Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் - அல்லது பேரம் பேசினால் - தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்"- இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை தற்போது ஓர்மமாகவே நின்று அமுல்படுத்தி, "புலிகளது …

    • 0 replies
    • 1.4k views
  2. ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்ட...ு இறந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் குருதி கறையிலே முகிழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவர்களின் லட்சியங்கள் மாறவில்லை, அவர்களுக்கான எண்ணங்கள் இடைவிடாமல் விடுதலை என துடித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு போராளியும் தமது வாழ்வுக்காக, தமது வளத்திற்காக போராடியது கிடையாது. அப்படி போராடுவது ஒரு போராளியின் குணமும் கிடையாது. தேசிய தலைவர் இதைக் குறிப்பிடும்போது நாங்கள் பு…

    • 2 replies
    • 1.5k views
  3. கடந்த ஓராண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் பணமும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுமே அதன் பொருண்மியம் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வதற்கான காரணிகளாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்லும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, புலம்பெயர் தேசங்களில் இருந்து பெரும் தொகையில் இலங்கைக்கு பணமும் அனுப்பப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களுக்கு…

    • 4 replies
    • 1.3k views
  4. மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடல் கடந்து வாணிபம் செய்வதற்கும்,தனது வெற்றிக்கொடியை நாட்டுவதரற்கும் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்த நம் தமிழினம் இன்று வாழ வழியில்லாமல் கப்பலில் நாடு நாடாகத் திரியும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கின்றது. தங்கள் தாய்த்திருநாட்டில் சிங்கள இனவாதத்தால் மானத்துடன் உயிர் வாழ வழியின்றி எங்காவது சென்று உயிர் பிழைத்தால் போது…

  5. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ‐ வயற்கடல் வெளி ‐ மன ஆறுதலுக்காக அம்மாளிடம் வந்திருக்கிறேன் ‐ நாங்கள் வேறு எங்கு போக முடியும் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன் கடந்த வருடம் யுத்தம் மிகத் தீவிரமாகி மக்கள் அனைவரும் வன்னியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் வற்றாப்பளை அம்மன் வருடாந்த திருவிழா வந்தது. முன்பு வற்றாப்பளை அம்மன் கோயிலை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருக்கும் நிலையில் அந்த வருடம் கோயிலையோ திருவிழாவையோ யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. வற்றாப்பளை ஆலயத்தை சுற்றி மிக அண்மையில்தான் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நான் வற்றாப்பளை ஆலயத்த…

  6. போரில் தமது சொந்தங்களை இழந்த வன்னி மக்கள் வவுனியாவில் ஓர் கவன் ஈர்ப்பு நிகழ்வினை நடாத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தமிழ் சொந்தங்கள் தமது காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு மன்றாடினர். தடுப்பு முகாமிலும், முள்ளீவாய்க்காலிலும் ஆயிரக்கணக்கான இளையோர்கள் கைது செய்யபட்டனர். ஆனால் அவர்களின் நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகள் சபை கூட இந்த விவகாரங்களில் போதிய கவனம் எடுக்காமல் இருக்கின்றமை மக்களுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை அற்ற நிலையே காணப்படுகின்றது. தமது பிள்ளைகளை தேடும் நேரத்தில் தம் பிள்ளைகள் எவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு சிங்களப்படைகளினால் கொல்லபட்டார்கள் என்ற புகைப்படங்களேவெளியே வருகின்றன. ஆகையால் பெற்றோர்கள் பதைபதைத்…

  7. வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள் வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள் சிறிலங்காவில் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற பணிகளுக்காக நிதி வழங்கி வரும் முக்கிய நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ] அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழுவுடன் யாழ்ப்பாணம் சென்று மீள்குடியேற்ற பணிகளை பார்வையிட்டது. இதுவரை அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந…

  8. . சென்ற வருடம் ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது....... டெல்லிக்கு செல்ல முடியாமல், சக்கர நாற்காலியில் இருந்தபடி தந்தியும், கடிதமும் எழுதிய கருணாநிதி இப்போது எழுந்து..... மலர் தூவுகின்றார். கருணாநிதி போல் எழுந்து மலர் தூவ...., ரைகர் பாம் பாவியுங்க..... .

  9. இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை. போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ப…

  10. 50 வீதமான மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் இல்லை 25 May 10 01:36 am (BST) வன்னிப் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்களில் ஆண்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தின் பொருளாதார சுமையை பொறுப்பேற்பதற்கு ஆண்களின் பங்களிப்பை உரிய முறையில் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னியில் தங்களது குடும்பங்களுடன் தங்கி வாழும் ஆண்களில் 30 வீதமானவர்கள் வலத…

    • 0 replies
    • 636 views
  11. Dear all Amnesty International are asking people to sign their online petition that will be sent to the UN Secretary General. It will call on the UN to investigate human rights abuses in Sri Lanka. To sign the petition, see: http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations Circulate to all your friends and family! Muthamizh Chennai

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர் சாந்தன் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அரசின் புனர்வாழவு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர் அரசு-புலிகளுக்கு இடையிலான யுத்தத்தை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அவர் அப்படத்தில் புலிகள் இயக்கத்தின் கலைஞர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டம் இட்டுள்ளார். இதற்காக அவர் அண்மையில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமுக்கு நேரில் சென்றிருந்தார். அவர் அங்கு புலிகள் இயக்கத்தின் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் சிபாரிசின் பேரில் சாந்தன் உட்பட சில கலைஞர…

    • 2 replies
    • 2.9k views
  13. எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் காலமானார் [ திங்கட்கிழமை, 24 மே 2010, 01:35.04 PM GMT +05:30 ] எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பரீட் நசீர் இன்று தமது 56ஆம் வயதில் புத்தளத்தில் காலமானார். வேக நடை, யாழ்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு துவச்சக்கர வண்டியை பின்புறமாக செலுத்தியமை, 500 நச்சுப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாட்களாக தொடர்ச்சியாக ஒன்றைக் காலில் நின்றமை, போன்ற சாதனைகளை அவர் புரிந்துள்ளார். இது தவிர, பூல் டூம் நடனம், நான்கு நாட்களாக தொடர்ச்சியான நடனம், 72 மணி நேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகிய உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். …

    • 1 reply
    • 1.4k views
  14. இலங்கைப் பேரினவாத அரசின் இனப்படுகொலை போர்க் குற்றங்கள் குறித்த ஆவணங்கள், பல்வேறு வேறு தரப்பிலிருந்து வெளியாகின்றன. கீழேயுள்ள காணொழி ஆவணத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த இறந்த பெண்போராளிகளை விலங்குகள் போன்று இலங்கை இராணுவத்தினர் நடத்துவதையும் இரசாயன ஆயுதங்களை இலங்கை அரச படைகள் பயன்படுத்தியதற்கான எரிகாயங்களையும் காணக்கூடியதாக உள்ளது. போரில் ஈடுபட்ட இராணுவத்தினரின் கைத் தொலைபேசி ஊடாக படமாக்கப்பட்டதாக எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த ஆவணத்தினை தொழில்னுட்பம் சார்ந்த உண்மைகளை நிரூபிக்க எமக்கு வளங்கள் இல்லை. இந்த ஆவணம் சில மனித் உரிமை அமைப்புகளுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் இனியொருவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை வாசிப்பவர்கள் இந்த ஆவணத்தை தமக்குத் தெரிந்த ஊடகங்களுக…

    • 2 replies
    • 2k views
  15. நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள…

    • 11 replies
    • 2.5k views
  16. விடுதலைப்புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ’’தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை …

    • 21 replies
    • 2.6k views
  17. ""படபடக்கும் பறவைகளின் சிறகுகள்கூட அச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது அந்த வனப்பகுதியில். ஆனால், மரணத்தை எந்த நேரத்திலும் வரவேற்கக் காத்திருக்கும் விடுதலை வீரர்களை இந்த சலசலப்புகளால் எதுவும் செய்துவிடமுடியாது என்பதை அவர்களின் மன உறுதி வெளிப்படுத்துகிறது'' என்கிறார் ஈழத்தின் கிழக்கு மாகாணக் காடுகளில் கேணல் ராமை சந்தித்த தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியன். அடர்ந்த காடுகளுக்கு நடுவே நடந்த இந்த சந்திப்பின்போது, எந்த நேரத்திலும் சிங்களப் படை சுற்றி வளைக்கலாம் என்கிற சூழல் நிலவியதை யும், தங்கள் உயிர் பற்றி கவலைப்படாமல், தமி ழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளரைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினர் விடுதலைப்புலிகள். காட்டுக்குள் பரண் அமைத்து அதில்தான் அவர்கள…

    • 9 replies
    • 2.1k views
  18. May 22,2010 இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அரசியல் தீர்வு உள்ளடங்கிய மாதிரி அறிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது இந்த அறிக்கையைக் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஆகியோருடன் இந்த யோசனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தில் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அந்தத் திட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட…

    • 1 reply
    • 663 views
  19. . சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார். இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார். மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்…

    • 14 replies
    • 2.4k views
  20. வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி க…

    • 0 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.