Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  'கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் நாம் முடிவெடுக்க முடியாது' ஜே.ஏ.ஜோர்ஜ் “முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக போராட்டம் நடாத்தும் மக்களுக்கான தீர்வு குறித்து விமானப்படையினர் தீர்மானிக்க முடியாது” என, விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரவித்தார். விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியானது, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானது. உரிய அனுமதியுடனேயே அந்தப் பகுதியில் முகாம் இயங்கி வருகின்றது. வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் அனுமதிப் பெற்று வந்தால் குறித்த காணி திருப்பி வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். …

    • 4 replies
    • 409 views
  2.  'கை'யில் வந்தால் இருவரும் ஆதரவு உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, கைச் சின்னத்தில் போட்டியிடுமாயின் அதற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ (எம்.பி) ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமானஎஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் ஆலோசகர்களான முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகாவும் மஹிந்தவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

  3. பாடசாலை ஆசிரியைகள் சாறியைத் தொப்புளுக்கு கீழே அணிவது தொடர்பில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்படுவதில்லை என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள் தொடர்பில் ஆசிரியைகள் தீர்மானிப்பார்கள் என்றும் இதனை முதலமைச்சர் தீர்மானிக்கத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'முதலமைச்சரின் அறிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். ஆசிரியைகள் தொப்புள் தெரியாமால் ஆடை ஆணிவது தொடர்பில் நாங்கள் எந்தத் தவறையும் காணவில்…

  4. யாழ்ப்பாணம், திருநெல்வேலி ஆராய்ச்;சி நிலையத்தினால் 'கொடிமா' என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். நீளமான காம்புகளைக் கொண்ட இந்த மாங்காய் 250 கிராம் முதல் 325 கிராம் வரையான நிறையை கொண்டிருப்பதோடு முற்றிலும் நார்த்தன்மை அற்றதாகும். மஞ்சள் நிறமும் சிறந்த வாசனையும் சிறந்த சுவையும் கொண்டதாகும். இம்மரம் நாட்டப்பட்டு 3ஆம் வருடத்தில் காய் காய்க்கிறது. பின்னர் 200 காய்வரை காய்க்கும். ஏற்றுமதித் தரம் கொண்ட இந்த மரங்கள், சிறிய இடத்திலேயே வளைந்து வளரும் தன்மை கொண்டது. அதாவது 5 மீற்றர் தூர இடைவெளி போதும்…

  5.  'கொழும்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கம் அல்ல' -சொர்ணகுமார் சொரூபன் 'நல்லிணக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மை. ஆனால் அது, கொழும்பில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடப்படுவதில்லை. நல்லிணக்கம் பற்றி பேசும் போது, பாதிக்கபட்டவர்களின் மனநிலை அறிந்து அவர்களின் தேவை என்ன என அறிந்து அதன் பின்னர் கொண்டுவருவதே நல்லிணக்கம். அதை விட்டுவிட்டு கொழும்பில் இருந்து நடவடிக்கை எடுப்பது நல்லிணக்கம் இல்லை' என, நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் ஹாட்றெனிடம் தான் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை …

    • 2 replies
    • 526 views
  6. 'கொழும்பிலிருந்து ஓநாய் ஒன்று ஊளையிடுகின்றது' - எஸ்.ஜெகநாதன் வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று நேற்று வியாழக்கிழமை (17) ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல, ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அதிக நிதி கோரும் நடவடிக்கையில், வடமாகாண சபை செயற்படுகின்றது' என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற…

  7. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் அழுது புலம்பும் காட்சி காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து, தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வடக்கில் இருந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் புதனன்று தடுத்து திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு பஸ் வண்டிகளில் புறப்பட்டுச் சென்றவர்களை மதவாச்சி சோதனைச்சாவடியில் பொலிசாரும் படையினரும் வழிமறித்து தடுத்து வைத்திருந்தனர். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களைப் பின்னர் பொலிசார் கொழும்புக்குச் செல்லவிடாமல் திரு…

  8. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சிறிலங்காவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்தும்" என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளதாவது: "இத்தாக்குதல் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகையை அதிகரிக்கச் செய்வதுடன் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படத்தலாம். அதாவது சிறிலங்காவின் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகை அனைத்துலகத்தில் அதிகரிக்கலாம். கொள்கலன்களை இறக்கும் கப்பல்களின் உரிமையாளர்கள் அதிகளவிலான கட்டணங்களையும், அதிகளவிலான காப்புறுதித் தொகையையும் செ…

  9. 'கொழும்பு நிர்வாகம் விரும்புவதையே ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்' Courtesy: தினக்குரல் - ஆடி 31, 2010 இடிபாடடைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் கட்டிடங்களுக்கு அருகே அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) கூடாரங்கள் காணப்பட்டன. முற்றத்தில் ஆடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சட்டி பானைகள், பைகள் ஆங்காங்கு காணப்பட்டன. அங்கு பொதுமக்கள் வாழ்வதைக் காட்டுவதாக இவை அமைந்திருந்தன. மன்னார் விவசாயிகளிடமிருந்து பெருமளவானவற்றை 30 வருட கால யுத்தம் அபகரித்துவிட்டது. இப்போதும் பாதுகாப்பு தொடர்பான உணர்வுக்காகக் காத்திருப்பவர்களாக அந்த விவசாயிகள் காணப்படுவதாக பி.பி.சி. சிங்கள செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அச் செய்திச்…

    • 0 replies
    • 386 views
  10. 'கோ ஹோம் கோட்டா' என்பதை பலர் தற்போது மறந்து விட்டனர் - சபையில் சஜித் ஆதங்கம் (இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களினால் கடந்த இரண்டரை வருட காலத்தில் நாடு எதிர்கொண்ட நெருக்கடி நிலைமையினை நினைவில் வைத்து பிரதமர் நெருக்கடிகளை மீள்திருத்த வேண்டும். அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களை நாட்டு மக்கள் மறக்கவில்லை. கோ ஹோம் கோட்டா என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ சபையில் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிர்மாணிப்பு கட்டுமான தொழிற்துறையினர்,சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் மேலும் பாதிக்கப்பட…

    • 2 replies
    • 316 views
  11. 'கோட்டா வெற்றியடைந்தால் 30 வருடங்களுக்கு கடினம்' “ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது. எமது வாழ்க்கையில் அத…

  12. விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஒன்றைரை வருடங்களின் பின்னர் இலங்கை அரசாங்கம் தற்போது எவரும் எதிர்பார்த்திராத ஒரு வினோதமான எதிரியுடன் தனது போராட்டங்களை ஆரம்பித்திருப்பது போல தென்படுகின்றது. அந்த எதிரியின் பெயர் கோதுமை. அண்மைக் காலங்களில் பல பொது நிறுவனங்களில் கோதுமை உணவுகளை இலங்கை அரசாங்கம் தடை செய்து வருகின்றது. அரசாங்கத்தில் இருக்கக்கூடிய தேசியவாதக் கூறுகள் கூட ''கோதுமைப் பயங்கரவாதம்'' என்ற விடயம் குறித்துப் பேசும் அளவுக்கு அங்கு நிலைமை சென்றிருக்கிறது. கோதுமையில் செய்யப்படும் பண்டங்களுக்கு இலங்கையில் எப்போதுமே பெரும் மதிப்பு உண்டு. அது தேங்காய் ரொட்டியாக இருக்கலாம், பாணாக இருக்கலாம், கேக்குகள் அல்லது ஏனைய சிற்றுண்டிகளாக இருக்கலாம்- இவையெல்லாம் இலங்கை மக்களால் மிகவும…

    • 2 replies
    • 716 views
  13. 'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு -அருஸ் (வேல்ஸ்)- பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. …

  14. அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் 'கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தம் ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்' ஈடுபட்டுள்ளார். அனுராதபுரம், ஏலயாபத்து பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான அனுர பண்டார என்பவரே கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தத்தை ஏந்தியவாறு மானியகமுவையிலிருந்து ஏலயாபத்து பிரதேச சபை வரை சென்றார். அவருடன் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.ஹரிசன் மற்றும் சந்திராணி பண்டார ஆகிய இருவரும் பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொண்டனர். கோவணத்துடன் பந்தத்தை ஏந்தியவாறு அவர் பிரதேச சபையின் வாசலுக்கு அருகில் சென்றபோது பிரதேச சபையின் படலையை பிரதேச சபையின் தலைவர்; இழுத்து மூடிவிட்டார். சபைக்கு ஒவ்வாத ஆட…

  15.  'கோவில்களை இடித்து விகாரைகளை கட்டுகின்றனர்' நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள், மன்னாரிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்றன. இதன்போது, மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன. மன்னாரில் முசலியிலும் முல்லைத்தீவில் மரிதம்பற்றிலும் இந்த அமர்வுகள் இடம்பெற்றன. நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் வேலணையில் இடம்பெற்ற அமர்வில், வெறுமனே 6 பேர் மாத்திரமே தங்களது கருத்துகளைப் பகிர்ந்திருந்த நிலையில், நேற்றைய அமர்வுகளில், அதிகமான ஆர்வம் காணப்பட்டது. இந்த அமர்வில் கலந்துகொண்டவர்கள், உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல், காணாமற்போனமை, இழப…

  16. "எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்) நான் செலுத்த வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" இவ்வாறு THE NEW INDIAN EXPRESS ஊடகத்தின் செய்தியாளர் Bharath Joshi எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் வாசுதேவ சர்மாவின் அலுவலகத்திற்கு வருகை தந்த இரண்டு பேர் கூறிய விடயம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிலங்காப் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து வாசுதேவ சர்மா கௌரவ கலாநிதிப் பட்டம் [honorary doctorate] ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப் படிவம் ஒன்றை அவர்கள் இருவரும் அவரது மேசையில் வைத்தார்கள். "எனது சமூகப்…

  17. Published By: VISHNU 01 OCT, 2024 | 04:08 AM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் வழிகாட்டலின்கீழ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கைகள…

  18. 'சஜித் ஆட்சியில் பிரேமதாசவினருக்கு பதவியில்லை’ குடும்ப தலையீடு இல்லாத ஜனநாயக ஆட்சியொன்றை கட்டியெழுப்பவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இன்று சுதந்திரமாக கூட்டங்களை நடத்த முடிகின்றது. மனதில் உள்ள கருத்துக்களை அச்சமின்றி முன்வைக்க முடிகின்றது. சற்று பின்னோக்கி பாருங்கள். இவ்வாறான ஒரு நிலையா அன்று காணப்பட்டது?. ஒரு குடும்பத்திடம் ஆட்சி அதிகாரங்கள் குவிந்திருந்தன. அவ்வாறான ஒரு யுகத்துக்கு மீண்டும் திரும்புவதாக நாட்டின் எதிர்பார்ப்பு? நான் ஒன்று உறுதியாக இந்த இடத்தில் கூ…

  19. 'சட்டத்திலிருந்து யாரும் தப்ப முடியாது': கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2007, 13:58 ஈழம்] [க.திருக்குமார்] "சட்டத்தின் முன் அனைவரும் சமன்" என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்ட மூன்று அமைச்சர்களும் அரசினால் கைது செய்யப்படலாம் என வெளிவந்த செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "யார் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது எக்ஸ், வை அல்லது சற் ஆக இருக்கலாம். நாடு தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அ…

    • 2 replies
    • 1.1k views
  20.  'சண்டியர்களை போல சத்தம் போட முடியாது' அழகன் கனகராஜ் 55 மில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்புத்தொகை தொடர்பிலான பிரேரணை, நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'சபையில் சத்தம் போட்டு, சண்டியர்களைப் போல செயற்பட முடியாது' என்று கடுந்தொனியில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்;று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை தினப்பணிகளுக்கு நகர்த்தப்பட்டது. இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, 'இந்த யோசனை தவறா…

  21. 'சத்துருக்கொண்டான் படுகொலையின் 25 ஆண்டுகள்' இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம…

  22. 'சந்திரிக்காவுக்கு தெரிந்த பனை மரம் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது' பனையின் மூலம் கிடைக்கும் பயன், வருமானம் பற்றி நன்கு அறிந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தில் காலி முகத்திடலில் பனை விதைகளை நாட்டி பனை மரம் வளர்த்தார். ஆனால், பனையுடன் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் அதுபற்றி அறியாமல் இருகின்றோம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவநேசன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுக…

    • 8 replies
    • 825 views
  23. 'சந்தேகநபரை காணவில்லை': குரே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட சந்தேகநபர் தற்போது அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட குரே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். பிழைசெய்தவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும். சந்தேகநபரை இன்னும் தீவிரமாகத் தேடி விரைவில் கைதுசெய்ய வேண்டும்' என்றும் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177539/-சந-த-கநபர-க-ணவ-ல-ல-க-ர-#sthash.3FL4JhcL.dpuf

    • 2 replies
    • 367 views
  24.  'சந்தேகநபர்களின் பெயர்களை வெளியிடாது இரகசியம் காக்கவும்' வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. 'சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்' எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆ…

  25. பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி ஆதாரத்தை வைத்துக்கொண்டு சிறிலங்கா மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரமுடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 419 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.