ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி! மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது. அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உ…
-
- 0 replies
- 185 views
-
-
இந்தியாவிடம் தோற்றுப்போகாமல் இருக்கும் தமிழ்த் தேசியம் சிங்களத்திடம் தோற்குமா? சந்திரகாந்தன் எம்.பி. கேட்கிறார் "இந்தியாவிடம் தோற்றுப் போகாத தமிழ் தேசியம் ஒருபோதும் சிங்கள மேலாண்மையாளர்களிடம் தோற்றுப் போகாது.இந்த யதார்த்தத்தை சிங்கள அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.தமிழ் மக்களின் அபிலாஷைகளை நோக்கிய தீர்வுக்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காது விடுதலைப் புலிகளுக்கெதிரான சமர்களில் வெற்றிகளைக் குவித்து அனைத்தையும் சாதித்துவிடலாம் என நினைப்பது தவறு. இந்நிலையில் அரசு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மஹிந்த அரஸ்ரீசின் பக்கம் தமிழ்மக்கள் இல்லை; புலிகளது போராட்டத்தின் ஆணிவேராகவே அவர்கள் இருக்கின்றனர். இதனால் கள வெற்றிகள் நிலையற்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.'' …
-
- 2 replies
- 2k views
-
-
[size=2][size=4] (சுமித்தி) இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை கண்டித்து யாழ். மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதி மேயர் சட்டத்தரணி ரமீஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினரான எம்.எம். முஸ்தபா இந்த கண்ட பிரேரணையை சபையில் முன்வைத்தார். இந்த பிரரேணை யாழ். மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என பிரதி மேயர் ரமீஸ் குறிப்பிட்டார். இந்த கண்டன பிரேரணையின் பிரதி கொழும்பிலுள்ள அமெ…
-
- 0 replies
- 384 views
-
-
வெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கவனஈர்ப்பு போராட்டம் வெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கவனஈர்ப்பு போராட்டம் : இலங்கையின் வெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரி அம்பாறையில் நேற்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றுள்ளது காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளை வான் கடத்தலை நிறுத்து போன்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர். அம்பாறை, கிளிநொச்ச…
-
- 0 replies
- 213 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, “ஊரடங்கு அமுல்படுத்தப்படும் வேளையில் தோட்டத்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடவும், தோட்ட தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் தொழிற்படவும், தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதகம் ஏற்படா வண்ணம் தடையின்றி தொழில் வழங்கப்பட வேண்டும்” என மனோ கணேசன் கோரிக்கை விடுத்திருந்தார். “வயல்களில் விவசாயம் செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதை மனோ கணேசன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர், மலையக பிரதேச பொலி…
-
- 1 reply
- 638 views
-
-
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்! உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார். இந்…
-
- 0 replies
- 175 views
-
-
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். தமிழில் எழுதப்பட…
-
- 2 replies
- 2k views
-
-
இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்தினால் பிரபாகரன் மறு அவதாரம் எடுக்க நேரிடும்! 13 மே 2016 சமஷ்டி பிரிவினையல்ல!! விக்கியின் உரை:- இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்தினால் பிரபாகரன் மறு அவதாரம் எடுக்க நேரிடும்! தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தி…
-
- 0 replies
- 567 views
-
-
அரசாங்கப் படைகள் வடபகுதியை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் வடமாகாணசபைக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.தற்பொழுது நாட்டில் எட்டு மாகாணசபைகளும் சுமுகமாக இயங்கிவருகின்றன. ஒன்பதாவது மாகாணசபையான வடமாகாணசபைக்கான தேர்தல், அரசாங்கப் படைகள் வடக்கைக் கைப்பற்றிய பின்னர் உடனடியாக நடத்தப்படும்” என அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு அமோக ஆதரவு கிடைக்கப்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தால் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடிந்தது எனக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலுக்குப…
-
- 0 replies
- 630 views
-
-
30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சிறிலங்காவில் வெப்பநிலை அதிகரிப்பு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 7, 2012 AT 09:01 சிறிலங்காவில் கடந்தவாரம் முப்பதாண்டு இல்லாத வகையில், அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.கடந்தவாரம் வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.பொலன்னறுவ மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியது. அனுராதபுர, பொலன்னறுவ, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார். மலையகத்திலும் வெப்பநிலை சிறிதளவு அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. அதேவேளை, கொழும்பில் சராசரி …
-
- 0 replies
- 698 views
-
-
இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நினைவு நாள். மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்தும் ஏழாண்டுகள் கடக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் இதுபோன்றதொரு நாளில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம், தம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தது. பெரும் போர். பல நாடுகள் நேரடியாகக் களமிறங்கி நடத்திக்காட்டிய போர். பிணக்குவியலுக்கு மேல் நின்று சமராடிய போர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் மரணமும், ஆற்றவே முடியாத காயங்களும் வந்து கொண்டிருக்கையில்தான் புலிகள் இயக்கம், “ஆயுதங்களை மௌனிக்கிறோம்” என்றார்கள். முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர்க்களத்தில் இப்படியொரு அறிவார்ந்த சொற்றொடரை யாராலும் பயன்படுத்த முடியுமா? சாவதையும், சரணடைதலையும் தவிர வேறெந்த வாசலுமற்ற ரவைகளின வெளியில இப்படி யோசிக்கத…
-
- 1 reply
- 673 views
-
-
வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார் adminOctober 15, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார். https://globaltamilnews.net/2025/221567/
-
- 0 replies
- 128 views
-
-
வன்னி மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதி சேகரிப்பு [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 12:09 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நடவடிக்கையினால் வன்னிபெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான நிதி சேகரிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொந்த நிதியில் முதற்கட்டமாக சேர்த்த மூன்று இலட்சம் ருபாவை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் தங்கியுள்ள யாழ். ஆயர் தோ…
-
- 0 replies
- 624 views
-
-
மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இறுதித் தீர்மானம் எடுப்பார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது: மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். 2002ம் ஆண்டு முதல் இதுவரையில் மரண மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 200ற…
-
- 0 replies
- 286 views
-
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி,…
-
-
- 11 replies
- 832 views
-
-
மாஜி விடுதலை புலி தலைவர் பத்மநாதன் ராணுவ காவலில் இருந்துவிடுவிப்பு கொழும்பு : இலங்கை ராணுவத்தின், காவலில் இருந்து, விடுதலை புலிகளின் முன்னாள் தலைவர் பத்மநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதலை புலி தளபதிகளில் ஒருவராக இருந்தவர், கே.பி., எனப்படும் குமரன் பத்மநாதன். ராஜிவ் படுகொலை வழக்கில் இவர், "தேடப்படும் குற்றவாளி' யாக உள்ளார். கடந்த 2009ல், விடுதலை புலி தலைவர், பிரபாகரன், கொல்லப்பட்ட பிறகு, சண்டை முடிவுக்கு வந்தது. மலேசியாவில் தலைமறைவாக இருந்த பத்மநாதன், விடுதலை புலிகளின் அடுத்த தலைவராக தன்னை அறிவித்து கொண்டார். சர்வதேச போலீஸ் உதவியால், பத்மநாதனை கைது செய்த இலங்கை அரசு, அவரை ராணுவ காவலில் அடைத்தது. இது குறித்து இலங…
-
- 13 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பனருமான நாமல் ராஜபக்ஷ கூட்டாட்சியில் சிலருக்கு நீதி கிடைத்திருப்பினும் அரச அதிகாரிகளுக்கு நீதி தொடர்பாக பல பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளார். நேற்றைய தினம் ஒளிபரப்பு ஊடகமொன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே கூட்டாட்சி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேற்படி கருத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கையில், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பல விதமான குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. நாளை கைது செய்யப்படுபவர் தொடர்பாக இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து பகிரங்கமாக அறிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 249 views
-
-
Published By: Vishnu 07 Nov, 2025 | 09:31 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சம்பிரதாயமாக சடங்காகவே உள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாட…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
செங்கலடி பதுளை வீதியில் மகோயா காவற்துறைக்; காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் நேற்று மாலை (செப்25) 06.05 மணியளவில் இடம்பெற்றது. கடமையிலிருந்த ஊர்காவற்படைச் சிப்பாயே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்டகொண்டதாகவும் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி வாடகை வண்;டி எனவும் தெரியவருகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் எனவும் மற்றையவர் விமானப்; படைச் சிப்பாய் எனவும்,; இவர்கள் சாதாரண உடையிலேயே பயனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 718 views
-
-
18 Nov, 2025 | 05:22 PM இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத…
-
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:57 PM நாட்டை பெருமளவில் பாதித்துவரும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை (A/L) உள்ளிட்ட அனைத்து தேசிய பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே அறிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்குள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என்றும், டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைமுறையில் இருந்த பரீட்சை அட்டவணை இனி செல்லுபடியாகது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகள், பரீட்சை நிலையங்கள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளம், மண்சரிவு மற்றும் தடைகள் காரணமாக இயலாமை நிலையை சந்தித்து வருகின்றன. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பரீட்சை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது. தமிழர் விடுதலைக்கு சுமந்திரன் புதியவர் என்பது எல்லோரும் அறிந்ததே. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து பங்காற்றியவர் மட்டுமன்றி சிங்கள அரசாங்கத்தினை பாதுகாப்பதில் முன்னணி வகித்ததுவும் எல்லோரும் அறிந்ததே. சுமந்திரனின் இந்த விஜயத்தின் போது இவர் சிறிலங்காவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடை…
-
- 6 replies
- 336 views
-
-
ஆயிரம் சடலப் பைகள் விவகாரம்; முற்றாக மறுக்கிறது அரசு! ஐசிஆர்சியிடம் ஆயிரம் சடலப் பைகள் (Body Bags) கோரப்பட்டது, கொரோனாவினால் அதிகளவு மரணம் ஏற்படும் என்பதாலல்ல என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் அதிக மரணங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை. சுகாதார அமைச்சு எப்போதும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சடலப் பைகள் உட்பட குறிப்பிட்ட அளவிலான மருத்துவ பொருட்களை தேக்கி வைத்திருக்கும. இது ஒரு கட்டாய தேவை. அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்க…
-
- 3 replies
- 963 views
-
-
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை! மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது …
-
- 0 replies
- 152 views
-
-
தமிழ் மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து காணப்படுகின்றது - சுரேஷ் 07 நவம்பர் 2012 தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பது தொடர்ந்தும் தாமதமாகி வருவதாலும், நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமைகளில் உக்கிரமடைந்து வரும் பிரச்சினைகள் காரணமாக நாளையோ, நாளை மறுதினமே, 5 வருடங்களிலோ அல்லது 10 வருடங்களின் பின்னரோ, அந்த மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அரசாங்கம், தாம் கூறுவது அனைத்துமே சட்டம் என நினைத்து செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை பெற்றுக்க…
-
- 0 replies
- 557 views
-