ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
“சில இடங்களில் இடம்பெறும் வாள்வெட்டுக்காக வடமாகாணம் முழுவதும் வன்முறையென கூறமுடியாது” வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக கூற முடியாது என வடக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கணேசநாதன் தெரிவித்தார். குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்விபயிலும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 30 மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசத்தில் தான் வாள்வெட…
-
- 0 replies
- 514 views
-
-
“சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ? Thursday 12th Oct 2017 16:59 PM விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:- சம்பந்தர் மற்றும் “சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ஏற்பட்டது என விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:- “நான் ( கொழும்பில் இருந்து )அரசியலுக்குள் நுழைந்த போது நான் கூறியகருத்துகள் , சமபந்த்ருடன் மற்றும் தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடன் ஒத்துப்போயிருந்தன. ஆனால் எப்போது யாழ்ப்பாணத்தில் மக்களுடன் வாழத்தலைப்பட்டேனோ அப்போது சம்பந்தரினதும் சில தமிழ் அரசியல்வாதிகளினதும் கருத்துகள் தவறானவை என புரிந்துகொண்டேன். அது ,கொழும்பில் இருந்துகொண்டு அங்கிருக்கும் சுற்றுச்சூழலிற்கு…
-
- 0 replies
- 281 views
-
-
கம்பஹா மாவட்டத்தில் “சிவாவின் நடனம்” என்ற பெயரில் சைவ சமயத்தின் தலைமைக்கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் பெயரையும், உருவப்படத்தையும் பயன்படுத்தி களியாட்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதை உடன் தடுத்து நிறுத்தும்படி மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இருந்தும், தேசிய தமிழ் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கைகள் எனக்கு விடுக்கப்பட்டுள்ளன. இந்த பெயரையும், உருவப்படத்தையும் தவிர்த்துக்கொண்டு இத்த…
-
- 0 replies
- 282 views
-
-
"சீனா-பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் திட்டத்தில் இலங்கை பயனடையும்" பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ~ஹித் அஹ்மத் ஹமத் “சீனா பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் பிராந்திய மற்றும் உலகளாவிய இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய பார்வை” என்ற தலைப்பின் கீழ் விரிவுரையொன்றினை நிகழ்த்தினார். இவ்விரிவுரையானது இலங்கை ஓய்வு பெற்ற படைஅதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின்பேரில் இலங்கை கடற்படை தலைமையத்திலே இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றிலே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன். ஜெனரல். என்.யு.எம்.எம். சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஸ்ரீமேவன் ரணசிங்க, கொதலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
யுத்த காலத்தில் “சுடப்பட்டது’ என்ற வார்த்தையையும் “கொல்’ என்ற சொல்லையும் ஒரே விதமான கருத்துப்படவே ஊடகங்கள் பயன்படுத்தியதாக வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின் போது முதலாவது சாட்சியான சன்டே லீடர் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் நேற்று மேல்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிரதிவாதியின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரட்ரிகா ஜான்ஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை 11 ஆவது நாளாக மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பீ. வராவௌ, சுர்பிக் ரஸீன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை நடைபெற்றது. நேற்றைய தினமும் பிரதிவ…
-
- 1 reply
- 973 views
-
-
“சுதந்திரத்திற்குப் பின் நம்மிடம் இருப்பது தாய்மார்களின் கண்ணீர் கடல் மட்டுமே.” December 6, 2020 ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற வாசகம் அப்படியே சொற்களோடு மட்டும் நின்றுவிடாது, நாட்டை நேசிக்கும் உண்மையான ஒரு தேசபக்தன் அதை எவ்வாறு யதார்த்தமாக்குவது என்று உடனடியாக சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பதினொரு கைதிகள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்த மகர சிறைச்சாலையில் நடந்த சோகம் குறித்து இன்று (டிசம்பர் 06) சமூக வலைத்தளமான trupatriotlk இல் ‘உண்மையான தேசபக்தன்’ என்ற பெயரில் கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டபோது இவ்வாறு கூறியுள்ளார். “பிக்பொக்கட் காரர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவ…
-
- 0 replies
- 414 views
-
-
“சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” விழுதுகள் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்: ஒலி - ஒளி வடிவில் செவ்வி இணைப்பு- “சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” என www.gtbc.fmல் "விழுதுகள்" நிகழ்வில் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132662/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 316 views
-
-
“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அர…
-
- 4 replies
- 388 views
-
-
“சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்” - பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் செவ்வி இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களில் தற்போது வரை 61,671 வரையிலானவர்கள் 107 முகாம்களில் தங்கியுள்ளார்கள். இவர்களில் கட்டம் கட்டமாக தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்புகின்றார்களே என தென் இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார். வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இ…
-
- 0 replies
- 164 views
-
-
“சுயாட்சி அதிகாரங்களை கொண்ட இடைக்கால அரசு தேவை” Wednesday, Apr 10, 2013 10:58 am . இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்புக்கு கூறப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், மன்னார் ஆயர், சிவில் சமூகப் பிரதிநிகள் உட்பட்டோர் பலர் சந்தித்து உ…
-
- 0 replies
- 442 views
-
-
“செப்டெம்பரில் ஆட்சி மற்றம்… சகல ஏற்பாடுகளும் பூர்த்தி” நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு நேரெதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்கப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர…
-
- 0 replies
- 384 views
-
-
எஸ்.ஆர்.லெம்பேட் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக கடந்த 16 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம்.தமது உறவுகளுக்காக போராடிய எத்தனையோ தாய்மார்கள் மரணித்து விட்டனர்.எனினும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மட்டுமே எங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த 'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' எனும் கருப்பொருளில் 'காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க்கதை' ஆவணப்படம் திரையிடலும்,கருத்துப் பகிர்வும் வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத…
-
- 0 replies
- 182 views
-
-
நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது. அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம். முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
“சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! adminDecember 22, 2025 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர் மற்றும் ஆராதிநகர் கிராம மக்கள், தமது கிராம சேவையாளரின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 21) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மக்கள் முன்வைக்கும் அதிரடிப் புகார்கள்: தனது அவல நிலையைத் தொலைபேசியில் விவரித்த பெண்ணொருவரிடம், “சோத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு சாமான் கொடுக்க முடியாது” என கிராம சேவையாளர் மிகக் கேவலமாகப் பேசியதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெள்ள நீரை வெளியேற்ற குளத்தைப் புனரமைக்க ஏனைய அரசுத் தரப்புகள் அனுமதி அளித்தும், கிராம சேவையாளர் அதற்குத் மு…
-
- 0 replies
- 154 views
-
-
“ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டாமென இரண்டரை மணிநேரம் மஹிந்தவுக்கு விளக்கினேன்” ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் தோல்வியடைவோம் என மஹிந்த ராஜபக் ஷ வுக்கு இரண்டு மணிநேரம் விளக்கிக்கூறினேன். பின்னர் தனது தவறை என்னி டம் ஒப்புக்கொண்டார் என இலங்கை கம்யூனி ஸ்ட் கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியு குணசேகர தெரிவித்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பம் முதல் போராடியது இலங்கை கம் யூனிஸ்ட் கட்சியாகும் என்றும் தெரிவித் தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது தேசிய சம்மேளனம் நேற்று நாரஹேன்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதான உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரி…
-
- 1 reply
- 452 views
-
-
“ஜனாதிபதி பதவி விலகி.. ராஜபக்ஷ குடும்பமும், ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” ஜனாதிபதி பதவி விலகி ராஜபக்ஷ குடும்பமு ம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கேட்டுக்கொண்டார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், “இந்த நாடு நன்றாகவே இருந்தது. மக்கள் கடந்த காலங்களில் வரிசையில் இருக்கவில்லை. இந்நிலையில் மக்களின் பேச்சை அரசாங்கம் செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த விளைவு ஏற்பட்டது. உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை என்பவற்றில் மக்களின் குரலை அரசாங்கம் கேட்கவில்லை. தற்போது மக்கள், ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார்கள். இதனையேனும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அரசாங்கம் அவ்…
-
- 1 reply
- 124 views
-
-
“ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை உறுதி” பிரதமரை பதவியில் இருந்து அகற்ற முயற்சித்தால், பாராளுமன்றில் ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். மேலும், அப்படியொரு பிரேரணை கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், கூட்டு எதிரணியினரின் ஆதரவைப் பெறவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின் பிரதமர் மாற்றப்படுவார் என்றும் புதிய அரசு தோற்றுவிக்கப்படும் என்றும் கிளம்பியுள்ள வதந்திகள் குறித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலின் பின் புதியதொரு அரசியல் ப…
-
- 0 replies
- 217 views
-
-
“ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது அவசியம்” : மைத்திரி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இவ் வருடம் நிறைவு செய்யமுடியாது. அடுத்த வருடமே அது நடைபெறும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். நான் ஒருதடவையே ஜனாதிபதியாக இருப்பேன் கூறியதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். http://www.virakesari.lk/article/13219
-
- 1 reply
- 440 views
-
-
09/06/2009, 16:09 ] “ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – சிவசங்கர் மேனன் “விடுதலைப் புலிகளுக்கெதிரான இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்” என சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸ கூறியது ஒரு வழியில் சரியான கூற்றே என்று இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர், சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். pathivu
-
- 3 replies
- 1.4k views
-
-
“ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகலாம்” நாட்டில் நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்குள்ள பல கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தேர்தல் களத்தை சூடேற்றியுள்ளது. பலர் ஜனாதிபதி வேட்பாளராக வரும் போது ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது குறித்து பலருக்கும் சட்ட விளக்கம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு டெய்லி சிலோன் வாசகர்களுக்காக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் அவர்களுடன் நடாத்திய விசேட நேர்காணலை இங்கே தருகின்றோம். கேள்வி : நாட்டில் காணப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டங்கள் பற்றி ? பதில் : இலங்கையில் இரண்டு…
-
- 2 replies
- 656 views
- 1 follower
-
-
பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே நோக்கம்: கோட்டா பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான தனது தூரநோக்கு சிந்தனை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர் மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தவகையில் யுத்தத்தின் முடிவின் பின்னர் மஹிந்த அரசாங்கம் இந்த இலக்கை அடைவதற்கான பணியை ஆரம்பித்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும்பா…
-
- 6 replies
- 709 views
-
-
“ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கும்போதே பிள்ளையான் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வை…
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்வதால் எதனைச் சாதிக்க முடியும்? என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானத்தினை முறியடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஜெனீவாவில் தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்காக தாயகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை திரட்டி அனுப்பும் முயற்சியில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சிலர் ஈடுபட்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புக…
-
- 1 reply
- 862 views
-
-
“ஜெனீவாத் தீர்மானம் செயலிழந்து போவதை சீனா உறுதிப்படுத்தும்’ “பாதுகாப்பு சபையை சென்றடையப் போவதில்லை’ இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் இந்தியா பக்கம் சார்ந்து வாக்களித்ததால் சீனாவின் பக்கம் கொழும்பு நெருங்கிச் செல்லக்கூடுமென இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் த வீக் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. குழம்பிய குட்டை என்ற தலைப்பில் த வீக் சஞ்சிகையில் கல்லோல் பட்டாச்சேர்ஜி கடந்த சனிக்கிழமை இது தொடர்பாக எழுதியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த இரு வாரங்களாக பிரதமர் மன்மோகன் சிங்கினதும்இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் அலுவலகங்கள் ஒன்றுடன் ஒன்று அதிகளவு தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தன. புதுடில்லிக்கு தனது நெருங்கிய உதவியாள…
-
- 1 reply
- 799 views
-
-
“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப…
-
- 0 replies
- 89 views
-