Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது. இதுதொடர்பாக ஜெனிவாவில் நடந்த இரகசியபேரங்கள், சந்திப்புகள், ஆலோசனைகள் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் வெளியான - தமிழில் வெளிவராத - தகவல்களின் தொகுப்பு இது. தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய - அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். இதன்போது “ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்“ என்ற …

    • 12 replies
    • 1.7k views
  2. கடந்த 2 ஆம் திகதியன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway’s Peace Engagement with Sri Lanka” (உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல்: ) என்கிற நூல் ஒரு முக்கியமான நூல். சிறிய எழுத்துகளைக் கொண்ட 550பக்கங்களுடன் பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நூலை எழுதியவர் மார்க் சால்டர் (Mark Salter). மார்க் சால்டர் இந்த நூலின் முதலாவது வெளியீட்டை ஏற்கெனவே கடந்த ஒக்டோபர் மாதம் 15 அன்று லண்டனில் வெளியிட்டுவிட்டார். Mark Salter இந்த நூலுக்காக கையாண்ட பல தகவல்கள்; மூலத் தகவல்களை உள்ளடக்கியது என்பதால் மிகவும் முக்கியத்துவமுடையது. குறிப்பாக எரிக் சுல்ஹைம், வீதார் ஹெல்கீசன் மற்றும் முக்கிய பலருடன் நட்புடையவர். இவர்கள் பொதுவாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளியிடாத தகவல்கள் கூட இந்த …

  3. இலங்கைக்கு இன்று விஜயம் தரும் கன்டபெரியின் பேராயர் கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின் ஆயர் டிலோராஜ் ஆர் கனகசபை ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் இவர் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று இலங்கை வரும் கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை திர்வஷரம் சனிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். இன்று மாலை சர்வ மதத் தலைவர்களை சந்தித்து பேராயர் கலந்துரையாடலில் ஈடுபடுவார். தமது விஜயத்தின் ஞாபகா…

  4. யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்! நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

  5. மாவை முன்பாக சுகாதார தொண்டர் தற்கொலை முயற்சி…. September 5, 2019 யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளேசெல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. …

  6. இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது. 15 வது சாக் மாநாடு மாலைத்தீவில் இம் முறை நடைபெறவிருந்த போதும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் கண்டி மாநகரில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கபட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டு வருகின்றன. இம் மாநாட்டிற்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு தீர்வு யோசனைகளை சர்வ கட்சி முன் வைத்துள்ளது. அதனை மாநாட்டிற்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு இந்தி அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இந்தியா அரசுகள் கை…

    • 7 replies
    • 3.1k views
  7. கடத்தல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திரச சமரசிங்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று இலங்கையில் இரகசிய காவல்துறையினர் கடத்தல்களில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையினரும், அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரேம்குமார் குணரட்னத்தை காவல்துறையினர் கைது செய்யவும் இல்லை அவரை விடுதலை செய்யவும் இல்லை என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globa…

  8. மட்டு-அம்பாறையில் எழுக தமிழ் பரப்புரைகள் முன்னெடுப்பு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.வசந்தராஜா தலைமையிலான எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் இப்பரப்புரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் குறித்த பகுதிகளில் உள்ள சமூக மட்ட அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் எழுக தமிழ் குறித்த கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வாளைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி-வாகனேரி, கிராண், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகரம், …

  9. தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 32 பேரில் பத்துப் பேரே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். தாம் இலங்கை போரில் இருந்து பாதுகாப்புக் கோரியே தமிழகத்துக்கு வந்ததாகவும், தமக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் அவர்களில் சிலர் கூறியுள்ளனர். தமது குடும்பத்தினர் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பத்தில் இருப்பதால், அவர்களை தாம் பராமரிக்க வேண்டியிர்ப்பதாகவும் ஆகவே பிணையிலாவது தம…

    • 0 replies
    • 263 views
  10. வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி -சொர்ணகுமார் சொரூபன் நாடாளவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை (03) மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் தற்போது மழை காலம் என்பதால், தொற்று நோய்களின் தாக்கத்துக்குள்ளாகிய பலர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர். எனினும், அவசர நோயாளிகள் தவிர்ந்த ஏனையோர் பார்வையிடப்படாமையால் அந்த மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வரவு- செலவுத் திட்டத்தில் தங்களுக்கான அடிப்படைச் சம்பள அதிகரிப்புச் செய்யப்படாமை, வாகன சலுகை நிறுத்தப்பட்டமை மற்றும் இத…

  11. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பணவு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பணவாக 6000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. https://www.virakesari.lk/article/65222

  12. ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் பங்களிப்பு இன்றியமையாதது - சஜித்துடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 07 Dec, 2024 | 01:02 PM (எம்.மனோசித்ரா) ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார செழிப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமையளித்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்…

  13. ஈழத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டம் - மருத்துவர் ராமதாஸ் ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று ராமதாஸ் தலைமையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைப் சிறுத்தைகள் தலைவர்கள் உட்பட தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றியாற்றும் போது மருத்துவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய அரசு இலங்கைக்கு ஆயுததளபாட உதவிகளை மற்றும் படைத்துறைப் பயிற்சிகை வழங்குவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாமான தீர…

  14. போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்! தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை …

  15. அதிகாரப் பகிர்வு: ராஜபட்ச உறுதியளிக்கவில்லை' பி. கே. பாலசந்திரன் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் எந்தவிதமான உறுதியையும் அதிபர் ராஜபட்ச அளிக்கவில்லை என்று "தி ஐலேண்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது. ""அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார்'' என்று அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியொரு உறுதிம…

    • 0 replies
    • 472 views
  16. 34 கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரி பொது மன்னிப்பு அளித்தார் [ Friday,18 December 2015, 04:47:24 ] மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 34 கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய இந்த 34 கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் நீதியமைச்சு அதற்கான அறிவித்தல் அறிக்கையை சிறைச்சாலைகள் தலைமையகத்திடம் அளித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 15 வருடங்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. http://…

  17. சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – ஆனந்தசங்கரி தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார். இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலககேண்டும். அவர…

  18. கொழும்பில்ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவையில் இருந்து மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்று யாழ்ப்பாண மாணவர்கள் வெள்ளை வாகனத்தில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகப் பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. மந்துவிலைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கஜன் அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன். வடமாராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆருரன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். இதில் பட்டமளிப்புக்குப் பின்னர் கஜன் சார்ட்டட் எக்கவுன்டன்சி கல்வியை மேற்கொண்டு வந்தார். செல்வரஞ்சன் பட்டம் பெற்ற பின்னர் இன்னும் இரண்டு கிழமைகளில் வெளிநாடு செல்ல ஆயத்தமாகியிருந்தார். ஆருரன் தமத…

    • 0 replies
    • 816 views
  19. தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய், பச்சை அரிசியின் விலையை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் Published By: Digital Desk 7 08 Jan, 2025 | 07:31 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா…

  20. முல்லை மாவடம் விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்ரல் உள்ளிட்ட 3 இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை செய்ய கிளி நொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் விசா ரணை நடத்திவரும் பொலிஸார், சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியிலிருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவத்தினர் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றி டம் நேற்று அனுமதி கோரினர். அதற்கு அனுமதி வழங்கிய கிளிநொச்சி நீதிமன்றம், இராணுவத்தினர் மூவரதும் துப்பாக்கிகளையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படி அந்தப்பகுதிஇராணுவப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த அன்றே விசாரணை நடத்தச் சென்ற சமயம், இது இராணுவத்தினர் தொடர்புபட்டது என்ற காரணத்தால் இராணுவ…

  21. Out of media player. Press enter to return or tab to continue. தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன் தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் பரவலாக நிலவிவ…

  22. Published By: DIGITAL DESK 2 18 JAN, 2025 | 12:41 PM கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நகர அபிவிருத்தி,நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைசசர் ரி.பி சரத் ஆகியோரின் விஜயம் நேற்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது. இதன் போது, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (WaSSIP கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும், அதன் செயற்பாடுகளையும் அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடம் கேட்டறிந்து கொண்டனர். இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மா…

  23. இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது. இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன. அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர். சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது. பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூ…

  24. அரசியலமைப்பு மாற்றத்துக்கு 11 சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை! - ஜயம்பதி விக்கிரமரட்ண [Thursday 2015-12-31 07:00] அரசியலமைப்பின் சரத்துக்களை மீறாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காதென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியலமைப்பு நிபுணரான முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் திருத்தம் செய்யப்படவுள்ள 11 சரத்துக்களுக்காக 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம…

    • 0 replies
    • 349 views
  25. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக, 108 தேங்காய்கள் உடைத்து விசேட வழிபாடு ஒன்று, இன்று (1) கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாட்டைத் தொடர்ந்து 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. கிளிநொச்சியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களால் குறித்த விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றுடன் தபால்மூல வாக்களிப்புகள் நிறைவடையும் நிலையில், இந்த விசேட வழிபாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/வன்னி/சஜததன-வறறககக-சதறததஙகய-உடபப/72-240637

    • 3 replies
    • 695 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.