Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 10,000 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 80,000 பேர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 10,000 பேர் தொடர்ந்தும் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். போதியளவு வசதிகள் இல்லாத காரணத்தினால் சிலர் சுய விருப்பின் அடிப்படையில் தற்காலிக முகாம்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும், சிலர் உறவினர்களுடன் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாவதற்கு எதிர்பார்த்ததனை விடவும் அதிகளவான கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எ…

  2. 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து! தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள்…

  3. புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும், பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை யும் அமைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார். வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்குக்கூட நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப் படவில்லை என்றும், தகரங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளிலேயே அவர்கள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் க…

  4. 10,000 தொன் உணவுப் பொருள் தமிழகத்திலிருந்து யாழ். வரும் உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள யாழ்ப்பாணத்திற்கு விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தமிழ் நாட்டிலிருந்து 10,000 தொன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் பல வகையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து கடல் வழியாக கொண்டு வருவதற்கும் நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பகுதிக்குக் கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்.குடாநாட்டில் அதிகம் தட்டுப்பாடாகவுள்ள செத்தல் மிளகாய், கோதுமை மா, கருவாடு, அப்பளம், சோயா, உப்பு, உருளைக் கிழங்கு, புளி, நவதானியம் உட்பட பல பொருட்களை தமிழ் நாட்டிலிருந…

  5. புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக 10 ஆயிரம் மகாசங்கத்தினர்கள் நாளை வியாழக்கிழமை கண்டி தலதாமாளிகை மகா மலுவையில் விசேட பிரார்த்தனை வழிப்பாட்டில் ஈடுபடவுள்ளனர். இந்த வழிபாட்டின் போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது. இத்தகவலைக் கோட்டே நாகவிகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரோ நேற்று நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். 30 வருடகால யுத்தத்தை வெற்றிபெறச் செய்து நாட்டை மீட்டெடுத்த இராணுவத் தளபதி இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்த வேதனை இலங்கையர் ஒவ்வொருவரது இதயங்களையும் பாதித்துள்ளது. உலகின் மிகச் சிறந்த தளபதி எனப்பாராட்டப்பட்ட இராணுவத் தளபதிக்கு நேர்ந்துள்ள க…

    • 0 replies
    • 658 views
  6. இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10,000 பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களின் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். ஒரு வீட்டிற்கு 28 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிர்வாகங்களின் ஊடாக இந்த வீட்டுத் திட்டத்திற்குத் தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், அதன் நிர்மாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் 10,000 வீடுகளையும் மக்களுக்குக் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். h…

  7. இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சட்டரீதியாக விலகிக்கொள்வதற்காக பொதுமன்னிப்புக் காலம் கடந்த மாதம் 12ம் திகதி முதல் இம்மாதம் 12ம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நேற்று வரை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய, சுமார் 10,417 பேர் தாமாக முன்வந்து சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 15 ஆயிரம் பேர் மறைந்து வாழ்வதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் …

  8. 10.01.09 தாயக முக்கிய செய்திகளை இங்கே இணைக்கப்பட்டுள்ளது நன்றி

    • 0 replies
    • 1.5k views
  9. தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் பதியப்படும் போற்றுதற்குரிய பெருந்தகை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வில் கலந்து அவருக்கான வணக்கத்தை செலுத்துமாறு வேண்டுகின்றனர். . மேலும் http://eelamso...10-01-2010

    • 0 replies
    • 604 views
  10. தமிழர்கள் வெளியேற்றப்படுவதால் கொழும்பு பாதுகாக்கப்படுமா? http://www.yarl.com/videoclips/view_video....7adf34b1d77e88d

  11. 100 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து : 17 பேர் படுகாயம் பதுளை ரில்பொல 2 ஆம் மைல் கல்லருகே வேனொன்று வீதியைவிட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளையைச் சேர்ந்த ரில்பொல 2 ஆம் மைல் கல்லருகே இன்று பிற்பகல் 3 மணியளவில் பள்ளாகெட்டுவ என்ற இடத்திலிருந்து பதுளை வழியாக அநுராதபுரம் சென்ற வேனே வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வேனில் பயணித்த 17 பேர் கடும் காயமடைந்த நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் சாரதி உட்பட மூவரின் நிலை கவலைக்க…

  12. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பாரிய நீராவிக் கப்பல் ஒன்றின் சிதைவுகள் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காலி கடல்சார் தொல்லியல் அலகு மேற்கொண்ட ஆய்விலேயே, இந்தக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேர் ஜோன் ஜக்சன் என்ற நீராவிக்கப்பலின் சிதைவுகளே கல்லடி கடலேரிக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது1908ம் ஆண்டு செப்ரெம்பர் 26ம் நாள் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. உள்ளூர் சுழியோடியான யோகராஜா என்பவரே முதலில் இதனை கண்டுபிடித்து, காலி கடல்சார் தொல்லியல் அலகின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். 4231 தொன் எடை கொண்ட இந்த நீராவிக் கப்பல், 1905ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதுவெஸ்ட் மினிஸ்டர் கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது. அரிசி…

  13. 100 இலங்கை அகதிகள் நியூசிலாந்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை அம்பலம்: 100 இலங்கை அகதிகள் படகு மூலம் நியூசிலாந்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. தமிழக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இந்த முயற்சியை முறியடித்துள்ளனர். ஈ.பாலஜீ மற்றும் ஆர்.யுவகுமார் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. கண்ணியாகுமாரி மாவட்டத்திலிருந்து 100 இலங்கை தமிழ் அகதிகளை படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப…

  14. 100 எம்.பி.க்களின் கையொப்­பங்­க­ளுடன் ரணி­லுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் ஆவணம் (எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி) ஐ.தே.க. பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் நட­வ­டிக்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டுள்ள நிலையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நேற்­றைய பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தின் போது பிர­தமர் மீதான நம்­பிக்­கையை உறு­திப்­ப­டுத்தும் ஆவ­ணத்­திற்கு கைச்­சாத்­திட்­டனர். இதன்­படி குறித்த ஆவணம் சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்­ல­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் ஒன்­ற…

  15. 100 கிலோ போதைப்பாக்குடன் பருத்தித்துறை கடலில் மூவர் கைது! தடை செய்யப்பட்ட போதைப்பாக்கினை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளுர் மீனவர்கள் மூவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனா். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பாக்கினை கைபற்றியுள்ளதாக கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இன்று(23) விசேட ரோந்து சுற்று கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த படகு ஒன்றினை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தூண்டும் பாக்கு பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் நிறை 100…

  16. 100 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது கற்பிட்டி - கண்டக்குடா பகுதியில் சுமார் நூறு கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இன்று (07) அதிகாலை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தென்னிந்தியாவிலிருந்து கேரள கஞ்சாவினை கடத்தி கொழும்பு மற்றும் கட்பிட்டி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்துவருகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை இன்று கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  17.  100 கிலோகிராம் கொக்கெய்ன் மீட்பு பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். மூன்று பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட இந்த கொக்கெய்ன் 100 கிலோகிராம் நிறை கொண்டது என்றும் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/174649/-க-ல-க-ர-ம-க-க-க-ய-ன-ம-ட-ப-#sthash.dZr72i0W.dpuf

  18. 100 கோடி சனத்தொகையைத் தாண்டிய சீனாவிலும் இந்தியாவிலும் 30இற்கும் குறைவான அமைச்சர்களே உள்ள நிலையில், இலங்கையில் 56 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன. நேற்று புதிதாக 9 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில் மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 56 ஆகும். அத்துடன், நேற்று பதவியேற்ற புதியவர்களுடன் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையுடன் 38 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 10 சிரேஷ்ட அமைச்சர்களும், வேலைத் திட்டங்களுக்கான இரண்டு அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர். எனினும், தேர்தல் வாக்குறுதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தனது அமைச்சர…

    • 0 replies
    • 404 views
  19. 100 கோடி நஷ்டஈடு கோரிய அங்கஜன் April 23, 2020 “கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ” என யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் அங்கஜன் இராமநாதனையே குறிப்பிட்டுள்ளதாக கூறி , குறித்த பத்திரிக்கைக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் கடந்த 20ஆம் திகதி “கொடையாளர…

    • 3 replies
    • 558 views
  20. (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்) நீண்ட காலமாகப் பணரமைக்கப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிந்தவூரில் இடம்பெற்றது போல் பாரிய கந்தூரி நிகழ்வும் இடம்பெற்றது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பராக்கிரம பாகு மன்னன் காலத்தில் இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம்பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும் வள்ளல் குணத்தினாலும் சுமார் ருபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. http://metromirror.lk/?p=32586

    • 0 replies
    • 728 views
  21. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கென கொழும்பு நகரை அலங்கரிப்பதற்கு மாத்திரம் 100 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் நம்பகமான வட்டாரங்களிலிருந்தே இந்தத் தகவல் தெரியவருகிறது, கொழும்பு மாநகர சபையினாலேயே இந்த அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை, தற்போது 80 கோடி ரூபாய்க்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்காக அமைக்கப்படும் வரவேற்பு அலங்காரப் பணிகளுக்கு மாத்திரம் 46 கோடி ரூபா செலவாகும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=7527

  22. பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 100 கோடி ரூபா பெறுமதியான, 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகமான ஹெரோயின் தொகை இதுவெனக் கருதப்படுகிறது. கொழும்பு, ஒருகொடவத்த சுங்கப் பிரதேசத்தில் வைத்து இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து 40 அடி நீளமான கொள்கலனில் இந்தப் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கலனில் 250 கிராம் அடங்கிய 17,500 ரின் கீறிஸ் இருந்ததாகவும், இவற்றில் 5000 ரின்களில் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிறிஸ் ரின்களின் பொதிகளுக்கே மேலே, ''இவை பாகிஸ்தான் போதைத் தடுப்புப் பொலிஸாரினால் பரிசோதனை செய்யப்ப…

    • 0 replies
    • 468 views
  23. 100 கோடி ரூபா பெறுமதியான 101 கிலோ போதைப்பொருட்களுடன் சிக்கியது வெளிநாட்டுக் கப்பல்! [Saturday 2016-04-02 09:00] சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான 101 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடலில் வைத்து 11 சந்தேக நபர்களும், நிலப்பரப்பில் வைத்து மூவருமாக 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான 101 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடலில் வைத்து 11 சந்தேக நபர்களும், நிலப்பரப்பில் வைத்து மூவருமாக 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்ச…

  24. வவுனியாவைச் சேர்ந்த தமிழ ரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப் பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இளம் கண்டுபிடிப்பாளரான ஜாக்சன் இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்புரிக்கு மேலும் தெரிவிக்கையில், என்னிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரியவர்கள் தொடர் பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன். இவ்வாறு கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்…

  25. (ஆர்.விதுஷா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு கட்சிகளினதும் தேர்தல் பிரசார செலவுகள் சுமார் 100 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார். நாளொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை குறித்த பிரதான இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செலவுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளர். இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , முக்கிய இரு கட்சிகள் உள்ளடங்களாக, ஐந்து கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார ந…

    • 3 replies
    • 478 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.