ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
மட்டக்களப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவத்தினர் பட்டிப்பாழை வட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தாந்தாமலை முருகன் கோயில் கற் சிலைகளை இடித்து சிதைத்துள்ளனர் கிழக்குப் பகுதியினர் இக்கோயிலை ' சின்ன கதிர்காமம்' கோயிலென்று அழைப்பது வழக்கமாகும். இதனை சுற்றியுள்ள 25 ஏக்கர் நில பகுதி, 1959-ஆம் ஆண்டில் சிலோன் நீதிமன்ற ஆணையினரால் சைவ புனித தளமாக முத்திரையிடப் பட்டது. தாந்தாமலை முருகன் கோயில், 1994-ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் படையினரால் காக்கப்பட்டும் நன் முறையில் பராமரிக்கப்பட்டும் வந்தது. ஆனால், நடந்த போருக்குப் பின்னர் அது இலங்கை இராணுவ படையினரின் கைக்கும் கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கும் கைமாறிவிட்டது. இதனிடையே, இச்சைவ கோயிலுக…
-
- 7 replies
- 1.2k views
-
-
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உ றுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரியுள்ளதுடன் இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அங்கு முஸ்லிம்களின் …
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள்தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 'சிலோன்' மற்றும் 'ஜப்னா' என இந்தப் படங்களுக்குபெயரிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தத் திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல திரைப்பட இயக்குனர்களான சந்தோஷ் சிவன் மற்றும் சூஜித் சிர்கார் ஆகியோர்இந்தப் படங்களை இயக்குகின்றனர். நீண்டகாலமாக மனதில் இருந்த கதையை திரை வடிவில் கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார் . இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு நிகரான தோற்றத்தை உடையவர்களை திரைப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சூஜித்சிர்கர் தெரிவித்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
யாழ்.மாவட்ட பாடசாலைகளுள் உள்புகுந்துள்ள அரசியலினால் அனைவரும் திண்டாடியே வருகின்றனர். ஏற்கனவே யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அதிபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் தூக்கியடிக்கப்பட்டிருந்தார். கல்வி அதிகாரி ஒருவரது அடாவடிகளுக்கு எதிராக மாணவர்கள் பாடசாலை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டமையையடுத்தே குறித்த அதிபர் பழிவாங்கும் வகையில் தூக்கியடிக்கப்பட்டிருந்தார். குறித்த அதிகாரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய உறவினராக இருந்தமையே பழிவாங்கலிற்கு காரணமாகவிருந்திருந்தது. இதனிடையே யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரான திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடமாற்றத்தை எதிர்த்து…
-
- 3 replies
- 958 views
-
-
சிறுவர்கள் பற்றிய கறுப்புப் பட்டியலில் இருந்து சிறீலங்காவை அகற்றியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அந்த நாடு முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. சிறுவர்களும், ஆயுத மோதலும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அறிக்கையில், இலங்கையில் சிறுவர்களுக்கான கல்வி, சுகாதாரம், மற்றும் காணாமல்போன சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை என்பவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், போரில் ஈடுபட இணைக்கப்பட்டிருந்த 1400 சிறுவர்கள் இதவரை எங்கு எனத் தெரியவில்லை எனவும், இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது. இருப்பினும், இந்தச் சிறுவர்களைத் தேடிக்கண்டுபிடிக்க …
-
- 0 replies
- 777 views
-
-
தமிழ் மக்களின் வெளி;ப்பாடகவே நான் சிங்கக் கொடியினை ஏற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சமூக அமைச்சின் நிகழ்வென்றில் வைத்து சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பேரேரா பல தடைவ வர்புறுத்தியும் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை ஏற்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயக மூர்த்தி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்நதார். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பாத்துரை விநாயமூர்த்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலேயே மேற்படி விடையத்தினைத் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 784 views
-
-
கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற ‘வீவா’ உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு கனடா, ரொறன்ரோ, பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது. குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். ஐ.நா. நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே ’ஃபீஃபா’ (FIFA) அமைப்பினால் நடத்தப்படும் உதைபந்த…
-
- 0 replies
- 739 views
-
-
யேர்மனி Rheinland Pfalz மாநிலத்தில் சென்ற சனிக்கிழமை பல்லின சமூகத்தினருக்காக நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் தமிழ் இளையோர்கள் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை கலை நிகழ்வின் ஊடாக வெகுசிறப்பாக எடுத்துக்காட்டினார்கள் .500 க்கும் மேலான யேர்மனியர்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் பலர் இப்படியான கொடுமைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் செய்தி தாம் இதுவரை ஆழமாக அறியவில்லை எனவும் அதேநேரம் இன்றைய உலகில் இப்படி நடந்திருப்பது மிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்தனர் . அத்தோடு இவ் நிகழ்வில் Landau நகர உள்ளூர் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமிழ்மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர் .இளையோர்களால் வழங்கப்பட்ட நாட்டிய நாடகத்தில் புலத்தில் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் அந்தந்த நாடு…
-
- 0 replies
- 386 views
-
-
மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறார் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ‘அரசிடம் புள்ளிவிபரம் இல்லை’ இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறார் நலத்துறை துணையமைச்சர் தெரிவித்தார். ஆனால், நாட்டில் சிறார் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ். மாநகர சபையின் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்ததோடு கலாசார சீரழிவுகள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டதனாலேயே யாழ். கோயில் வீதியில் உள்ள “நாது’ விடுதி இழுத்து மூடப்பட்டது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மேலதிக விளக்கங்களுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ். நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த மாதம் 23 ஆம் திகதி யாழ். மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் அந்த விடுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த விடுதி உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்கிவந்தது தெரியவந்தது. அத்த…
-
- 0 replies
- 628 views
-
-
இனவாதமும், மதவாதமும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்டஅபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலைக்கான பாடசாலை கட்டிடம், அதிபர் விடுதி, கணணி பிரிவு என்பனவற்றை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொ்ண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர்.அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் மேலும் கூறியதாவது: இனங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வை சீர் குல…
-
- 6 replies
- 864 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட…
-
- 7 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட சுமார் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான போலியான இந்திய நாணயத்தாள்கள், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஊடுருவ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய போலி நாணயங்கள் குறித்த தேசிய விசாரணைகள் குழுவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் போலி நாணய அச்சிடும் முகவர்களால் அச்சிடப்பட்ட இவ்வாறான நாணயத்தாள்கள், இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், ஹொல்லேண்ட் போன்ற நாடுகளில் பரவியுள்ளன. இது தொடர்பில் தொடர்சியாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும், புலக்கத்தில் உள்ள 28 தொடக்கம் 30 சதவீதமான போலி நாணயத்தாள்களை காவற்துறையினரால்…
-
- 8 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய அரசாங்கம் தனது குடிவரவுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை சட்டங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு கிரிமினல்கள் ஐக்கிய இராச்சியத்தில் நுழைவதை தடுப்பதற்கும் நாடுகடத்தல்களை தவிர்ப்பதற்கும் குடியேறுபவர்கள் தமது குடும்ப வாழ்க்கையை சொந்த நிதியியில் மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிகக்ப்படுகிறது. குடும்ப குடிவரவு சலுகைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதையும் அரச சேவை மீதான அழுத்தங்களை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பிரித்தானிய குடிவரவுக் கொள்கையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு…
-
- 1 reply
- 981 views
-
-
யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளதுடன், இடமாற்றத்திற்கு தமது கடுமையான எதிர்பையும் வெளியிட்டிருக்கின்றனர். திருமதி.பொன்னம்பலம் ஓய்வுபெற்ற பின்னர் அதிபராக திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபராக எந்த விதமான முன்னறிவித்தலுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்தே இன்று பிற்பகல் 2மணி தொடக்கம் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த திடீர் இடமாற்றத்திற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என பாடசாலை சமுகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதிபருக்கும் அவருக்கும…
-
- 0 replies
- 641 views
-
-
பூசா தடுப்பு முகாமில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னால் பெண் போராளி ஒருவரின் சகோதரியை பணயமாக்கி குறித்த முன்னால் பெண் போராளியை மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ள சம்பவம் வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருகையில். வெளிநாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காக அண்மையில் தொடர்ச்சியாக முன்னால் போராளிகளை புணர்வாழ்வளித்து கட்டம் கட்டமாக சிறிலங்கா அரசு விடுவித்து வருவதாக நாடகமாடிவருகின்றது. அதன்படி அண்மையில் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குறித்த பெண் போராளி வன்னியில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுவிக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கை பரவலாக இடம்பெற்று வரும் நி…
-
- 0 replies
- 791 views
-
-
கணபதிப்பிள்ளை உதயகாந்தனின் கொலைக்குக் காரணம் தனிப்பட்ட பிரச்சினைதான் எனக்கூறப்பட்ட போதிலும், அதன் பின்னணியில் இனம்தெரியாத ஆயுதக்குழு ஒன்று சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவரின் சடலம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை தெரிந்த்தே. அவரின் சடலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திறப்பும்தலைக்கவசமும் கண்டெடுக்கப்பட்டன. அதேவேளையில் அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் சிம் அட்டையும் செயலிழந்த நிலையில் அங்கு இருந்தன. சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் அவரின் மோட்டார் சைக்கிள் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இருந்து பம்பலப்பிட்டிபொலிஸாரி…
-
- 0 replies
- 850 views
-
-
லீனா மணிமேகலை பிடிபட்டார்! by வினவு, June 12, 2012- பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள், ______________________________________________ புரட்சித் தலைவி டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. 1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘JUSTICE’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜ°டி° கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31…
-
- 1 reply
- 3.6k views
-
-
தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது. எதிர்வரும் (யூன்) 15 - 16 - 17ம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளிலும், சர்வமத வழிபாட்டுத் தலங்களில் , இதற்கான ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ,அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்ட…
-
- 1 reply
- 459 views
-
-
முள்ளிவாய்க்காலில் சல்லடை போட்டு தேடுதல் செய்யும் இராணுவத்தினர் பொதுமக்கள் மத்தியில் பீதி முள்ளிவாய்க்கால் பகுதியை சல்ல டை போட்டு அங்குலம் அங்குலமாக இராணுவத்தினர் தேடிவருகின்றனர் என அப்பகுதியிலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தன.யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய பிற்பாடும், ஆன ந்தபுரம், சாலை, வலைஞர்மடம், புதுமாத்தளன்,இரட்டைமுள்ளிவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதியை இராணுவத்தினர் தொடர்ந்தும் கடும் தேடுதலுக்கு உள் ளாக்கி வருகின்றனர். இங்கே காணப்படும் மனித எலும்புக ளை உருக்கி உக்கவைக்க சில திரவங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இதனைத் தவிர விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த இராணுவத் தளபாடங்கள், ஆ…
-
- 1 reply
- 574 views
-
-
வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடருக்கான தயார்படுத்தல்களை ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனிசா குணசேகரவே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நகர்வுகள் ஏதும் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், இவரே இம்முறை சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. அண்மைக்காலமாக சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வந்ததால், சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகார ஆலோசகரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே பங்கேற்று வந்தது. ஆனால், இம்முறை மகிநத …
-
- 0 replies
- 691 views
-
-
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பீட மாணவி ஒருவர் பகிடிவதை என்ற போர்வையில் தனக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கடிதத்தை பல்கலைக்கழக உபவேந்தர் உயர்கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் பொருளாதார தடைகளிலிருந்து இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு 6 மாத காலத்திற்கு விதிவிலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, மலேஷியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, துருக்கி, தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இவ்விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இந்நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை கணிசமாக குறைத்துக் கொண்டமையே இதற்கான காரணம். ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 11 நாடுகளுக்கு இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அணுவாயுதங்களை ஈரான் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கும் சர…
-
- 0 replies
- 1k views
-
-
நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். உற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் …
-
- 26 replies
- 2.1k views
-