ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
குடாநாட்டு மக்களின் வரிப்பணம் அவர்தம் சுகாதார நலனுக்குப் பயன்பட வழிகாட்டிச் செல்வாரா ஜனாதிபதி? கடந்த ஆறு மாத காலமாக திறக்கப்படாதிருந்த யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒருவாறாக விடிவு கிடைக்கின்றது. அத்தியாவசிய தேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள வைத்தியசாலையைக் கூட, ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக மூடப்பட்டிருந்ததும் ஆசியாவின் அதிசயங்களில் ஒன்றுதான். இந்த வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க வராமலிருந்திருந்தால், கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து வைத்தியசாலை இயங்கத் தொடங்கியிருக்கும். அத்துடன் நாட்டு மக்களின் முதுகில் மேலும் வரிச்சுமை அதிகரித்திருக்காது. ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதால் சில வேலைகள் நடக்கின்றன. அவர் பயணிக்கும் வீதிகள்…
-
- 9 replies
- 1.1k views
-
-
காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் மந்தகதியில்..! காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து காத்திருப்பதாகவும் இதற்கான காத்திரமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத கூட்டத்தொடரின்போது 30.1 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டதன்படி யுத்தத்தினால் காணாமலாக்கபட்ட சொந்தங்களுக்கு நீதி கிடைக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட வேண்டிய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திருந்தது. இதனடிப்படையில் 199…
-
- 0 replies
- 220 views
-
-
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாக, கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு பலரும் அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும். (1) இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள். போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக. அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள். உறுதியாகவும் உள்ளனர். ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளி…
-
- 1 reply
- 915 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு 31ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தலைமையில் 31ஆவது முதலமைச்சர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை பதுளையில் இடம்பெற்றது. இதன்போதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போதைய நிலையில் ம…
-
- 4 replies
- 581 views
-
-
முப்படைகளின் பிரதானியை விசாரணை செய்த நிசாந்தசில்வாவை இடமாற்றுமாறு சிறிசேன உத்தரவிட்டார் – பூஜித் தகவல் மைத்திரிபால சிறிசேன சுயாதீனபொலிஸ் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிட்டார்என முன்னாள் பிரதிபொலிஸ்மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துவிசாரணைகளை மேற்கொண்டுள்ளஜனாதிபதி ஆணைக்குழுவின்முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான விடயங்களில் சிறிசேன தலையிட்டார் என அவர்குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு பேரவையில் முன்னாள் முப்படைகளின் பிரதானியை கைதுசெய்வதற்கான முயற்சிகள் தொடர்பிலும்,இராணுவத்தினருக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகள் தொடர்பிலும் தீவிரம…
-
- 0 replies
- 358 views
-
-
வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்! எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே! மக்களை மக்களாக நடத்துங்கள்!’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது. இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு http://www.paristamil.com/tamilnews/?p=26627
-
- 0 replies
- 689 views
-
-
அம்பாறை மாவட்டம் சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியில் அதிர்வு பிப் 22, 2013 அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகளை அடையாளம் கண்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது. சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியிலிருந்து இந்த ஒலி அலைகள் எழுவதாக பணியகத்தின் தலைவர் என். பீ். விஜயானந்த குறிப்பிட்டார். வடினாகலயை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகள் அதற்குரிய மானிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இயற்கையான நில அதிர்வுகளின்போது எற்படுகின்ற ஒலி அலைகளை மானிகளில் அளவிட முடியாது எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக இந்த நில அதிர்வுகள் மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக இருக்கலாம் என்ற சந்தேக…
-
- 1 reply
- 539 views
-
-
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட விசேட குழு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் இலங்கை மின்சார சபையினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு மின் வலு அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் காற்று சூரிய சக்தி வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திசநாயக்க தலைமையிலான விசேட குழுவினர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். சுமார் 30 காற்றாலைகளை கொண்டு அமைக்கப்பட்ட 103.5 மெகா வாற் மின் உற்பத்தி திறனை கொண்ட குறித்த திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்த அமைச்சர்கள் குழு ஆராய்ந்ததுடன் நேரடியாக காற்…
-
- 0 replies
- 331 views
-
-
சுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம். சுண்ணாகத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு எம்மால் நடத்தப்பட்டதே. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு: சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார். “தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் …
-
- 11 replies
- 700 views
- 1 follower
-
-
(செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் அமரபுர , ராமான்ய பீடங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து , கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவற்றுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நெருங்கி தொடர்பைக் கொண்டுள்ளார். இந்நிலையில் 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பிரதமரின் பிரதிப்பளிப்பையா இந்த அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளது ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது , அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயகத்திற்கு…
-
- 0 replies
- 299 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் பிழையானவை என்றும் அரசாங்கம் மக்களை பாதுகாப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திரிகளை சந்தித்து மறுப்புரையும் பொய்யுரையும் வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா நேற்று (01) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள கலை கலாச்சார விழுமியங்களை எடுத்து காட்டும் அம்சமாகவே இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிகழ்வின் போது எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் முல்லைத்தீவு பிரதேசத்தில் காணப்படும் சிறப்புக் கலைகள் மற்றும் வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் குறித்த கலாச்சார விழாவில் சிலம்போசை என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இறுவெட்டுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு…
-
- 1 reply
- 403 views
-
-
தமிழ் மக்கள் மீள்குடியேறும் போது பாராபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! வாகரைப் பிரதேசத்திலிருந்து கடந்த கால யுத்த சூழலின் போது இடம்பெயர்ந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் அவர்களை மீளக்குடியேற்றுவதில் எந்த தடையும் இல்லை. தமிழ் மக்கள் மீள்குடியேறும் போது பாராபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானா…
-
- 0 replies
- 284 views
-
-
'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன் மீதான விசாரணையின் தொடர்ச்சியாக மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் மீதும் விசாரணைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 512 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மாற்றுசட்டம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மாற்றுசட்டம் ஒன்றை கொண்டுவருவதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த அரசியல் அமைப்பில் பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு உள்வாங்கப்படவுள்ளது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் இலங்கை தரப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அச்சுறுத்தல் மாற்றுக் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின் அபிவிருத்தியானது உலகளாவிய ரீதியில் கருத்துக்களை வேகமாக செயல்படுத்துவதற்கும் பயங…
-
- 0 replies
- 239 views
-
-
ராமநாதபுரம்: காதல் தோல்வி காரணமாக இலங்கை அகதிகள் முகாமில் இருந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈழ போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா என்பவரின் மகள் நிஷாந்தினி (24). கடந்த மாதம் யோகராஜா தனது குடும்பத்தினருடன் அகதியாக தமிழகம் வந்தார். அவர்களது குடும்பத்துடன் இலங்கையை சேர்ந்த வசீகரன் என்ற வாலிபரும் வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே முகாமில் இருந்ததை அடுத்து நிஷாந்தினியும், வசிகரனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களுக்குள் காதல் பயிரை விறுவிறுவென வளர்த்துள்ளது. காதலர்கள் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஐ.டி துறையினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் . அவர்களின் அறிக்கை விவரங்கள் வருமாறு : வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது. இந்த சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்? 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஒன்றரை இலட்…
-
- 0 replies
- 395 views
-
-
21 அகதிகள் நாடு வந்தடைந்தனர் -கனகராசா சரவண இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 21 பேர் யு. என். எச். சி. ஆர் அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு, விமான மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்துவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/186672/-அகத-கள-ந-ட-வந-தட-ந-தனர-#sthash.ghxVxn0c.dpuf
-
- 2 replies
- 396 views
-
-
ஐ நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா மற்றுமொரு இராஜதந்திரத் தோல்வியைச் சந்தித்துள்ளதோடு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவாதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்சியான இராஜதந்திரச் செயற்பாடுகளில் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்காற்றி வந்திருந்த நிலையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவினஇ தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொழுதே ஊடக அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தொடர்பில் ஓர் சுதந்திரமான அனைத்துலக விசாரணையே உலகத் தமிழர்களின் எதிர்பார்பாகவுள்ள நிலையில் இன்றைய தீர்மானம் அது நோக்கிய இராஜதந்திரச் செயல்வழிப்பாதையில் முக்கியமானதொரு விடயமென கருத்து வெளியி…
-
- 1 reply
- 440 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகம் தூரோகம் இழைத்துவிட்டது என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2013 - 2014ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பில் உரையாற்றிய அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ.வும் துரையூர் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க தலைவர் முகருணாநிதி தூரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். அ.தி.மு.க.வின் இந்த குற்றச்சாட்டிற்கு தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க சார்பில் பேசிய உறுப்பினர் சக்கரபாணி, '1956ஆம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தி.மு.க பல்வேறு…
-
- 1 reply
- 615 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் மூன்று சாட்சியங்கள் பதிவு யாழ். தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் மூன்று சாட்சியங்கள் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர் ஆகியோர் இன்று சாட்சியமளித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகத்திற்கு …
-
- 0 replies
- 290 views
-
-
ஜனாதிபதியின், பொது மன்னிப்பின் கீழ்... சிறைக்கைதிகள் விடுதலை சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஜனாதிபதியின்-பொது-மன்னி-5/
-
- 0 replies
- 348 views
-
-
திருச்சியில் சிங்கள அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய மாணவர்கள் ; பதற்றம் நிலவுகிறது.[படங்கள் ] ஈழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது. போலீஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின. இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நிகின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு …
-
- 0 replies
- 733 views
-
-
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(10.12.2020) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், மக்கள் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது பிரச்சினைகளை வ…
-
- 2 replies
- 385 views
-