ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
அத்துமீறி நாவற்குழியில் குடியேறின சிங்களக் குடும்பங்கள்: யார் தடுத்தாலும் அங்கேயே இருப்போம் என தெரிவிப்பு திகதி:11.11.2010 யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்து தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள் சந்தடி ஏதுமின்றி எவரது அனுமதியுமின்றி நேற்று எதிர்பாராத வகையில் நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் குடியேறியுள்ளன. இதனால் அந்தப் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று கம்புகள், தடிகள் சகிதம் தடாலடியாக வீடமைப்பு அதிகார சபைக் காணிக்குள் நுழைந்து கொட்டில்களை அமைக்க ஆரம்பித்தனர். மளமளவெனக் கொட்டில்கள் அமைக்கும் பணியில் அவர்கள் நேற்ற…
-
- 0 replies
- 439 views
-
-
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் சென்னையில் கைது வீரகேசரி இணையம் 1/11/2010 4:00:26 PM - இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் ஒரு மீன்பிடி படகுடன் சென்னை அருகே கைது செய்யப்பட்டனர். சென்னை அருகே இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்த படகு ஒன்றை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் பிடித்தனர். படகில் உள்ளவர்களை விசாரித்தபோது அவர்கள் இலங்கை மீனவர்கள் என்பது தெரியவந்தது. கடல் காற்று காரணமாக திசைமாறி இந்திய கடற் பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் வந்த படகும், 5 இலங்கை மீனவர்களும் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இது தொடர்பாகப் பொலிசார் தீவிர விசாரணை …
-
- 0 replies
- 441 views
-
-
இன்று பிற்பகல் செம்மலை கிழக்கு ( நாயாறு ) மக்கள் விடுத்த அவசர அழைப்பின் பேரில் அவ்விடத்திற்கு விரைந்த ரவிகரனிடம் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமான குறிப்பிட்ட காணியில் அத்துமீறி நுழைந்து வேலிகளை போட்ட சிங்கள தனி மனிதரின் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தனர் . குறிப்பிட்ட காணியானது புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமான நிலையில் அவர்கள் இங்கு வந்திருந்த போது அக்கிராம மக்களுக்கு வழங்குவதாக அறிவித்ததாகவும் அனால் இன்று காலை தொடக்கம் தனது ஆட்களின் உதவியுடன் டு.னு. குணபால என்ற சிங்கள தனி மனிதன் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட அக்காணியில் அத்துமீறி நுழைந்து கட்டைகள் போடப்பட்டதை பார்த்து தாங்கள் சென்று கேட்டதற்கு நீங்கள் எங்கு சென்…
-
- 1 reply
- 1.1k views
-
-
09 JAN, 2025 | 03:24 PM இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டு உள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடொன்று குறித்து அரசாங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள ஓருவர் கருத்து வெளியிடும் முறையிதுவல்ல,மீனவர்களை பொறுத்தவரை அனைத்து ஆழ்கடல் டிரோலர் படகுகளையும், வங்காள விரிகுடாவிற்கோ அல்லது அராபிய…
-
- 6 replies
- 449 views
-
-
[Wednesday, 2011-06-15 09:22:18] இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடபிராந்தியக் கடற்படைக் கட்டளைத் தளபதி விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை தொடக்கம், சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியே பாதுகாப்புக் கடற்படையின் விசேட அணியினரின் பாதுகாப்பில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில், வட மாகாண மீனவ சமாசப் பிரதிநிதிகளுக்கும், வடபிராந்திய கடற்படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக, வடமராட்சி வடக்குக் கடற்தொழிலாளர் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை கூறினார். வடகடல…
-
- 0 replies
- 522 views
-
-
அத்துமீறி பிரவேசித்த 11 இந்திய மீனவர்கள் கைது.! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வளத்திணைக்க உதவிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும், அவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். குற…
-
- 0 replies
- 133 views
-
-
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் - மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர். அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட…
-
- 0 replies
- 158 views
-
-
இதுவரை காலமும் பெருமளவுக்கு தமிழர்களையே இலக்கு வைத்திருந்த சிறிலங்கா காவல்துறையினரின் அத்துமீறல்களும், சட்டவிரோதச் செயற்பாடுகளும் தற்போது கொழும்பில் உள்ள சிங்கள் மக்கள் மீதும் பாயத் தொடங்கியுள்ளமை சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் தமிழ் மக்களை கடத்தல்கள், கொலைகள், கப்பம் மற்றும் ஏனைய பல துன்புறுத்ததல்களில் சிறிலங்கா காவல்துறை ஈடுபட்டு வந்திருந்தது. ஆனால், அவற்றை சிங்கள மக்கள் கண்டுகொள்ளவில்லை பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்றும் காரணத்தினால் தமக்கு என்ன என இருந்து விட்டார்கள். அத்துடன், இவ்வாறு கடத்தப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குறிப்பிட்டு பிரச்சினைகளை காவல்துறையினர் தவிர்த்துக்கொண்…
-
- 1 reply
- 750 views
-
-
அத்துமீறிய 19 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் பருத்தித்துறை கட்டைக்காட்டை அண்மித்த கடற்பரப்பில் வைத்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்டதுடன், அவர்களது இரு படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் யாழ்.கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். http://onlineuthayan.com/news/1078
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த அப்புலிங்கம் போதன் (வயது-49) என்ற மீனவர் தனியே தன்னுடைய படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவ்வேளை படகில் வந்த இந்திய மீனவர்கள் போதன் மீது சரமாரிய தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய படகு இயந்திரத்தின் இணைப்புக்களைத் துண்டித்து அதனைத் தூக்கிச் செல்ல முயன்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், தனியே வந்ததால் விட்டுச் செல்கிறோம், வேறு நபர்களும் வந்திருந்தால் கொலை செய்த…
-
- 25 replies
- 2.6k views
-
-
அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.! மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் ம…
-
- 26 replies
- 2k views
-
-
நாயாறு, கொக்குத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களுடன் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழிளார்களால் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற அவர்கள், தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடன் கலந்துரையாடி, எமது மண்ணில் நீங்கள் தொழில் செய்ய முடியாது உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளனர். இது சம்பந்தமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி சுதாகரனுடன் நேரில் சென்று கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ…
-
- 0 replies
- 464 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கெவிலியா மடுக்கிராமத்தில் அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களை அத்து மீறிக் குடியேற்றியுள்ளமையினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அக்கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்ற தமிழ், சிங்கள மக்களையும் சந்தித்த பின்னர் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தெடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கெவிலியா மடுக்கிராமம் மட்டக்களப்ப…
-
- 0 replies
- 317 views
-
-
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது. எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451865
-
- 2 replies
- 160 views
-
-
அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1449938
-
- 0 replies
- 152 views
-
-
அத்துமீறிய விசாரணைக்கான செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும்..; பாதுகாப்பு அமைச்சு மிரட்டல்! சர்வதேச விசாரணை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானங்களை மீறி சர்வதேசம் செயற்படுமாயின் அதற்கமைவாக எமது பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோம். இலங்கைக்குள் அத்துமீறிய விசாரணைக்கான செயற்பாடுகளை யார் மேற்கொள்வதற்கும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய பாதுகாப்பு செயலாளர் போர்க் குற்றவாளி என்றால் ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் எனவும் கூறினார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் பின்னர் இது க…
-
- 2 replies
- 680 views
-
-
அத்துமீறிய... இந்திய மீனவர்கள் கைது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ( ஞாயிற்க்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1274553
-
- 0 replies
- 133 views
-
-
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத்தெரிவ…
-
- 0 replies
- 128 views
-
-
அத்துமீறும் இந்திய படகுகளை அரச உடைமையாக்க தீர்மானம் வியாழக்கிழமை, 20 மார்ச் 2014 10:15 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் அத்துமீறிய மீன்பிடித்தலைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் காலங்களில் அவர்களின் படகுகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103840-2014-03-20-04-46-27.html
-
- 0 replies
- 279 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களால் 9000 மில்லியன் நஷ்டம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபட்டுவருவதால் வருடத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்பரப்பில் ஒருவாரத்துக்குள் இந்திய மீனவர்கள் சுமார் 6000 டொன் மீன்களை பிடிக்கின்றனர். அதுமாத்தரமின்றி ஒருவாரத்துக்குள் 3 இந்திய படகுகள் என ஒருவருடத்துக்கு 5000 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் நுளைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் இலங்கை…
-
- 0 replies
- 399 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு! adminJuly 29, 2025 வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது. இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது. அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த…
-
- 0 replies
- 120 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுங்கள் – பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல் 25 Views இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் . கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்…
-
- 0 replies
- 186 views
-
-
'கச்சதீவு இலங்கைக்கே சொந்தம். எங்கள் மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் எங்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இருப்ப…
-
- 52 replies
- 3.4k views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது இனிக் கடும் நடவடிக்கையாம்! – இலங்கை அரசு அறிவிப்பு. [sunday, 2014-03-16 18:13:12] இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இருநாட்டு மீனவர்க…
-
- 0 replies
- 268 views
-