
- 1.7k views
-
-
வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். விடுதலைப்புலிகள் கூட தமத…
-
- 92 replies
- 6.4k views
- 1 follower
-
-
அடுத்த ஜனாதிபதி மைத்திரி – பிரதமராக மஹிந்த: சுதந்திரக்கட்சிக்குள் புதிய வியூகம் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனக்கு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பிளவுபடும் நிலைகள் காணப்படுவதனால் தயாசிறி ஜயசேகர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேனவை அடுத்…
-
- 0 replies
- 483 views
-
-
ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா? கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண அளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக மேல் மாகாண அளுநர் அசாத் சாலி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல், ஹிஸ்புல்லாஹ்வின் இராஜினாமா செய்துள்ளதாகவும், இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் ரிஷா…
-
- 13 replies
- 1.7k views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virake…
-
- 31 replies
- 3.6k views
- 1 follower
-
-
எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார் அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார். ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் …
-
- 1 reply
- 971 views
-
-
முடங்கியது கண்டி ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் ! உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாக…
-
- 5 replies
- 1.5k views
-
-
June 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்த ஞாயிறுக் குணடுத் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார மீட்புத்திட்டம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமங்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜ…
-
- 0 replies
- 327 views
-
-
June 3, 2019 நாட்டுக்கானதொரு அதிர்ஷ்டான பூஜையினையே முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ள அத்துரலியே ரதன தேரர் 30 ஆண்டு காலம் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் போது மாவிலாறு போராட்டத்திலிருந்து வெற்றி பயணத்தை ஆரம்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே நாட்டுக்கு கடமைப்பட்டவனாக தாம் இல்லை என்றும் தனது இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க இங்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தமை அவரது ஆதரவாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியின் பதவிவிலகலையடுத…
-
- 0 replies
- 967 views
-
-
சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் காணப்படும் சமயங்கள் அனைத்தும் இந்தியாவிலே ஆரம்பிக்கப்பட்டன. புத்த பெருமானின் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதி , பிரதமருக்கு அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதம் ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களை எழுதியுள்ளனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண…
-
- 0 replies
- 348 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவினாலேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது – தயா கமகே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நீங்கள் வழங்கிய வாக்குகளால்தான் இன்று இருக்கின்ற ஜனாதிபதியும் அரசும் காணப்படுகின்றது. எனக்கு ஆரம்பத்தில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சே கிடைத்தது. அது ஓர் பெயர் பலகை மாத்திரம் கொண்ட அமைச்சாகவே இருந்தது. அதன் பின் சிறு கைத்தொழில் வாசனை பொருட்கள…
-
- 0 replies
- 257 views
-
-
ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார், உபரதன தேரர் தவறேதும் புரியாத ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றதென மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது பொல்ஹேன்கொட உபரதன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, அவர் மீது எந்ததொரு தவறுமில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே அவரை பதவியிலிருந்து நீக்குவது முறையற்ற செயற்பாடாகுமெனவும் பொல்ஹேன்கொட உபரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை அமைச்சர் ர…
-
- 0 replies
- 330 views
-