Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனீ வாகீஸ்வரா தெரிவித்துள்ளார். கனடா ஒரு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும் இலங்கைக்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் நடவடிக்கைகளானது தீய சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உறுப்பு நாடுகளின் இறைமைக்கு மதிப்பளித்தல், கூட்டுறவு, ஒத்துழைப்பு போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு அனைத்து நாடுகளும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதே மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்…

  2. இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு: அமெரிக்க நிதி நிராகரிப்புக்கு காரணம் : ஹக்கீம் அமெரிக்காவின் நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்தமையின் காரணமாகவே அந்த நாடு வழங்கிய நிதியுதவியை நிராகரித்ததாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அண்மையில் விலக்கிக் கொண்டது.இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாதமையின் காரணமாக நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் நன்கொடைக்கான நிபந்தனைகள் ஏற்க கூடியவாறு இருக்கவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். …

  3. இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியானது அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கடன்பெறக் கூடிய நாடுகளிடமிருந்து உச்ச அளவிலான கடன்களைப் பெற்றுள்ள நிலையில்…

  4. சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்குமாறு, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளின் முக்கிய ஊடகங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியும், அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களைக் குறிப்பிட்டும், இந்த ஊடகங்கள் செய்திகள், கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. கனேடியப் பிரதமர் மட்டும் இதுவரை சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளார். அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தமது நாடு கொழும்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் என்று கூறியுள்ளார். நியுசிலாந்தும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதி…

  5. 30 ஆயிரம் கோடி ரூபாவை நாசம் செய்துள்ளது அரசு! - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கண்டனம்!! பெரும் பொருளாதாரச் சுமையில் பாதிப்புறும் மக்களுக்கு மஹிந்த அரசு நிவாரணம் வழங்காது, ஸ்ரீலங்கன் எயார் லைன் விமானசேவைக்கு மேலும் 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 33 ஆயிரத்து 300 கோடி ரூபாவை நாசம் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன் விமானசேவை, மத்தல விமான நிலையம் ஆகியவற்றுக்காக அரசு 36 ஆயிரம் கோடி ரூபாவை நாசம் செய்துள்ளது. இதனால் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் அரசுக்கு மாதாந்தம் 18 ஆயிரம் ரூபா வரி செலுத்தவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். குருநாகல், மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்று இடம…

  6. சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை: எதிர்த்து சிங்கள இளைஞன் மனு வெள்ளிக்கிழமை, 03 மே 2013 03:17 -எஸ்.எஸ். செல்வநாயம் தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ், நிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலைச்செய்தல் அல்லது அங்கு போய்வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடு…

  7. கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களுடாக வளர்ச்சி பெற்றுவந்த தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வடிவெடுத்து உலகம் வியக்கும் வண்ணம் உச்ச கட்டத்தை எட்டி நின்றது. அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடியலை நோக்கிய வீரமிகு தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். எனினும் தேசிய, சர்வதேச சக்திகள் காரணமாக தமிழ் மக்களின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்து தோற்கடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தைக் கைவிட்டுவிடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலைமை சக்தியாக ஏற்று ஜனநாயக வழியில் உரிமைப் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று தமிழ் மக்களால் நம்பிக்கைக்குரிய ஒரே தலைமைய…

  8. 14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார்' உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளை கரைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியில் இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகார…

  9. பௌத்த தலிபான்வாதம் பற்றி தாம் எதுவும் குறிப்பிடவில்லை என காலி பேராயர் டொக்டர் ரெய்மன் கிங்ஸ்லி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பௌத்த தலிபான்வாதம் அல்லது பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இந்த தகவல்களில் உண்மையில்லை எனவும் பேராயர் அதி வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி விக்ரமசிங்கவின் பேச்சாளர் வணக்கத்திற்குரிய மைக்கல் ராஜேந்திரம் பிதாதெரிவித்துள்ளார். இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதே தற்போதைய முதன்மைத் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91376/la…

  10. புலனாய்வுப் பிரிவிரனால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களினாலும் காவல்துறையினாலும் வழங்கப்படும் உணவை அசாத் சாலி நிராகரித்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அசாத் சாலி நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராகவும், இன முரண்பாடுகளை தூண்டக் கூடிய வகையிலும் கருத்து வெளியிட்ட காரணத்தினால் அசாத் சாலி கைது செய்யப்பட்ட…

  11. படையினரின் தேவைக்கு காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் இப்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு விவகாரத்தால் மக்கள் அரசின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் விடயத்தை நேரடியாகக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று விரைவில் ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக நம்பகரமாக அறிய முடிகிறது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் சுமார் 10,000 ஏக்கர் நிலம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் படைகளின் தேவைக்காகக் கையகப்படுத்தப்படவுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான அறிவித்தல்களும் அந்தந்த இடங்களில்…

  12. இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்திய நால்வர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜிவ்ரி தெரிவித்தார். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யவென கடல்வழியாக எடுத்து வரப்பட்ட 101 கிலோ 850 கிராம் கஞ்சாவுடன் 6 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதில் துண்டுக்காய் பாம்பண் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 பேரும் வேலணை கிழக்கைச் சேர்ந்த 2 பேருமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இது கேரளக் கஞ்சாவினை விட அதிவிசேடமானது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பகுப்பாய்வு செய்வதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து காஞ்சாவினை கடத்தியவர்கள் அனைவரும் 30 வயத…

  13. முக்கியமான கடற்பாதைக்கு அருகே அமைந்துள்ள சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் நோக்கிலும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சிறிலங்காவுடன் ஜப்பான் இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது உயர் நிலைப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா சென்ற ஜப்பானின் பிரதிப் பிரதமர் ராரோ அசோ நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினார். அத்துடன், 800 மில்லியன் டொலர் செலவில் ஜப்பானின் உதவியுடன் விரிவாக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுகத்துக்கும் ஜப்பானிய பிரதிப் பிரதமர் சென்று பார்வையிட்டுள்ளார். 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், எழுந்து வரும் சந்தை வ…

  14. தமிழக சட்ட சபையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட் தீர்மானத்திற்கு என்ன நடந்தது என்று யாழ். குடாநாட்டு மக்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் விநயமாக கேள்வியெழுப்பியுள்ளனர். அண்மையில் தமிழக மாணவர்கள் கொந்தளித்து எழுந்தபோது தமிழக சட்டப்பேரவையில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தனித் தமிழீழம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற முக்கிய சரத்தும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், தற்போது அந்த தீர்மானம் குறித்து எவருமே எதுவும் கதைப்பதில்லை. அந்த தீர்மானத்திற்கு என்ன நடைபெற்றது என்றே எங்களுக்கு தெரியாது. அது தொடர்பாக அறிவதற்கு நாங்கள் மிக ஆவலாக இருக்கின்றோம் என்றும் …

  15. தமிழ் வர்த்தர் ஒருவரின் மூக்கை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்தவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து வர்த்தகரான நடராஜா திவாகரனின் மூக்கை நாடாளுமன்ற உறுப்பினர் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கடித்து காயப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே கொள்ளுப்பிட்டி பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வழக்குத்தாக்கல் செய்தனர். சம்பவத்தையடுத்து சில நாட்களுக்கு பின்னர் ஐ…

  16. -சுமித்தி தங்கராசா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, பரந்தன் சந்திப் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு, கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசாரணை பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …

  17. தற்போது இலங்கைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் மூன்று பொருட்கள் மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்த்திடம் கேட்டுக்கொண்டதையடுத்து இப்பொருட்கள் மீதான தீர்வைகள் தளர்த்தப்பட்டது'என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தெரிவித்தார். தேங்காய் எண்ணெய், வெற்றிலை, மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான சுங்க வரிகளையே பாக்கிஸ்தான் நீக்கியுள்ளது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 'இலங்கை, பாக்கிஸ்தான் இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் எதிர்வரும் 11 ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தொடரி…

  18. யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான, நாவற்குழியில் அமைந்துள்ள காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 78 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்தன. ஆரம்பத்தில் இந்தக் குடும்பங்கள் குடிசைகள் அமைத்துச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். பின்னர் அந்தக் காணிகளுக்குரிய உறுதிகள் வழங்கப்படாமலும் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாமலும் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருந்தனர். இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தப் பணிகளை அவர்கள் இடைநிறுத்தியிர…

  19. ஹைதராபாத் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா என்ற சிங்கள கிரிக்கெட் வீரர் உட்பட சன் ரைசர்ஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருந்த விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி 11.30 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த மாணவர்கள் அங்கு முற்றுகையிட திரண்டனர் இதனை அறிந்த நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்வதாக அறிவித்து பின்னர் அங்கு நிகழ்ச்சி நடை பெறவில்லை. அதனையடுத்து அந்த நிகழ்ச்சியை தாஜ் கோரமண்டலிற்கு மாற்றினார் அங்கும் மாணவர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இன்று விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள…

    • 89 replies
    • 6.3k views
  20. Published on April 28, 2013-10:08 am மட்டக்களப்பு பிராந்தியத்தில் பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கும் கிராமங்களில் செங்கலடிக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரிய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் விளங்கும் படுவான்கரை கிராமங்களை போல எழுவான்கரை கிராமான செங்கலடி பழைமையான தமிழ் கிராமமாகும். அந்த கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் செங்கலடியின் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் தான் இது நடந்திருக்கிறது. செங்கலடியில் பரம்பரை பணக்காரர்கள் வரிசையில் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட சபை தலைவர் சம்பந்தமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தேவநாயகம், அதிபர் சுந்தரமூர்த்தி ஆகியோரை குறிப்பிடலாம். ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்த்த ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியி…

    • 51 replies
    • 5k views
  21. இலண்டனில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடன் கமலேஷ் சர்மா முக்கிய பேச்சு! சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளினது கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொதுநலவாய மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் சம்பந்தமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலண்டனில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா சிறிவர்ண மஹாநாமஹேவா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், வவுன…

    • 1 reply
    • 1.1k views
  22. கொல்கத்தாவை மையமாகக் கொண்டு மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்பட்டு வந்த சாரதா குரூப்பைச் சேர்ந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி திரட்டி பின் அதை மறைய வைத்து திவால் ஆகியிருக்கின்றன. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல்வாதிகள், ஊடக தொழிலதிபர்கள், அதிகார இடைத்தரகர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பட்டவர்கள் தொடர்பு கொண்டிருந்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது. ஏப்ரல் 16-ம் தேதி சாரதா குழுமத்தின் ஊடக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களில் மூன்று பேர் தாம் திடீரென்று வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் புகார் செய்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு ரூ 40…

  23. உதயன் தாக்குதலின் பின்னணி வெளிப்படையாகி விட்டது! உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் முழுமையான விசாரணை நடவடிக்கையெடுக்காமை அதன் தாக்குதல்களின் பின்னணியை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக ஊடங்கங்கள் மீதும் சில அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உண்மை நிலையை வெளிக் கொண்டுவரும் ஊடகங்கள் மீதும் மக்களின் உரிமையை வெளிப்படுத்தும் அரசிய…

    • 0 replies
    • 505 views
  24. மாணவர்கள் வேடிக்கை பார்க்க அதிபரும் ஆசிரியரும் மோதல் : சங்கானையில் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிபரும் ஆசிரியரும் சண்டையிட்ட சம்பவம் ஒன்று சங்கானை கல்விக் கோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, சங்கானை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வன்மைப்போட்டிகள் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றன. இந்தவேளையில் குறித்த அதிபரின் பையில் இருந்த ஒரு புத்தகத்தை அவரின் அனுமதியின்றி பையிலிருந்து எடுத்தமை சம்பந்தமாக எழுந்த வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதனை வேறு ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இரு சாராரும் தமக்கு சாதகமான விபரங்களை கூறுகின்ற…

    • 2 replies
    • 465 views
  25. பல கட்சிகளைப் பிரித்த இந்த அரசு, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கச் சதி செய்கின்றது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே எமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: பா.அரியநேந்திரன் "தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்காகச் சில சக்திகள் கட்சியினுள்ளும் ஊடுருவியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றது. பல கட்சிகளை உடைத்த இந்த அரசு எங்களையும் பிரிக்க முயல்கிறது. நாங்கள் தமிழர்…

    • 6 replies
    • 618 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.