ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
November 15, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ளதாக இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணையில் கையொப்பமிட்ட 122 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதுடன், 122 உறுப்பினர்களுக்கு அப்பால் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/103396/
-
- 0 replies
- 331 views
-
-
31 MAY, 2025 | 03:00 PM இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலுக்குள் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் அத்துமீறிய இந்திய ரோலர் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் …
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
லண்டனிலிரிந்து ஜெனீவா நோக்கிய நடைபயணம் இன்று மூன்றாவது நாளாக 123 கிலோ மீற்றர்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. புதன்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமான தமிழ் இளைஞர் திரு.சத்தியின் நடைபயணம் அடுத்த நாள் பிற்பகல் 6:05 மணிக்கு Newhaven துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கு சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு 10:30 மணிக்கு அங்கு அவரை வழியனுப்பி வைக்க கூடியிருந்த மக்களிடம் விடைபெற்று தனது பிரான்ஸ் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். 22.02.2013 காலை 3:20 மணிக்கு பிரான்ஸ் Dieppe துறைமுகத்தை சென்றடைந்த சத்தி அங்கிருந்து காலை 4:00 மணிமுதல் தனது ஜெனீவா நோக்கிய நடைபயணத்தை பிரான்ஸ் மண்ணில் தொடர்ந்துள்ளார். Dieppe துறைமுகத்திலிருந்து 36 கிலோ மீற்றர்கள்…
-
- 1 reply
- 426 views
-
-
124 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு : இருவர் கைது; இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிக அதிகளவான போதைப்பொருள் (எம்.ஆர்.எம்.வஸீம், இரோஷா வேலு) மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் கைதியின் கடத்தல் முயற்சி முறியடிப்பு களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் 1248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட103 கிலோ 948 கிராம் ஹெரோயின் போதைப்பொருளானது இந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பாரிய போதைப்பொருள் தொகையாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ச…
-
- 0 replies
- 420 views
-
-
125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் !பிரான்ஸ் செய்தி நிறுவனம் To: keetru@googlegroups.com இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்: பிரான்ஸ் செய்தி நிறுவனம் [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 04:01.36 PM GMT +05:30 ] இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
125 நவீன ரக பொலிஸ் ஜீப்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா By DIGITAL DESK 2 23 DEC, 2022 | 04:36 PM (எம்.மனோசித்ரா) இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவினால் 125 நவீன ரக பொலிஸ் ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன உள்ளிட்டோரிடம் குறித்த ஜீப் வாகனங்கள் வியாழக்கிழமை (டிச. 22) கையளிக்கப்பட்டன. …
-
- 5 replies
- 748 views
- 1 follower
-
-
125000 பேர் பாதிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களை வெகுவாக பாதித்துள்ள அடைமழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட் டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 28328 பேரும் கம்பஹாவில் 42973 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இதனைவிட நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள புத்தளம் மாவட்டத்தில் 24133 பேர் அடை மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த 24 மணி நேர…
-
- 0 replies
- 373 views
-
-
12ஆம் திகதி பொங்கல் , 13 இராசி இல்லை. 14ஆம் திகதி நடாத்த முடிவு. ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றத்திற்காக வடமாகாண சபையில் எதிர்வரும் 14ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறவுள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு தடை. குறித்த அமர்வில் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தடை விதித்துள்ளார். அத்துடன் அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை வைத்துக்கொண்டு அவர்களை குற்றவாளிகள் எனும் விதமாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு தடை விதிப்…
-
- 0 replies
- 262 views
-
-
12ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம், 12ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கடந்த 31ஆம் திகதி, மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமுக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து இரவு, பகலாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந் நிலையில், மக்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, நேற்றைய தினம் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக…
-
- 3 replies
- 425 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.நேற்று (08.09.2010) காலை Bantzenheim எனும் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து Balgau ஊடாக 26km நடந்து Neuf-Brisach எனும் இடத்தைசென்றடைந்தனர்.சீரற்ற காலநிலையிலும் மனவுறுதியுடன் தமது சீரிய நோக்கத்தை மனதில் கொண்டு,அடாது மழை பெய்தாலும் விடாது நடப்போம் என்று தமது மனிதநேய நடைபயணத்தை மேற்கொண்டு இதுவரை 307மஅ வரையான தூரத்தை அடைந்துள்ளனர். பெல்ஜியம், புறுசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்க…
-
- 1 reply
- 445 views
-
-
இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. த…
-
- 4 replies
- 1.5k views
-
-
12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல் 12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல் கடந்த 12வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகுபதி சர்மாவும்(புதியமகசீன்சிறை) அவரது மனைவியும்(வெலிக்கடை பெண்கள் பிரிவு) சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்விருவரும் 09.02.2000ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மீதான குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டனர். 4ம்,6ம் மாடிகள் என இலங்கையின் கொடும் சித்திரவதை கூடங்கள் யாவிலும் வைத்து மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களுக்கு 3பிள்ளைகள். மூத்தமகன் இந்தியாவில் திர…
-
- 4 replies
- 1.3k views
-
-
:lol:13 வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன இங்கிலாந்து இளவரசியை வரவேற்ற இந்திய பொதுநலவாய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலமாடி ! சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துச் சுரங்கப் பாதையொன்றில் கார்விபத்தில் பலியான முன்னால் இங்கிலாந்து இளவரசி டயானா அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுநலவாய போட்டிகளின் ஆரம்ப விழாவில் வரவேற்றார் அந்தப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கலமாடி. " இளவரசி டயானா மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோரை நான் வருக வருகவென வரவேற்கிறேன்" என்று அவர் ஆரம்பித்ததும் மண்டபத்திலிருந்த 60,000 மக்களும் கூக்குரல் எழுப்பி கேலி செய்தனர் என்று சர்வதேச செய்திச் சேவையொன்று குறிப்பிடுகிறது. சிலவேளை இளவரசியாரின் ஆவியை அவர் அந்த மங்கலான வெளிச்சத்தில் கூரை இடுக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
புலிகளை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் அவசரத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பதிமூன்று “ப்ளஸ்” என்று காண்பவர்களிடம் எல்லாம் சொல்லி வந்தார். அதன்பிறகு மாகாணசபை அதிகாரங்களை பறித்தெடுக்க பசில் ராஜபக்ச, திவி நெகும சட்டமூலத்தின் மூலம் பதிமூன்று “மைனஸ்” என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினார். இன்று, கோதாபய ராஜபக்ச இந்த அதிகாரப்பகிர்வு எதுவுமே வேண்டாம் என மாகாணசபைகளையே அகற்றிவிடும் பதின்மூன்று “பூஜ்யம்” என்ற நிலைக்கு தமது அரசாங்கத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இதுதான் ராஜபக்ச குடும்ப ஆட்சியில், “ப்ளஸ், மைனஸ் ஆகி கடைசியில் பூஜ்யம்” ஆன கதை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 497 views
-
-
13 அடி நீளமான நாகத்தின் உடல் அருங்காட்சியகத்தில் தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக தோல்பொருள் பிரிவு அதிகாரிகள் குறித்த இடத்துக்கு இன்று சென்றிருந்தனர். தென்னை தோட்டத்தின் உரிமையாளர், இழைகளை வெட்டுவதற்காக சென்றபோது, சுமார் 10 அடிக்கும் அதிக நீளமுடைய நாகம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவித்திருந்தன. எனினும் இன்று சென்ற அதிகாரிகள் குறித்த நாகத்தின் நீளம் 13 அடி என்று கூறுகின்றனர். இதற்கு முன்னர் இவ்வளவு நீளமாக நாகம் இலங்கைய…
-
- 0 replies
- 410 views
-
-
13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கத்துக்கும், தமிழ் தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 13ம் திருத்தச் சட்டம் தங்களின் அபிலாசைகளை பூரணமாக நிறைவேற்றாவிட்டாலும், அதற்கான அடிப்படையாக அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்புகள் கருதுகின்றன. ஆனால் 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால், அது நாட்டில் பிளவை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் உள்ளிட்ட சிங்கள இனவாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு தரப்புக்கும் இடையில் நம்பிக்கை ஒன்று ஏற்படும் பட்சத்திலேயே 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க கூடியதாக இருக்…
-
- 0 replies
- 308 views
-
-
13 அம்ச கோரிக்கை ஒரு நாடகம்- வீ. ஆனந்த சங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள் எனவும், இதனை தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாகவே பார்க்கின்றேன் எனவும் தமிழ் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சமஸ்டி ரீதியிலான தீர்வொன்றை தர முடியாது எனவும், ஒற்றையாட்சியின் கீழ் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என ஜனாதிபதியும், பிரதமரும், தெற்கு அரசியல்வாதிகளும் அறிவித்து வரும் நிலையில், இப்படியான யோசனையொன்றை தமிழ் மக்களுக்காக முன்வைத்திருப்பதன் நோக்கம்…
-
- 0 replies
- 438 views
-
-
(செ.தேன்மொழி) நாட்டை பிளவுபடுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளித்தமையின் காரணமாகவே அந்த கட்சிக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார். ஐ.தே.க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். https://www.virakesari.lk/article/69703
-
- 0 replies
- 428 views
-
-
13 அல்ல! 19ஆம் திருத்தச் சட்டம் வருகிறது “வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்” என இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்…
-
- 2 replies
- 589 views
-
-
13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000 கொடுத்தார் என்றும் கூறினர். இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், …
-
- 0 replies
- 86 views
-
-
13 ஆண்டுகளுக்கு முன்னரே சீதனம் வாங்கிய ரோஹித்த அபேகுணவர்தன! [ சனிக்கிழமை, 30 சனவரி 2016, 04:08.26 AM GMT ] மஹிந்தவின் ஆட்சியில் அமைச்சராக செயற்பட்ட ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோஹித்தவினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய அவரது திருமணத்திற்கு கிடைத்த சீதனம் தொடர்பிலே தகவல் வெளியாகியுள்ளது. மேரி என் அபேகுணவர்தனவுடன், அபேகுணவர்தன திருமண பந்தத்தில் இணைந்த நாளாக 2004.11.21ஆம் திகதி என பதிவு செய்யபட்டுள்ளது. திருமணத்திற்கு சீதமாக பணத்தில் ஆறு லட்சம், 85 ஆயிரம் பெறுமதியான நகைகள், பாணந்துரை - பின்வத்தை இலக்கம…
-
- 0 replies
- 360 views
-
-
13 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், வ…
-
- 0 replies
- 147 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும். உளவுத்துறை பலவீனமடைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வந்ததனர். உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனமடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழிநுட்ப ரீதியில் பலப்…
-
- 0 replies
- 718 views
-
-
http://soundcloud.com/ima-tamil/kajendrakumar-ponnambalam-on 13 ஆம் திருத்த சட்டமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும். கஜெந்திரகுமர் பொன்னம்பலம், ஊடகர் சந்திப்பு. கஜெந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 11/06/2013 நடாதிய ஊடகர் சந்திப்பு ஒலி வடிவில்; http://srilanka.imatamil.com/?p=310#.UbuBDdVA-64.facebook
-
- 1 reply
- 628 views
-