ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இலங்கை குண்டுவெடிப்பு - அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள் - கள நிலவரம் எத்திராஜன் அன்பரசன் பிபிசி, காத்தான்குடி சஹ்ரான் காசிம் கடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் 350-க்கு மேலானோர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது. நடந்தவை பற்றி கோபமடைந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபரா…
-
- 4 replies
- 1.6k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு! இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 198 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சர்வதேச பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் n;தரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் n;தாடர்பில் உண்மையக் கண்டறியும் ஆணைக்குழு கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெருமளவான தமிழ் பொதுமக்கள் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டிய…
-
- 0 replies
- 496 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் …
-
- 4 replies
- 958 views
-
-
Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 06:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ பிள்ளைகளுக்கோ பயனற்றது. பொருத்தமற்ற கல்வி முறைமையினால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது : கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் பாதிக்க…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
கிளைமோர் தாக்குதலில் முக்கிய கருணா துணைப்படை உறுப்பினர் படுகாயம் ஞாயிறு மதியம் 2.30 மணியளவில் நாவலடி ஓட்டுமாவடி காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளை சிற்றூர்தி கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு சிக்கியுள்ளது. இதன்போது இவ் வெள்ளை சிற்றூர்தியில் சென்ற ஏழு கருணாகுழு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் கருணாகுழு முக்கிய உறுப்பினரான சின்னத்தம்பி என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வாழைச் சேனை காவல்துறையினரின் தகவலின்படி வாழைச்சேனை பகுதியில் இருந்து வெலிக்கந்த நோக்கி பயணித்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த அனைவரையும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும், தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும். http://www.eeladhesa...ndex.php?opti…
-
- 28 replies
- 2.5k views
-
-
கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் நேற்று கரவெட்டிப் பகுதியில் வைத்து பொதுமக்களால் அசௌகரியங்களிற்கு உள்ளாகியிருந்தார். கரவெட்டி கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளச் சென்ற போது அங்கு அதனை அறிந்து அங்கு திரண்ட மக்கள் இந்தப் பகுதிக்குள் எந்தக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் வரக் கூடாது எனத் தெரிவித்ததுடன் சித்தார்த்தன் சார்ந்த கட்சியால் நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். எதிர்பாராத மக்களது கேள்விகளால் சித்தார்த்தன் திண்டாடியே போயிருந்தார். மாமனிதர் சிவநேசனின் சொந்த ஊரான கரவெட்டி கிழக்கில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே எட்டிப்பார்ப்பதாக கூறப்படுகின்றது.http://…
-
- 2 replies
- 1.2k views
-
-
பயங்கரவாத சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே - அநுர (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே. இப்போது இது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இறுதியில் இந்த பூதம் முஸ்லிகளையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும் என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் நாற்காலியை தக்கவைக்கவும், அடுத்ததாக தான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வேண்டும் என்ற கவிழும் உள்ளதுடன், ஜனாதிபதி மீண்டும் தான் ஜனாதிபதி ஆசனக்தில் அமர வேண்டும் என்ற ஆசையிலும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது அரசியல் க…
-
- 0 replies
- 938 views
-
-
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் தரத்திற்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கு சுமார் 52,756 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. htt…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
வெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரிவு ஒன்று கைதுசெய்வது போன்றதான புகைப்படம் வெளியாகியுள்ளது. யார் கைதுசெய்யப்பட்டார், எப்பொழுது கைதுசெய்யப்பட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் வெளியான புகைப்படங்கள் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகின்றன. அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினர் சிறிலங்காவின் படைப்பிரிவினர் அணியும் சீருடைகளை அணியாமல், வித்தியாசமான சீருடைகளை அணிந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தோடு, வித்தியாசமான சீருடையுடன் முகத்தை மறைத்தபடி காணப்படும் இரண்டு படைவீரர்கள் மேற்கத்தேய தேக நிறத்தை உடையர்களாக காட்சி தருகின்றார்கள். இவர்கள் யார்? …
-
- 0 replies
- 636 views
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களின் மீள்திருத்தத்திற்கு ஏற்கெனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இம்மீள்திருத்த விண்ணப்பத்திற்கான கால எல்லை ஜனவரி 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து. கடந்த வருடம் இப் பரீட்சைக்குத் தோற்றிய 294,800 பேரில் 142,000 பேர் தற்போது 3 பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். இம்மீள்திருத்திற்கு டிசெம்பர் 29 முதல் ஜனவரி 9 ஆம் திகதிவரை விண்ணப்பிக்;கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்க வசதியாக ஜனவரி 17 ஆம் திகதிவரை இக்கால எல்லை நீடிக்கப்பட்டது. இம்மீள் திருத்தத்திற்கான கட்டணம் …
-
- 0 replies
- 803 views
-
-
புதிய அரசிலும் அமைச்சராகிறார் தொண்டமான்! [Thursday 2015-08-20 18:00] இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தேசிய அரசாங்கத்தில் இணைந்து தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்று, தொண்டமானுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை வென்றது. இரண்டு ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http:/…
-
- 1 reply
- 510 views
-
-
விடுதலைப்புலிகள் தவிர்ந்த அனைத்து ஆயுதக்குழுக்களும் பராமிலிட்டறி எனப்படும் ஒட்டுக் குழுக்களே - இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வாக்குமூலம். ஜ புதன்கிழமைஇ 14 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா முதல் தடவையாக இலங்கையில் விடுதலைப்புலிகளையும் மாற்று தமிழ் குழுக்களையும் வேறாக்கி கருத்து தெரிவித்தார். விடுதலைப் புலிகளை எல்.ரி.ரி.ஈ எனவும் ஏனய குழுக்களை பராமலிட்டறி குழுக்கள் எனவும் வேறாக்கி தெரிவித்தார். இதன்மூலம் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கள் பலத்த அச்சம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற ஒரு சக்தி இல்லாமல் போகுமானால் ஒட்டுக் குழுக்கள் உயிருடன் இருக்க முடியாது என்பதை சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித…
-
- 1 reply
- 1.6k views
-
-
"பாரம்பரிய மீன்பிடி உரிமை என்ற வாதத்தைக் கைவிட இந்தியா சம்மதம்" இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய ரீதியான உரிமை இருப்பதாக கூறிவந்த இந்திய தரப்பினர், தற்போது அந்தக் கோரிக்கயை விட்டுக்கொடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடித்தறை அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே மீன்பிடி தொடர்பில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்திய, இலங்கை தரப்புகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் சனிக்கிழமையன்று கொழும்பில் நடந்தது. இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கூட்டுச் செயலர்கள் உள்ளிட்ட தரப்பினர், தமிழ்நாடு ஆந்திர மாநிலங்களின் மீன்பிடித்துறை ஆணையர்கL, இந்திய கடற்படை மற்றும் கடல்எல்லைக் கா…
-
- 0 replies
- 561 views
-
-
சனி 01-12-2007 14:52 மணி தமிழீழம் [மயூரன்] போறூட் நிறுவனத்தின் வன்னியில் சேவைகளை இடைநிறுத்தம் நோர்வேயை சேர்ந்த மனிதநேய தொண்டு நிறுவனமான போறூட் தனது சேவைகளை வன்னிப்பிரதேசத்தில் இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களையடுத்தே இவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். போறூட் நிறுவனமானது சிறீலங்கா, இந்தியா, நேபாளம், சேயரலியோன் ஆகிய பகுதிகளில் தமது சேவைகளை செய்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பு கண்காட்சியில் பிரபாகரனின் கைரேகைப் பதிவு! [Thursday 2015-09-03 18:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கைவிரல் அடையாளம் கொழும்பில் நடக்கும் கண்காட்சியொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடைபெற்று வரும் பொலிஸ் புகைப்படக் கண்காட்சியில், பிரபாகரனின் கைவிரல் அடையாளம் கொண்ட புகைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1912ம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆறு லட்சம் நபர்களின் கைவிரல் அடையாளங்களை குற்ற விசாரணைப் பிரிவினர் திரட்டி தொகுத்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்படைய 60000 பேரின் புகைப்படங்களும் திரட்டப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், பிரபாகரனின் கைவிரல் அடையாளமு…
-
- 0 replies
- 691 views
-
-
வைத்தியர் சேகு ஷிஹாப்தீனுக்கு எதிராக 735 முறைப்பாடுகள்! கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி என்பருக்கு எதிராக இதுவரை 735 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் இன்று மட்டும் 70 முறைபாடுகள் பதிவாகியுள்ளது. மேலும் தம்புள்ளை வைத்தியசாலையில் இன்று 21 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் 40 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத …
-
- 0 replies
- 522 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி …
-
-
- 7 replies
- 632 views
- 1 follower
-
-
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையில் இதுவரை கொழும்புக்கு மட்டுமே விமான சேவை காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வருகை இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்ற நிலையில் இவ் ஆண்டு ஜூன் மாதம் …
-
-
- 5 replies
- 786 views
- 2 followers
-
-
அண்மையில் சிறிலங்காவிற்கான பிரித்தானித் தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
பூநகரியில் ஆள ஊடுருவும் சீனா - அதிர்ச்சியில் இந்தியா! போரின் பின்னரான இலங்கையில் இந்தியா மற்றும் சீனா போட்டி போட்டு கொண்டு இலங்கையின் வளங்களை தன்னப்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. அந்த வகையில் சீனாவின் உதவியுடன் வன்னி பூநகரிப்பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்க..., இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதல் கட்டமாக அப்பகுதியிலிருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கென பெருமளவு நிலப்பரப்பினை கையகப்படுத்தவுள்ளதுடன் அதற்கான அளவீட்டுபபணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே புலிகள் வசமிரு…
-
- 8 replies
- 3.2k views
-
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் முகமாக தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது நான்கு ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். இதன் போதே பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டத்திற்காக 5 பில்…
-
- 12 replies
- 1.6k views
-
-
அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரித்துள்ளார். அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை நீண்டகால பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன…
-
- 2 replies
- 1.1k views
-