Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள் ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர். இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த சிரமத்தின் மத்தியில் இயக்கியுள்ளார். கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு இடம்பெற்றது. இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி, தமிழ் நாட்டில் இருந்து பேராசிரிய…

  2. வடக்கில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய ஆய்வுகூடங்களது பெயர்களை நீக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனி நிர்மாணிக்கப்படும் ஆய்வு கூடங்கள் எதற்கும் மஹிந்த பெயரை வைக்கவும் வேண்டாமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரிக்கு விஜயம் செய்திருந்த அவர் திறந்து வைக்க தயாராகவிருந்த மஹிந்தோதய ஆய்வுகூட கட்டடத்தைத் திறந்து வைக்க மறுத்துவிட்டார். அதனையடுத்து கல்வி இராஜங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனே அதை திறந்து வைத்திருந்தார். எனினும் ஏனைய நிகழ்வுகளில் அவர் பங்கெடுத்திருந்தார். யாழ்.மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த ரணில் தனது நிகழ்வுகளினில் ஒன்றாக பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரிக்கு விஜய…

    • 3 replies
    • 806 views
  3. வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் என்ற கணக்கில், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான போச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட திட்டங்களை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்டகாலமாக இருத்தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இரண்டு நாடுகளின் மீனவர்களும் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற…

    • 23 replies
    • 1.6k views
  4. கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய போது எழுத்து மூல ஒப்பந்தத்திற்கு மைத்திரி தரப்புச் சம்மதித்திருந்தது, எனினும் அதனை கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருந்தார். அதன்போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மைத்திரிபாலா சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரு. இரா. சம்பந்தனின் செயலால் அதிர்ச்சியடைந்தனர். 60 ஆண்டுகள் இங்கே சிங்கள இனம் உங்களை ஏமாற்றிய பின்புமா நீங்கள் ஒரு எழுத்து மூல ஒப்பந்தத்தை தவிர்க்கிறீர்கள் என திரு. இரா. சம்பந்தனை சந்திரிகா குமாரதுங்க வினாவியுள்ளார். இவ்வளவு காலமும் எழுத்தில் போடப்பட்ட எந்த ஒப்பந்தமும் நடக்காதபோது இப்போது மட்டும் ஏன் எழுத்தில் ஒப்பந்தங்கள் தேவை…

  5. வடமாகணத்துக்கான மூன்று நாள் விஜயத்தை நேற்று ஆரம்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவகாரம் பெரும் நெருக்கடியைக் கொடுத்தருப்பதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. விக்னேஸ்வரனுடனான முரண்பாடு காரணமாக அவருடனான சந்திப்பைத் தவிர்த்துக்கொண்ட பிரதமர், தன்னுடைய நிகழ்வுகளுக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இதனால் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலின் நிகழ்வுகளைப் புறக்கணிததார்கள். இருந்தபோதிலும் வடமாகாண ஆளுநர் பாளிகார இந்த நிகழ்வுகளில் பங்கேற்றார். வடமாகாண சபை இந்த நிகழ்வுகளைப் புறக்கணித்தமை ரணிலின் விஜயத்தின் போது முக்கிய விவகாரமாக நோக்கப்பட்டது. சர்வதேசத்துக்கும் இது ஒரு செய்தியை வெளிப்படுத்தியது. இந்தப் பின்னண…

    • 13 replies
    • 1.3k views
  6. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம கால அரசியல் நிலவரம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று சனிக்கிழமை திருகோணமலை நகரில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யப்படவேண்டும் என்ற விடயத்தை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது …

    • 0 replies
    • 330 views
  7. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதா சார முறை இரத்து? எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. தொகுதி வாரியாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 22 மாவட்டங்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலமாக 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர். 20 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பெண்களை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த தேர்தல் முறை மாற்றத்தை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப…

    • 23 replies
    • 1.3k views
  8. மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று உத்தரவிட்டார். அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விபூஷிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை பயங்கரவாத பிரிவினர் வாபஸ் பெற்றுகொண்டனர். அதேவேளை, என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து…

  9. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெறும் விசேட தேவையுடைய மாணவருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மூன்று போர் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலையான சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை சர்வதேச விசேட தேவையுடைய மாணவர்களின் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தடவையாகவும் தமது மாணவர்களை பங்குபெற்றச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவில் ஒரு மாணவனது செலவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரி பழைய மாணவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த மூன்று மாணவர்களும் தேசிய ரீதியல் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலமே விசேட தே…

    • 5 replies
    • 498 views
  10. [ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 06:22.31 AM GMT ] மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார். இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போலியான வதந்திகளை பரப்பியிருந்தது. இதனாலேயே குறித்த புலம்பெயர் அமைப்புக்கள…

    • 0 replies
    • 555 views
  11. நேற்று இரவு 7 மணிக்கு மைதிரியின் சகோதரர் அடையாளம் தெரியாத நபரினால் பொலன்நறுவையில் வைத்து தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம். http://www.dailymirror.lk/67415/president-s-brother-injured-in-attack

  12. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி. தேவராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவு( ரி.ஐ.டி) விசாரணைக்காக அழைத்துள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி மத்தியில் அமைந்துள்ள தனது பத்திரிகை விற்பனை நிலையத்துக்கு கடந்த 26ஆம் திகதி, காலை 9.00 மணிக்கு வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் இந்த அறிவிப்பு கடிதத்தை தந்துள்ளனர். இக்கடிதத்தில் இப் பிரதேசத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி 10 மணிக்கு கொழும்பில் உள்ள புதிய அரசாங்க அதிபர் கட்டடத்தில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் இரண்டாம் தள அதிகாரியை சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த வருடம் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமா…

    • 0 replies
    • 392 views
  13. கோடாரியினால் தாக்குதலுக்கு உள்ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கோடாரியினால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/142807#sthash.ePXWp7Us.dpuf

  14. சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை சிறிலங்கா இழக்காது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, செக் குடியரசு போன்ற நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு துணையாக இருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும், இந்த நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவளித்தன. எவ்வாறாயின…

    • 2 replies
    • 376 views
  15. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல், விடுதலைப் புலிகளின் தடையை நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/38785/57//d,article_full.aspx

    • 0 replies
    • 547 views
  16. உத்தியோகபூர்வ பயணயமாக சீன சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் இரு நாடுகளுக்குமிடையேயான 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பண்டைக்காலத் தொடர்புகளை இன்னும் வலுவாக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதாரம், அறிவியல், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. http://www.malarum.com/article/tam/2015/03/26/9325/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8…

  17. வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவம் பொருளாதார ரீதியில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுவது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்;ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் பொருளாதார வலயமாக பயன்படுத்துகின்றனர். வலிகாமம் வடக்கிலுள்ள 1,100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதி…

    • 0 replies
    • 372 views
  18. இலங்கையில் இருந்து கடல்வழி மார்க்கமாக, தமிழகத்திற்குள் ஊடுருவி வரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல், 'பஜ்ஜி' என்ற பெயரில், போதைப் பொருளை சப்ளை செய்து வருவது, போலீசாரை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. 'சுடோ எபட்ரின்': கடந்த டிச., மாதம், சென்னை, அம்பத்தூர் தபால் நிலையத்தில் இருந்து பார்சல் மூலம் ஸ்பெயின் நாட்டிற்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'சுடோ எபட்ரின்' என்ற போதைப் பொருள் கடத்திய, நைஜீரிய வாலிபர், ஹென்றி சிட்டி, 34, சிக்கினார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் பதுங்கி உள்ள தன் கூட்டாளிகள், கல்லூரி மாணவ, மாணவியர், பிரபலங்கள் சிலருக்கு, போதைப் பொருள் சப்ளை செய்து வ…

  19. இலங்கை அரசியல் அண்மைக் காலத்ததில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைச் சந்தித்து வருகின்றது. அந்த மாற்றங்களுள் ஒன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட “தேசிய அரசாங்கம்” எனக் குறிப்பிலாம். கடந்த வாரம் இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலின் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெளிவாகச் சொல்லியிருந்தார். மறுநாள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியும் அதுதான். இருந்தபோதிலும் மிகவும் குறுகிய கால அறிவித்தலுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை அல்லது அவசியம் அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது என்பதையிட்டு இந்த வாரத்தில் சுருக்கமாகப் பார்ப்போம். பிரித்தானிய ஆட்சிய…

  20. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு உண்டு என முன்னாள் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த சகல விபரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். லசந்தவுடன் கோதபாய கடும் கோபம் கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வதந்திகளின் அடிப்படையில் கோதபாய செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த ஜனவரி மாதம் 17ம் திகதி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக…

    • 0 replies
    • 377 views
  21. பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகவுமே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சியினர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யார் எதிர்க்கட்சி என்பதற்கு தேசிய அரசில் விடை கிடைப்பது கடினமானதே. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. தேசிய அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் இரு கட்சிகளில் ஒன்று ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்து விடும். ஆனா…

  22. வடக்கு முதல்வரை புறக்கணித்த ரணில்: ரணிலை புறக்கணித்த சிறிதரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காது புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு முதல்வர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அழைப்பவிடுக்காது, ஏனைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையை சிதறடிப்பதன் வடிவமே. எனவே வடக்கு மாகாண முல…

  23. மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இரத்தினபுரியில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்ததுக்கு 27 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் தடையையும் மீறி சமூகமளித்திருந்ததையடுத்து கட்சியில் பாரிய பிளவு ஏற்படுவது உறுதியாகியுள்ளது. அத்துடன், மகிந்த ராஜபக்‌ஷவுக்கான ஆதரவு மீண்டும் பெருகிவருகின்றதா என்ற கேள்வியையும் இது ஏற்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்யிட வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மகாஜன எக்சத் பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துறு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்தே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. மகிந்தவு…

  24. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், முதலமைசரின் சந்திப்பு திட்டமிட்டமுறையில் தவிர்க்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை தொடர்பாக வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரணில் விக்க…

  25. அமைச்சர்கள் ஜங்கரநேசன், குருகுலராஜா - சத்தியலிங்கம் ஆகியோர் எவ்வகையில் கருத்து வெளியிட்டனர்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி:- மூன்றாம் தரப்பு ஆய்வுக் குழுவொன்று சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதியை சேர்ந்த நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பான சிபார்சினை முன்வைக்கும் வரை அதனை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாமென தமிழ்தேசிய மக்கள் முன்னணி மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதன் சர்தேச விவகாரங்களிற்கான இணைப்பாளரும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வாதடிவருபவருமான சட்டத்தரணி மணிவண்ணன் பகிரங்க கோரிக்கையினை முன்வைத்திருந்தார். வடமாகாணசபையினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை சபைக்கு ஒப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.