ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுக்கு அரசின் ஒத்துழைப்பும் காரணம் -விஜித்த ஹேரத் குற்றச்சாட்டு எமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் காரணமாகும். இதனை மறுப்பதற்கில்லை. விமல் வீரவன்ச எம்.பி. யுடன் இணைந்துள்ள பலர் எம்முடன் மீண்டும் இணைவது குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் வீரவன்ச எம்.பி. தனிமைப்படுத்தப்படுவது உறுதி என்று ஜே.வி.பி. யின் முக்கியஸ்தரும் எம்.பி. யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து வீரவன்ச எம்.பி. அமைச்சுப் பதவியினை பெறப் போகின்றாரா? இல்லையா? என்பதை தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் காலம் கடந்த பின்னர் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் கூறினார். ஜே.வி.பி. க்குள் தோன்றியுள்ள முரண்பாடு குறித்து ""…
-
- 0 replies
- 505 views
-
-
சத்தமின்றி இலங்கை வந்த தேமுதிக உறுப்பினர்! அதிர்ச்சியில் உளவுத்துறை! தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்ற…
-
- 0 replies
- 988 views
-
-
புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல [ Tuesday,5 January 2016, 17:14:38 ] தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பொதுமக்களும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தலைமை பொறுப்பை பொறுத்தவரை தனக்கு யாரும் போட்டியில்லை எனவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், ஆதரவாளர்களும் விரும்பும் பட்சத்தில் தலைமைப் பதவிலிருந்து விலகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தான் ஒருபோதும் புலிகள் அமைப்பின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கவ…
-
- 42 replies
- 1.9k views
-
-
Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 11:35 AM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபகஷ சட்டப் பரீட்சையை முடித்ததில் கிடைக்கப்பபெற்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206651
-
- 1 reply
- 378 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ‘நான் ஏற்றமாட்டேன்’ என கூறி மறுத்துள்ளார். அத்துடன் “ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையோருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது, தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தேசிய கொடி ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கோர…
-
- 4 replies
- 1.5k views
-
-
அர்ச்சுனா எம்.பி. விவகாரம்; சபாநாயகரின் அறிவிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றில் அறிவித்தார். குழுக்களின் பிரதித் தவிசாளரான கௌரவ (திருமதி) ஹேமாலி வீரசேகர தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயர் அறிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப…
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கையே பிராந்தியத்தின் இறுதி நோயாளி என்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் "த கார்டியன்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் களிமண் ஏற்றச்சென்ற போது பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக…
-
- 0 replies
- 693 views
-
-
மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கிழக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 590 views
-
-
படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படாது! - பாதுகாப்புச் செயலாளர் உறுதி [Monday 2016-01-25 07:00] தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்…
-
- 0 replies
- 263 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை! இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் அவதானம் செலுத்தப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/399225/இலங்கை-தமிழரசு-கட்சியின்-மத்திய-க…
-
-
- 5 replies
- 313 views
-
-
மன்னார் கூராயில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 802 views
-
-
[size=4]சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல், நிலஅபகரிப்பு, தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயருக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி ஜேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.[/size] [size=4]நேற்று Bonn நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சமூகமும், மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகளும் கலந்துகொண்டன.[/size] [size=4]இந்நிகழ்வில் ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக மத்திய மாநில பேச்சாளர் செல்வன் கோகுலனும் கலந்துகொண்டார். நடைபெற்ற நிகழ்வை Bonn நகர மேயர் Angelica Maria Kappel …
-
- 0 replies
- 530 views
-
-
கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன…
-
- 23 replies
- 2.4k views
-
-
போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி Monday, 19 May 2008 கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.3k views
-
-
[size=4]வவுனியா சிறைச்சாலையில் இருந்து அரசியல் கைகதிகள் 30 பேரில் 27 பேர் நேற்று நள்ளிரவைத் தாண்டி இன்று அதிகாலை மணியளவில் மகர சிறைச்சாலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக மகர சிறைச்சாலையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இந்த 27 பேரும் கை, கால்கள் உடைந்த நிலையிலும், உடைகள் மாற்றப்படாமலும், ரத்தம் தோய்ந்த உடைகளுடனும், காயங்களுடனும், உணவு கூட வழங்கப்படாத நிலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 30 பேரில் மிகுதி 3 பேரின் நிலை மிகவும் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராகம அல்லது கம்பகா பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.[/size] [size=4]http://www.seithy.co...&am…
-
- 0 replies
- 563 views
-
-
வவுனியாவில் கறுப்புக் கொடி போராட்டம் -நவரத்தினம் கபில்நாத் வவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/165343/%E0%AE%B5%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%AA-%E…
-
- 1 reply
- 502 views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினர் மக்களை திசை திருப்பும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றனர். எனவே இவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாமென எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிந்தித்து செயற்படுங்கள் யாழ்ப்பாண களியாட்டம் யாருக்கு? என்ற தலைப்பில் எல்லாளன் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படைகளால் திறந்த வெளிச் சிறைச்சாலை யாக்கப்பட்டிருக்கும் குடாநாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் மக்கள் மீதான படுகொலைகளையும் மூடி மறைக்கும் நோக்கோடும் குடாநாட்டில் மக்கள் எதுவித பிரச்சினைகளுமின்றி இருப்பதாகக் காட்டும் ந…
-
- 1 reply
- 1k views
-
-
காணி அபகரிப்பில் அரசு அசமந்தம்; ஐ.நாவின் பதில் நம்பிக்கையளிக்கும்! வடக்கில் நடைபெற்று வரும் இராணுவத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் மத்திய அரசிற்கு நாம் பல தடவைகள் கூறிவருகின்ற போதிலும் அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனமாகவே இருந்து வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரிடம் எடுத்து கூறியுள்ளோம். அவர் நல்ல பதிலை தருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 45ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத் தில் பேரவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிகரனால், முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் உள்ள மக்களின் காண…
-
- 0 replies
- 269 views
-
-
வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் 1043 பேர் கடந்த மூன்று வருடங்களில் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் 29 நாடுகளுக்கு சென்றிருந்தார்கள். அவர்களுள் இந்த 1043 பேரும் உள்ளடங்குவதாக அந்த பணியகத்தின் பிரதி முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார். வேலைவாய்ப்புக்களுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்கு சென்று கொடுமைக்குள்ளாகும் இலங்கையர்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார். தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர் விபத்துக்கள் , தற்கொலைசெய்து கொள்ளல் ,இயற்கை மரணம் , அந்த நாடுகளின் சட்டத்தை மீறி செயற்பட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
(இராஜதுரை ஹஷான்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இ…
-
- 0 replies
- 115 views
-
-
இலங்கையில் இடம்பெறும் யுத்த முன்னெடுப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் இராஜங்கச் செயலகத்தின் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைப் பொறுப்பதிகாரி ஐவன் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… இலங்கை இனப்பிரச்சினைக்குப் படைத்துறை ரீதியில் தீர்வு காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை இன முரண்பாட்டைத் தீர்க்க அரசியல் தீர்வு மூலமாகத் தான் தீர்வை எட்ட முடியும் என அமெரிக்கா கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். News from : tamilwin.com
-
- 1 reply
- 751 views
-
-
யானைக்குட்டி வளர்த்த தேரருக்கு பிடியாணை பொல்ஹென்கொடயிலுள்ள ஆலன் மத்தினியராமய விஹாரையில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக, வண.உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவரிரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளதா, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸூக்கு அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/166071/%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE…
-
- 0 replies
- 286 views
-
-
பதுளைக் கிராமத்தில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கருதப்படும் ஒருவர் கிராமம் ஒன்றில் உள்ள சிலரை தாக்கியமையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் பிரவேசித்துள்ளதாக நினைத்து பதுளையில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடியுள்ளனர். குறித்த மனநிலை பாதிக்கப்பட்டவர் நேற்று மூதாட்டி ஒருவரை கொலை செய்ததுடன் சிலரை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராமத்தில் வதந்தி பரவியது. தமிழீழ விடுதலைப்புலிகள் கிராமத்துக்குள் பிரவேசித்துள்ளதாக நினைத்து, மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடத்தொடங்கினர். பின்னரே உண்மை நிலை தெரியவந்ததாக கூறப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
கஹவத்தை, கொட்டகேத்தனை பகுதியில் மேலும் 158 வீடுகளில் குற்றச்செயல்கள் இடம்பெறக் கூடிய ஆபத்து காணப்படுவதாக பொலிஸாரின் கணிப்பில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ஆம் திகதி கொட்டகேத்தனையில் தாய், மகள் இருவரும் வெட்டிக் குத்திக் கொலை செய்யப்பட்டு பின் வீட்டுக்கள் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து கஹவத்தை பக்கம் மீண்டும் அவதானம் கிளம்பியுள்ளது. இப்பிரதேசத்தில் 20 பெண்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 40 வீடுகளில் பெண்கள் மாத்திரமும், 98 வீடுகளில் விதவைப் பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அச்சத்தில் வாழும் பெண்களுக்கும் ஆண்கள் இன்றி வாழும் பெண்களுக்கும் பொலிஸார், பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்வரை உறவினர்கள்…
-
- 1 reply
- 481 views
-