ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
புலிகளா சுட்டார்கள்? - தப்பிய மீனவர் பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_04_08.pdf நக்கீரன் வார இதழ்
-
- 0 replies
- 1k views
-
-
போர்க்குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளிக்க திட்டம்? FEB 02, 2015 | 1:52by கார்வண்ணன்in செய்திகள் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, நியோமல் பெரேரா, ஐ.நாவின் விசாரணைகளையும், அனைத்துலகத் தர நியமங்களுக்கேற்ப உள்நாட்டு விசாரணைகளை நடத்தும் யோசனைகளையும் நிராகரித்து வந்தவர். ஆனால், அவர் தற்போது அனைத்துலகத் தடைகளை தவிர்த்துக் கொள்வதற்காக, அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணைக…
-
- 5 replies
- 834 views
-
-
நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் தமிழீழத் தேசியதத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிக்கப் பட்டுள்ளார். நாவண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவிலேயே தமிழீழத் தேசியத் தலைவரால் இவர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் சுயநலன்கருதாது நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேசசுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம்இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்து இந்தக் கலைமாமணியைப் புரிந்து இந்தக் கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம். இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது. வற்றாதகலையுணர…
-
- 1 reply
- 835 views
-
-
இந்த அளவுக்கு உணர்வாளர்கள் திரண்டு வருவார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களே நினைக்கவில்லை.. இத்தனை நாட்களாக இவர்களெல்லாம் எங்கேயிருந்தார்கள் என்றும் யோசிக்க வைத்துவிட்டார்கள் நேற்று மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழர்கள்..! ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ம் தேதியை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு அதே தினத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தாய்த் தமிழகத்தின் தலைநகரில் நமது தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிகழ்ச்சியை மே 17 என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந…
-
- 2 replies
- 621 views
-
-
டக்ளஸ் திடீர் சுகவீனம் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் கொடியேற்றிய கையோடு அமைச்சர் திடீரென தமக்கு மயக்கம் வருவதாக தெரிவித்ததை அடுத்து உடனடியாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் நேற்றிரவு தகவல் வெளியிட்டன.அவரின் உடல் நிலை தொடர்பான விவரம் எதனையும் தெரிவிக்க ஆஸ்பத்திரி வட்டாரங்கள் மறுத்துவிட்டன. 03 ஜுலை 2011, ஞாயிறு 7:50 மு.ப http://onlineuthayan.com/News_More.php?i…
-
- 7 replies
- 1k views
-
-
இலங்கைக்கு எதிராக ஆவணப்படமொன்றை தயாரிக்க சனல்4 இயக்குனர் கலம் மக்ரே நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கலம் மக்ரே இலங்கைக்கு எதிராக மற்றமொரு புதிய ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றார். இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு 10,000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டு வருகின்றது. விசேட நிதியமொன்றை ஆரம்பித்து அதன் ஊடாக இவ்வாறு பணம் திரட்டப்பட உள்ளது. கிங்ஸ்வாடர் என்னும் பெயரில் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சனல்4 நிறுவனத்திற்காக ஏற்கனவே இவ்வாறான நிதியங்களின் ஊடாக மக்ரே பணம் திரட்டியுள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=126346&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 362 views
-
-
09 AUG, 2023 | 01:10 PM கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து வெறும் ஒன்றரை மீற்றர் உயரமே கொண்ட இயக்கச்சி பிரதேசத்தின் ஆற்று சமவெளி பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மணல் அகழப்பட்டு யாழ்ப்பாணத்தை நோக்கி கொண்டு செல்வதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மணல் அகழ்வை உடனடியாக தடுக்காவிட்டால் மிக விரைவில் இயக்கச்சி பிரதேசத்தின் நிலங்களும் மாற்றமடைந்து மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த விடயத்தை சம்பந்…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
இனவெறி கொண்ட சிறிலங்காவுக்கு அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர். விளையாட்டும் அரசியலும் பின்னிப்பிணைந்தவையாகவே காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த வகையில் தென்னாபிரிக்க அணி தனது வரலாற்றில் சந்தித்த துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தடை பற்றிய விழிப்புணர்வு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்காவின் பிரச்சாரப் போரிற்கு முழுமையான ஆதரவைத் தருவதாக இங்கிலாந்தின் முக்கிய கட்சியான லிபரல் டெமோக்கிரட்ஸ் அறிவித்துள்ளது. சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டித் தடைகளை எதிர்காலத்தில் பெறலாம் என்ற நிலையிலேயே தமிழர்களும் இது குறித்த ஆலோசனைகள…
-
- 3 replies
- 1.4k views
-
-
Posted by சங்கீதா on 07/07/2011 in செய்தி இலங்கையின் கொலைக்களம் வீடியோ காட்டிய உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு இலங்கை மீது அவுஸ்திரேலியா அரசு மனித உரிமை மீறலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இல்லையா? என்று அவுஸ்திரேலியா வானொலிச் சேவை ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அவுஸ்திரேலியா அரச தொலைக்காட்சியான ஏ.பி.சி. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு 4 கோர்னர் என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணத் திரைப்படத்தை ஒளிபரப்பியது. இதை அடுத்து அவுஸ்திரேலியா 3 ஏ.டபிள்யூ என்ற வானொலிச்சேவை ஆஸ்திரேலியா முழுவதும் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணத் திரைப்படம் இலங்கை தொடர்பான ஆஸ்திரேலிய கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற…
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கை அரசியலில் பரபரப்பு - யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன? இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளது பற்றி யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள். https://www.bbc.com/tamil/sri-lanka-46002522
-
- 4 replies
- 1k views
-
-
நாய்கள் நடத்திய கண்டனப் பேரணி கொல்லாதே... கொல்லாதே...! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நாய்களைச் சுட்டுப்போடும் ஒருவகை முறைமை நடந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் எல்லா நாய்களும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினால் நிலைமை எப்படியிருக்கும். இப்படி யொரு கற்பனை செய்தோம். அடேங்கப்பா! இதோ நாய்களின் கண்டன ஆர்ப்பாட்டம். கொல்லாதே... கொல்லாதே... எங்கள் இனத்தைக்கொல்லாதே... கைது செய்... கைது செய்... குற்றவாளியைக் கைது செய். அமுல்படுத்து... அமுல்படுத்து... மகிந்த சிந்தனையை அமுல்படுத்து இவ்வாறு கோஷமிட்டவாறு நாய்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டப் பேரணியில் வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள், வீட்…
-
- 0 replies
- 772 views
-
-
அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்க பிரிட்டன் இலங்கைக்கு உதவும் பிரதமர் பிளயரிடமிருந்து ஜனாதிபதிக்குக் கடிதம் நோர்வே அனுசரணையுடன் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு பிரிட்டன் உதவி புரிய உள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் இலங்கை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது சம்பந்தமான நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக தமது சார்பில் பேச்சு நடத்த இரு விசேட தூதர்களை அனுப்ப இருப்பது குறித்தும் அவர் பிரிட்டிஷ் ஜனாதி பதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதர் பிரதமர் பிளயரின் கடிதத்தை ஜனாதிபதி காரியா லயத்தில் கையளித்தார் என்று நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது. உதயன்
-
- 0 replies
- 690 views
-
-
14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்தவுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு November 7, 2018 எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடப்படும் என என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கட்சிதலைவர்களின் சந்திப்பின் போது ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்றத்தில் சம்பிரதாய அமர்வொன்று மாத்திரமே இடம்பெறவேண்டும் எனவும் பாராளுமன்ற பாரம்பரியத்தினை பின்பற்றி அன்று அதனை ஒத்திவைக்கவேண்டும் எனவும் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்…
-
- 0 replies
- 329 views
-
-
சிவசங்கர மேனனுடன் ஹிலாரி சந்திப்பு அமெரிக்க வெளியுறவுத் துறையின் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2 நாள் அரசு முறை பயணமாக விமானம் மூலம் 18.07.2011 அன்று இரவு டெல்லி வந்தார். 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்து பேசினார். 19.07.2011 அன்று காலை டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹிலாரி கிளிண்டன் பேச்சு நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையில் திட்ட கமிஷனின் துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா, வெளிநாட்டு செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். டெல்லி பேச்சை முடித்துக்கொண்டு ஹிலாரி கிளிண்டன் 20ந் …
-
- 1 reply
- 516 views
-
-
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள மாலதி கலையரங்கம் இன்று நண்பகல் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கலையரங்கக் கட்டடத்தின் உட்புறத்தில் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீவைக்கப்பட்டமையால் அது விரைவாக பரவியதுடன் கொழுந்து விட்டு எரிந்து கட்டடத்தின் கூரையும் சேதமடைந்தது. இன்று நண்பகல் 11 மணியளவில் கட்டடத்தில் இருந்து புகை வருவதை அவதானித்த வழிப் போக்கர்கள் மற்றும் கல்லூரியில் நின்ற ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இணைந்து தீயை அணைத்துள்ளார்கள். இந்த கலையரங்கம் எரியூட்டப்பட்டதால் சுமார் ஐந்து லட்சம் ரூபா வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினால் கோப்ப…
-
- 0 replies
- 482 views
-
-
SC stays proclamation dissolving parliament. http://www.dailymirror.lk/article/SC-stays-proclamation-dissolving-parliament--158295.html அய்யோ சிறிசேன தீடீரென சன்னதம் கொண்டு ஆடி, நாட்டினைப் இரு வாரங்களாக கடும் பரபரப்பில் வைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாராளுமனற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. நாளை நாடாளுமன்றம் கூடுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், முன்னாள் பாராளுமனற உறுப்பினர்கள், மீண்டும் இந்நாள் உறுப்பினர்களான அதிசய அரசியல் நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது. பதவிப் பேராசையால், மைத்திரிபலாவை மடக்கி, கையாண்ட மகிந்தவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகின்றது. நாடாளுமன்றம் மீண…
-
- 3 replies
- 568 views
-
-
13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன் MAR 12, 2015 | 1:35by அ.எழிலரசன்in செய்திகள் 13வது திருத்தச்சட்டத்துக்குப் பதிலீடாக, கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு, மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “13வது திருத்தச்சட்டம் தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக இருக்க முடியாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் வரவேற்கிறோம். அவர் ஒரு நண்பர். வடக்கிற்கு வரும் அவரது, எம்மைப் பற்றிய கரிசனைகளை மதிக்கிறோம். அவரிடம் நாம், 1987ம் ஆண்டு செய்து க…
-
- 1 reply
- 430 views
-
-
இலங்கைகான நிதியுதவியை, சர்வதேசநாணநிதியம் இடைநிறுத்தியுள்ளது… November 19, 2018 இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். தனது அமைப்பு இலங்கைக்கான நிதிஉதவியை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை தாம் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதிவிவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணயநிதியம் குறித்து தனக்கு தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இல…
-
- 1 reply
- 551 views
-
-
Published By: VISHNU 26 SEP, 2023 | 07:19 PM (எம்.மனோசித்ரா) தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. எனவே இவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டும் வகையில் முகாமைத்துவத்திலும், சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். இம்மூன்று திணைக்களங்க…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் சிலர் இவ்வாறு மாவீரர் நினைவேந்தலுக்கென பணம் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் மட்டக்களப்பு மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். எந்தவித பண வசூலிப்பினையும் செய்யுமாறு கோரப்படவில்லையெனவும் சிலர் தங்களது சொந்த தேவைக்காக மாவீரர் தின நிகழ்வினை பயன்படுத்தமுனைவதாகவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்…
-
- 0 replies
- 338 views
-
-
08 OCT, 2023 | 10:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். எனினும் அந்த கலந்துரையாடல்களின் உள்ளடக்கத்தின் இரகசியத்தன்மை பாதுகாக்க இருதரப்பும் தீர்மானித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்ததுடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த விஜயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தல…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
‘யாழ் மக்கள் மத்தியில் உளவியல் பாதிப்பு’ இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீஎஸ்டி (PTSD) எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதளிப…
-
- 0 replies
- 629 views
-
-
பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை கொடூரமான முறையில் கொலை செய்த முல்லைத்தீவுபெண்ணிற்கு 05 வருட கடூழியச் சிறைத்தண்டனை முல்லைத்தீவு மேல் நீதிமன்றம் நேற்று (17) விதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் 06 மாத மேலதிக சிறைத்தண்டனையும் அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. தான் பெற்றெடுத்த ஒரு நாளே ஆன சிசுவை கொன்று, உடலை இரகசியமாக புதைத்ததாக, அவர் மீது பொலிஸார் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட…
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்த அரசியல்வாதிகளே காரணமாக இருந்தனர்! காலத்தை வீணடிக்காது தீர்வு வழங்கப்பட வேண்டும்: அமைச்சர் ரெஜினோல்ட் குரே. [Wednesday, 2011-08-10 11:51:28] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தீவிரவாத யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளபோதும் இலங்கை மீண்டும் பழைய இடத்திற்கே வந்துள்ளதாக அரசாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த முயன்ற புலிகளை அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடிந்தபோதும் நாட்டை ஒன்று சேர்க்கும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் வெற்றிபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்றிரவு ஒளிபரப்பாகிய அரசியல் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…
-
- 1 reply
- 423 views
-
-
மீனவர்கள் கடத்தல், சிங்களர் உதவியுடன் "ரா" உளவுத்துறை நடத்திய நாடகம், தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பு, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் - முழுப்பொய்கள் - சி.கனகரத்தினம் தமிழக மீனவர்கள் கடத்தல், சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிங்களக் கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி …
-
- 1 reply
- 1.1k views
-