Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரே ஒரு பயணியுடன் கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோடை விடுமுறையை சிறிலங்காவில் கழிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஆசனங்களை பெரும்பாலானோர் ரத்துச் செய்து வருகின்றனர். இதனால் விமான நிறுவனங்கள் தடுமாறத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில், மிகக் குறைந்தளவு சுற்றுலாப் பயணிகள…

    • 0 replies
    • 500 views
  2. பொதுபலசேனாவை வளர்த்த கோத்தாபயதான் தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் காதர்மாஸ்தர். இது தொடர்பில் ஐபிசி-தமிழ் தொலைக்காட்சியின் அகக்கண் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான முழுமையான காணொளி. https://www.ibctamil.com/srilanka/80/119037

    • 6 replies
    • 1.4k views
  3. "முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்": மனோ கணேசன் கோரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …

    • 1 reply
    • 983 views
  4. தமிழ் மக்கள் மத்தியில் கூட்ட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அந்நியன் திரைப்படத்தின் விக்கிரம் போல் பாசாங்கு செய்கின்றாரா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அவசரகால பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.குண்டு வெடிப்பு நடைபெற்ற இடங்களை விட வடக்கு மாகாணத்திலே இராணுவ கெடுபிடிகள் அதிகரித்து காணப்படுகின்றன.அமைதியாக உள்ள எமது பிரதேசத்தில் போர…

    • 2 replies
    • 629 views
  5. இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ 25 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த…

  6. யார் இந்த ஹிஸ்புல்லா?

    • 2 replies
    • 481 views
  7. கொழும்பு செய்திகள் கடந்த வெள்ளியன்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஓமான் கிளம்பி சென்றார். காரணம் அவருக்கு மட்டுமே வெளிச்சம் என்கிறது ஆங்கில பத்திரிகை ஒன்று. சுவிஸ் விமானம் கடந்த வெள்ளியன்று வந்த சுவிஸ் விமானம், ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே வந்து சேர்ந்தது. முஸ்லிம் மக்களின் வேதனை பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் போன்றன வீதியில் நின்று கையைக் காட்டி நிறுத்துமாறு கோரினாலும் நிறுத்தாமல் செல்கின்றன என்று , குண்டுவெடிப்புக்களுக்கு பின்னான, தமது நிலைமை குறித்து வேதனையுடன் தெரிவிக்கினறனர்.

    • 0 replies
    • 523 views
  8. May 4, 2019 ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்;. உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள அச்சுறுத்தலான சூழலை பயன்படுத்தி மீண்டும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற…

  9. சோதனைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினர்

    • 0 replies
    • 550 views
  10. யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணை விண்ணப்பம் செய்தனர். எனினும், மாணவர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான்,…

  11. கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் வெலிசரை கடற்படை முகாம் ஊடாக விநியோகிக்கப்பட்டவை – அதிர்ச்சி தகவல் வெளியானது! கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் வெலிசரை கடற்படை முகாம் ஊடாக விநியோகிக்கப்பட்டவையாக இருக்கலாம் என கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அதிகளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கல்குவாரிகள் தொடர்பாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்படு…

  12. முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் 1984 தோன்றியது!!ஆதாரத்துடன் 2006ஜெனிவாவில் அன்டன் பாலசிங்கம் வெளியிட்டார்!! முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் இப்போது தான் தோன்றியது போல பலர் பேசி வருகிறார்கள் .அது உண்மை அல்ல. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் இந்த ஜிகாத் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜிகாத், பின் பாரிய கொலைகள், கற்பளிப்புக்கள் எனத் தொடங்கி கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை/வர்த்தக ஸ்தாபனங்களை அழிக்கத் தொடங்கினார்கள். அக்கால கட்டத்தில் தேசிய ஊடகங்களின் வளர்ச்சியின்மையை சாதகமாக பயன்படுத்தி, இலங்கை முப்படைகளின் ஆசியுடனும், பாதுகாப்புடனும் கொடூரங்களை செய்து கொண்டிருந்தார்கள். மத முலாம…

  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் …

  14. தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை – பரபரப்பு தகவல் வெளியானது ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் உடல் என்று சொல்லப்படுவதுடன் சஹ்ரானின் உடலமைப்பு ஒத்துப்போகாமை குறித்தும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள…

  15. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்! AdminMay 3, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றது என அத்துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னாள் போராளிகளின் உதவியை 512 படைகளின் தளபதி கேட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் துறையின் இயலாத்தன்மையை வெளிக்காட்டுகின்றது எனவும் முன்னாள் போராளிகளிடம் பிச்சை எடுப்பது போல உள்ளது என…

  16. மசூதி மயானத்திலிருந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு! மட்டக்களப்பு – காத்தான்குடியில் உள்ள மசூதி மயானத்தில் இருந்து கைக்குண்டுகள், ஆயுதங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா மசூதி மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் இன்று (சனிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளன. பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், வாள், கைக்கோடாரி, வாக்கிடோக்கி இரண்டு, கணனி கார்ட் டிஸ்குகள் உட்பட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டுவரும் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்…

  17. புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் MAY 01, 2019 | 4:32by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், ”தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணி…

  18. ஆசையாய் விளையாடிய கடற்கரையின் அருகே புதைக்கப்பட்ட வெளிநாட்டு சகோதரர்கள்! இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானியர்கள் இருவரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானிய சகோதரரும், சகோதரியும் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அ…

  19. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் May 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலய திருவிழாவை நடத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் முப்படை தளபதிகள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினர் ஆலய நிர்வாக உறுப…

    • 1 reply
    • 584 views
  20. சாய்ந்தமருது மக்கள் தேசபக்தியுடையவர்கள் May 4, 2019 சாய்ந்தமருதில் பதுங்கிய பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய அப்பகுதி மக்கள் தேசபக்தியுடையவர்கள் என பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும் காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (3) தனக்கு கிடைக்கப்பெற்ற பதவியுயர்வு மற்றும் வெகுமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் இவ்வாய்ப்பு அதிஸ்டம் எனவும் தனது மக்கள் தொடர்பாடலுக்கு கிடைத்த வெகுமதி எனவும் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது கல்முனை காவல்நிலையத்திற்கு 2015 ஆண்டு காலப்பகுதியில் இருந்து பணியாற்றுவதாகவும் அவ்வாறு பணியாற்றும் போது அன்றைய தினம்(26) அன்று தேசபக்தி மிக்க மக்களில் இ…

  21. May 3, 2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் காவற்துறையினர் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி…

    • 1 reply
    • 925 views
  22. உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சோதனை தேடுதல் என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க முயற்சியா? வடபகுதிக்கு இருபது வாகனங்களில் வெடிபொருட்கள் ஆயுதங்கள் கொண்டுசொல்லப்பட்டதா? எழும் சந்தேகங்கள் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் தெற்கிலிருந்து வடபகுதிக்குள் 20 வாகனங்கள் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் பிரவேசித்துள்ளதாக இலங்கைப் படையினர் புதிய தக…

    • 2 replies
    • 710 views
  23. எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்

  24. (ஆர்.யசி) கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார் நாட்டில் நிலவும் பயங்கரவாத சூழல் குறித்து அவர் அளித்துள்ள செவ்வியொன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் அவர் மேலும் கூறுகையில், இந்த தாக்குதலுக்கு வெறுமனே இலங்கைக்குள் எந்த திட்டங்களும் இருக்க முடியாது, நிச்சயமாக இதில் வெளிநாட்ட…

    • 1 reply
    • 860 views
  25. சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை தமக்கு வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில், கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவது நல்லதென்றும் இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இராணுவத் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.