ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள். ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள். த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் கிழக்கில் புலிகளின் பலம் முற்றாக ஒழிப்பு [12 - January - 2007] [Font Size - A - A - A] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிகழும் சிங்கள, தமிழ் புதுவருட தினக் கொண்டாட்டங்களிற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பலத்தை முற்றாக ஒழிப்பதே பாதுகாப்புப் படையினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கிழக்கில் புலிகளின் பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட மாகாண சபையை அமைப்பதற்கும் அதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
திருகோணமலையில் புலிகளுடன் நேரடி மோதல்: சிறிலங்கா அரசு [திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007, 17:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் நேரடி மோதல் நடைபெற்றதாக சிறிலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: திருகோணமலை பான்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் சிறிலங்காஇராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அப்பகுதியில் புலிகளுடன் நடைபெற்ற நேரடி மோதலின் பின்னர்; மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, அற்குப் பயன்படுத்தும் மகஸின் ஒன்று மற்றும் புலி உறுப்பினர்கள் பயன்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
வெலியமுனவினவின் வீட்டின் மீதான குண்டுத் தாக்குதல் - கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சமூகச் செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியும், ரான்ஸ்பரன்ஸி இன்ரநசனல் எனும் அமைப்பின்பணிப்பாளருமான ஜே.சி.வெலியமுனவின் வீட்டின் மீது செப்டம்பர் 27ம் ஆம் திகதி கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதைக் கண்டித்து இன்று நண்பகல் 12 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பத்து அமைப்புக்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் ஜே.சி.வெலியமுனவின் வீட்டின் மீது செப்டம்பர் 27ம் ஆம் திகதி கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் காலத்திற்குக் காலம் இலங்கைச் சம…
-
- 0 replies
- 1.8k views
-
-
மன்னாரில் மோதல் 14 படையினர் பலி : 40 பேர் காயம் செவ்வாய்கிழமை (08-01-08) காலை மன்னார் முள்ளிக்குளம் பகுதியுயூடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி கடுமையான 3 மணிநேர சமரையடுத்து விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் மோதலின்போது 14 படையினர் கொல்லப்பட்டும் 40 படையினர் காயமடைந்தள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மோதலின்போது கடுமையான பல்குழல் எறிகணை வீச்சுகளையும் ஆட்டிலறி சூட்டாதரவையும் கிபிர் விமானங்களின் துணையையும் சிறீலங்கா படையினர் உபயோகித்து முன்னேற்ற ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த சகலரும் நாடு திரும்ப வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) சபையில் பிரதமர் ரணில் அழைப்பு யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அரசாங்கமாக நாம் அனைத்து மக்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றோம். நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்…
-
- 22 replies
- 1.8k views
-
-
கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள். சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது. சந்தேகமான வானூர்திகள் தொடர்பாக தமக்கு கிடைக்கும் தகவல்களை இதன்மூலம் உறுதி செய்ய முடியும் என்றும் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு கடற்படையினரையும் கடல் தொழிலாளர்களையும் கேட்டுள்ளனர். -Puthinam-
-
- 5 replies
- 1.8k views
-
-
எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க என்னிடம் ஆதரவு வழங்கும் படி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்தார் இந்த நிலையில் நடைபெற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம்.மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமைஅவருக்கில்லை. ஓர் வேலை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை என்றால் அது எமது கட்சியை பாதிக்கும். கட்சி வலுவாக கட்டமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா 08/10/2014 இன்று தெரிவித்தார். http://www.pathi…
-
- 0 replies
- 1.8k views
-
-
அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அம்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும். அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த …
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருண்மிய ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தாம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் நிராகரிப்பதாக இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 'ஜனாதிபதியைச் சந்திப்பது குறித்தும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களே கூடி முடிவெடுப்பர்' என்று நேற்றைய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகிய…
-
- 40 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வீதி வலையமைப்பு ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமால் குமாரகே தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டில், பேக்குவரத்தினூடாக பிராந்திய நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தல் எனும் தீர்மானத்திற்கமைய, இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில், இந்தியாவிடம் இது தொடர்பான திட்டவரைபினை இலங்கை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். "இரு நாடுகளுக்குமிடையில் படகு சேவையினை ஆரம்பிப்பது குறித்து இலங்கை ஏற்கனவே முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதுகுறித்தும், இருநாடுகளினதும் அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஞாயிறு 29-07-2007 00:35 மணி தமிழீழம் [மோகன்] மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் மோதல் மன்னார் விடத்தல்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடற்சமர் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் விடத்தல்தீவு கடற்பரப்பில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் இரு படகுகளைத் தாக்கியழித்து 6 கடற்புலிகளைக் கொன்றுள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. pathivu
-
- 1 reply
- 1.8k views
-
-
வவுனியா தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகளுக்கு தேசியத் தலைவர் வீரவணக்கம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 05:34 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தள மையத்தில் கதுவீ (ராடர்) நிலையம் அழிப்பு மற்றும் படைத்தள அழிப்பு நடவடிக்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமையகத்துக்குள் ஊடுருவி சிங்கள படைகளின் அதிஉயர் கதுவீ (ராடர்) கண்காணிப்பு நிலையத்தை அழிப்பு நடவடிக்…
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. வீரகேசரி
-
- 10 replies
- 1.8k views
-
-
யார் இவர்? இவரின் பேச்சை பாருங்கள்.. தமிழீழ விடுதலையை கருவறுத்த முக்கிய காரணத்தை விளங்கப்படுத்துகிறர். ஆங்கிலத்தில் உள்ளது.. பத்து நிமிட நீள தனியார் ஒருவர் தனிமையில் படைத்த வீடியோ.. இவரின்ட யுடியூப் பக்கம்.. http://www.youtube.com/user/massey1944 வழக்கம்போல.. டி.வி கோப்பிகளும் சோகப்படல்களும் போர்குற்ற ஆதரங்களும் உள்ள பக்கம் இல்லை... மனித்தியாலம் மனித்தியாலமா தமிழ் பிரச்சினை பற்றி தனியாரினால் படைத்த பேச்சு வீடியோ..... அவிப்பிராயம் ஏது மண்டைக்க வந்தா, தயவுசெய்து எழுதி விடுங்கள்..
-
- 1 reply
- 1.8k views
-
-
அரசியலமைப்பு சபையில் சம்பந்தன், சுமந்திரன் – ராதிகாவுக்கும் வாய்ப்பு?SEP 10, 2015 | 1:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மூன்று பிரதிநிதிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
கடந்த சில வாரங்களாக சிறிலங்கா படையினர் வாகைரையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏ15 பாதையை மூடி வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்களை பட்டினி போட்டும், தொடர்ச்சியான எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டும், அதே நேரம் மெதுமெதுமாகவ ஊடுருவுவதுமாக சிறிலங்கா படையினர் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். முகமாலை, கிளாலி போன்ற இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பேரழிவை அடுத்து, வட போர்முனையில் தன்னுடைய போர்திட்டத்தை சிறிலங்கா அரசு ஒத்தி வைத்துள்ளது. ஆயினும் வட போர்முனையில் ஏற்பட்ட தோல்வியை சமன் செய்யும் விதமாக, தனக்கு சாதகம் என்று கருதும் கிழக்குப் போர்முனையில் வெற்றி ஒன்றை பெறுவதற்கு சிறிலங்கா அரசு பெரும் ஆவலாக உள்ளது. இதன் மூலம…
-
- 2 replies
- 1.8k views
-
-
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை.கோபாலசாமி 1993ம் ஆண்டு விலகியதன் பின்னர் அவர் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வைகோவுக்கு நிதியுதவி அளித்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு மே 15 திகதி தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் (Ravi Candadai) இத்தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் புலிகள் வைக்கோவுக்கு நிதியுதவி வழங்கியதை உறுதிப்படுத்த ஆதாரங்கள்…
-
- 3 replies
- 1.8k views
-
-
குடாநாட்டில் பிரிட்டிஷ் அதிகாரி பிரிட்டிஷ் அபிவிருத்தி அமைச்சின் சர்வதேச ஆலோசகர் நீல்பரி யாழப்பாணம் வந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் கள நிலைமையை ஆராயும் நோக்குடன் வந்துள்ள இவர் இங்கு பிரிட்டிஷ் அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன் னேற்றத்தை மதிப்பீடு செய்வார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த நீல்பரி, நேற்று யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ். ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந் தார். சர்வதேச உள்ளூர் தொண்டர் அமைப் புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந் தித்து கலந்துரையாடியுள்ளார் -உதயன்
-
- 1 reply
- 1.8k views
-
-
அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளை தடை செய்ய அழுத்தம் கொடுக்கும் பாலித கோகன்ன [செவ்வாய்க்கிழமை, 9 சனவரி 2007, 21:10 ஈழம்] [காவலூர் சங்கீதன்] அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வமாக சென்றிருக்கும் சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன, சிறிலங்கா அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாக, அவர்களைத் தடை செய்வதுதான் சரியானது என்று தான் கருதுவதாகவும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் பாலித கோகன் கேட்டுக் கொண்டுள்ளார். வெளிநாட்டிலிர…
-
- 7 replies
- 1.8k views
-
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம் யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.” – இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
இந்தியக் கனவு கலைந்து சீனாவை நோக்கி..அரசியல் சமூக ஆய்வு: தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில், இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில், இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை * `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!' * தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது' வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்.... ஆர்.பி " வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...." இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். த…
-
- 6 replies
- 1.8k views
-