ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
வெள்ளி 12-01-2007 16:38 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குகளால் அடித்துடைப்பு நெதர்லாந்தை தளமாக கொண்டுள்ள சோஆ என்ற சர்வதேச சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குமார் அடங்கிய குழுவால் சேப்படுத்தப்பட்டுள்ளது கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமில் சோஆ நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட பல உபகரணங்களை தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இது குறித்து சிங்கள ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட குழு ஒன்று அந்த அலுவலகத்தை சேதப்படுத…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜின் 8வது நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “குறைந்தபட்சம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பொதுவேட்பாளர் முன்வந்தால் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும். அது சந்திரிகா குமாரதுங்கவாகவோ, ரணில் விக்கிரமசிங்கவாகவோ, அல்லது கரு ஜெயசூர…
-
- 1 reply
- 568 views
-
-
விக்கியை மீண்டும் களத்தில் இறக்க முயற்சி (ஆர்.ராம்) வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொம்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும். அவ்வாறு குறைகின்றபோது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என்பது தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகளின் கருத்தாக…
-
- 2 replies
- 725 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/2023 இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போகச் செய்கையில் வரட்சி, வெள்ளம், நோய் தாக்கம் காரணமாக 2725.74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் போக செய்கையில் வெள்ளம் வரட்சி நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்ட போதே 2725 .74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரணை மடுக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறிய நடுத்தர குளங்கள் மானாவாரி செய்கை நிலங்கள் …
-
- 0 replies
- 612 views
-
-
சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகளிற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்: அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துவருகின்றது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அவுஸ்ரேலிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ வாதத்தினால் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதும் குறிப்பாக பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள் மீது எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொண்டு மனிதப்படுகொலைக…
-
- 9 replies
- 2.7k views
-
-
சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் – இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள் April 1st, 2011 வன்னிச் செய்தியாளர் என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன…
-
- 1 reply
- 1.4k views
-
-
முதலில் அரசியல் தீர்வு பின்னரே அபிவிருத்தி ; சி.வி வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளா தார அபிவிருத்திகளை திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது. எமது வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப்பணிகள் செயற்படுத்தப்படவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப்பணிகள் குறித்து ஆராய்வதற்காக 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நியமித்திருந்தார். இந்த செயலணி நியமனம் தொடர்பில் அதிருப்…
-
- 1 reply
- 340 views
-
-
ரிக்கட்பெற நின்ற மக்கள் கலகம் விமான சேவை அலுவலகம் தாக்கப்பட்டது. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:45 யாழ் குடாநாட்டிலுள்ள தனியார் விமானசேவை அலுவலகத்தில் ரிக்கட் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் கலகத்தில் ஈடுபட்டதில் அந்த அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்காக விமான டிக்கட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நேற்று அதிகாலை 4.00 மணிமுதல் அந்த விமானசேவை அலுவலகத்துக்கு முன்னால் 2 ஆயிரத்தக்கும் அதிகமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்களில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் ‘டோக்கன்’ வழங்கப்பட்டதால் ஆத்திரமுற்றவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் அலுவல…
-
- 2 replies
- 1.4k views
-
-
Kisaru Samarakoon Dear Tamil Friends living abroad, It is a pity to know that you have become so hypocritical. You are not even living in Sri Lanka and still you people believe you have a right to speak for Sri Lankan Tamils. You don’t even know how peacefully your fellow citizens are living here now. They (not us) will tell you, “if you want to fight for a country, COME HERE AND FIGHT”. Well, people, they don’t even want you here, coz they are peaceful and happy as they are. You all are just parrots repeating what someone else has said. You don’t even know what you’re talking about. Anyway, once again people, set aside your rage. Terrorism in Sri Lanka is …
-
- 0 replies
- 1.6k views
-
-
நீதியரசர் விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி யினர் விசாரணை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ…
-
- 5 replies
- 809 views
-
-
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை – கொழும்பின் அதிர்வுவலைகள் தொடர்கிறது:- (தொகுப்பு) நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியாக கருதப்பட வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டமாக கருதப்பட வேண்டுமென அதி வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் வயிறு பிழைக்க முடியாத நபர்களே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சதிகாரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முதலிடம் – வெடித்தது சர்ச்சை சிறிலங்காவில் அரச நிகழ்வு ஒன்றில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசாங்க நிகழ்வுகளில் முதலில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். அதன் பின்னரே, ஏனைய நாட்டின் தேசிய கீதம் பாடப்படும். எனினும், கடந்த சனிக்கிழமை பொலன்னறுவவில், நடந்த நிகழ்வு ஒன்றில் இந்த நடைமுறைக்கு மாறான வகையில், முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்விலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவின் உதவியுடன், அமைக்கப்படவுள்ள 200 படுக்கைகளைக் கொண்ட சிறுநீரக நோய் சிகிச்சைக்…
-
- 6 replies
- 722 views
-
-
ஜனாதிபதி தேர்தல் முடிவு, தமது எதிர்காலம் குறித்து அறிந்து கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் ஜோதிடர்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். நாட்டின் முன்னணி ஜோதிடர்களிடம் அரசியல்வாதிகள் தங்களது ஜாதகக் குறிப்புக்களை காட்டி தகவல்களை அறிந்து கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமக்கு ஏற்படப் போகும் நிலைமை குறித்து அறிந்து கொள்ள அதிகளவான அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சில அரசியல்வாதிகள் தங்களது தோசங்களை நீக்கிக்கொள்ள பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, ஜோதிடர்களின் கருத்து எதுவாக இருந்தாலும் குறித்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக சில அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். http://seithy.com/breifNew…
-
- 1 reply
- 460 views
-
-
மரம் தாவும் குள்ளர்களால் அராலியில் பெரும் பதற்றம்!! மரத்துக்கு மரம் தாவும் குள்ளர்கள் பெண்கள், குழந்தைகள் மீதும் வீடுகளின் மீதும் கல்வீசித் தாக்குகிறார்கள் என்று அராலி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவும் இத்தகைய சம்பவங்கள் இடம் பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேற்று இரவு அராலி, ஐயனார் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகள…
-
- 0 replies
- 490 views
-
-
Published By: VISHNU 12 APR, 2023 | 12:38 PM (எம்.மனோசித்ரா) வறுமையிலுள்ள மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதற்கமைய இவ்வாறான தரப்பினருக்கான நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் ஜூன் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச …
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்கள் யாரென்பதை ஆதாரங்களுடன் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அம்பலப்படுத்துவோம் எனத்தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி கட்சியினதும் தலைவரினதும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் `புலி' லேபல் ஒட்டப்படுவது நாகரிமாகிவிட்டதென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஸ்ரீபதி சூரியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியோரின் ஒலிநாடாக்களை வெளியிடுவோம். அத்தோடு, செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? அதில் யார் கையெழுத்து இட்டிருக்கின்றார்கள்? என்பதையும் வெளியிடுவோம். எம்மிடம் வீடியோ…
-
- 0 replies
- 823 views
-
-
இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் தொப்பிகல பகுதியின் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் இராணுவ பேச்சாளர் தொப்பிகல பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக பொதுமக்கள் எவரும் வருகை தரவில்லை. எனினும் புலிகள் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் தொப்பிகல மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் எஸ்.ஏ.பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தொப்பிக…
-
- 3 replies
- 2.2k views
-
-
வீதி விபத்து ஏற்படுத்தும் சாரதிகளுக்கு இனி சிறை; 30 வருடங்களில் 40 ஆயிரம் பேர் பலி news வீதி விபத்துகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கக்கூடிய கடுமையான சட்டம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம நேற்றுக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: 1977 முதல் 2007 வரையான 30 வருட காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள் ளனர் என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது. இலங்கையில் ஒரு நாளைக்கு நிகழும் 150 வீதி விபத்துகளால் 5 முதல் 6 பேர் உயிரிழக்கின்றனர். இது சமூக, பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் கடுமை…
-
- 1 reply
- 680 views
-
-
14 நாடாளுமன்ற, 50 ற்கும் மேற்பட்ட மாகாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் சாய்ந்தனர்:- சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் நடைபெறவில்லை, பாராளுமன்றத்திலும், அலரிமாளிகைக்கு அருகாமையிலும் இடம்பெற்றன என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நாங்கள் சிங்கப்பூரிற்கு செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை, இரகசிய சந்திப்புகளிற்காக நாங்கள் இலங்கையைவிட்டு வெளியே செல்லவில்லை, அனேகமான பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றத்திலேயே இடம்பெற்றன, ஏனையவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்றன. என அவர் குறிப்…
-
- 0 replies
- 533 views
-
-
புலிகள் யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ளார்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல. யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ள புலிகள் முட்டாள் தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். மடக்களப்புக்கு இராஜதந்திரிகள் வருவது குறித்து தமக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லையென புலிகள் கூறுகின்றனர். இராஜதந்திரிகள் மட்டக்களப்பு செல்வது குறித்து புலிகளுக்கு தெரியாமல் இருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக இராஜதந்திரிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவந…
-
- 3 replies
- 1.5k views
-
-
சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர். திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்: 1. மின்வெட்டு தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான். கடந்த 3 ஆண்டுகளில் தமிழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கில் நான்கு இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு! – மட்டக்களப்பிலேயே மோசம். [Tuesday 2014-12-23 09:00] வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட்சத்து 4 ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 96 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 276 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் 88,925 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில…
-
- 0 replies
- 404 views
-
-
அமைதிக்கு உதவாத அவலம் விளைவிக்கும் போக்கு யாழ். குடாநாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் அரச படைகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். குடாநாட்டில் மனிதாபிமானமே இல்லாத ஈவிரக்கமற்ற கொடுமைகள் கட்டுமட்டில்லாமல் அரங்கேறிவருகின்றன. "புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றிகொள்ளுதல்' என்ற இராணுவப் போக்கிற்கு கொழும்பு அரசு காட்டிய "பச்சைக் கொடி" யின் விளைவுகளை யாழ். குடாநாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 739 views
-
-
வடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் வாழ்விடங்களை தீர்மானிக்கும் விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாது ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து பிரிந்தவர்ளை மீள இணைப்பதற்கான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அந்த இணைவு வெறுமனே பிரிந்தவர்களை ஒன்றிணைப்பதாக அல்லாமல் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், அர்த்தபூர்வமானதாய் அமைய வே…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவின் இறையான்மை உரிமையை எந்தக் காலத்திலும் மீறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை" என்று அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சக அதிகாரியான ஸ் ரீவன் மானை ஜே.வி.பி எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் படி காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சினால் ஸ் ரீவன் மான் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பதனைத் தொடர்ந்தே ஜே.வி.பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.3k views
-