Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் புதிய நம்பிக்கை – அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து JAN 28, 2015 | 1:06by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று புதுடெல்லியில் 2000 வரையான இளைஞர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் போது அவர், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். “இந்தியர்கள் மட்டுமே, உலகில் இந்தியாவின் பங்கை தீர்மானிக்க முடியும் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதன…

  2. சுண்ணாகத்தில் எற்பட்ட கழிவெண்ணை விவகாரம் சுற்றுச்சூழலை பழுதடையச் செய்யும் செயல் மட்டுமல்ல முற்றுமுழுதாக அந்த எண்ணைக்கழிவு வியாபித்திருக்கும் ஏக்கர்க்கணக்கான நிலத்தை ஒன்றுக்கும் உதவாத நிலமாக்கிவிடக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது. உலகம் எங்கும் சுற்றுச்சூழல் பழுதடைகிறது என எதிர்காலச் சந்ததியனருக்காக கவலைப்படும் மனிதர்களும் ஊடகங்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதை அனைவரும் அறிவீர்கள். ஒரு தொழிற்சாலையை நிர்மாணிக்கும் போது, அந்த தொழிற்சாலை என்ன பொருளை உற்பத்தி செய்யப்படப் போகின்றது பொருள் உற்பத்தி செய்யப்படும் போது அதிலிருந்து பெறப்படும் கழிவு நிலம், நீர், காற்று, ஆகாயம் போன்றவற்றை மாசு படுத்தாமல் வெளியேற்றப் படுவதற்கான முறைகளையும் உள்ளடக்கியதே தொழிற்சாலை நிர்வாகத்தின் ம…

    • 0 replies
    • 5.8k views
  3. மத்தியவங்கி ஆளுநராக அர்ச்சுனா மகேந்திரனை நியமிக்கும் முடிவிற்கு அமைச்சரவையிவ் கடும் எதிர்ப்பு? 25 ஜனவரி 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- மத்திய வங்கி ஆளுநராக அர்ச்சுனா மகேந்திரனை நியமிக்கும் முடிவிற்கு அமைச்சரவையிவ் கடும் எதிர்ப்பு வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது புதிய ஜனாதிபதியின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் புயலடித்தது.மத்திய வங்கி ஆளுநராக அர்ச்சுனா மகேந்திரனின் பெயரை பிரதமமந்திரி ரணில்விக்கிரமசிங்க பிரேரரித்த வேளையே இந்த நிலை உருவானது. மகேந்திரனின் நியமனத்திற்கு சுகாதார அமைச்சர் ராஜிதசேனரத்தின தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார். மகேந்திரன் ஒரு வெளிநாட்டு பிரஜை என குறிப்பிட்டார். இந்த வாக்குவாத…

  4. பதவியை இழந்தார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்! [ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 09:18.08 PM GMT ] இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளப் பெற்றுள்ளார். இழுபறி நிலையில் இருந்த பிரதம நீதியரசரின் பதவி விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை மீளப் பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார். சட்டத்திற்கு முறனாக பதவி நீக்கப்பட்ட முன்னால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா அவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப் பட உள்ளதாகவும்…

  5. மாற்றத்தை நிகழ்த்திய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் ஈடேறவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் பலத்துடன் கட்சியை வழிநடத்தவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் திக்கம் மடத்துவாசல் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மகாயாகம் ஒன்று நடைபெற்றது. வடமராட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகாயாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://seithy.com/breifNews.php?newsID=125330&category=TamilNews&language=tamil

  6. பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் சந்தேகத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை முழுக்க சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகி…

  7. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கழித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. கோபமில்லாத தொனியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக குறிப்பிட்டார். இதன்போது சம்பிக்க ரணவக்கவின் புதிய அமைச்சுப்பொறுப்புக்காக மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=125398&category=Tami…

  8. இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டபூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லையென சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவரை இலங்கை அரசு கொலை செய்ததா என்பதில் அவர்களிடமே குழப்பம் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இன்று புலனாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இன்று மக்கள் குழம்பவில்லை. மாறாக அரசியல் தலைவர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyBRbKchvy.html

  9. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கிறது சீனா JAN 27, 2015 | 10:47by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஊடகங்களின் மூலம் சிறிலங்காவுக்கு சீனா அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 1.4 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவுக்கு அவசியமானது, சிறிலங்காவின் அபிவிருத்திக்கு தேவையானது என்ற கருத்தை, தமது ஊடகங்களின் மூலம் சீனா பரப்பத் தொடங்கியுள்ளது. சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திச் சேவை, கொழும்பிலுள்ள சிலரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. …

  10. உயர்பாதுகாப்பு வலையமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களுடைய காணிகளில் ஒரு தொகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்.அரசாங்க அதிபராக இருந்து திருமதி இமெல்டா சுகுமார் உச்ச நீதிமன்றத்தில் அனுப்பிவைத்த சிபார்சின் அடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 கிரம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக உள்ள பகதிகளில் 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று மாவட்டச் செயலகத்தினால் எடுக்க…

  11. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடமாக குறைக்க முடிவு news இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுனத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். நேற்று தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 27 ஜனவரி 2015, செவ்வாய் 9:25 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=601553834727589915#sthash.V1u9bsbu.dpuf

  12. ஐ.நா.வின் விசாரணைகளை நீத்துப்போகச் செய்யும் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாகவிருப்பதாக யாழ்ப்பாணத்து இலத்திரனியல் ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்புத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணைகளை நீத்துப்போகச் செய்யும் நோக்குடன் புதிய அரசாங்கம முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட வெளிவிவகார ஆலோசகரான ஜயந்த தனபால, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹசைனை ஜெனீவாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் ம…

  13. இருந்து நான்கு வயதான பாத்திமா சப்னா என்ற 4 வயதானகுழந்தை தவறிவிழுந்து உயிரிழந்தமை தொடர்பிலான மரணவிசாரணை இடம்பெற்றுள்ளது. உயரமான கட்டிடத்திலிருந்து வீழ்ந்தமை காரணமாக குழந்தையின் உடலில் உட்பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக உயிரிழப்பு ஏற்பட்டதாக மரண விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. வத்தளை மாபோல பிரதேசத்திலிருந்து 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பின் 11 வது மாடியில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்து 2வது மாடியில் உள்ள சிறுவர்பூங்காவுக்கு தாயாரும், 3 பிள்ளைகளும் சென்றுள்ளனர். பின்னர் குடிநீர் அருந்துவதற்காக மூத்தசகோதரியுடன், உயிரிழந்த குழந்தை …

    • 0 replies
    • 675 views
  14. 2ஆம் இணைப்பு- 2ஆம் இணைப்பு- நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வழக்கு சுன்னாகம் நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு சுன்னாகத்திலிருந்து இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை விநியோகித்து வந்த நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக அதனை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிகப்பட்ட மக்கள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்தார். அத்துடன்; சுதந்திர …

  15. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை( கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்த போதே நீதியசர்கள் குழாம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனு, மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டதுடன் அந்த உத்தரவு சட்டமா அதிபருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/138571

  16. அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என் மீதும், என் தந்தை மீதும் அதைச் செய்யுங்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனது தாயார் எந்தவொரு ஊழல் மோடிகளிலும் ஈடுபட்டதில்லை. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி ராஜபக்ச எந்தவிதமான தங்க மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை. திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன். எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன…

  17. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருக்கும் பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தை தற்போது இடம்பெயர்ந்து வாழும் அப்பகுதி மக்களுடன் இணைந்து பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் பார்வையிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு பிரதியமைச்சர் தலைமையில் அப்பகுதி மக்கள் சிலர் சென்று பார்வையிட்டனர். கடந்த 2002ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டு காலப்பகுதி வரை குறித்த ஆலயத்தை பார்வையிட அப்பகுதி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு பின்னர் மக்கள் தங்கள் குலதெய்வம் ஆலயத்துக்கு நேற்றுச் சென்று வழிபட்டிருக்கின்றனர். மேலும் கடந்த 25 வருடங்களாக குறித்த ஆலயம் பராமரிக்கப்படமலிருக்கும் நிலையில் குறித்த ஆலயம் பற்…

  18. பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கைதிகள் மூவரை பாலத்காரமாக அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மீதான வழக்கு பெப்ரவரி 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக்கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பாலத்காரமாக அழைத்துச் சென்றிருந்தார். அதனையடுத்து இவர்மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு சந்தேகநபரான நிஷாந்த முத்துஹெட்டிகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது விசாரணை அறிக்கையை சமர்பிக்க பொலிஸார் தவறியுள்ளனர். அதனால் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக பத்தேகம நீதவான் சந்திம எத…

    • 1 reply
    • 569 views
  19. போர்க் காலத்தில் இடம்பெற்றதாக குற்றஞ்சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும் சர்வதேச விசாரணைக்குப் பதிலாக மாற்றுத் திட்டமொன்று குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியின் ஆலோசகர் ஜயந்த தனபால ஜெனீவா நோக்கிப் பயணித்துள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான சர்வதேச விசாரணைக்குப் பதிலாக உள்நாட்டு விசாரணையொன்றைக்கு ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்த மாற்றுத் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Financial Times ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மேலும்…

    • 0 replies
    • 681 views
  20. இராஜதந்திர மரபை மீறினார் ரணில் JAN 27, 2015 | 5:08by கார்வண்ணன்in செய்திகள் இராஜதந்திர மரபுகளை மீறி, கொழும்பில் நேற்று நடந்த இந்தியாவின் குடியரசு நாள் வரவேற்பு விழாவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறிலங்காவின் அமைச்சர்களே பிரதம விருந்தினர்களாக, இந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கமாகும். ஆனால், அந்த மரபை மீறி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய குடியரசு நாள் வரவேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். இந்த வரவேற்பு விழாவில், கொழும்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பங்கேற்றனர். 26 அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ,மற்றும் இந்திய, சிறிலங்கா நிறுவனங்களின் ம…

  21. ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம் JAN 27, 2015 | 1:37by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை எமது புதிய முயற்சிகள், ஒத்திவைக்கக் கூடும் அல்லது நிறுத்தக் கூடும். உள்நாட்டு விசாரணையை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, அறிக்கையை நிறுத்தி வைப்பதற்கான அவர்களின் தெரி…

  22. ஜெனிவாவை எதிர்கொள்வதற்கான பாரிய காய்நகர்த்தலில் சிறிலங்கா JAN 27, 2015 | 1:27by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான பாரிய இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது. இதற்கென பிரசெல்ஸ், வொசிங்டன், ஜெனிவா ஆகிய நகரங்களுக்கு சிறிலங்கா அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு பிரசெல்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இந்த மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ள ஐரோப்பிய் ஒன்றியத்துக்கான மீன்பிடித் தடையை நீக்குவது குறித்த பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவ…

  23. புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த JAN 27, 2015 | 0:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவை, கட்சியின் காப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கிய பங்காற்றிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகள், மகிந்த ராஜபக்சவை புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்குத் …

  24. ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் சிறிலங்கா JAN 27, 2015 | 0:04by கார்வண்ணன்in செய்திகள் தமது காலக்கெடுவுக்குள் சட்டவிரோத ஆழ்கடல் மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக, சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதையடுத்து, சிறிலங்கா கொடி தாங்கிய கப்பல்களினால், பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்றொழில் அமைச்சர்களின் பேச்சுக்களின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சூரை மற்றும் வாள் மீன் ஏற்றுமதியில் சிறிலங்காவே இரண்டாவது இடத்தில் இருந…

  25. தனது சகோதரியின் மகளது திருமணத்திற்கு இந்தியா செல்ல முடியவில்லை என்ற கவலையில் குடும்பப் பெண் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தீயில் கருகி மரணமான சம்பவம் யாழ். நல்லூரில் இடம்பெற்றது. இவரது மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். மரணமானவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. தமிழ் நாட்டில் உள்ள தனது சகோதரியின் மகளது திருமணத்திற்கு செல்வதில் பயண ஒழுங்குகளில் தாமதம் ஏற்பட்ட வேதனையில் காணப்பட்டவர் தனக்குத்தானே தீ மூட்டி மரணமானதாக மரண விசாரணையில் குறிப்பிடப்பட்டது. தற்கொலை மரணம் என தீர்ப்பு வழங்கிய மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேம்குமார் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிகாயங்களுக்கு ஆளாகி மரணமானோரின் தொகை அதிகரித்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.