ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
இன்று இரவு இந்திய குழு வந்து இறங்குகின்றது அதற்குள் ரம்புக்வெல அவசர அவசரமாக தமிழர்க்கு 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம், பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். யாருக்கு யாரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம். . இன்று பத்திரிகையாளர் மா நாட்டில் பேசிய ரம்புக்வெல;தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லவெனவும். . 13வது சீர்திருத்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரம் வழங்கும் போது, பிரச்சனை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். . இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் யோசனை ஒன்று தமிழக முதலமைச்சரினால், நே…
-
- 8 replies
- 1.9k views
-
-
13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார். வவுனியா நிருபர் புதன்கிழமை, மார்ச் 31, 2010 varathar அரசமைப்புச் சட்டத்துக்கான பதின் மூன்றாவது திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றக் கோருவதோ அதனை ஒரு தீர்வாகக் கொள்ள முயற்சிப்பதோ அர்த்தமற்றவை என பெருமாள் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள். நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இந்திய ஆதரவு ஒட்டுக்குழு மன்னனான பெருமாள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய போது ஒத்துழைப்பு கிடைக…
-
- 16 replies
- 1.2k views
-
-
13 வது திருத்த சட்டட்தின் கீழ் தீர்வு மஹிந்த இணக்கம் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 10, 2010 MR and Sngh இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம். சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார். போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடி…
-
- 3 replies
- 904 views
-
-
13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது இனவாத சகபாடிகளான அமைச்சர்கள் விமல் வீரவன்ச,சம்பிக்க ரணவக்க ஆகியோரைக் கேட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேவேளை, அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயராகவிருப்பதாக அறிக்கை விடுமாறு தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ்,கெஹலிய ரம்புக்வெல ஆகியோரையும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனை எதிர்த்தும் இந்த விடயத்தில் இந்திய அரசின் தலையீட்டைக் கண்டித்தும் …
-
- 2 replies
- 813 views
- 1 follower
-
-
13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – செல்வம் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்க…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று மாலை இந்திய பிரதமமந்திரி மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்துரைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன. எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் என தெரிவித்தது. இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்திய பிரதமர் மன்மோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
13 வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்போம்! கிருஷ்ணாவுடனான சந்திப்பில் ரணில் உறுதி அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது தொடர்பாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்காவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று செவ்வாய்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் …
-
- 1 reply
- 650 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய உடனடியாகவே அதிரடியான சில நகர்வுகளை கொழும்பு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டும் என என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோதாபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த அறிவித்தலின் மூலம் தமிழர்களுக்கு எதனையும் வழங்க அரசாங்கம் தயாராகவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான ஒரு தாக்குதலாகவே இது நோக்கப்படுகின்றது.[/size] [size=4]சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கும் நிலையில், கோதாபாயவிடமிருந்து வெளிவந…
-
- 0 replies
- 745 views
-
-
13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் - ஐநா அமர்வில் இந்தியா By RAJEEBAN 01 FEB, 2023 | 03:19 PM இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாஅமர்வில் இந்தியாஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது 2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொ…
-
- 1 reply
- 800 views
- 1 follower
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது. 13 வது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ தெரியாமல் இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நீக்க வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் திலின கிரிங்கொட கூறியுள்ளார். 13 வது திருத்தச் சட்டம் இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அது இலங்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்…
-
- 0 replies
- 985 views
-
-
13வது திருத்தத்தின் கீழ் பொலிஸ் அதிகாரம் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்தி;ப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் கூட அதிகாரப்பகிர்வு மிகச்சிறந்த முறையில் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்ததுடன் அத்தகைய முறையை இலங்கையிலும் பயன்படுத்த முடியும் என விளக்கமளித்தனர் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் டிரான் …
-
- 0 replies
- 238 views
-
-
13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வன…
-
- 0 replies
- 242 views
-
-
13 வது திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக பௌத்தமதகுருமாரை சந்திக்க விக்னேஸ்வரன் விருப்பம் Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 04:40 PM அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை …
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
13 வயது சிறுமியை இராணுவ அதிகாரியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கொழும்பின் சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தொழில் வழங்குவதாகக் கூறி களுத்துறை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி மிக மோசனமான வகையில் வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த பாதகச் செயலுக்கு இரண்டு பெண்கள் உடந்தையாக இருந்ததாகவும், அதில் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. குறித்த சிறுமி தற்போது களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இராணுவ அதிகாரி மற்றும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றைய பெண் என்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை [படங்கள் இணைப்பு] அம்பாறைப் பகுதியில் மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளனர். நேற்று முன் தினம் மாலையில் அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பற்றி நமது தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 4ம் கொலனி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் …
-
- 6 replies
- 1.6k views
-
-
13 வயதுச் சிறுமியை கைது செய்த இலங்கை எவ்வாறு சிறுவர்களை பாதுகாக்கும் நாடாக முடியும்? - பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி. [Tuesday, 2014-04-22 08:02:02] 13வயது சிறுமி ஒருவரை கைது செய்த இலங்கை எவ்வாறு சிறுவர்களை பராமரிக்கும் நாடுகளின் பட்டியலில் எவ்வாறு நான்காம் இடத்தை பெறும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து. கிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து 13 வயது சிறுமி ஒருவரை இலங்கை அரசாங்க படையினர் கைது செய்தார்கள்.அவரது தாயை சந்திப்பதற்குக்கூட அனுமதிக்காமல் அவரை சிறுவர் முகாம் ஒன்றில் தடுத்து வைத்துள்ளனர்.கோபி என்ற விடுதலைப் புலிகளின் சந்தேக நபரது மனைவியை கைது செய்த புலனாய்வு பிரிவினர் அவரைத் துன்புறுத்தி, அவரது …
-
- 0 replies
- 385 views
-
-
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது! 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய்…
-
- 7 replies
- 671 views
-
-
13 வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணத்தினால் கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கான விமான சேவையினை பிரிட்டிஷ் எயார்வேஸ் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/63954-13--.html
-
- 6 replies
- 600 views
-
-
எஸ்.எம்.எம்.முர்ஷித் முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிராசையாக போய்விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன் போன்ற அரசியல்வாதிகள் இன்று களத்திலே இறங்கி, இனவா…
-
- 8 replies
- 707 views
-
-
13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன? - கேள்வியெழுப்புகிறது ஐ.தே.க. தமிழ் மக்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு என்பது என்ன? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 13ஆம் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தீர்வு வழங்குமானால் அந்த தீர்வு என்னவென அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அழுத்தங்களின் அடிப்படையில் வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் இதுவரையில் அவ்வாறான எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் 13ஆம் திருத்தத்துக்…
-
- 5 replies
- 983 views
-
-
இந்தியா - இலங்கை இடையேயான 8-வது இணைப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் இருநாடுகளின் பொருளாதார மேம்பாடு, ஏழ்மை போக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு வர்த்தகம் செய்ய இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், ’’இந்திய பொருளாதார வளர்ச்சியில் இலங்கை பங் கேற்க விரும்பு கிறது. இந்தியா-இலங்கை இடையே மின்சாரத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து துறையை மேம்படுத்துவது குறித்து பேச…
-
- 2 replies
- 625 views
-
-
13-வது தந்திரம்! - ஆனந்தவிகடன் [ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 07:13 GMT ] [ அ.எழிலரசன் ] ராஜபக்ஷே அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்தவர். இப்போது ஜனாதிபதியாக ஆன பிறகும், வசனங்களில் வெளுத்து வாங்குகிறார். புதுசு புதுசாகப் பொய்களைச் சொல்வதில் சமர்த்தர். இந்தியா வந்திருந்தவரிடம் ஈழத் தமிழர் பிரச்னை பற்றிக் கேட்டபோது, ''என் நாட்டுப் பிரஜைகளைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்'' என்று சொன்னார். ''யாரும் இங்கே இருந்துகொண்டு பேசாதீர்கள். என் சொந்த செலவில், உங்களுக்கு இலங்கையைச் சுற்றிக்காட்டுவேன்'' என்று சிரித்தார். ''புலிகள் அமைப்பை மொத்தமாக முடித்து விட்டது என்னுடைய சாதனை'' என்றார். அப்புறம் எதற்காக வடக்கு, கிழக்கில் இத்தனை ராணுவ வீரர்கள் என்று கேட்டால், ''புலிகளின்…
-
- 0 replies
- 359 views
-
-
13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி Vhg மே 04, 2024 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 382 views
-
-
மணிவண்ணன், கொழும்பு 30/11/2009, 13:37 13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா தயார்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்! சிறீலங்காவின் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த விபரம் : இந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம். சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவை தேவைப்பட்டன. இந்த இராணுவத் தளபாட ரீதியான உதவிகள…
-
- 0 replies
- 799 views
-
-
13-வது திருத்தம் நீக்கப்படுவது தொடர்பில் கோவிந்தம் கருணாகரம் விமர்சனம்.! பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இரு நாடுகளினால் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தினை நீக்குவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர், குரு…
-
- 1 reply
- 498 views
-