ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுரபரனின் செல்வி http://www.yarl.com/articles/node/1009
-
- 0 replies
- 539 views
-
-
கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது. சம்பந்தர் அணி சிவாஜிலிங்கம் சிறீகாந்தா அணி கஜேந்திரன் - கஜேந்திரகுமார் அணி சம்பந்தர் தன் முடிவை மாற்றமுடியாது என்கின்றார். குறைந்தது மற்றைய இரு அணிகளையுமாவது ஒன்றாக்க புலம்பெயர் மக்கள் முன்வருவார்களா? இதில் சிறீகாந்தா ஒரு பிரச்னையாக இருப்பதாக என்னால் அறியமுடிகின்றது. மற்றயவர்கள் இவரை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. சிவாஜிலிங்கம் இவரை விட்டு வருவதாக இல்லை. வாக்குகள் சிதறாமல் இந்த இரு அணிகளையும் இணைக்க வழிகள் உண்டா? இவர்கள் இணைந்தால் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவர்களின் பலம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. வாத்தியார் .............
-
- 24 replies
- 2.4k views
-
-
பிக்குகள் நிந்திக்கப்படுகிறார்கள்; அரசு வேடிக்கை பார்க்கின்றது அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம் அரசில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் பிக்குகளைக் கடுமையாக விமர்சித்து நிந்தனை செய்வதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். இதனைக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அண்மைக் காலமாக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிக்கு களையும், மதத் தலைவர்களையும் மதிப்பிறக்கம் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டும், விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர். இது கண்டனத்திற்குரிய செயற்பாடாகும். இவ்…
-
- 2 replies
- 490 views
-
-
எதிர்வரும் புதன்கிழமை, நாட்டு மக்களுக்கு... உரையாற்றுகின்றார், ஜனாதிபதி கோட்டா! எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தட்டுப்பாடு என மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கான தீர்வு குறித்து நாட்டு மக்களிடத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1271876
-
- 2 replies
- 298 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/files/100302_colombo_reporter.mp3
-
- 0 replies
- 534 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியட முடியாது முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் காங்கிரஸ் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். எனவே அந்தக் கட்சியுடன் சேர்வதுதான் பொருத்தமாகும். இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மையக் குழு உறுப்பினருமான கலீல் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில்…
-
- 0 replies
- 361 views
-
-
வடக்கு முலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையினை நடாத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என சபையின் எதிர்க்கட்சித் தவைலர் கமலேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாண சபை அமர்வுகள் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் எதிர்க்கட்சித் தலைவர் கமல் வைக்கப்பட்டுள்ளார். எனினும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கமல் சட்டத்தரணி ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். அதனையடுத்து குறித்த கோரிக்கையினை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபரான கமல் மக்களின் ஆணையினைப் பெற்று வடமாகாண சபைக்கு தெ…
-
- 3 replies
- 472 views
-
-
யாழ்ப்பாணம் அல்லது திருகோணமலையில் இந்தியாவின் ஆந்திரமாநிலத்தின் கைத்தொழில் நடைக்கூடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆந்திர மாநில கைத்தொழில் அமைச்சர் அமர்நாத் ரெட்டி சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளார். அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கடல்வழிப் போக்குவரத்து வசசதிகளைக் கொண்ட சிறிலங்கா, கடலுணவு, மருந்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஆந்திர மாநிலம் சிறந்த இடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற…
-
- 0 replies
- 316 views
-
-
யாழ். சிறையில் இருக்கும் தந்தை தாக்கப்பட்டுள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் முறைப்பாடு Share யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கினார்கள் என யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முறைப்பாடு செய்தவர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை யாழ்ப்பாணத் துக்கு சுற்றுலா சென்றார். அதன்போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 336 views
-
-
“ஜனாதிபதி பதவி விலகி.. ராஜபக்ஷ குடும்பமும், ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” ஜனாதிபதி பதவி விலகி ராஜபக்ஷ குடும்பமு ம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கேட்டுக்கொண்டார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், “இந்த நாடு நன்றாகவே இருந்தது. மக்கள் கடந்த காலங்களில் வரிசையில் இருக்கவில்லை. இந்நிலையில் மக்களின் பேச்சை அரசாங்கம் செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த விளைவு ஏற்பட்டது. உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை என்பவற்றில் மக்களின் குரலை அரசாங்கம் கேட்கவில்லை. தற்போது மக்கள், ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார்கள். இதனையேனும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அரசாங்கம் அவ்…
-
- 1 reply
- 125 views
-
-
‘சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன்’ சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பத்தாவது நாளாகவும் இன்றும் (04) உண்ணாவிரதம் இருக்கும் சுலக்ஸன், திருவருள், தர்சன் ஆகியோரை நேற்று (03) நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வவுனியாவ…
-
- 2 replies
- 373 views
-
-
மனநிறைவோடு, மகிழ்ச்சியோடு... புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை – மாவை! தெருவெல்லாம் போராட்டங்கள் நிறைந்து விட்ட நிலையில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆண்டு தோறும் வழமை போலும் சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துப் பகிர்வதை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தெய்வநம்பிக்கை கொண்ட மக்கள் புத்தாண்டு பிறக்கிற போது புதுநம்பிக்கையோடு நம்பிக்கை கொண்ட தெய்வத்தை நினைத்து மருத்துநீர் வைத்து…
-
- 0 replies
- 122 views
-
-
கால் நடக்க இயலாத பல்கலைக்கழக மாணவனுக்கு கால் கொடுங்கள் அவலம் அகதி வாழ்வென அலைக்கழிந்த பொழுதொன்றில் எறிகணையில் காயடமைகிறான் ஜெகன். ஒற்றைக்கால் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. சரியான மருத்துவம் கவனிப்பின்றி கால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலியும் வேதனையும் அவனைத் தொடர்ந்தே வந்தது. 2009 மேமாதம் தமிழரின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத துயரைத் தந்தபோக அகதி முகாம்களுக்குள் அடைபட்ட லட்சக்கணக்கானவர்களில் ஜெகனும் ஜெகனின் குடும்பமும் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்குள் அடைந்துபோனது. இன்றும் இவனது குடும்பம் அகதி முகாமில்தான் வாழ்கிறது. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மீளவும் கற்பதற்கு யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ள இந்த இளைஞனால் நடக்க முடியாது. வீல்செயாரில்தான் இவன…
-
- 8 replies
- 1.5k views
-
-
10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியலில் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்ற கருணாகரன், பிரதீபன், சுப்ரமணி உள்ளிட்ட பத்து இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பணித்த படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். நெடுந்தீவுக்கு தென் கிழக்கேயுள்ள இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் போது கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவனின் வீட்டில் ஆஜர்படுத்த…
-
- 0 replies
- 214 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு... எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய பதுளை – பசறை பிரதான வீதியின் யூரி தோட்டப் பகுதியில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பலப்பிட்டிய நகர் பகுதியிலும் பொரலந்தை, வெலிமடை, ரெந்தபோல மற்றும் பூனாகலை தோட்டப் பகுதிகளிலும் இன்று காலை தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் உடபுஸ்ஸலாவை – எம்.எஸ் தோட்டம் – கோல்டன் பகுதியில் தோட்ட மக்களால் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 104 views
-
-
இன்று சிங்கள அரசின் ஏழாவது நாடாளுமன்றம் கூடியது. சமல் புதிய சபா நாயகர் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 22, 2010 இன்று சிங்களத்தின் ஏழாவது நாடாளுமன்றம் கூடியது. இந்த நாடாளுமன்றத்தின் சபா நாயகராக சமல் இராஜபக்ஷ தெரிவானார். பிரதமராக டி. எம். ஜெயரட்னவும் அதே வேளை துணை சபா நாயகராக பிரியங்க ஜயரட்னவும் தெரிவு செய்யப்பட்டனர். இதே வேளை சரத் பொன்சேகாவும் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E…
-
- 0 replies
- 637 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் விசாரணைகளை த.தே.கூ முற்றிலும் நிராகரிப்பதாக தீர்மானம்- எம்.ஏ.சுமந்திரன் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் யாழ். பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிட்ட சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, …
-
- 0 replies
- 358 views
-
-
‘அரசியல் கைதிகள் இல்லை’ “அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை” நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நீதியமைச்சில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென, ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார். அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. இன்னும் சில நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்களை செய்யும். எனினும், நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்…
-
- 0 replies
- 325 views
-
-
மனம் திறந்து துணிவோடு எழுதுகோலை எடுப்பவனே உண்மையான போராளி. அவன் சமுதாய காவல் நாய். எங்கே நின்றோம்?எங்கே நிற்கிறோம்?எங்கே போகிறோம்? பாகம்-1 வாழ்வின் முக்கியமான காலகட்டமொன்றில் நாம் பயணிக்கும் பாதை இரண்டாகப்பிரியலாம். அதில் ஒன்று எக்களுக்கு மிகவும் பழகமானதாகவும் பலரும் பயணிக்கும் எழிதான பாதையாக இருக்கும். இன்னொன்று எங்களுக்கு பழக்கமில்லாத ,கடினமான,பலரும் விரும்பாத பாதையாக இருக்கும்.அந்த இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு முன் இரண்டு தெரிவுகள் இருக்கும். ஆனால் தீர்மானம் ஒன்றாக இருக்கவேண்டும்.இது ஆங்கில கவிஞன் ரொபேட் புரொஸ்ட் இனது சிந்தனையில் வந்தது. இதை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை இணையத்தில் படித்த போது, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் "இரண்…
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்று காலை பளையில் இடம்பெற்ற விபத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காலை இடம் பெற்ற விபத்தில் பளை மத்திய கல்லூரியின் மாணவன் பாதசாரிகள் கடவையில் கடக்க முற்பட்ட வேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துவிச்சக்கர வண்டியை மோதியது. இதனால் துவிச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்ததுடன் மாணவன் படுகாயங்களுக்குள்ளானார். பாடசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பாதசாரிகள் கடவையில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதால் ஏ 9 வீதிய…
-
- 0 replies
- 360 views
-
-
மே தினத்தை முன்னிட்டு... நாட்டின் பல பகுதிகளில், கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மே தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் ஏற்பாட்டில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன், கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர…
-
- 0 replies
- 136 views
-
-
ஒராண்டு முடிந்தும் "உதிக்காத வசந்தம்" இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள். வைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன. யுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாள…
-
- 0 replies
- 374 views
-
-
நமது வாழ்வும், நமது மகிழ்வும், நமது மண்ணின் விடுதலையிலே பிண்ணி பிணைந்திருக்கிறது. நமக்கான வாழ்வு என்பதை நமது மண்ணின் வாசத்திலே, நமது மண்ணின் அழகிலே, நமது மண்ணின் உயிர்மையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது மண்ணை பிரிந்து நமது சுவாசமோ, சிந்தனையோ ஒருபோதும் கிடையாது . நாம் சுற்றிச் சுற்றி எதைக் குறித்து பேசினாலும், இறுதியில் நம் மண்ணின் விடுதலைதான் நமக்கான தீர்வாக இருக்கிறது. நமக்கான மகிழ்வு நமது மண்ணின் தன்மையிலே புதைந்திருக்கிறது. நாம் மகிழ்ச்சியை நமது மண்ணிலிருந்துதான் தோண்டி பருக தீர்மானித்திருக்கிறோம். அதற்கான விலையாக நாம், உலக வரலாற்றிலே யாரும் கொடுக்காத விலையை கொடுத்திருக்கிறோம். எந்த நிலையிலும் கொடுத்த விலைக்கான பொருளை அடையாமல் நமது போர் முடியப் போவதில்ல…
-
- 15 replies
- 2.8k views
-
-
இப்போது என்னால் ஏதும் கூறமுடியாது FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்குத் தன்னால் எதுவும் கூறமுடியாது என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். காங்கேசன்துறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசாவே அடுத்த முதலமைச்சராவதற் குத் தகுதியானவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவும் அதற்கு மறுப்பே…
-
- 1 reply
- 549 views
-
-
ஓங்கி ஒலித்த தமிழனின் எதிர்ப்புக் குரல் புதன், 9 ஜூன் 2010( 16:55 IST ) FILE ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்து முடித்து, அம்மக்களின் வாழ்க்கையை சின்னா பின்னப்படுத்திய இனவெறி சிறிலங்க அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ச டெல்லி வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு, இலங்கையில் தங்கள் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள், அதற்கு நீதி பெறாமல் விடவும் மாட்டார்கள் என்பதையே பறை சாற்றுவதாக இருந்தது. சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு அமைப்புகள் இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நடத்தியுள்ள கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும், அதில் ஈடுபட்டு பல…
-
- 2 replies
- 998 views
-