Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ம் திருத்தச்சட்ட முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதில் மாற்றம் இல்லை. இதேநேரம் ஈழத் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்த அரசியல் தீர்வு ஒன்றும்வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/34109/57/13/d,article_full.aspx

    • 2 replies
    • 516 views
  2. 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க இந்தியா தொடர்ந்து புதிய அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் தொடர்ந்து சிறிலங்காவுக்கு ஒத்துழைப்பை வழங்கும். எனினும் சிறபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாப்பதற்கு, இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று அவர் கூறியுள்ளார் .http://www.pathivu.co…

  3. 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் துரித கதியில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லதை கொடுத்தால் நல்லது கிடைக்கும் என்ற எண்கக்கருவின் அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் முறியடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதென அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியானது இலங்கைத் தமிழர் பிரச்சினையால் கிடைக்கப்பெறவில்லை எனவும், திமுகவின் 2ஜீ ஸ்பெக்;ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடிகள் அம்பல…

    • 1 reply
    • 775 views
  4. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்…

  5. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ 14 அக்டோபர் 2012 13ம் திருத்தச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது காலசூழ்நிலைகளுக்கு அமைவாக திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் பாரிய தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவா குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற…

  6. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு சில முஸ்லிம் கட்சிகள் ஆதரவு 13 டிசம்பர் 2012 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு சில முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் சிலவே இவ்வாறு 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளன. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. 13ம் திருத்தச் சட்டம் நீட்டிக்கப்படுவதனை விரும்பவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைத் தவிர வேறும் பிரதேசங்களில்…

  7. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்தின் இறுதியாக அது அமையும் - ராஜித 06 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதுவே அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஆளும் கட்சியின் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் பிரச்சினை கிடையாது எனவும், அவ்வாறு ரத்து செய்தால் அரசாங்கம் உடனடியாக ஆட்சியை விட்டு வெளியேற நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களை தேசப்பற்றாளர்களாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை இனவாதிகளாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் புரிந்துணர்வின்மையை களைய வேண்டுமாயின் அரசியல…

  8. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன் ஒன்பது மாகாண அலகுகள் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று அல்லது நான்கு மாகாண அலகுகளின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதனை நல்லிணக்கமாக கருதுகின்றார் என்பதனை புரிந்து…

  9. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றம் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போது, எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவது என்று இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலெயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தினை அடிப்படையாக கொண்டே தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி வருகிறது. இந்தியாவும் இதனையே வலியுறுத்துகிறது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்து…

  10. 13ம் திருத்தத்திற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை 13ம் திருத்தத்தை திருத்துவதற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை அல்லது பெரும்பான்மை மாகாணசபைகளின் ஒப்புதல்கள் இருந்தால் போதும் என்ற புதிய திருத்த சட்டமூல யோசனையை அமைச்சரவையில் அரசாங்கம் நாளை சமர்பிக்க போகின்றது. இது காணி, பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெறுவது என்ற திட்டத்தைவிட மிகவும் மோசமானது. ஏனென்றால் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மட்டும் அல்ல, அவற்றைவிட இனிமேல் எஞ்சியுள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள எந்த ஒரு மாகாணசபைகளிடம் இருந்தும் வெறும் பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் மீளப்பெறுவதற்கான அதிகாரத்தை இந்த புதிய யோசனை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குகின்றது. எனவே 13ம் திருத்தத்தை…

    • 0 replies
    • 396 views
  11. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு 13ம் திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னிடம் நேற்று காலையில் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் அறிக்கையை இந்தியா வரவேற்கிற தென்றும் அவற்றை இலங்கை அரசாங்கம் காலதாமதப்படுத்தாமல் நடைமுறைப் படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பம் என்ற…

  12. 13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்! January 28, 2022 தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை தமிழ் சிவில் சமூக அமையம் Tamil Civil Society Forum 28 சனவரி 2022 13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வை சிறிலங்காவின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்திற்குள் முடக்கும் முயற்சி அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து வரும் சிங்களப் பேரினவாத அரசுகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பானது பல்வேறு முனைகளிலிருந்தும் பல்வேறு வடிவங்க…

  13. 13ம் திருத்தத்தை அமுல்படுத்த அரசு தயார்! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு [Wednesday, 2013-01-23 08:31:23] 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தத் தயார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இந்த திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என கோருகின்றன. இதனை அமுல்படுத்த வேண்டுமென சில கூட்டணி கட்சிகள் கோருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் 13ம் திருத்தச் சட்டம் முக்கியமானது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என இந்த…

  14. 13வது திருத்தச்சட்டத்தில் கைவைப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை. தேவையாயின் 13 பிளஸோ அல்லது 13 டபிள் பிளஸோ தான் இனி சாத்தியம். இந்திய அரசின் தற்போதய நிலைப்பாடு அதுவே என இலங்கைக்கான இந்திய துணைதூதுவராலய கொன்சிலர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். வாசு தேவநாணயக்காரவின் செயலாளர் கலாநிதி மோகனினால் எழுதப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பான தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான நூலினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. அங்கு கலந்த கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அண்மைய இரு நிகழ்வுகள் முக்கியமானவை எனக் குறிப்பிட்டார். ஓன்று பஸில் ராஜபக்ஸவினது இந்திய விஜயம். இரண்டாவதுஇந்திய தேசிய பாதுகாப்பமைச்சின் ஆலோசகர் மேனனினது இலங்கை விஜயம். இவற்றின் போது 13வது திருத்தச்சட…

  15. திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இனவாதியுமான குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாடு, மாகாண சபை முறைமை, திவிநெகும சட்டமூலம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். திவிநெகும தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த சட்டமூலம் பலவந்தமாக கொண்டு வரப்பட்டது. இதனை நீக்க எவருக்கும் அச்சமடைய தேவையில்லை. இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார். http://www.seithy.co...&languag…

  16. இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 13வது அரசியல் திருத்தம் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இலங்கையில் வாழும் சகல இனங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாகவே இதனை நாட்டு மக்கள் மீது சுமத்தியிருக்கின்றன. 13வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், போரினால் வெற்றிகொள்ள முடியாதுபோன ஈழத்தை அவர்களுக்கு வழங்க…

  17. 13வது அரசியல் சீர்திருத்த சட்டம் தொடர்பில் அரசிற்கு குணதாஸ எச்சரிக்கை! Published on October 23, 2011-10:59 am 13வது அரசியல் சீர்திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் அரசாங்கம், பாரிய மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர் குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார். மக்களினால் மேற்கொள்ளப்படும் இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தேசிய திட்டம் ஒன்று அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=38652

  18. 13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 13வது திருத்த சட்டத்தை ஆதரிக்கும் இடதுசாரி அமைச்சர்களான திஸ்ஸ விதாரன, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென ஹெல உறுமய கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் முடிவுற்ற பின்பு சிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து அவர்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்க தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், 13வது…

  19. 13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரச…

    • 8 replies
    • 653 views
  20. புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் போது, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அதற்கு அப்பால் செல்லாத தீர்வுக்கு தமது கட்சி இணங்குவதாக அமைச்சர் சம்பிக்க ரவணக்க அறிவித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பிக்க ரணவக்கவும் அவரது கட்சியும் கடந்த காலங்களில் மாகாண சபை முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. பிரிக்கப்படாத ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்வு அடுத்த 18 மாதங்களுக்குள் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்ட இலங்கைக்குள் அதிகாரத்தை எப்படி பரவலாக்க முடியும் என அரசியலமை…

  21. 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இலங்கையிடம் இந்தியா கோரிக்கை! [Friday, 2013-05-17 22:13:12] இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்…

  22. 13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார். இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. https://…

    • 13 replies
    • 889 views
  23. 13ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை முழுமையாக வழங்குவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்களின் ஓர் கட்டமாகவே கிழக்கில் மாகாணசபை உருவாக்கப்பட்டதாகவும், வடக்கில் மாகாணசபை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தவிர வேறும் அதிகாரங்களை வழங்குவது குறித்து அசராங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி…

    • 0 replies
    • 522 views
  24. 13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும்… 13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு சம்மந்தமான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், …

  25. 13ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரம் வலுவற்றது என இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரன் வழக்குத் தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி தொடர் பில் ஊடகங்களுக்கு விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த கேள்வி-பதிலிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கேள்வி -பதில் வருமாறு, நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகின்றது. அதாவது, டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத் திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். முன்னைய அமைச்சரை நீக…

    • 1 reply
    • 453 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.