ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சில நாடுகள் விசாரணைகளை முடித்துக் கொள்ள நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. எனினும் இலங்கை விவகாரத்தில் மட்டும் துரித கதியில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டு வருவது ஏன் என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை எம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=97334&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 309 views
-
-
போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர். "போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?'' என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். "நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப…
-
- 19 replies
- 2.5k views
-
-
பிரித்தானிய பிரதமரின் இலங்கை தொடர்பான கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா சக்தி அமைப்பினர் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். இவார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். (pics by : Joy Jeyakumar) http://www.virakesari.lk/?q=node/359315
-
- 1 reply
- 402 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் போர்க் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை வலுப்படுத்த தமிழர் தரப்பினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக பிரித்தானிய அரசாங்கம் மனித உரிமை பேரவையில் முன்வைக்க திட்டமிட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க் குற்றங்கள் தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு 12 சாட்சியாளர்களை பிரித்தானியா அதிகாரிகளிடம் நேர் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரி சென்றவர்கள் எனத் தெரியவருகிறது. வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது தாங்கள் அங்கு இருந்ததாக இந்த சாட்சியாளர்கள் சத்தியக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக லண்டன் தகவல்க…
-
- 1 reply
- 901 views
-
-
இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில் நிறுத்தும் மாநாடாகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு அமையப் போகின்றது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளhர். அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டுமென்றும் இல்லாவிட்டால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது, பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதனை கணக்கிலெடுக்காது இருக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தவாரம் புலிகள் ஆதரவு சக்திகள் பெருமெடுப்பிலான எதிர்ப்பு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்குக்கான இரகசிய ஆயத்தப் பணிகளில் பல பல்கலைக்கழக பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார். எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோரை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் சில…
-
- 0 replies
- 575 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்புக்கு தலைமை தாங்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு ஜுலை 23ம் நாள் தொடக்கம் ஓகஸ்ட் 3ம் நாள் வரையான 11 நாட்கள், ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப் போட்டிக்கு, பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஸ்கொட்லாந்து வந்தால், கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை பல நாடுகள் புறக்கணிக்கலாம் என்று மன்னிப்புச்சபையின் ஸ்கொட்லாந்து பிரிவு உள்ளிட்ட பரப்புரையாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அடுத்த ஆண்டு கோடைகாலத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஸ்கொட…
-
- 0 replies
- 386 views
-
-
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைத்துலக நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த நம்பிக்கையை கனடா, அமெரிக்கா வரிசையில் தற்போது பிரிட்டனும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி வரும் இலங்கை அரசு, மார்ச் மாதம் ஐ.நாவில் பலத்த சவால்களை எதிர்கொள்ளப் போகின்றது என்றும் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமெனில், போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை…
-
- 0 replies
- 638 views
-
-
பொதுநலவாயத்தில் கலந்து கொண்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசின்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால், இந்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டனர். இதற்…
-
- 0 replies
- 283 views
-
-
குத்தகை அடிப்படையில் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்:- 2014ம் ஆண்டு முதல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் குத்தகை அடிப்படையில் மாத்திரம் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்காக 15வீத ஆரம்ப வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மாகாண சபை வரி இல்லை. 50 ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த வணிகங்களுக்கு மாகாண சபை வரி இல்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99307/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 358 views
-
-
வட மாகாணசபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வடமாகாணசபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாகாண சபையினால் தேசிய நிதி ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டினை தீர்மானிப்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் கீழ் வட மாகாண சபைக்கு 17 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே வட மாகாண சபையினால் மேலதிக நிதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை திறைசேரியின் அன…
-
- 1 reply
- 568 views
-
-
https://soundcloud.com/tamilnet/tamil-gajendrakumar-1 மேற்படி இணைப்பில் உள்ள ஒலிப்பதிவைக் கேளுங்கள். நன்றி>>>>> http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36832
-
- 7 replies
- 1k views
-
-
தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல, அவர்கள் சுயநிர்ணய உரிமைகளை கோருவதில் எந்த தவறையும் தான் காணவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை கிளிவெட்டியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட அரசாங்கத்திற்கு முடியாது. ஆயுதம் தாங்கிய போரை இனி எந்த காலத்திலும் நான் எதிர்பார்க்கவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் எமது பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் எமது பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. சம்பூர் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள…
-
- 10 replies
- 708 views
-
-
உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் - விக்னேஸ்வரன் சிறப்புப் பேட்டி COMMENT (28) · இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது: “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்…
-
- 22 replies
- 3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=97258&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 691 views
-
-
புலம்பெயர்ந்தோரின் சதி என்பது முட்டாள் தனமானது. தீபக் (Deepak Obhrai)- வெளியுறவு அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமைகளுக்கான கனடிய பாராளுமன்ற செயலாளர்
-
- 0 replies
- 790 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது எதிர்பார்த்தளவு ஹோட்டல்களுக்கு வருமானம் கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அதிகளவான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குவார்கள என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எதிர்பாத்தளவு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஹோட்டல்களில் தங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 4000 ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், வெறும் 2000 ஹோட்டல் அறைகளே பயன்படுத்தப்பட்டதாகவும் கொழும்பு நகர ஹோட்டல் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளை 2000 பேர் மட்டுமே பயன்படுத்தியிருந்தனர் எனத…
-
- 1 reply
- 430 views
-
-
யாழ்.ஆரியகுளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்த ஐம்பொன் பிள்ளையார் விக்கிரகம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை பூஜை செய்வதற்காக பூசகர் ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகம் திருடப்பட்டுள்ளதை அவதானித்தார். அதனை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் இது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டுப்போன பிள்ளையார் விக்கிரகத்தின் பெறுமதி ரூபா 3 லட்சம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://onlineu…
-
- 2 replies
- 489 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி காட்டமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் ஆகும். உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்று விட்டார்.இந்தப் புகழும், பெருமையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கிடைத்திருக்கு…
-
- 0 replies
- 444 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்ல பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு பருத்தித்துறை நீதிமன்று தடைவிதித்துள்ளது. குமரப்பா –புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளதும் நினைவு தூபிகளுடன் கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகது நினைவு தூபியும் வல்வெட்டித்துறை தீருவில் தூபியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் அவை அனைத்தையும் இடித்தழித்த படைத்தரப்பு அங்கு முகாம் அமைக்கவும் முற்பட்டது. எனினும் குறித்த காணி தமக்கே சொந்தமானதென உரிமை கோரியிருந்த வல்வெட்டித்துறை நகரசபை அங்கு சிறுவர் பூங்காவொன்றினை அமைக்கவும் அறிவித்திருந்தது. அத்துடன் பெயர்பலகை நாட்டப்பட்டு பூங்கா அமைப்பு வேலைகளும் ஆரம்பமாகியிருந்தது. எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரி இலங்கை பயங்…
-
- 1 reply
- 501 views
-
-
ஆதவன் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் து. ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச் சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்…
-
- 1 reply
- 876 views
-
-
இலங்கையில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் வந்திருந்த பொழுது நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும், நாம் வழங்கிய மரியாதை அணிவகுப்பையும் அவர் ஏற்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது இலங்கை அரசு. அத்துடன் தமது நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் பேச முடியாது என தெரிவித்துள்ளதோடு, பிரித்தானியா மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கை வெளிக்கொண்டு வரும் எனவும் இலங்கை பிரித்தானியாவுக்கு எச்சரிக்கும் தெனியில் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கு பிரித்தானியாவின் பதில் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=97278&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 374 views
-
-
இலங்கையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்த பிரதேசத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குமிடையிலான முறுகல் நிலையின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு பிரதேச இளைஞர் அமைப்பொன்றினால் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு கல் வீச்சு மற்றும் வீட்டுக் கதவுகளை தட்டுதல் போன்ற அச்சுறுத்தல் செயல்பா…
-
- 5 replies
- 520 views
-
-
இலங்கை சம்பந்தமாக புதிய ஆவணப்படத்தை உருவாக்க அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சிக்கு தேவையான விடயங்களை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம் அவர்கள் இங்கு வருவதால் ஏற்படப் போகும் ஆபத்தை மறைத்து கொண்டிருந்தது. அதேவேளை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவது போல் சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இதுவரை நடைபெற்ற பொதுந…
-
- 0 replies
- 517 views
-
-
யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார் பாடசாலைக்கருகாக நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக ஆளும் தரப்பினர் பரவலாக ஜனாதிபதி மஹிந்தவின் தனியான உருவப் படங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி இணைந்திருக்கும் உருவப்படங்களை நிறுவி வைத்திருந்தது. வடக்கின் அபிவிருத்தி வெறுமனே விளம்பரப் பலகைகளில் இருப்பதாக வெளிநாட்டு ராஜதந்திரிகள் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மைக் காலமாக இத்தகைய விளம்பரப்; பலகைகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டும் கிழிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணசபை தேர்தலின் பின்னதாக இத்தகை…
-
- 0 replies
- 491 views
-