ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு! காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் நேற்றுமுன் தினம் இரவு உயிரிழந்தார்.பிறையாளன் என்று அழைக்கப்படும் மாமடு, சேவைப்பிலவு, நெடுங்கேணியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் ஆனந்தராசா (வயது-–42) என்பவரே உயிரிழந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் பொறுப்பாளர் பதவியில் இருந்தவர். போரின் பின்னர் மறுவாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். …
-
- 1 reply
- 386 views
-
-
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்டாபய பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் - வாசு உறுதி | Virakesari.lk
-
- 2 replies
- 316 views
-
-
புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி `அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்; வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென…
-
- 16 replies
- 3.2k views
-
-
மீண்டும் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளையும் யானைச் சின்னத்தில் போட்டியிட வைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தேர்தல் முறைமை மாற்றங்களை கருத்திற் கொண்டு எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றியீட்டும்…
-
- 0 replies
- 482 views
-
-
சுவிட்சர்லாந்திலிருந்து அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்ட இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுவிட்சர்லாந்தின் குடியகல்வு அலுவலகம் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இருவரும் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையிலேயே குடியகல்வு அலுவலகம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை சுவிடசர்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், 2011 இல் எடுக்கப்பட்ட இந்த 'தவறான தீர்மானம்' தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இருவரதும் அரசியல் தஞ்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள…
-
- 0 replies
- 473 views
-
-
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் சுமார் 25 கரையோரப் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடற்படை முகாம்கள் ஒரே வலையமைப்பின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. வடக்கு, கிழக்கின் சகல கேந்திர நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கடற்படை முகாம்கள் நிறுவப்பட உள்ளன.http://www.tharavu.com/2010/09/blog-post_55.html
-
- 1 reply
- 2k views
-
-
பி.பி.சி சேவையில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.உறவுகள
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடா இளையோர்களால் நடாத்தப்படும் நிகழ்வு பிரசல்ஸ் நகரில் இலண்டனில் ஜேர்மனியில் for further information http://www.eelanatham.info/?cat=43
-
- 0 replies
- 340 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்மொழிந்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக செயற்படும் அல் ஹூசைன் (50), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/113350-2014-06-07-07-55-47.html இலங்கை விசாரணைகளுக்கான இணைப்பாளராக சன்டரா பெய்டாஸ் தெரிவு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்த…
-
- 0 replies
- 574 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) நாடளாவிய ரீதியில், இன்று (28) நிறைவடைந்த 36 மணி நேரத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவங்களில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரத்மலானை, கம்பஹா, அம்பலாங்கொடை பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்பலாங்கொடையில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் இன்று மாலை வரை இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. இரத்மலானை : நேற்று (27) இரவு இரத்மலானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த மு…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரில் 32 பேர் நேற்றுமுன்தினம் இராமேஸ்வரம் திரும்பியபோது வேதனைகளையும் சோகக்கதைகளையும் தாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். மண்டபம் பிரதேசத்துக்கு அவர்கள் வந்தபோது தாம் இலங்கை கடற்படையினரிடம் வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். இலங்கை கடற்படையினர் தமது படகுகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் அவற்றை மூழ்கடித்ததாகவும் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை தாம் கைதுசெய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் தம்மை சித்திரவதை செய்ததாகவும் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தினர். இந்த மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டிணத்தை சேர்ந்தவர்களாவர். …
-
- 1 reply
- 937 views
-
-
http://www.yarl.com/files/101005_abdul_jabar.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 680 views
-
-
மக்களை மிரட்டி பொலிஸார் பொய் வழக்கு பதிவு செய்வதாக வட மாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 'வன்னி பிரதேச மக்கள் பல கஷ்;டங்களுக்கு மத்தியில் தாங்கள் பெற்றுக்கொண்ட வீடமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாள் அலைச்சலுக்கு பின் கிடைக்கும் பிரதேச செயலக மணல் அனுமதி பத்திரங்களுடன் மணல் எடுக்க செல்லும் போது வன்னி பிரதேசத்தில் கடமையில் உள்ள பொலிஸார் நயவஞ்சகதனமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதிபத்திரம் இருந்தும் பொய்வழக்குப் பதிவிற்கு உட்படும் எமது மக்கள் மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். சட்டம் என்ற வலைக்குள் எமது வன்னி பிரதேச மக்களின் இயலாமையை சிக்க வைத்து பொலிஸார் நீதி, நியாய…
-
- 0 replies
- 420 views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் காலமானார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் டறொன்ட் புறூவ் ஹொவ்டே (வயது 67) நோர்வேயில் நேற்று புதன்கிழமை காலமானார். இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து மார்ச் 2002 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 2003 ஆம் ஆண்டு வரை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். அதன் பின்னர் பெப்ரவரி 2004 ஆம் ஆண்டு மீண்டும் அவர் இலங்கை திரும்பினார். சர்வதேச அளவிலான கண்காணிப்புக் குழுக்களில் டறொன்ட் புறூவ் ஹொவ்டே பணியாற்றியுள்ளார். லெபனானில் 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். புதினம்
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்முறைகளின் பின்னணியில் கோத்தா – பட்டியலிடுகிறார் மங்கள! நான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளேன். என்னை கைது செய்தாலும் அரசாங்கத்தின் மோசடி-கள் தொடர்பில் இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்துவேன் என தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி. அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்பு செயலாளரே உள்ளார் எனவும் குறிப்பிட்டார். மங்கள எம்.பி. வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்; நாட்டின் குழப்பகரமான சூழலுக்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்…
-
- 0 replies
- 547 views
-
-
உலகத் தமிழ் உறவுகளுக்கு தாய்லாந்திலிருந்து தமிழீழ ஏதிலிகளின் வேண்டுகோள் தாய்லாந்தில் அகதியாக வாழும் உதயனாகிய நான் மீனகம் இணையம் ஏற்படுத்தித் தந்ததன் பேரில் கனேடியத்தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய செய்திகளை நேர்காணலிற் கூறியபோது நான் பகிர்ந்து கொண்ட விடயங்களையும் அதற்குக் கனேடியத்தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை முன் வைத்த ஆலோசனைகளையும், இது தொடர்பான தமது செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டவற்றைச் செய்தியாகத் தொகுத்துள்ளேன். மேலும் இச்செவ்வியானது கனேடிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு வழங்கப்பட்டது. கேள்வி- தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளின் நிலை பற்றி? பதில்- இங்குள்ள நிலைமை தொடர்ந்து …
-
- 0 replies
- 725 views
-
-
உள்நாட்டின் தேவைக்காக உள்ளூர் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு வரும் நனோ என்று அழைக்கப்படும் சிறிய செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் அமைந்துள்ள ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தின் மூலம் உள்ளூர் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படும் நனோ செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இச்சிறிய செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி அதன்மூலம் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இச்செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப தேவையான ரொக்கெட்டிற்காக இந்தியா அல்லது ச…
-
- 0 replies
- 556 views
-
-
அமெரிக்காவின் கலியோன் குறூப் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜரட்ணத்தின் இளைய சகோதரர் ரங்கன் ராஜரட்ணம் (வயது-43) மீது சுமத்தப்பட்ட சதி மற்றும் பத்திர மோசடி வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தெரிவித்து நியூயோர்க் சமஷ்டி நீதிமன்றம் ஒன்றின் பெரும் ஜுரிமார்சபை அவரை விடுதலை செய்திருக்கின்றது. இவரது மூத்த சகோதரரான ராஜ் ராஜரட்ணம் உள்வர்த்தகக் குற்றச்சாட்டின் பேரில் 2011 இல் குற்றவாளியாகக் காணப்பட்டு நியூயோர்க் சமஷ்டி நீதிமன்றத்தினால் 11 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றமை தெரிந்ததே. இவர்களது தந்தையாரான ராஜரட்ணம் இலங்கையில் சிங்கர் நிறுவனத்தில் பணியாற்றிப் பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக விளங்கி…
-
- 0 replies
- 403 views
-
-
தேர்தல் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவையால் அகற்றப்படுகிறது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவை ஆதரவு இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவை வெற்றியீட்டி நகரசபையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 2 replies
- 545 views
-
-
109 பேர் விடுதலை நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 136 பேரில் 109 பேரை அரசு விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் ஓரிரு நாட்களில் தமது நாடு போய்ச் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீனவர்கள் கடந்த மாத மத்தியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபின் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரது மகன் நோய் காரணமாக மரணித்ததையடுத்து, நல்லெண்ண அடிப்படையில் அவரும் அவருடன் மேலும் மூன்று மீனவர்களும் கடந்த 9ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர். மேற்படி 109 மீனவர்களில் 30…
-
- 0 replies
- 193 views
-
-
ஜனாதிபதியின்... வெளிநாட்டு பயணங்களின் பின்னர், புதிய அமைச்சரவை நியமனங்கள். ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தில் 38 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள…
-
- 6 replies
- 627 views
-
-
வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ஐ.நா விசாரணைக்குழு தீவிர கவனம்! - கெலும் மெக்ரேயும் சாட்சியம். [Tuesday 2014-07-29 09:00] இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே, ஐ.நா. விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார். இலங்கை மீதான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்குழு தற்போது ஜெனீவாவில் சாட்சியங்களைத் திரட்டி வருகின்றது. இதன்போதே மெக்ரே சாட்சியமளிக்கவுள்ளார். இதற்காக லண்டனிலிருந்து அவர் ஜெனீவா செல்லவுள்ளார் எனவும் தெரியவருகின்ற…
-
- 0 replies
- 326 views
-
-
தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கையை வெளிப்படுத்தவும் ; அநுரகுமார (எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி) தேசிய அரசாங்கம் தொடரவேண்டும் என்றால் மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியினை பெறவேண்டும். வாய் வார்த்தைகளின் மூலம் தேசிய அரசாங்கத்தை நீடிக்காது உடன்படிக்கை என்னவென்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய அரசாங்க கால எல்லை மீறியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் தொடர்ந்தும் நீட்டித்துக் கொண்டுசெல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவிக்கும் போதே இதன…
-
- 0 replies
- 222 views
-
-
மதம், கலாச்சாரம் எனக் கூறிக்கொண்டிருக்காது கஞ்சா செய்கை சட்டபூர்வமாக்க வேண்டும் : டயானா கமகே By T. SARANYA 21 SEP, 2022 | 04:42 PM (இராஜதுரை ஹஷான்இஎம்.ஆர்.எம்.வசீம்) கலாசாரம், மதம் என்ற வரைபுக்குள் இருந்துக் கொண்டு செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கஞ்சா செய்கையை நிச்சயம் சட்டபூர்வமாக்க வேண்டும். சட்டபூர்வமற்ற வகையில் முன்னெடுக்கப்படும் கஞ்சா செய்கையை ஏன் சட்டபூர்வமானதாக்கக் கூடாது? காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபானசாலைகள் திறக்கப்பட வேண்டும். என்மீதான சேறுபூசல்களுக்கு ஒருபோதும் அஞ்சபோவதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்ற…
-
- 3 replies
- 282 views
- 1 follower
-
-
கோத்தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு.! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மார்ச் 23 திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோத்தபயாவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று 6வது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/31064
-
- 0 replies
- 334 views
-