Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐ.தே.க நிராகரிப்பு 17 மே 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணை…

  2. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர். கைது செய்யப்பட்டவர் ரோஹண விஜயவீரவின் மூத்த மகள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே மகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை யூன் 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற…

  3. சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்! சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு அதிதிகள் மேடையில் பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று சனிக்கிழமை காலி முகத்திடலில் பெருமெடுப்பில் யுத்த வெற்றி விழாவை நடத்தியது சிறிலங்கா அரசு. இதில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் என பல உயர்மட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கென அதிதிகள் மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது. அ…

    • 1 reply
    • 558 views
  4. இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்! [Monday, 2013-05-20 18:13:18] இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது. …

  5. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது. தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்…

  6. பல சேனாக்களின் நகர்வுகளும்! பிளான் Bயும் -TAMIL WOLD- பண்டிகைக் காலச் சந்தைக்கு வந்த புதிய தினுசுப் பொருட்களைப் போல, ஸ்வர்ண ஹன்ஸ, சிங்கள ராவய, ராவணபலய, பொது பல சேனா, லக்பல சேனா போன்ற பதங்கள் 2009 இற்குப் பின்னர் தற்போது அதிகமாகவே இலங்கைத்தீவில் கோலோச்சுவதற்கு சிறப்பான காரணங்கள் ஏதாவது இருக்க முடியுமா? இலங்கைத்தீவின் சிங்கள கடும்போக்குவாதத்துக்கும் அதன் குத்தகைக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்டது. அதன் சில வடிவங்களாக சில பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பெயர்களை எல்லாம் பின்தள்ளி, தற்போது பொது பல சேனா, லக்பல சேனா, ஸ்வர்ண ஹன்ஸ, அந்த சேனா… இந்த சேனா… என புதிய புதி…

    • 0 replies
    • 611 views
  7. யாழ் வலிகாமம் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6381 ஏக்கர் காணியை அரசாங்கம் பலத்காரமாக சுவீகரிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து 1474 பேர் தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் http://tamilworldtoday.com/?p=11657

    • 0 replies
    • 374 views
  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நந்திக்கடலில் இருந்து மீட்டோம். எப்படி அவர் எரித்திரியாவில் இருப்பது என்ன போய் கதை இது என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டுவருகின்றது. அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். இதேவேளை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இலங்கை இராணுவத்திடம் சிறிதுகாலம் இருந்துள்ளனர். இந்த நிலையில் நந…

  9. இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே 19 மே 2013 இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹர…

  10. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும், சொந்த மண்ணை விட்டு பல இலட்சம் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஓடிய பின்னரும் ஈழத்தில் மீதமிருப்போர் மேலும் மேலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியில்லாமல் உலகத் தமிழரெல்லாம் மனம் வெதும்பிய நிலையில் தமிழக மாணவர்கள் போராட்டம் எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. தமிழக, இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்கள் நிறைவேறின. தமிழகத்தில் ஒரு நம்பத்தகுந்த அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஈழப்போரில் இறுதி நாட்களில் ஆயிரமாயிரம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டு ஓர் இனப்படுகொலை நடத்திமுடித்ததாக இந்த உலக நாடு…

  11. கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 12:36 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று முன்தினம் காலை நடத்திய தொலைபேசி உரையாடல் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கலக்கமடையச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் தொலைபேசியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் உரையாடிய, இந்திய வெளிவிவகார அமைச்சர், வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கென காணிகள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எ…

    • 1 reply
    • 1.3k views
  12. யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நாடா வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரணவபவன், சி.சிறிதரன், தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர், மற்றும் பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். ஏ 9 வீதி அகலிப்புப் பணிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்ட செம்மணியில் உள்ள இந்த யாழ்ப்பாணம் வ…

  13. தமிழின அழிப்பு நினைவு நாளில் மெரீனாவில் பலஆயிர கணக்கானோர் கலந்துகொண்ட நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏந்தி மக்களும் மெழுகுதிரி ஏந்தி இறந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். இதில் வை.கோ , , தோழர். வேல்முருகன், , ஓவியர் வீரசந்தானம் மேலும் பல கலந்துகொண்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14788:palaayira-rendering-ninaivental-in-marina-attended-the-event-movies&catid=36:tamilnadu&Itemid=102

  14. மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு... 19 மே 2013 சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம். நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி மனித மிருகம் ஒன்றினால் பாலியல் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறாள். சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டி…

  15. காத்தான்குடி கடற்கரை பாழ்வத்தோடையில்; இறந்து கரையொதுங்கும் மீன்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது. குறித்த பாழ்வத்தோடையில்; சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மீதப்பதற்கான காரணம் கடலின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால்தான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் பெரிய, சிறிய மீன்கள் இறந்த நிலையிலும் உயிரோடும் கரையொதிங்கியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid…

  16. "வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச் செய்து கொப்பேகடுவவுக்கு வாக்களித்து அவரை வெற்றிப்பெறச் செய்தனர்.'' இவ்வாறு காலிமுகத்திடலில் இடம் பெற்ற போர் வெற்றியின் நான்காண்டுகள் நிறைவிழா கொண்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் எடுப்பதற்கோ இன்றேல் நாட்டைப் பிரிப்பதற்கோ எவருக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும், "எவர் எதை மறந்தாலும் நாம் பெற்றுக் கொண்ட வெற்றி சிறுவர்களின் இதயங்களுக்கு நன்றாகப் புரிகின்றது. ஆரம்ப காலங்களில் மரத்தடிகளில் அஞ்சி பதுங்கி யிருந்த சிறுவர்கள் எதிர் காலத்தில் வெற்றி வலராற்றைக் கூறவேண்டும். போர…

  17. "முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் மீது சத்தியம் செய்து விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவோம்.'' இவ்வாறு நேற்று வவுனியாவில் சூளுரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. "எமது உறவுகளை படுகொலை செய்தவர்கள் அதற்கான தண்டனையை என்றோ ஒருநாள் பெற்றே தீர வேண்டும். நிச்சயமாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐ.நா. பரிந்துரைக்கின்ற போது எங்களுக்கான விடுதலையும் நெருங்கிவிடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி…

  18. இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. விஜயன் கபடத்தனமாக அவனது மாமன்மாரை கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றினான். சிங்களவர்களும் 2500 வருடங்களாகவே இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. அதேபோல 200 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டுக்கு கொண்டு வந்து குடியேற்றப்பட்ட இந்திய தமிழர்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. இராவணன் என்ற தமிழ் மன்னன் இந்த நாட்டை ஆண்டான் என்று வரலாறு கூறுகின்றது. இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கை சிங்கள பெளத்தர்…

  19. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார…

  20. விவசாயிகள் நிர்க்கதியாயினர்:- வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இலங்கை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள செட்டிகுளம் கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் முகமட் அப்துல் கரிம் கரீஸ் நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார். வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அருவித்தோட்டம் என்ற கிராமத்தில் இந்தப் பிரதேச விவசாயிகளின் 400 ஏக்கர் வரையிலான வயல் நிலங்களை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர். இவ்வயல் பிரதேசம் செட்டிகுளத்தை சேர்ந்தவர்களின் பரம்பரைக் காணிகளாகும். இவ்வாறான காணிகளில் இராணுவத்தினர் ‘நோ என்றி’ …

  21. முள்ளிவாய்க்காலுக்கு நேரில் சென்று தீபமேற்றியது கூட்டமைப்பின் இளைஞர் அணி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியொன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு முதல் தடவையாக நேரடியாகச் சென்று இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. படையினரின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமாகிய எம்.எம்.ரதன் தலைமையிலான இளைஞர் அணி, முள்ளிவாய்க்கால் பிள்ளையார் ஆலயம், முள்ளிவாய்க்கால் கடற்கரை, தமிழ் உறவுகள் கூடுதலாகக் கொல்லப்பட்ட இடங்களான கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள…

    • 2 replies
    • 992 views
  22. ஆயுதக் கப்பல்களை அனுப்பிய நபருக்கு ஒருமாத சிறையே வழங்கப்பட்டதாகவும், எனினும் தன்னை 30 மாதங்கள் சிறையில் தள்ளியதாகவும் இதனால் ராஜபக்‌ஷ நிர்வாகத்தின் நீதி, நியாயங்களை இதன்மூலம் அனைவராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொக்கரெல்ல ஶ்ரீராஜ ஜேதயான விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்துரைத்த சரத் பொன்சேக்கா, ''கே.பி.யுடன் இருந்த மற்றைய நபருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. 30 மாதங்கள் என்னை சிறைவைத்தனர். நாட்டை அழிக்க ஆயுதக் கப்பல்களை அனுப்பிய நபருக்கு ஒரு மாத சிறையும் ஒரு வருட புனர்வாழ்…

    • 3 replies
    • 620 views
  23. தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத…

  24. யுத்தத்தை வெற்றிகளை ஈட்டிய இராணுவத்தினர் தற்போது வீதி கூட்டுவதற்கும், மலசல கூடங்களை துப்பரவு செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றுக்கு வேறு ஆட்களைப் பயன்படுத்துமாறு தாம் கோருவதாகவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது என்பதற்காக இராணுவத்தினரை வீதிகளைக் கூட்டுவதற்கும், வீதிகளிலுள்ள மலசல கூடங்களைத் துப்பரவு செய்வதற்கும், மரங்களை நடுவதற்கும், மரம் வெட்டுவதற்கும் பயன்படுத்த வேண்டாம். இவர்களுக்கு விவசாயிகளை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இன்று இராணுவத்தில் ஒரு பகுதியினர் ஏமாற்றமும் …

    • 2 replies
    • 720 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.