ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும்…
-
- 18 replies
- 1.9k views
-
-
இதேபோல் கொழும்பு காலிமுகத் திடலிலிருந்து இந்தியத் தூதரகம் வரை பேரணியாக சென்ற சிங்கள ராவய அமைப்பினரும் புத்தகாயா மீதான குண்டுத்தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுபலசேனாவின் பேரணியில் கலந்துகொண்ட மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் புத்தகாயாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் இந்தியா உலகவாழ் பௌத்தர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். தாக்குதல் குறித்து முன்கூட்டியே இந்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் விகாரையை பாதுகாக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். http://www.virak…
-
- 3 replies
- 448 views
-
-
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21768
-
- 0 replies
- 340 views
-
-
இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கந்தசாமி புவனேஷ்வரி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கல்கஸை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்துச் சம்பவம் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74443-2013-07-10-08-38-52.html
-
- 5 replies
- 640 views
-
-
13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் ஒழிப்பதானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால், தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டிய சிறிலங்காத் தமிழர்கள் மேலும் புறம்தள்ளப்படுவார்கள். இவ்வாறு The New Indian Express எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்தள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் திங்களன்று கொழும்பில் வைத்து சிறிலங்காத் தலைவர்களைச் சந்தித்த போது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காத் தலைவர்களிடம் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதென்பது உண்மையில் சிவ்சங்கர் மேனனுக்கு மிகக் கடினம…
-
- 3 replies
- 547 views
-
-
இலங்கையின் சமாதானத்தை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கே நாம் உதவ முன்வருவோமே தவிர சமாதானத்தை சீர்குலைக்கும் பொதுபல சேனா போன்ற மத அமைப்புக்களுக்கு நோர்வே ஒருபோதும் உதவியது கிடையாது இனியும் உதவி செய்யாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21665
-
- 0 replies
- 399 views
-
-
கெளரி என அழைக்கப்படும் கந்தசாமி புவனேஸ்வரி தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவர் கல்கிஸை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, அங்கு ஏற்பட்ட தீ விபத்தினால் எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=21684
-
- 0 replies
- 701 views
-
-
முல்லைத்தீவு, நாயாறுக் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை ஒரு வார காலத்தில் தாமே நேரடியாக வந்து வெளியேற்றுவதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன அறிவித்திருக்கிறார் என்று தெரிவருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு நேற்று முன்தினம் கடற்றொழில் நீரியல்வள அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சின் பொதுசனத் தொடர்பு அதிகாரி பிரேம ஸ்ரீ பேரேராவினால் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்…
-
- 3 replies
- 681 views
-
-
இந்த இரண்டு வழிகளில் எதனை அவர் தெரிவுசெய்தாலும் அதற்கு நாம் தயார் என அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க மிரட்டல் பாணியில் கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21520
-
- 6 replies
- 704 views
-
-
தேர்தலைக் காட்டி வடக்கில் பலரை கொலை செய்ய இராணுவம் திட்டம்! 09 ஜூலை 2013 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறத் திட்டமிட்டுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாதிகள் சிலரை படுகொலை செய்வதற்கு சிறீலங்கா இராணுவ புலனாய்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தாயகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக தமிழ்த் தேசிய சக்திகளின் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் கொண்ட செயற்படுகளால் அச்சமும் ஆத்திரமும் அடைந்துள்ள சிறீலங்கா அரசு இந்த படுகொலைத் திட்டத்தை அரங்கேற்ற தருணம் பார்த்துள்ளதாக அறிய முடிகிறது. இதன் மூலம், சிங்கள புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட படுகொலை என்பதற்கும் அப்பால் தேர்தல் கால வன்முறை என்ற கருத்தை பரப்பி தமது படுகொலை படலத்தை முன்ன…
-
- 0 replies
- 494 views
-
-
கையடக்க தொலைபேசி மூலம் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு காதலனின் பெயர் மற்றும் ஊர் தெரியாமல் காதலனுடன் ஹோட்டல்களுக்கு சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படும் சிறுமிகள் தொடர்பாகவும் கூட இப்போது பெருமளவு முறைப்பாடுகள் கிடைப்பதாக எல்பிட்டிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி வீ. சேனாதிரத்ன தெரிவித்தார். காலி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலி மேலதிக அரச அதிபர் திருமதி மாலனி லொக்கு பொத்தாகம தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது, சிறுமிகள் தமது காதலனது ஊர் மற்றும் பெய…
-
- 0 replies
- 536 views
-
-
வடக்குத் தேர்தல் சுதந்திரமாக நடைபெறவேண்டுமாயின் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செல்வம் எம்.பி.ஒலிவடிவில்...http://tamilworldtoday.com/archives/21572
-
- 0 replies
- 341 views
-
-
எதிர்காலத்தில் செயற்பாட்டு ரீதியான அரசியலில் பிரவேசிப்பதாக இருந்தாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சட்டரீதியான உறுப்பினர் என்ற வகையில் அந்த கட்சியின் ஊடாகவே இருக்கும் என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் ஒரு போதும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் சரத் பொன்சேகாவுடன் அரசியல் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார் என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 2 replies
- 233 views
-
-
பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பு குறித்து சிங்கள இராணுவத்திடம் இந்தியா ஆலோசனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21596
-
- 0 replies
- 246 views
-
-
அரசிற்கு வாக்கு கேட்கும் இராணுவத்தினர் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கில் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் பணியை இராணுவத்தினர் தொடங்கியுள்ளனர். இதற்காக கிராமம் கிராமமாக இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். மக்களை வீடு தேடிச் செல்லும் இராணுவத்தினர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமது அரசிற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்காக தாம் எதை வேண்டுமானாலும் செய்து தருவதாகவும் அவர்கள் மக்களிடம் வாக்குறுதியும் அளித்துள்ளனர். கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றிற்குச் சென்ற இராணுவத்தினர் அக் கிராமத்தில் நீண்ட காலமாக வீதியொன்று திருத்தப்படாததைக் கண்டனர். அந்த வீதியை தமது இராணுவத்தினரை வைத்து திருத்தித் தருவதாகவும…
-
- 2 replies
- 496 views
-
-
விடுதலைப் புலிகளிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார். சுரேஷ் எம்.பி.யின் கருத்துக்கள் ஒலிவடிவில்,...http://tamilworldtoday.com/archives/21562
-
- 0 replies
- 353 views
-
-
யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் எமது இராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் உள்ளனர் என இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜெனரல் ஜெயசூரிய, வெலிக்கந்தை இராணுவத் தளத்தில் நேற்று படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்கையில், முப்பது வருட காலம் இடம்பெற்ற யுத்தம் ஒன்றை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் மீண்டும் இந்த நாட்டில பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். இந்த விடயத்தில் எமது படையினர் மிகுந்த பொறு…
-
- 1 reply
- 269 views
-
-
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை பொதுபலசேனா, இராவண பலய ஆகிய அமைப்பினர் இணைந்து முற்றுகையிட்டுப் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=21530
-
- 2 replies
- 604 views
-
-
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான இந்தியாவின் தெளிவான செய்தியை இலங்கையிடம் எடுத்துக் கூறிவிட்டதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் 13இல் சில திருத்தங்கள் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சிவ்சங்கர் மேனனிடம் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தானது 13ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படும் என்ற செய்தியை இந்தியாவிற்கு இலங்கை கூறியுள்ளதாகவே நோக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=21454
-
- 4 replies
- 991 views
-
-
மண்டைதீவில் மனித எலும்புக் கூடு தீவிர விசாரணை தேவை மண்டைதீவில் வீட்டிற்கு அத்திபாரம் வெட்டும் போது, மனித எலும்புக் கூடு கண்டறிப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப் படவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் திகதி மண்டைதீவுக்குள் நுழைந்த இராணுவத்தினர், அங்கு இளைஞர்கள் பலரைக் கைது செய்து இருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இன்று வரை எந்தத் தகவலும் இல்லை. மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 71 இளைஞர்கள் இதன்போது காணாமல் போயினர். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந் தாயிற்று என்ற விடயம் 23 ஆண்டுகள் கடந்தும் தெரியாமல் இருப்பது துன்பத்திலும் துன்பம். 1990-ம் ஆண்டு…
-
- 0 replies
- 570 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கப்பம் கோரல் கொள்ளை கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும் இவர் தலைமையிலான ஈ.பி.டி.பியினர் கப்பம் பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக யாழ். வணிகர் கழகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்த…
-
- 6 replies
- 596 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று (08) காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தென் பகுதி மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்துச் செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலன் எதுவும் கி…
-
- 2 replies
- 194 views
-
-
எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மயிலிட்டி அக்காரயன் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்கள் முதற்கட்டமாக நாளை வியாழக்கிழமை மீளகுடியேற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். நாளை காலை 8.30 மணிக்கு வலிகாமம் வடக்குப் பகுதிக்குச் சென்று மக்களை குறிடியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http…
-
- 0 replies
- 250 views
-
-
காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே - அவர்கள் பற்றி பேசுவது பிரயோசனமற்றது - தயாமாஸ்டர் முதலமைச்சர் வேட்பாளரென எவரும் இல்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் http://www.youtube.com/watch?v=2Adidjni1uk கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி பேசுவது இப்போதைக்கு பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என சுதந்திரக்கட்சி பிரமுகர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்தியிருந்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் 'தடுப்பிலுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே எனது கோரிக்கையாகும். அதற்காக நான் நீண்டகாலமாக குரல் கொடுக்கின்றேன்.ஏற்கனவே கற்…
-
- 8 replies
- 697 views
-
-
இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புனித போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவில் ஒரு தொடர்வெடி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐம்பத்தியொரு நாடுகளின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நேபாள ஆலயம் அமைந்த பகுதியில் நான்கு குண்டுகளும் திபெத் நாட்டின் ஆலயம் அமைந்த பகுதியில் நான்கு குண்டுகளும் வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள 60 அடி உயர புத்தர் சிலையின் அருகே ஒரு குண்டுமாக 9 குண்டுகள் வெடித்துள்ளன.இதில் நேபாளம், திபெத் ஆகிய நாடுகளையும் சேர்ந்த ஒரு பிக்குவும் ஒரு யாத்திரீகருமாக இருவர் காயமடைந்துள்ளனர். இத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. அவர் இந்திய முக…
-
- 3 replies
- 594 views
-