ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
போராட்டத்திற்கான தடை கண்டிக்கப்பட வேண்டியது – சர்வதேச மன்னிப்புச் சபை 11 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் காலத்தில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற உத்தரவு கண்டிக்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் முக்கிய நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவானது அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை மூடி மறைக்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மாற்றுக் கொள்கையாள…
-
- 0 replies
- 413 views
-
-
இந்தியப் பிரசையான கொமன்வெல்த்தின் செயலாளர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா அரசின் சட்ட பூவமற்ற செயற்பாடுகளைப் பற்றிய கொமன்வெல்த் சட்டவாளர்களின் அறிக்கையை , கொமன்வெல்த் அமைச்சர்கள் மானாட்டில் வேண்டுமென்றே மறைத்து, சிறிலங்காவைக் காப்பாற்றி உள்ளார் என்று பாரதூரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. Canadian Senator Hugh Segal being interviewed by Evan Solomon regarding Canadian's position on Sri Lanka & Commonwealth. Prime Minister Stephen Harper's own comments ..... "But this is a decision the Commonwealth has made and the Commonwealth will have to live with it."
-
- 51 replies
- 3.8k views
-
-
100 கோடி சனத்தொகையைத் தாண்டிய சீனாவிலும் இந்தியாவிலும் 30இற்கும் குறைவான அமைச்சர்களே உள்ள நிலையில், இலங்கையில் 56 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன. நேற்று புதிதாக 9 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 56 ஆகும். அத்துடன், நேற்று பதவியேற்ற புதியவர்களுடன் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையுடன் 38 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 10 சிரேஷ்ட அமைச்சர்களும், வேலைத் திட்டங்களுக்கான இரண்டு அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர். எனினும், தேர்தல் வாக்குறுதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அமைச்சர…
-
- 0 replies
- 408 views
-
-
கடந்த திங்கட்கிழமை இனக்கொலையாளி மகிந்தவின் முன்னால் சத்தியப்பிரமானம் செய்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் கொடும்பாவி முல்லைத்தீவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டது.13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக இந்தப் பதவிப்பிரமானம் நடைபெறும் வேளையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்பில் வந்திறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பதவிப்பிரமானம் முடிந்த கையோட்டு இந்திய அமைச்சர் தமிந்த் தேசியக் கூட்டமைப்பின் முண்ணனித் தலைவர்களை வரவேற்றதோடு வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரனுடன் சேர்த்து சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரது கொடும்பாவிகளும் முல்லைத்தீவில் எரிக்கப்பட்டன. இந்த மூவரடங்கலாக நான்கு பேரைத்தவிர வட மாகாணசபை உறுப்பினர்…
-
- 13 replies
- 1.1k views
-
-
வட மாகாண சபைக்கென அமைச்சர்களின் உறுப்பினர்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த தீர்மானம் இல்லையென பங்காளிக் கட்சிகள் அறிவித்துள்ளன. தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பு, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், வீ.ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். புளொட் அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே வட மாகாண சபைக்கு தெரிவானதால் அமைச்சரவையில் இடம் ஒதுக்க முடியாது என தமிழரசுக் கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது. எனினும், வட மாகாண சபையின் தவிசாளர் பதவியை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட…
-
- 2 replies
- 566 views
-
-
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின…
-
- 6 replies
- 520 views
-
-
தான் கொழும்பு சிங்கத்தின் மகள் என்றும் தனது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் என்றும் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரான சுட்டுக்கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார். கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரேமச்சந்திரவின் இரண்டாவது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்... வீட்டுக்கு வந்த சிலர் ஏன் தற்பொழுது அதிகமாக தொலைக்காட்சியில் தென்படுவதில்லை. ஏன் பேசுவதில்லை ஏன் என்ன நடந்தது என்று கேட்டனர். இந்த நேரத்தில் ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். இந்த கொழும்பு பட்டணத்தில் இருந்த சிங்கம் தான் எனது தந்தை. அந்த சிங்கத்தின் இரத்தமே என உடம்பில் ஓடுகிறது…
-
- 0 replies
- 581 views
-
-
சன் சீ கப்பல் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மர்மமாக மரணம் – கனேடிய நாளிதழ் தகவல் [ வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 01:14 GMT ] [ தா.அருணாசலம் ] கனடாவுக்கு சன் சீ கப்பலில் 492 அகதிகளை ஏற்றி அனுப்ப ஒழுங்கு செய்தவர் என்று சந்தேகிக்கப்படுபவர், யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டு விட்டதாக, கனேடிய நாளிதழான நசனல் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. சத்தியபவன் ஆசீர்வாதம் என்ற குறிப்பிட்ட சந்தேக நபர், கடந்த செப்ரெம்பர் 6ம் நாள் யாழ்ப்பாணத்தில் துயரமான சூழலில் இறந்து விட்டதாக, உதயன் நாளிதழில் வெளியான மரண அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. சத்தியபவன் ஆசீர்வாதத்தின் வன்கூவர் சட்டவாளர், கப்ரியேல் சன்ட், இவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டதாகவும…
-
- 4 replies
- 728 views
-
-
பேஸ்புக்கை தடை செய்ய முடியும் - ஜனாதிபதி 10 அக்டோபர் 2013 உலகின் மிக முக்கியமான சமூக வலைத் தளங்களில் ஒன்றான பேஸ் புக்கை தடை செய்ய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பேஸ் புக் இணையம் ஓர் தொற்று நோயைப் போன்று பரவி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணையத்தை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாவிட்டாலும் வேறும் வழிகளில் அதன் பயன்பாட்டை தடை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேஸ்புக் பல்வேறு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கை ந…
-
- 4 replies
- 605 views
-
-
10 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை இணைக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபை அமைச்சர்களும் அமைச்சுக்களும் எமது உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் தகைமைகள,; அனுபவங்கள், விருப்பங்கள் சம்பந்தமாக தரவுகளைப் பெறக்கால தாமதம் ஆகிவிட்டதால் எமது அமைச்சர்களையும் அமைச்சுக்களையும் அடையாளம் காணவுந் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒருவரின் தரவுகள் இன்னுங் கூட கிடைத்தபாடில்லை! எமது கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் தமது அமைச்சர் விருப்புகளைத் தெரிவித்திருந்தன. எனினுஞ் சகல உறுப்பினர்களும் ஒரேமாதிரியான தேர்வுக்கே உட்படுத்தப்பட்டனர். போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்க்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்…
-
- 3 replies
- 668 views
-
-
மஹிந்தவுக்குத் தலையசைத்து குர்ஷித் தமிழருக்கு துரோகம் அதிகாரப் பகிர்வுக்கு இலங்கையைப் பணிய வைக்காமல் ராஜபக்ஷ கூறியதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார் குர்ஷித். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் இறையாண்மைக்கும் அவர் துரோகம் இழைத்துள்ளார் என பா.ம.க. நிறுவுநர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். " இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தரும் என்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.'' என்றும் ராமதாஸ் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு போரை நடத்தியபோது அதை முடிவுக்கு கொண்டுவந்து ஈழத்…
-
- 4 replies
- 883 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே அமைச்சரவை குறித்த இழுபறி, அதிருப்தி நிலை காணப்படுகின்ற போதிலும் இலங்கைத் தமிரசுக் கட்சியினால் இறுதிசெய்யப்பட்டுள்ள மாகாண அமைச்சரவைப் பட்டியல் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண உறுப்பினர்களும், அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கக் கூடும் என வடக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்புடைய செய்தி : வடக்கு அமைச்சரவை பட்டியலுக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு! சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்க…
-
- 0 replies
- 414 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கி கொள்ள இந்தியாவுக்கு கப்பமாக சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலைய உடன்படிக்கையில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; சம்பூர் உடன்படிக்கையில் மூலம் இலங்கை மின்சார சபைக்கு வருடாந்தம் 763 கோடி ரூபா இழப்பு ஏற்படும். அத்துடன் இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு தலா ஆயிரத்து 525 ரூபா இழப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் செய்து …
-
- 1 reply
- 296 views
-
-
நீண்ட காலத்துக்குப் பிறகு எமது மக்கள் வடமாகாணசபை தேர்தல் ஊடாக முதல் தடவையாக வடக்கு முதல்வரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், எதிர்காலம் பற்றிய அச்சம் தரும் நிகழ்வுகளை அகற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் மக்கள் காத்திருக்கிறார்கள். முதல்வரும் உறுப்பினர்களும் அந்த நம்பிக்கையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீண்டகாலம் பல துன்பங்களை சுமந்து களைத்துப் போயுள்ள எம் மக்களுக்கு உடனடியாக பல அவசர தேவைகள் உள்ளன. இதனைச் செய்வதற்கு வட மாகாணசபைக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அரசாங்கத்துடன் நட்பு ரீதியான அணுகுமுறையின் ஊடாக எம் மக்களின் தேவைகளை விரைவாக …
-
- 1 reply
- 347 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தை ஏற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தமையானது அரசாங்கம் செய்த மிகச் சிறந்ததொரு அரசியல் நடவடிக்கையாகும். வடக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து அரசாங்கம் செயற்படுமானால் அதை நாம் வரவேற்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார். விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில் விழுந்துவிட்டார்கள் என பிரிவினைவாதிகள் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனமாகும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அஸாத் சாலி தொடர்ந் தும் தெரிவிக்கையில், சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம்…
-
- 0 replies
- 446 views
-
-
வடமாகாண உறுப்பினர்களின் பதவியேற்பு நாளை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவியேற்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்தது. முதலமைச்சர் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் ஏனைய 29 உறுப்பினர்களும் நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் முன்பாகவே இவர்கள் பதவியேற்கவுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை கா…
-
- 2 replies
- 465 views
-
-
சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம் [ செவ்வாய்க்கிழமை, 01 ஒக்ரோபர் 2013, 10:21 GMT ] இலங்கையில், ''மாகாண சபைகளுக்கு நில நிர்வாகம், காவல்துறை நிர்வாக அதிகாரம் கிடையாது' என்று அறிவித்திருக்கிறது அரசு. போருக்குப் பின் அங்கு நிரந்தரமான அமைதி ஏற்பட சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா - தொடர்ந்து வலியுறுத்தி வந்த விஷயம் அதிகாரப் பகிர்வு. இலங்கைப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே, மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தீர்வை முன்வைத்து வருகிறது. இந்தியாவின் ஆலோசனைப்படி, மாகாணங்கள் பிரிக்கப்பட்டன; ஆனால், அதிகாரங்கள் பிரித்தளிக்கப்படவில்லை. போருக்குப் பின், அதிகாரங்களைப் பகிர்ந்த…
-
- 87 replies
- 5.2k views
-
-
வடமராச்சி கிழக்குப் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கான அடிப்படை வசதிகளை செய்துதருமாறு கோரியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடமராச்சி கிழக்கு மருந்தங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தங்களின் இந்தப் போராட்டத்தை வன்முறை மூலம் அகற்ற முயற்சித்தால் தீக்குளித்து உயிரிழக்கத் தயாராக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர். மருந்தங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இன்று காலை ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னடுத்து வருகின்றனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இந்த மக்கள் 2010ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தில்…
-
- 0 replies
- 582 views
-
-
மத்திய மாகாணசபை ஆளும் கட்சிக்குள் பிளவு? 10 அக்டோபர் 2013 மத்திய மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மகாhணசபையின் முதல் நாள் அமர்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த அமர்வுகளின் போது தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியவற்றுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதி தவிசாளர் பதவிக்காக ஆளும் கட்சியின் சார்பில் எஸ்.பி ரட்நாயக்கவும், எதிர்க்கட்சியின் சார்பில் ரோஹன பண்டாரநாயக்க ஆகியோரும் போட்டியிட்டனர். எஸ்.பி. ரட்நாயக்கவிற்கு 33 வாக்குகளும், ரோஹன பண்டாரநாயக்கவிற்கு 24 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. மத்திய மாகாணசபையில் எதிர்க்கட்சிகளின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 18 எனவும், அதில் ஒரு உறுப்பினர் ஆரம்ப அமர்வுகளில் பங்கேற…
-
- 0 replies
- 448 views
-
-
21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பிரதியமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சத்தியப்பிரமாணம் இன்று காலை 9 மணி முதல் 11 வரையில் இடம்பெறும் என அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 முதல் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இதன் உறுதியான எண்ணிக்கை குறித்து எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை. இரண்டு முறை மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய 12 எம்.பிக்களுக்கும், கடந்த பொதுத் தேர்தலின் போது, அதிக விருப்பு வாக்குகளை பெற்ற 04 பேருக்கும், சிறிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பேருக்கும் இந்த அமைச்சப் பதவிகள் வ…
-
- 2 replies
- 636 views
-
-
வடக்கு மக்களின் அபிவிருத்தியை உறுதி செய்யுமாறு கத்தோலிக்க தலைவர்கள் கோரிக்கை 10 அக்டோபர் 2013 வடக்கு மக்களின் அபிவிருத்தியை உறுதி செய்யுமாறு கத்தோலிக்கத் மதத் தலைவர்கள், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.வி;க்னேஸ்வரனிடம் கோரியுள்ளனர். வடக்கில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் முதலமைச்ர் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர். யுத்த நிறைவானது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணாத சாதாரண பொதுமக்கள் இராணுவத்தினரால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதாக முல…
-
- 0 replies
- 395 views
-
-
வட மாகாணசபையின் முதற் கோணல்கள் முற்றும் கோணல்களாக மாறுமா? 10 அக்டோபர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் இரண்டு இரணப்பு செயலாளர்களை நியமித்துள்ளார். அந்த நியமனம் தொடர்பில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் அங்கத்து கட்சிகளிடையே முரண்பாடுகளும் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இருக்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளரின் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபராக இருந்த மன்மதராஜா, மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்களில் பணியாற்றியவரும் சிறிது காலம் சேந்து செயற்பட்டு பின்னர் விலகியவருமான நிமலன் காத்திகேயன் ஆகியோர் இரணப்பு செலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 385 views
-
-
வட மாகாணத்திற்கான அமைச்சர் நியமனங்கள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருந்து வருவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நான்கு கட்சிகளுக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என புளொட் அமைப்பு கேட்டுள்ளபோதிலும் எவ்வாறான முடிவுகள் எட்டப்படும் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார். முடிவுகள் எதுவாக இருந்தாலும், அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்தும் மக்களுக்கான சேவைகளையும், அவர்களுக்கான பங்களிப்பையும் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார். http://tamilworldtoday.com/home
-
- 6 replies
- 865 views
-
-
மனிதஉரிமை குறித்த கேள்விகளை எழுப்பவே இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ள போதிலும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் இவ்வாறு பங்கேற்றால் மாத்திரமே கேள்விகளையும், பிரச்சினைகளையும் நேரடியாக எழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ''பொதுநலவாய மாநாட்டில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து நிச்சயமாக கேள்வியெழுப்புவேன். பிரித்தானியப் பிரதமர் கொழும்பு மாநாட்டுக்குச் செல்வது சரியானதே என்று நான் எண்ணுகின்றேன். ஏனென்றால் நாம் ப…
-
- 2 replies
- 809 views
-
-
குளோரின் குழாய் வெடித்ததில் 200 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியிலுள்ள பெந்திரிக்வத்தை எனுமிடத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள குளோரின் குழாயே இன்று புதன்கிழமை இரவு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30 க்கும் அதிகமானோர் மூச்செடுப்பதற்கு அவதிப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்கள் 300 க்கும் அதிகமானோர் வைத்தியசாலைக்கு வெளியே இருப்பதாகவும் வைத்தியசாலையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/85262--200-.html
-
- 1 reply
- 490 views
-