ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப்பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் சித்தார்த்தன் தெரிவித்திருப்பதாவது: ‘தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கை …
-
- 10 replies
- 978 views
-
-
கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம் -சண்முகம் தவசீலன் “கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வெகு விரைவில், கேப்பாப்புலவுக் காணிகள் விடுவிக்கப்படும். ஆனால், அது எப்போது எனும் காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு மக்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் முன்பாக, தமது சொந்த நிலத்தைக் கோரி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம், நேற்று 117ஆவ…
-
- 0 replies
- 174 views
-
-
அமெரிக்காவின் இலங்கை போர் குறித்து வெளியான அறிக்கையானது இலங்கையில் போர்குற்றம் தொடர்பில் ஓர் சர்வதேச விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகள் தொடர்பில் தமது சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள தவறி உள்ளமையினை சுட்டி காட்டியுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரைட் அடம்ஸ். இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு சர்வதேச நாடுகள் அழைப்பு விடவேண்டும் என கோரியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 498 views
-
-
பௌத்த மதகுருவின் துஷ்பிரயோகம்: வவுனியா இல்லச் சிறுவர்களை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெறுப்பேற்பு! 16 அக்டோபர் 2013 வவுனியா அட்டமஸ்கடவில் பௌத்த மதகுருவால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்தில் கடந்த ஒன்பதாம் திகதி சிறுவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அவ்விலத்தின் சிறுவர்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை பெறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குறித்த இல்லத்திலிருந்து 10 வயது முதல் 18 வரையான வயதுகளை உடைய 22 சிறுவர்களை இன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெறுப்பேற்றுக் கொண்டது. இந்தச் சிறுவர்களும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய்வதற்கு பரந்த அளவிலான விசாரணைகள் முன்னெ…
-
- 0 replies
- 643 views
-
-
ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்: - மு. திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” "an idle mind is the devil's workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அத…
-
- 1 reply
- 598 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 03/11/2009, 15:09 2010 கால் ஆண்டுக்கான பாதீட்டுக்காக 362 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது! நாடாளுமன்றில் விவாதம் ஆரம்பம்! சிறீலங்காப் நாடாளுமன்றில் 2010 ஆம் ஆண்டுக்கான தற்காலிகமான பாதீட்டுக்கான விவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் 2010 ஆம் ஆண்டுகான பாதீட்டு விவாதத்தை சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க ஆரம்பித்து வைத்துள்ளார். இன்றிலிருந்து மூன்று நாட்கள் நடைபெறும் விவாதத்தைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை பாதீட்டுக்கான இறுதி முடிவு எட்டப்படவுள்ளது. இதேநேரம், எதிர்வரும் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் அமைய இருப்பதால் 2010ம் ஆண்டுககான பாதீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பல…
-
- 0 replies
- 327 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை (22) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக கைதடிப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அங்கிருந்து திருவுருவப் படங்கள் எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/86666-2013-10-22-05-06-39.html
-
- 1 reply
- 518 views
-
-
5 அமைச்சுக்களையும் விசாரிக்கக் கோரும் பிரேரணையில் திருத்தம் முதல்வரின் எதிர்ப்பை மீறி அடுத்த அமர்வில் விவாதம் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் தெரிவுக்குழு விசாரணை நடத்தக் கோரும் பிரேர ணையை எடுக்க வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும், இந்தப் பிரேரணை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் அறிவிப்பின்போது, மாகாணத் தெரிவுக்குழு அமைக்கக் கோரும் பிரேரணை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். வடக்கு மாகாண …
-
- 0 replies
- 156 views
-
-
வவுனியா வந்தார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விஷேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இன்று வவுனியாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இம்மாதம் 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதி அரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் ந…
-
- 0 replies
- 104 views
-
-
நாடாளுமன்றத்தில், கெட்ட வார்த்தையை... பயன்படுத்திய லொஹான் ரத்வத்த… சமாதானம் செய்த மஹிந்தானந்த ! எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை அமைதிப்படுத்தும் வகையில் செயற்ப்பட்டார். உர விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதன்போது அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் கோபத்தில் மீண்டும் மீண்டு…
-
- 0 replies
- 185 views
-
-
சந்நிதி திருவிழாவில் கலாசாரம் கட்டாயம் ஆலய நிர்வாகத்தினர் அறிவிப்பு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருப்பதால் ஆலய திருவிழாவுக்கு வருகை தரும் அடியார்கள் ஆசார சீலர்களாக எமது பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப ஆலயத்துக்கு வருகை தரவும் என ஆலய நிர்வாகத் தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிர்வாகத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: திருவிழாக் காலத்தில் ஆலய உள்வீதி, தேரோடும் வெளி வீதிகளில் வியாபார நடவடிக்கைகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. நடம…
-
- 0 replies
- 391 views
-
-
நடைமுறைக்கு வந்த இரு சட்டமூலங்கள் : November 18, 2021 தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லை மற்றும் தொழிலாளர்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தியுள்ளாா். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. தனியார் துறை தொழிலாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும். இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழிய…
-
- 1 reply
- 180 views
-
-
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் அந்நாட்டுடனான உறவு பாதிக்காது: சல்மான் குர்ஷித் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் அந்நாட்டுடனான உறவு பாதிக்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் இலங்கையுடனான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது. இதற்கு முன்பும் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் பிரதமர் பங்கேற்கவில்லை. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. தற்போது கொழும்பு மாநாட்டின்போது அங்குள்ள தமிழர்கள் விவகாரம், வீடுகளை இழந்தவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த…
-
- 2 replies
- 572 views
-
-
இலங்கையில்... 100 கோடி ரூபாய் பெறுமதியான, அரிய வகை இரத்தினக்கல் கண்டுபிடிப்பு இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று (Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1252273
-
- 0 replies
- 223 views
-
-
வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாட கடந்த முதலாம் திகதி முதல் வழக்கப்பட்;ட அனுமதியானது 10 நாட்களுக்கு வரையாறுக்கப்பட்டது என அனர்த்த நிவாரண சேவை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்களுக்கு இரண்டு வகையில் இந்த தற்காலிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முகாமுக்கு மீளத் திரும்பக் கூடிய அனுமதிப் பத்திரம், மற்றும் முகாம் வாசிகளின் கோரிக்கைகளின் படி 10 நாட்களுக்கு உட்பட்ட வகையில் அவர்கள் மீள முகாமுக்கு திரும்பும் வகையிலான அனுமதிகள் வழங்கப்படுவதுடன் வடபகுதியில் மாத்திரம் பயணிக்கக் கூடிய வகையில் அந்த அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வரையறையான சுதந்திரத்துடன் முகாம் வாசிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அவ…
-
- 0 replies
- 647 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு சற்றுமுன்னர் சென்று இருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காரை புறக்கணித்து தனது சொந்த வாகனத்திலேயே தாமரை தடாகத்திற்கு அவர் சென்று இறங்கியமை இலங்கையை சற்று அசௌகரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99026/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 584 views
-
-
தாக்குதல் இலக்கு தானே என நீதிபதி இளஞ்செழியன் திடம் பொலிஸார் திசை திருப்புவது ஏன் எனவும் கேள்வி நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் இலக்குத் தான் தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கிறார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். நீதிபதி தாக்குதல் இலக்கு அல்ல, அது ஒரு தற்செயலான சம்பவம் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில் நீதிபதி நேற்று மீண்டும் தாக்குதலின் இலக்குத் தானே என்பதை உறுதிப்படுத்தினார். சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகளில் நீதிபதி நேற்றுக் கலந்துகொண்டார். அப்போது ச…
-
- 0 replies
- 288 views
-
-
நல்ல தெரிவு இன்றி அல்லாடும் மக்கள் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கொழும்பு அரசு கையெழுத்திட்டதைத் தொடர்ந்தும், அண்மையில் பெற்றோலியத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்ததும் படையினரைக் களமிறக்கி நிலமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்ததை அடுத்தும் அரசு மீதான எதிர்ப்பலை எகிறியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் அரச எதிர்ப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலமையே இருக்கிறது. ஊடகங்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கனவே குற்றஞ் சாட்டியிருக்…
-
- 0 replies
- 278 views
-
-
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமல்லாது அவரது மகன் நௌசர் பௌசி ஆகியோர் இரட்டை விளையாட்டுக் காரர்கள் எனவும் தேர்தலின் பின்னர் இவர்கள் இருவர் குறித்தும் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி அமைச்சர் பௌசியை இவ்வாறு விமர்சித்துள்ளார். கொழும்பு மாநகரசபையில் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது குலதிஸ்ஸ கீ என்ற தோல்வியடைந்த வேட்பாளர், அமைச்சர் பௌசியினால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விபரித்த போது கோபமடைந்த ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் அமைச்சர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
’’திருடர்கள் நீக்கப்படுவார்கள்’’ (எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஷ்) ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம். இன்று அமை…
-
- 2 replies
- 531 views
-
-
யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது – 15க்கும் மேற்பட்ட சிலைகளை கடத்தி விற்றுள்ளார்களாம் December 25, 2021 யாழில் காணாமல் ஆக்கப்படும் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் , கோவில் நிர்வாகத்தினரால் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் தெல்லிப்பளை , பலாலி உள்ளிட்ட வலி வடக்கில் உள்ள நான்கு ஆலயங்களில் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சிலைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கு முறைப்பாட…
-
- 1 reply
- 236 views
-
-
ஊர்காவல் படை நிதியத்திலிருந்து நிதிமோசடி-மங்கள குற்றச்சாட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த பணம் நிதியத்திலிருந்து செலவு செய்யப்பட்டமை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமது பதவியை இராஜிநாமா செய்யவும் தயார் என அவர் அறிவித்துள்ளார். அந்த நிதியத்திலிருந்து அதிபர் தேர்தல் செலவுகளுக்காக 150 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – மீனகம் ச…
-
- 0 replies
- 556 views
-
-
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராம பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளதாக முசலி பிரதேச சபை உறுப்பினர் மார்க்கஸ் நீக்கிலாஸ் பெனான்டோ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராமத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடமும்,அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். யார் இந்த யானைகளை கொண்டு வந்தது என்ற விடையம் தெரியவில்லை.தற்போத…
-
- 1 reply
- 287 views
-
-
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஏ-9 வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பத்தின் போது மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் என்பன சேதமாக…
-
- 0 replies
- 398 views
-
-
இன அழிப்பை மறைக்க அரசு நன்கு திட்டமிட்டு சதி; அதற்காகவே இந்தப் போரழிவுக் கணக்கெடுப்பு அமெ.குழுவுக்கு யாழ்ப்பாணத்தில் எடுத்துரைப்பு இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இங்கு இன அழிப்பே நடைபெறவில்லை என்பதைக் காண்பிப்பதற்கே தற்போது அரசு கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்புக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபைக்குக் கணக்குக் காட்டுவதற்கே தவிர இதனால் பயனேதும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட சதி. இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரும் எடுத்துரைத்தனர். யாழ்.மாவட்டத்துக்கு நேற்று மதியம் வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்க ளத்தின் வெளிவிவகார குழுவின் செனட…
-
- 0 replies
- 593 views
-