ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
http://puthiyathalaimurai.tv/new/ ஹிந்து ராம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் பற்றி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் குணசேகரன் கேள்விகளால் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். எந்தக் கேள்விக்கும் ராமிடம் நேர்மையான பதில் இல்லை
-
- 0 replies
- 1.3k views
-
-
இராணுவத்தினர் மீது தாக்குதல்; எட்டு இளைஞர்களுக்கு பிணை -எம்.றொசாந்த். யாழ். நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். நாகர் கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு கூடியவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் 16ஆம் திகதி அதிகாலை இராணுவத்தினர் நாகர் கோவில் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள். …
-
- 0 replies
- 537 views
-
-
2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் …
-
- 1 reply
- 201 views
-
-
கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 13 replies
- 3.1k views
-
-
[size=3]அரசியல் கருத்து ஒற்றுமை இல்லை - சுதந்திர கொடியேற்றி பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு..! ஈழதேசம் செய்தி..! [/size] [size=3] அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று 65 வது சுதந்திர விழாவில் கூறினார். மேலும் கூறுகையில் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா சார்பில் விண்கலம் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுவது குறித்து ஒருவர் பின்னூட்டம் இவ்வாறு போட்டுள்ளார். " ஏழை மக்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள். பிறகு செவ்வாய் போவது, ஆராய்ச்சி செய்வது பற்றி சிந்தியுங்கள். உண்ண வழியின்றி பல்லாயிரக்கணக்கில் மக்கள் வாடுகின்றனரே, தகுந்த கழிவறைகள் இன்றி மக்கள் துன்பப்…
-
- 0 replies
- 634 views
-
-
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றுக்காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. நேற்றுக்காலை 10 மணியளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய தந்தை, …
-
- 0 replies
- 713 views
-
-
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரத்ன தெரிவு! பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பா
-
- 0 replies
- 559 views
-
-
[size=2][/size] [size=2](எஸ்.கே.பிரசாத்) [size=4]வடக்கு - கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க முன்வரவேண்டும் என்று தழிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமெரிக்க துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அமெரிக்க உதவித்தூதவர் தலைமையிலான குழுவினர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு த…
-
- 0 replies
- 391 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் தெற்கு தொடருந்துப் பாதை அமைப்பு ஆகியவற்றுக்காக சீனா மேலும் 1.12 பில்லியன் டொலர் நிதியை சிறிலங்காவுக்கு கடனாக வழங்கவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின் எக்சிம் வங்கி 878.2 மில்லியன் டொலரை கடனாக வழங்கவுள்ளது. தெற்கு தொடருந்துப் பாதை அமைப்புக்காக மேலும் 237.35 மில்லியன் டொலரை சீனா கடனாக வழங்கவுள்ளது. இந்தக்கடன் 7 ஆண்டு விலக்குடன் 20 ஆண்டுகளில் 2 வீத வட்டி, முகாமைத்துவ கட்டணம் 0.5 வீதம், பொறுப்புக் கட்டணம் 0.5 வீதம் ஆகியவற்றுடன் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். முன்னதாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு சீனா 400 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது. …
-
- 0 replies
- 522 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி. விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை யாருக்கும் அடைமானம் வைக்காது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை தமிழருக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில், “எ…
-
- 5 replies
- 571 views
-
-
‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப…
-
- 11 replies
- 1.7k views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில், 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி கல் வீடுகளை வழங்குமாறு கோரியும், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது. இதில் ஏனைய சமூகமட்ட அமைப்புக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், சமூக அக்கறை கொண்ட மக்கள் சார்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும், பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் மக்களை…
-
- 3 replies
- 671 views
-
-
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் February 27, 2020 வடமாராட்சி பிரதேசத்தில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் நீர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் சுமார் 170 குடும்பங்கள் சுமார் 4 மாத காலப் பகுதியில் அண்ணளவாக 17 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டது. வடமாராட்சி பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 40 இலட்சம் இறால் குஞ்சுகளை தொண்டமானாறு மற்றும் உப்பாறு நீர் நிலைகளில் இடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கடந்த 02.02.2020 அன்று முதற்கட்டமாக இறால் குஞ்சு விடும் நிக…
-
- 2 replies
- 644 views
-
-
ஏனைய மாகாண சபைகளுக்கும் வருட இறுதியில் தேர்தல் Sunday, 27 July 2008 இவ்வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக மிகுதியாகவிருக்கும் ஐந்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் நடத்திமுடிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணம், தென் மாகாணம், ஊவா, வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நவம்பவர் மாதத்துக்கு முன்னதாக நடத்துவதற்கே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. ஊவா மற்றும் வட மேல் மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கே அரசாங்கம் முதலில் திட்டமிட்டிருந்தது. இருந்தபோதிலும் தற்போதுள்ள நிலையில் அனைத்து மாகாணங்களுக்குமிடையிலான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்ட…
-
- 0 replies
- 509 views
-
-
எனது சகோதரியை ஏமாற்றி விட்டார்கள் ; மூதூருக்கு சடலமாக வந்த காளிஸ்வரி சவூதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற இளம் தாய் ஒருவர் எட்டு வருடங்களின் பின்னர் சடலமாக வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆதிவாசிகள் குடியிருக்கும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலாக்கேணி எனும் கிராமத்தைச்சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான மாணிக்கராஜா காளிஸ்வரி (வயது 37 ) என்பவரின் சடலமே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது. தனது குடும்ப கஷ்டம் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைக்கும் முகவர் ஒருவருடைய உதவியுடன் கடந்த2007ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார். சவூதிக்குப் போன காளிஸ்வரி தனது பிள்ளைகளுக்கு இரண்டு மாதங்கள் …
-
- 0 replies
- 525 views
-
-
விக்னேஸ்வரனிற்கு எதிராக பேச பயந்தார்கள், அவரை எதிர்க்க துணிந்தார்கள் என கேசவன் சயந்தன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்க துணிச்சலில்லாமல் எனது கையில் திணித்தார்கள். மாகாணசபையிலிருந்தவர்களே அவரை எதிர்க்க பயந்தார்கள். இது மாதிரி அவர்கள் பேசினால், இன்னும் பல விடயங்களை பேச வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். நேற்று முன்தினம் (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தமிழ் அரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதலிலே நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்து அடிப்படையில், சில கருத்துக்களை கூறலாம் என நான் நினைக்…
-
- 1 reply
- 337 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா! யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியாக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாக் காய்ச்சல் காரணமாக இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- மலேரியாக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் 38 வயதுடையவர். மற்றையவர் 29 வயதுடைய நபர். 38 வயதுடைய நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 29 வயதுடைய நபர் மருத்துவ விடுதியிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவுக்குச் செல்வதற்காகச் சென்று ஆபி…
-
-
- 5 replies
- 328 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 932 views
-
-
[size=3][size=4]டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.[/size][/size] [size=3][size=4]இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்படுகிறது, மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே த…
-
- 2 replies
- 660 views
-
-
ஸ்ரீலங்காவில் தொழிலாளர் பற்றாக்குறை ; வெளிநாட்டு முதலீடுகள் பாதிப்பு? [ Monday,25 April 2016, 02:44:36 ] ஸ்ரீலங்கா வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் கேந்திர நிலையமாக மாற முயற்சித்துவரும் நிலையில், கட்டுமானத்துறையானது அதிகரித்துவரும் தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக முதலீடுகளை உள்வாங்க சிரமப்படலாம் என முன்னணி நிறுவனங்களின் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் தொழிலானது முழுவேகத்தில் வளர்ச்சியடைய மிகவும் சிரமப்படக்கூடும் என்பதனை மேற்கோள்காட்டியுள்ள கட்டுமானத் தொழில்களின் சபையானது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் முழுஅளவில் முன்னெடுக்கப்படும் போது தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரித்துள்ளது. …
-
- 1 reply
- 657 views
-
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்…
-
-
- 3 replies
- 322 views
-
-
போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஐஎஸ்ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர் இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். இந்தியாவுடன் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதாலும், சந்தேகமின்றி தகவல்களை திரட்ட முடியும் என்பதாலும் நாடு திரும்ப…
-
- 4 replies
- 554 views
-
-
பொறுமை இழந்துவிட்டோம்: மனோ 'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நாம் பொறுமை இழந்து விட்டோம். தோட்ட நிறுவனங்களுக்கு தேவையான கால அவகாசங்களை வழங்கி விட்டோம். ஆனால், தோட்ட முகாமையாளர்கள் உருப்படியான மாற்று யோசனைகளை முன்வைக்கத் தவறிவிட்டார்கள். ஆகவே, தோட்டத் தொழிலாளர்களின் நிரந்தரமான சம்பள பிரச்சினை தொடர்பாகவும் இப்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வான 2500 ரூபாய் தொடர்பாகவும், எமது கடுமையான நிலைப்பாடு மேதின தீர்மானமாக மேதின மேடையில் அறிவிக்கப்படும்' என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் …
-
- 0 replies
- 447 views
-
-
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 09:52 AM ( வீ. பிரியதர்சன் ) பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
அதிகாரத்துக்கு வர உதவிய ஜனநாயகத்தை மீறலாமா? 21.08.2008 மரணங்கள் மலிந்த பூமியாகி விட்டது இலங்கைத் தீவு. ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள், கப்பம் அறவிடல், காணாமற் போகச் செய்தல் என்று மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் அராஜக தேசம் என்ற பெருமையை இலங்கை ஈட்டிக் கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற "சார்க்' உச்சிமாநாட்டை ஒட்டி சர்வதேசத்தின் முழுக் கவனமும் இலங்கை பக்கம் திரும்பியிருந்தது. அக் காரணத்தினால் இலங்கையில் வெகுவாகக் குறைந்திருந்த ஆட்கடத்தல்கள், வெள்ளைவான் அட்டகாசங்கள், காணாமற் போகச் செய்தல் போன்ற பிரச்சினைகள் இப்போது, "சார்க்' மாநாடு முடிவடைந்தமையை அடுத்து, மீண்டும் தலைநகரிலும், பிற இடங்களிலும் பரவலாகத் தலைதூக்க ஆரம…
-
- 0 replies
- 667 views
-