ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு படகு வடக்கு அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள தீவொன்றினருகே வைத்து அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைப்பற்றிப்பட்டுள்ளது. 41 பேருடன் வந்து கொண்டிருந்த இந்தப் படகு அஷ்மோர் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் அறிவிக்கப்படாத போதிலும் இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. http://www.tamilstar.org
-
- 0 replies
- 658 views
-
-
நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன் 02 நவம்பர் 2013 பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுநரை மாற்றுமாறும்இ படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலியஇ நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். "எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லைய…
-
- 17 replies
- 1.4k views
-
-
ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் ராஜதந்திரமற்றவர் எனவும், தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல எனவும் அவர் குற…
-
- 0 replies
- 194 views
-
-
மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்-கதிர் November 17, 2021 மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர், “தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் என்பது …
-
- 0 replies
- 294 views
-
-
இராணுவக் காவல்துறை அதிகாரிகளும், சிப்பாய்களும் நேற்றிரவு (25) பின்றிரவு 12.30 அளவில் ஜெனரல் சரத் பொன்சேக்கா தங்கியுள்ள புளஸ் வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு அருகே சென்று, அவர் தற்போது பயன்படுத்தும் வாகனத்தை பலாத்காரமாக கொண்டுசெல்வதற்கு முயற்சித்துள்ளனர். ஓய்வுபெற்றுள்ள சரத் பொன்சேக்கா பயன்படுத்துவதற்காக இராணுவத்திற்குச் சொந்தமான சில வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் அடங்கிய மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய செயற்படுமாறும் சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு அதிகாரியொருவர், அங்கு வாகனத்தைக் கைப்பற்ற வந்த இராணுவ …
-
- 0 replies
- 590 views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும் என சிரேஸ்ட ராஜதந்திரியும் முன்னாள் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயலதிக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்காவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நிச்சயமாக இடைவெளி ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் அமர்வுகளை புறக்கணித்தால் அது குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கையில் பெரு விரிசலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமர்வுகளில் பங்கேற்காது தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தியாவின் முனைப்புக்களில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும்…
-
- 0 replies
- 360 views
-
-
ஜுனைட் நளீமி- மட்டக்களப்பு மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கான காணிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மங்கலராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பாடசாலைக்காணியை அத்துமீறி பிடித்துள்ளதாகவும், மாவட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகள் இனரீதியாக செயற்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த காணி தொடர்பில் எவ்வித பின்னணியும் இன்றி முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி தமிழ் சகோதர இனத்துடன் முறுகல் நிலையை தோற்றுவிப்பதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது. குறித்த காணியில் 1950களிலேயே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது பதுரியா என அழைக்கப்படும் இப்பிரதேசம் கொண்டயன்கேணி தோட்டம் என அப்போது அழைக்கப்பட்டது. தற்போ…
-
- 0 replies
- 569 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் சில கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரித்தானிய பிரதமரிடம் சில கேள்விகளை எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சில முக்கியமான கேள்விகளை இலங்கை ஜனாதிபதியிடம் எழுப்ப உள்ளதாகத் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்களில் எதனையும் மறைக்க …
-
- 16 replies
- 1k views
-
-
தங்க புத்தர் சிலையை கொள்ளையிட முயற்சி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி (எம்.எப்.எம்.பஸீர்) மீகளேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லஸ்ஸன கம பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இருக்கும் தங்க புத்தர் சிலை மற்றும் மாணிக் கக்கற்களை கொள்ளையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வரு கை தந்த கொள்ளையர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் காவலின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லஸ்ஸனகம விகாரையில் உள்ள தங்க புத்தர் சிலையையும், மாணிக்கக் கற்களையும் க…
-
- 3 replies
- 442 views
-
-
புலிகளை எழுப்பவா, வவுணதீவு தாக்குதல் நடத்தப்பட்டது? December 4, 2021 வவுணதீவில் காவற்துறையினர் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்பியத் பின்னிணியில் இருந்தவர்கள் யார்? ஆலோசனை வழங்கியவர்களை் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (JVP) கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அச்சம்பவத்தை பொறுப்பேற்க அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்ற தகவல்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தி உள்ளார். மகிந்த ராஜபக்ஸபிரதமராக இருந்த 52 நாட்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வவுணதீவு கொலை சம்பவத்தை விடுதலைப் புலிகளின் முன்…
-
- 0 replies
- 311 views
-
-
தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழில் வன்முறைகள் கட்டவிழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறைகள் முன்னரை விடத் தற்போது ஒரு படி அதிகரித்துள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பருத்தித்துறை திக்கம் கலாசார மண்டபத்தில் பிரதேச இளையோருடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. அதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், ச.சுகிர்தன் ஆகியோரும் கலந்துகொண்டி…
-
- 19 replies
- 643 views
-
-
10 நாட்களில் 150 வெடிப்பு சம்பவங்கள் : இரு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம் (ஆர்.யசி) சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சில தினங்களில் வழக்கு தொடர நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன், அதிகாரசபையின் சட்ட ஆலோசனை குழு இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றவருவதாக கூறப்படுகின்றது. நுகர்வோர் அதிகாரசபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். இலங்கையில் விநியோகிக்கும் சமையல் எரிவாயுக்களின் கலப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து கடந்த சில மாதங்களாக நாட்ட…
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கை அரசின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பொன்றின் முதற்கட்ட முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 53 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 45 வீதவாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் "இருதின" சிங்கள வார ஏடு இந்தத் தகவலைத் வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் விவரம் வருமாறு: அரசினால் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களால் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதன் விஷேட அம்சமாகும். வாரந்தோறும் இவ்விதமாக மேற்கொள்ளப்படவுள்ள கருத்துக் கணிப்புகளின் அறிக்கைகள் ஜ…
-
- 29 replies
- 2.7k views
-
-
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கை விவகாரம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் சிதம்பரம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளத…
-
- 2 replies
- 430 views
-
-
பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் பெண்களுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பாராளுமன்றத்தில் படம் எடுத்த மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அழகுப் பெண்களுடன் அமைச்சரை கிளிக் செய்த அமைச்சர் கருணாவை மற்றுமொரு செய்தியாளர் கிளிக் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது தெற்கு ஊடகங்களில் அதிகப் பிரதிகளை விற்பனை செய்துகொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilworldtoday.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
மஹிந்தவின் பாரியார், மகன்களுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம் ஷிரந்தி,யோஷித்த சி.ஐ.டி.க்கு;ரோஹித்த எப்.சி.ஐ.டி.க்கு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோஷித்த ராஜபக் ஷ, ரோஹித்த ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மஹிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவும், இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் நாளை இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நட…
-
- 10 replies
- 931 views
-
-
வவுனியாவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்! வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி .தம்மிக்க விஜயசிறியின் ஆலோசனைக்கு அமைவாக தைத்திருநாளை முன்னிட்டு நகரில் மாபெரும் சிரமதானம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழ்மை) காலை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . தைத்திருநாளை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் கருப் பொருளில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள சிரமதானமானது கண்டிவீதி ,ஹொறவப்பொத்தான வீதி , புகையிரத வீதி , மன்னார் வீதி போன்ற வீதிகளிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்றது . வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி , வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், …
-
- 0 replies
- 355 views
-
-
மஹிந்த சிந்தனை2இன்று வெளியிடப்படும் வீரகேசரி நாளேடு 1/11/2010 9:31:31 AM - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை2 இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனையில் இதுவரைக்கும் நிவர்த்திசெய்யப்படாத செயற்திட்டங்களை உள்ளடக்கியே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவிருக்கின்றது என்று கூட்டமைப்பு தேர்தல் பிரசார நிலையம் அறிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைப்பார்.. இந்த வைபவத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது. முழு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்திருப்பவர், எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை. மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இத்தகைய முடிவினை மேற்கொள்ள முடியும். சரத்திற்கு ஆதரவு தெரிவித்தவுடன் இவருக்கு வழங்கப்பட்ட சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்களெனத் தெரிந்திருந்தும் தனது முடிவினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவரை அரசியலிற்குள் அழைத்து வந்தவர்கள்…
-
- 5 replies
- 721 views
-
-
தெஹிவளை பள்ளிவாசல்கள் மூடுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த முயற்சிக்கு இடமளிக்கக் கூடாது எனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் கோரியுள்ளனர். அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசீ, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், பிரதி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர், சமய விவகார அமைச்சரும், பிரதமருமான டி.எம். ஜயரட்னவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தெஹிவளையில் அமைந்துள்ள சில பள்ளிவாசல்களை மூட முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தெஹிவளையில், மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். பள்ளிவாசல்களை மூடும் முனைப்புக்களின் பின்னணியில் கடும்போக்குடைய சக்திகள் இயங்கி …
-
- 0 replies
- 346 views
-
-
தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!! காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து சற்று முன்னர் சுன்னாகம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது. இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/22626.html
-
- 1 reply
- 282 views
-
-
உயிரை கொடுத்தும் நாட்டின் மக்களை காப்பாற்றுவேன். நாட்டின் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த சரத் பொன்சேகாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரத்நாயக்க மற்றும் தென்மாகாண எதிர்க்கட்சித் தலைவர் புத்திக பத்திர ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண் டனர். தாம் நாட்டை நேசிப்பதுடன் நாட்டின் இறை மையை பாதுகாப்பதாகவும்…
-
- 3 replies
- 1k views
-
-
சட்டத்தைக் கொண்டு மட்டும் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பாடசாலைகளிலேயே மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் சட்டங்களைக் கொண்டு மட்டும் அரசாங்கத்தினால் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற சுனாமின நினைவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100023&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 385 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒன்றிணைய அழைப்பு யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கிடக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னோரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதே…
-
- 0 replies
- 207 views
-